பாகம் 5

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
திருமணத்தில் அழகு பிம்பமாய் வந்தவளைப் பார்த்து ஒரு கணம் கண் இமைக்க அனிஷ் மறந்துதான் போனான்.
தங்க சரிகையில் அரக்கு வண்ணத்தில் பட்டு சாரி அவள் மேனியை அணைத்திருக்க,செதுக்கி வைத்த சிற்பம் போல் சிம்ரதி ரதி மாதிரியே இருந்தாள்.ஆண் அழகனாய் அனிஷ் திருமண உடையில் கம்பீரமாய் இருந்தான்.

இடையில் பம்பரமாய் வேலை பார்த்துக் கொண்டிருந்த மாயாவை ஒரு ஜோடி கண்கள் கவனமாய் இரசித்துக் கொண்டிருந்ததை மாயா அறிந்திருக்கவில்லை.அத்திப்பூத்தாற் போல சிரிக்கும் மாயாவை மித்திரன் இந்த திருமணத்தில் கண்டான்.இடை வரை நீண்ட கூந்தலை பின்னலிட்டு,தலை நிறைய மல்லிகை சூடி,சந்தனமும் அரக்கும் கலந்த பட்டில் மாயா அவன் கண்களை நிறைத்தாள்.

அவனை ஒரு முறைப் பார்த்தவள் சிறு புன்னகை சிந்தியதோடு சரி .அதற்கு மேல் அவனை அவள் கண்டு கொண்டதாய் தெரியவில்லை.ஆழ்ந்த பெர்கண்டியில் வெள்ளி சரிகை இழையோட, இடை வரை அசைந்தாடும் கூந்தலில் மல்லிகை மணம் கூட்ட அர்மிதா அங்கும் இங்கும் அலைந்து வேலை செய்து கொண்டிருந்தாள்.

இது வரை வெளிறிய வண்ணத்தில் சுடிதாரில் திரியும் சிம்மியை கோவில் சிற்பமாய் அனிஷிற்கு தெரிய தன்னுள் எழும் மாற்றம் அவனுக்கே புதிதாய் இருந்தது.பெரியயவர்களின் ஆசிர்வாதத்துடன் சிம்ரதி-அனிஷ் திருமணம் சிறப்பாக நடந்தேறியது.

திருமணம் முடிந்த புது மணத்தம்பதிகள் டொரோந்தோ நகரின் அடுக்குமாடி குடியிருப்பிற்கு மாறி வந்தனர். இருவருக்கும் தனித்தனி அறையை அனிஷ் தயார் செய்து வைத்திருந்தது சிம்ரதியின் பெட்டிகள் அவனது பக்கத்து அறையில் அடுக்கி வைத்ததிலிருந்து சிம்மி உணர்ந்து கொண்டாள்.


அதுவே அவளுக்கு நிம்மதியாய் இருந்தது.அவர்களிடையே மௌனம் இரும்புத்திரையாய் இடையில் நிற்க எதுவும் பேச கூட இருவரும் முயற்சிக்க வில்லை. திருமணம் முடிந்த மறுநாளே இருவரும் தம் தம் அலுவலில் மூழ்கி விட வெறுமையாய் கழிந்தது அன்றைய பொழுது. என்றாலும் சிம்மி மெல்ல மெல்ல தன் கடமைகளை உணர்ந்து செயலாற்றத் தொடங்கினாள். அனிஷிற்கு பிடித்த உணவுகளை அவள் மாமியாரிடமிருந்து தெரிந்துக் கொண்டாள்.அவனுக்காக தினமும் சமையல் செய்யவோ,அவன் உடைகளை துவைக்கவோ சிம்மி தயங்கவில்லை.என்றாலும் இருவரும் பேசிக்கொள்வதும் இல்லை.

அவ்வப்பொழுது தொழில் தொடர்பாய் வரும் கடைக்குட்டி மித்திரன் சிம்மிக்கு நல்ல தோழனாய் ஆனான்.
இளையவன் அரவிந்தும் அப்படியே. இருவரும் வயதில் சிம்மியை விட மூத்தவர்கள் என்றாலும் சிம்மியை அண்ணி என்றே அழைத்தனர்.மித்திரன் மனம் திருடியவள் தன் தோழி மாயா என்று அறியாமல் சிம்மி மித்திரனை கிண்டல் செய்வது வழக்கமாகிவிட்டது.

அனிஷை கண்டால் மரவட்டையாய் சுருண்டு கொள்பவள் அவன் இளவல்களைக் கண்டால் இயல்பாய் பழகுவாள்.
அன்றும் அப்படிதான். விஸ்லரிலிருந்து வந்த மித்திரன் செய்கைகளில் மாற்றம் அறிந்த சிம்மி மித்திரனை விசாரித்தாள்.

அண்ணி "வாணியை எனக்கு பிடிச்சிருக்கு, அவள கல்யாணம் பண்ணிக்க ஆசைப்படுறேன். பட்,அவ ஒட்டுதலே இல்லாம இருக்கா.என்னை பார்த்தாலே விலகி ஒடுவா. எப்படி இவள நெருங்கறதுனு கூட எனக்குத் தெரியல" மித்திரனின் குரல் ஆதங்கமாய் வெளிப்பட்டது.

"கம் ஓன் விசு, பொண்ணுங்க அப்படிதான் இருப்பாங்க, மே பி அவளோட கடந்த காலம் எப்படியோ,
என் நெருங்கியத்தோழி மாயாகூட இப்படிதான் விசு.ஆண்களை கண்டால் இயல்பாய் பழக கூட பயப்படுவா.உன் வாணி அப்படி இருக்கலாம். மெல்ல பேசி பழகுங்க விசு"
அண்ணி சிம்மியின் வார்த்தைகள் அமிர்தமாய் மித்திரனுக்கு இருந்தது.

"அதே அண்ணி,அவளுடைய விலாசம் லிட்டில் இந்தியாவில் கண்டிப்பாய் கிடைக்கும். நிலாவோட கல்யாணத்திற்கு அவளை அழைக்கலாம், தொழில் தொடர்பு நண்பர்கள்னு கம்பெனி நேம்ல நானே நேர்ல வாணியை பார்த்திட்டு வரேன்" உற்சாகமாய் வெளிப்பட்டது மித்திரனின் குரல்.

மெலிதாய் புன்னகையித்த சிம்மி "இன்னிக்கு ஒரு டின்னர் இருக்கு விசு, இல்லாட்டி நானும் உங்க வாணியை தேட ஹெல்ப் பண்ணியிருப்பேன்."

"இட்ஸ் ஓகே அண்ணி, நீங்க அண்ணாகூட டின்னருக்கு போயிட்டு வாங்க, நா பார்த்துகிறேன்."

மித்திரனின் வருகையால் கொஞ்சம் சந்தோசமாய் இருந்தவளை கொன்று கூறு போட காத்திருந்தது விதி இரவு விருந்து ரூபத்தில். மிதமான ஒப்பனையில் வெள்ளி சரிகை ஷிபானில் அழகாய் இருந்த சிம்ரதி விருந்தில் விருப்பமின்றி சந்தித்தது அழகி சாராவை. சிம்மியுடன் அனீஷைப் பார்த்த சாரா இவர்களை நோக்கி வந்தாள்.

"அப்புறம் நீஷ்,எப்படியிருக்கிங்க?கல்யாணதிற்கு அப்புறம் என்ன கண்டுக்கறதே இல்லை,வீட்டில் கெடுபடி அதிகமோ?" கண்களில் விஷமம் தேங்க பேசிய சாராவிற்கு பதில் சொல்லாமல் தன் நண்பர்களை தேடி சென்றுவிட்டான். அருகில் நின்ற சிம்மியை சாரா கண்டு கொண்டதாய் தெரியவில்லை. அமிலத்தை அவள் செவிகளில் ஊற்றுவது போல் இருந்தது அடுத்து சாரா கூறிய வார்த்தைகள். சாராவைதான் அனீஷ் மணந்துக் கொள்வான் என்ற எதிர்ப்பார்பில் இருந்த தோழி ஒருத்தி இது பற்றி சாராவிடம் விசாரித்துக்கொண்டிருந்தாள்.

"இத நா எதிர்ப்பார்கல சாரா, உன்ன விட்டுட்டு நீஷ் எதுக்காக இந்த நகைக்கடைகாரியை கட்டிக்கணும்? எதுவுமே எங்களுக்கு புரியல" குட்டைப் பாவாடை நீலம் சாராவிடம் வினவினாள்.

"ரிலாக்ஸ் நீலம், நீஷ் ஒண்ணும் இவ மேல ஆசைப்பட்டோ இல்ல காதலிச்சோ மணக்கல, இந்த திமிர் பிடிச்சவள பலி வாங்கணும் அவருக்குள் ஒரு வெறி, என்னமோ இவ பெரிய இவளாட்டும் அனீஷோட ஈகோவ தட்ச் பண்ணிடா. அனீஷ் யாருன்னு பாவம் இவளுக்குத் தெரியாது."

"அனிஷோட ஈகோவை தட்ச் பண்ற யாரையும் அவர் சும்மா விட்டதில்லை. பாவம் ,இந்த வெக்கம் கெட்ட சிம்மி அவரோட புகழுக்கும் பணதிற்கும் ஆசைப்பட்டு கட்டிகிட்டா"
திமிராய் சிம்மியை சாரா விமர்சித்தது சிம்மி காதிலும் விழத்தான் செய்தது.

"ஆமா,இருக்கலாம், இவள் பிரபல வக்கீல் ரஜீவோட மனைவி, இப்பத்தான் அவன் ஒரு விபத்தில் இறந்துட்டான், அதான் மல்டி மில்லியனர் அனீஷை வளைச்சிட்டா" தோழி ஒருத்தி ஒத்து ஊதினாள்.சிம்மிக்கு மயக்கம் வராத குறையாய் இருந்தது.அருகில் வந்த அனீஷ் முகத்திலோ எந்த வித சலனமும் இல்லை.

மனதில் எதோ ஒரு பயம் பரவ சிம்மி மெல்ல மெல்ல உடையத் தொடங்கினாள்.தான் சந்தேகப்பட்டது சரி யோ? தன் திருமணம் பற்றி தோழிகளிடம் கூறியவள்,அவர்களின் வார்த்தைகளில் அப்பொழுது சமாதானம் ஆனாலும் மீண்டும் அந்த பயம் அவள் மனதில் எட்டிப்பார்க்கத்தான் செய்தது.

இன்னிக்கு எதுவானாலும் சரி ,அனீஷை கேள்வி கேட்காமல் விடுவதில்லை என மனதில் நினைத்துக் கொண்டாள். வீடு திரும்பியதும்," "கொஞ்சம் நில்லுங்க அனிஷ்,உங்ககிட்ட கொஞ்சம்பேசணும்,பார்ட்டியில சாரா சொன்னது எல்லாம் உண்மையா"?சிம்மியின் குரல் நடுங்கிற்று.

அவள் கேள்விக்கு பதில் சொல்லாமல் தன் அறைக்குள் நுழைந்தவனை தொடர்ந்து சிம்மியும் சென்றாள். அவன் கைப்பற்றி நிறுத்தியவள்," என் கேள்விக்கு பதில் சொல்லுங்க அனீஷ்?"

அவள் கேள்வியில் எரிச்சலுற்றவனாய் "வில் யூ ஸ்ட் ஆப் சிம்மி? உனக்கு என்ன கேள்வி கேட்க எந்த அதிகாரமும் இல்லை,நான் உனக்கு பதில் சொல்லணும்னு எந்த அவசியமும் இல்லை"அனீஷ் கோபமாய் கத்தினான்.

"இப்படியெல்லாம் நீங்க கத்தினா நான் விட்டிருவேன்னு நினைச்சிங்களா மிஸ்டர்.அனீஷ்"?சிம்மி அவனை விடுவதாய் இல்லை.

தன் கையை பிடித்திருந்தவளை அனீஷ் கட்டில் மேல் பிடித்து தள்ளினான்.அவன் கண்களில் கோவம் தெறித்தது.அவள் பூ போன்ற முகத்தை முரட்டுத்தனமாய் பற்றி தன் முகத்தருகே இழுத்தவன்,"உனக்கு பதில்தானடி வேணும்?இப்ப சொல்லறேன்,உன்ன பலி வாங்கத்தாண்டி கல்யாணம் பண்ணிக்கிட்டேன்.என் ஈகோவை தச் பண்ற யாரையும் நான் சும்மா விட்டதில்லை.அப்போ ரஜீவ் இருந்தனால உன்ன ஒண்ணும் பண்ணமுடியலை.இப்ப யாரு வந்து உன்னை காப்பாத்துவா? உன்ன அணு அணுவாய் சித்ரவதை பண்ணி இந்த அனீஷை சீண்டனா என்ன ஆகும்னு புரியவைக்கிறேண்டி.நான் பேசற அப்ப என் கண்களை பார் சிம்மி.இனிமே உனக்கு நரகம் மட்டும்தான்!" சிம்மிக்கு உடல் நடுங்கிற்று.


மிக அருகாமையில் அவன் முகம்,இளம் சூடாய் அவன் மூச்சுக்காற்று,காற்றில் மெலிதாய் அவன் அணிந்திருந்த வாசனைத்திரவியம். சிம்மிஅனைத்தையும் உணர்ந்தாள்.அவளை அப்படியே விட்டுவிட்டு அனீஷ் வெளியேறினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN