பாகம் 2

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
மாதங்கள் சில கரைந்துவிட்டிருந்தன.அன்றோடு ரஜீவ் சிம்மியின் திருமணம் நடந்து நான்கு மாதங்கள் கடந்து விட்டிருந்தன. மனதில் இனிமையாக பதிய வேண்டிய அந்த நாள் சிம்மி வாழ்க்கையை புயல் போல் புரட்டிப்போடும் என்று அவள் கனவிலும் நினைக்கவில்லை.
புன்னகையோடு ரஜீவ் விடைப்பெற்ற அரை மணி நேரத்தில் இடியென இறங்கியது அந்த செய்தி.

சிம்மிக்கு வந்த தொலைப்பேசி அழைப்பு இறைவன் அவளுடைய ரஜீவ்வை இறுதியாத்திரைக்கு அழைத்துக் கொண்டதாய் தெரிவித்தது.சட்டென உடைந்து மயங்கியவள் காதில் அந்த குரல் ரஜீவ் சாலை விபத்தில் பலியானதை ஒலித்துக்கொண்டிருந்தது.
காலையில் புன்னகையில் தன்னை நிறைத்தவன் இப்பொழுது இல்லை என்ற நிஜம் சிம்மிக்கு கொஞ்சம் கொஞ்சமாய் உறைத்தது.

உலகமே இருண்டது போல்,தன் வாழ்வின் பொக்கிஷத்தை களவு கொடுத்தது போல் பித்துப்பிடித்தாற்போல் சிம்மி இருந்தாள்.
ரஜீவ்வின் இறுதிச்சடங்குகள் நிறைவேறியப்பின் சிம்மி தன் மாமியார் மாமனார் வீட்டோடு தங்கிவிட்டாள். ஒரே அன்பு மகனை விபத்தில் அநியாயமாய் பறிகொடுத்த அவர்களுக்கு இப்பொழுது ஆறுதலாய் இருப்பது சிம்மி மட்டுமே.ரஜீவ்வின் மறைவு சிம்மியை சுக்கு நூறாக உடைத்துவிட்டது. இயல்பு வாழ்க்கைக்கு வர இயலாமல் ஜடம் போல் அவன் நினைவுகளில் தன்னை இறுத்திக்கொண்டாள்.
அவளுடைய ஒரே ஆண் நண்பன் அவன் அல்லவா?

"சிம்மி இங்க பாரு இந்த பூக்கள் எவ்வளவு அழகுன்னு,இத வெச்சு ஒரு டிசைன் செய்யேன்.இப்படி உடைந்து போகாதே சிம்மி தைரியமா உலகத்தை பேஸ் பண்ணு,இந்த ரஜீவ் எப்பவும் உன் கூடவே இருப்பான்"காதில் அவன் கூறிய வார்த்தைகள் ரிங்காரமிட்டன.
கண்களில் நீர் உடைப்பெடுத்தது சிம்மிக்கு.

"எங்க ரஜீவ் நீ போன?உன் சிம்மி தனியா இருப்பாளே,அவள எப்படி நீ தவிக்கவிட்டுட்டு போகலாம்?இனி யாரு என்ன கைட் பண்ணுவாங்க ரஜீவ்?சிம்மி பாவம் இல்லையா?" மனதிற்குள் மறைந்தவனை நினைத்து சிம்மி மருகினாள்.

இருண்டு விட்ட தன் எதிர்காலம்.தனியே ஒரு தூர பயணம், ரொம்பவே உடைந்து போனவளை தேற்றி இயல்பு வாழ்க்கைக்கு கொண்டு வந்தது அவளுடைய உயிர் தோழிகள் மாயா மற்றும் அர்மிதா தான்.

சிம்மி ரஜீவ்வின் அனைத்து விஷயங்கள் அறிந்தவர்களே இவர்களே. ஒரே குடியிருப்பு பகுதியில் சிறுவயது முதல் வசித்து வந்ததால் மூவரும் நெருங்கிய தோழிகள். இவர்கள் தந்த ஊக்கத்தினால் சிம்மி மெல்ல மெல்ல இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியிருந்தாள்.
.......................................................................................................................................
அன்றைய காலைப்பொழுது சிடியில் கசிந்த சுப்ரபாதத்தோடு இரம்மியமாய் விடிந்தது மாயாவிற்கு.

காலை சூரியனை கண்களில் நிறைத்தவள், அன்றைய நாளின் வேலைகளை அம்மா தந்த காபியோடு அசைப்போட்டாள். இன்று மிஸ்டர் விஸ்வாமித்திரனோடு அவளுக்கு அப்பாயின்மெண்ட் உறுதியாகியிருந்தது.

இதுவரை சந்தித்திராத மனிதரோடு மாயாவின் அலுவல் அன்று தொடரவிருக்கின்றது. நகரின் முக்கிய இந்திய இந்தியர் டிசைனிங் நிபுணர்களில் மாயா @ மாயாவாணிஸ்ரீயும் ஒருத்தி.பல இன மக்கள் கலந்து வாழும் நாடு என்பதால் என்னவோ கனடாவில் பல இன கலாச்சாரங்களும் கலந்தே இருந்தன.புலம் பெயர்ந்த இந்திய குடும்பங்கள் இந்திய பாரம்பரிய தொன்மையை இங்கும் தொடர்வதால் மாயாவின் வடிவமைப்பிற்கு மவுசு அதிகம்.

இந்திய பாணியில் வீடு, தங்கும் விடுதி,கடைகளுக்கு ரசனையோடு டிசைனிங் செய்வதால் பலரும் மாயாவிற்கு வாடிக்கையாளர்கள். இவள் போன்ற கலை சம்பந்தப்பட்ட தொழில் செய்யும் இந்தியர்களை எளிதில் தொடர்பு கொள்ளும் விதமாக லிட்டில் இந்தியா எனும் சுயத்தொழில் அலுவலகம் ஒன்று டொரொந்தோவில் உள்ளது.அதில் மாயா,சிம்மி மற்றும் அர்மிதா உறுப்பினர்கள். இவர்கள் சேவையை விரும்புபவர்கள் இந்த நிறுவனத்தை தொடர்பு கொண்டாலே போதுமானது.

அப்படி மாயாவை வந்து சேர்ந்ததுதான் ராஜ் அன் ராஜ் கம்பெனியின் தொழில் தொடர்பு வாய்ப்பு. விரைந்து கிளம்பியவள்,அம்மாவின் பட்டுக் கன்னத்தில் இச் ஒன்று வைத்து விட்டு ஒட்டல் அப்ஸ்ராவிற்கு தன் டெஸ்லாவை செலுத்தினாள்.ஓட்டல் லாபியில் காத்திருந்தவள் கண்களை சுற்றியிருந்த உள்அலங்காரங்கள் கவர்ந்திழுத்தன.
மனதிற்குள் ஓட்டல் உரிமையாளரின் ரசனைக்கு சபாஷ் போட்டவள் மிஸ்டர். விஸ்வாமித்திரனுக்காய் காத்திருந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN