பாகம் 10

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கலகலப்பாய் பொழுது விடிய,அந்த பங்களாவை கல்யாண பரபரப்பு தொற்றிக்கொண்டது. நலங்குகள்,மருதாணி இடுதல்,இசை நிகழ்ச்சி என்று களைக்கட்ட ஆரம்பித்தது ராஜ் விலாஸ்.அவ்வப்பொழுது கண்களால் சிம்மியை விழுங்கியபடி அனீஷ் வலம் வர, இடையில் மாயாவுடனே இருக்க மித்திரன் காரணம் தேட, ஆங்காங்கே காதல் கண்ணாமூச்சி விளையாடிக்கொண்டிருந்தது. திருமணம் வீட்டில் என்பதால், ராஜ் விலாஸ்லின் விஸ்தாரமான தோட்டத்தில் திருமண மண்டபம் அமைக்கும் வேலை அர்மிதாவிடம் வந்தது.

சின்ன சின்ன தூண்களை தூக்கி வர ரேயனுக்கு உதவ முன் வந்தவள்,முகத்தை மறைத்தவாறு நடந்து வந்தாள்.அப்பொழுது எதிரில் ஆள் வருவது தெரியாமல் அந்த பிலாஸ்டர் தூணோடு மோதியவள் கைகளிருந்து தூண் நழுவி விழுந்து உடைந்தது. நிலைத்தடுமாறி விழுந்தவள் வாயில் ,

"இடியட்,கண்ண எங்க வெச்சிக்கிட்டு வர்ர, இப்படிதான் இடிப்பாங்களா,மக்குச்சாம்பிராணீ?" கோவத்தில் கண்கள் சிவக்க இடித்தவனை ஏறிட்டவள் கண்கள் வியப்பில் விரிந்தன.

அர்மிதா பின்னால் வந்துக்கொண்டிருந்த ரேயன், அர்மிதா விழுவதை கண்டு பதறி வந்தான். "அர்மி,வாட் ஹாப்பண்ட்,பார்த்து வரக்கூடாதா"? கரிசணையாய் அவளை கைக்கொடுத்து தூக்கினான்.அவளைப் பார்த்த அதிர்ச்சியில் உறைந்து நின்றவன், சந்தேகமே இல்லை நம்ம டாக்டர் அரவிந்தன் ராஜ்தான்.அவனை முறைத்தவாறே அர்மிதா உள்ளே சென்றாள்.

சுயநினைவு பெற்றவனாய் அரவிந்தன் அர்மிதாவை அழைத்தபடியே வீட்டிற்குள் ஓடினான்."அர்மிதா கொஞ்சம் நில்லு,நான் உங்கிட்ட பேசணும்,அர்மிதா..அர்மிதா.."அவன் குரல் காற்றில் கரைய அர்மிதா சிறிதும் திரும்பிப் பார்க்கவில்லை. ஹாலை கடந்து மேல் மாடிக்கு படியேறியவளை தொடர்ந்து அரவிந்தனும் செல்ல,பின்னே ரேயனும் தொடர்ந்தான்.

மேல் மாடியில் அறைக்கோடியிலிருந்த ஸ்டோர் ரூம்பில் அர்மிதா தன்னை அடைத்துக் கொள்ள,பின்னே வந்தவனும் முன்னேறி சென்று அறை கதவையடைத்தான். கோவம் கண்களில் மின்ன,இரண்டே எட்டில் அவளை எட்டிப்பிடித்தான்.
அர்மிதா திணறுவதையும் பொருட்படுத்தாமல் அவள் இதழை தன் இதழோடு ஒட்டி முத்தமிட்டான்." நில்லு நில்லுனு சொன்னா கேட்கமாட்டியா நீ? " அரவிந்தனின் பிடி இறுகியது.

"நான் எதுக்கு நிக்கணும்,நீங்க யாரு எனக்கு?,உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம் இருக்கு?தயவு செய்து வழிய விடுங்க,தனியா ஒரு பெண்கிட்ட இப்படி நடந்துகிற நாகரீகத்தை யார்தான் உங்களுக்கு கத்துக்கொடுத்தாங்கணு தெரியலை", அவனை முறைத்தவாறே அர்மிதா அகன்றாள்.

வெளியே நின்ற ரேயனையும் சட்டை செய்யாது அர்மிதா இறங்கிச் செல்ல,அவள் பின்னே வந்த அரவிந்தன் ரேயனை பார்த்து சிரித்தான். "ஹேய் மிஸ்டர்,அர்மியை என்ன பண்ண?அவ ஏன் ஒருமாதிரியா போறா?", ரேயன் கோவமாய் கேட்க,அரவிந்தன்
சிரித்தவாறே "கூல் டியூட்,சும்மா உன் அர்மியை கிஸ் பண்ணி பார்த்தேன்,அவ்வளவுதான்,லெட்ஸ் கோ பார் அ காபி மேன் "ரேயன் தோளை அணைத்தவாறு தோட்டத்திற்குச் சென்றான்.

அரவிந்தன் செய்கை ரேயனுக்கு வியப்பளித்தாலும் அவனுடன் பேச அவனுக்கும் விஷயம் இருந்தது. பணியாள் தந்த காபி காலை வேளைக்கு இதமாக உள்ளிறங்க ரேயன் பேச ஆரம்பித்தான்.

"மிஸ்டர் அரவிந்தன் அர்மியை ஏன் இன்னும் கஷ்டப்படுத்தறிங்க? இப்பத்தான் கொஞ்ச நாளா அவ சந்தோசமா இருக்கா, உங்ககிட்ட விலகி போகத்தான் அவ இந்தியா போனதே,அங்கயும் உங்களால பிரச்சனை,இப்ப இங்க.என்னதான் நினைச்சிக்கிட்டு இருக்கிங்க நீங்க? "கோவமாய் ரேயன் கேட்க அரவிந்தன் மௌனம் சாதித்தான்.

"நீயும் அர்மியும் காதலிக்கிறீங்களா? " தெளிவாய் கேட்டான் அரவிந்தன்.

"ஹௌ டேர் யூ?என்ன வார்த்தை பேசறிங்க அரவிந்தன்?"
"அர்மியும் நானும் நல்ல நண்பர்கள்,அவ மனசுல உங்கள தவிர யாரும் இல்லை,பட் அன்னிக்கு நடந்த நிகழ்வுக்கு அப்புறம் உங்களால அர்மி ரொம்பவே உடைஞ்சுபோயிட்டா."


அவர்களிருவரும் நண்பர்கள் என்ற செய்தியே அரவிந்தனுக்கு இனித்தது.சற்றுமுன் ரேயனின் உரிமையான கண்டிப்பே அரவிந்தனுள் பொறாமையை கிளப்பிவிட அர்மிதாவை முத்தமிட செய்தது.
"ரொம்ப நன்றி ப்ரோ,தப்பு எல்லாமே என்னுடையதுதான். அவ அன்பு அவ இல்லாதா அப்பத் தெரிஞ்சது.என் முட்டாள்தனத்தால என் செல்லக்குட்டிய ரொம்ப கஷ்ட்டப்படுத்திட்டேன்,இனிமே இப்படி நடக்காது ரேயன்", உணர்ச்சிவசமாய் பேசியவன் ரேயனை சினேகமாய் கட்டிக்கொண்டான்.அரவிந்தனுக்குள் உற்சாகம் குமிழிட்டது.
.......................................................................................................................................

அடுத்து வந்த இரண்டு நாட்களில் ரேயன் அரவிந்தனுடன் ஒட்டிக்கொள்ள,அர்மிதாவுக்கு பற்றிக்கொண்டு வந்தது. கோவப்பட இது தருணமல்ல என்று,கல்யாண அலங்காரத்தில் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டாள்.இரவு சங்கீத் நைட் ஆரம்பிக்க, சகோதரர்கள் மூவரும் அருமைத்தங்கை நிலாவை கிண்டலடித்துக் கொண்டிருந்தனர். "காலம் எவ்வளவு சீக்கிரம் ஓடுது அரவிந்த், மித்ரா..இந்த நிலா வாலுக்கு இப்ப கல்யாணம் பாரு.சின்ன பிள்ளை மாதிரி இருந்தவ,இப்ப கல்யாணம் பண்ணிக்கப் போறா" அனிஷ் பாசமிகு சகோதரனாய் உருக, மற்ற இருவரும் தலையாட்டினர்.

"எப்பவும் நாம இப்படியே ஒண்ணா இருக்கணும்டா" அனிஷ் மித்திரன், அரவிந்தன் தோளைத் தட்டினான்.அப்பொழுது தங்க நிற காக்ரா சோளியில் ரதி போல் மாடியிலிருந்து சிம்மி இறங்கி வர ,அனிஷ் ஒரு கணம் கண் இமைக்க மறந்தான்.இடை வரை நீண்ட கூந்தலை தளர பின்னி மல்லிகைச் சரம் சூடி,கை நிறைய வளையலும்,காலில் வெள்ளிக் கொலுசும் ஓசைப்பட நடந்து வந்தவளை அப்படியே அள்ளிக் கொள்ளலாம் போலிருந்தது அவனுக்கு.அப்படியே தம்பிகளை அம்போ என்று விட்டு விட்டு,சிம்மியை அடைந்தான்." "சிம்மி என்னோடு வா, முக்கிய பிரமுகர்களை வெல்கம் பண்ணனும்"சிம்மி இடையில் கையை வைத்து தள்ளிக்கொண்டு சென்றான்.


"பார்ரா இந்த அனிஷ் அண்ணாவை,இவ்ளோ நேரம் பாச மலர் டயலாக் விட்டான்,இப்ப அண்ணியை பார்த்ததும் மெரசலாயிட்டான்,இவன நம்பவே கூடாதுபா" அரவிந்தன் மித்திரனிடம் முறையிட,அவன் கவனத்தை ஒரு வாண்டு கவர்ந்திழுத்திருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN