பாகம் 17

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுற்றிலும் பனிப் படர்ந்திருக்க, இருவரும் ஒரு பென்ச்சில் அமர்ந்தனர்.அப்பொழுது அனிஷ் சிம்மியின் கையில் ஃபைல் ஒன்றைத் தந்தான்.சிம்மியின் புருவச் சுளிப்பைக் கண்டவன், "உனக்கு இது அவசியம் தெரிய வேண்டியது சிம்மி.எந்த விசயம் என் இதயத்தில் இரணமாய் உறுத்திட்டு இருந்துச்சோ,அதற்கான விடை இந்த ஃபைலில் இருக்கு.நிதானமாய் படிச்சிப்பாரு சிம்மி."

சிம்மி அவசர அவசரமாய் அந்த ஃபைலை திறந்துப் பார்க்க, ரஜீவ்வின் கொலை சம்மந்தப்பட்ட வழக்கு பதிவு பத்திரம் அதில் இருந்தது. ரஜீவ் மேல் தனிப்பட்ட விரோதத்தின் காரணமாய் சில ரௌடிகள் திட்டமிட்ட விபத்தில் ரஜீவ் மாண்டு போனதை அதன் வாயிலாய் அறிந்த்துக் கொண்டாள்.

சிம்மியின் கண்களில் நீர் திரண்டது.கண்டதே காட்சி,கொண்டதே கோலம் என அனிஷ் மேல் பழிப்போட்டு பேசியதை நினைத்துப் பார்த்தாள்.அனிஷை கண்கள் தேடின.அருகில் நடந்துக் கொண்டிருந்தவன் இவள் தேடுவதை உணர்ந்து அவளிடம் வந்தான்.

வேகமாய் அவன் கைகளைப் பற்றிக் கொண்டு "என்ன மன்னிச்சிடுங்க அனிஷ்,நா பெரிய தப்பு பண்ணிட்டேன்.

சாரா பேசனதை வெச்சு உங்களுக்கும் இந்த கொலைக்கும் சம்பந்தம் இருக்கும்னு எதேதோ பேசி உங்கள காயப்படுத்திட்டேன்.ஐயாம் ரியலி சாரி. "சிம்மி கேவி அழ, அனிஷ் பதறி விட்டான்.

ஆதரவாய் அவளை தோள் மேல் சாய்த்துக் கொண்டு," சிம்மி நான் என்னை உங்கிட்ட நிரூப்பிக்கணும்னு இதை செய்யல.என் கல்யாண நோக்கம் வேற,பட் உங்கூட இருக்கற அப்பத்தான் உன்னோட குணம் தெரிஞ்சது.உயிரா உன்கூட வாழணும் என்ற ஆசை வந்திச்சு.அதற்கு முன் இத கிளியர் பண்ணிட்டா ரெண்டு பேரும் நிம்மதியா வாழலாம்.
என் ப்ரண்டு சுதீப்கிட்ட சொல்லி கொஞ்சம் பர்சனல்லா இந்த விஷயத்தை டீல் பண்ணினேன்.ரஜீவ் மரணத்திற்கு நீதி கெடைச்சாச்சும்மா.இனி நீ சந்தோசமாய் வாழ்ந்தாதான் அவன் ஆத்மா சாந்தியடையும்.மெல்ல மெல்ல என்னை எங்கிட்ட இருந்து திருடிகிட்ட சிம்மி.அது கூட, போன தரம் நான் என் நண்பர்களோடு விஸ்லர் வந்தப்பதான் புரிஞ்சிக்கிட்டேன்.உன்ன ரொம்ப கஸ்டப்படுத்திட்டேன் செல்லம்.என்னை மன்னிச்சிடுடா."

முழந்தாள் மண்டியிட்டு சிம்மியின் கைகளைப் பிடித்து அனிஷ் கூறினான்.சிங்கம் போல வலைய வரும் தன் கணவன்,இப்படி மண்டியிட்டு மன்னிப்பு கோருவதை சிம்மி நம்பமுடியாமல் பார்த்தாள்.அப்படியே அவனை அணைத்தவள் கண்களில் ஆனந்தக்கண்ணீர் சொரிந்தது.திமிர் பிடிச்ச அனிஷ்...

அவள் எண்ணம் எவ்வளவு தப்பாகிப் போனது.எதுவும் பேசக் கூட அவளால் முடியவில்லை.சட்டென சிம்மியின் காலணிகளை கலற்றினான் அனிஷ்.அவள் கண்களை மூடச் சொல்லி பணிந்தான்.சிம்மியும் அவன் சொன்னதை செய்தாள்.அனிஷ் தன் பாண்ட் பாக்கெட்டிலிருந்து அதை எடுத்தான்.மெல்ல சிம்மியின் கால்களை தன் தொடை மீது வைத்து அதை அணிவித்தான்.

சில்லென்று ஒரு பொருள் தன் விரல்களைப் ஷ்பரிசிப்பதை சிம்மி உணர்ந்தாள்.மெல்ல கண்களைத் திறந்தாள்.
அப்பொழுது "இந்த விலை மதிப்பில்லா வைரத்திற்கு அழகு சேர்க்க இந்த சின்ன வைரத்தை பரிசளிக்கின்றேன்.ஏற்றுக் கொள் அன்பே,"காதலாய் மொழிந்தவன் மெலிதாய் புன்னகையித்தான்.

சிம்மி தன் கால் விரல்களில் பளிச்சிடும் அதைப் பார்க்கின்றாள்.ஆம்,அது வைரத்திலால்லான மெட்டிகள்.அதுவும் சிம்மி இரசித்து இரசித்து இரகசியமாய் தன் டைரியில் வரைந்து வைத்த அதே டிசைன்.
சிம்மி நெகிழ்ந்து போனாள்.அனிஷை கட்டித் தழுவிக்கொண்டாள்.

"இந்த டிசைன் உங்களுக்கு எப்படி தெரியும் அனிஷ்? ,இது ரொம்ப காஸ்ட்லியான அபூர்வ ரக வைரங்கள் ஆச்சே?எப்படி?எனக்கு எதுவும் புரியல அனிஷ்."

"உனக்காக எதுவும் செய்வேன் செல்லம்,ஷூ போட்டுக்கோ சிம்மிமா.குளிரும்.உனக்கு ரொம்ப புடிச்சத என்னோட கிப்ட்டா தரணும்னு ஆசை.அதான் உன் டைரியை சுட்டுட்டேன்,சாரி செல்லம்.இப்ப வா காட்டேஜ்க்கு போகலாம்."
அவள் தோளை அணைத்தவாறே அனிஷ் நடக்க சிம்மிக்கு நடப்பதெல்லாம் கனவு போலிருந்தது.

மற்றொரு அறையில் அர்மி அரவிந்தனுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருந்தாள். "நான் என்ன டாக்டர் ஆ? உனக்கு எங்க என்ன ஒடைஞ்சதோ எனக்கு எப்படி தெரியும் அர்விந்த்? "அர்மிதா அரவிந்தனை வறுக்கத் தொடங்கினாள்.

அரவிந்தன் அதை இரசித்தவாரே "என் தேவதை எங்க தொட்டாலும் எனக்கு குணம் ஆயிரும் அர்மி," வலியிலும் அரவிந்தன் அவளிடம் அசடு வழிந்தான்.அர்மிதா பொய்யாய் முறைக்க, அரவிந்தன் அவளை சமாதானப்படுத்த முற்பட்டான்.

"ஹூம் என்ன செய்வது?காதல்னு வந்த காலும் உடையும்னு எனக்காக எழுதி வெச்ச விதி போல," அலுத்துக் கொள்பவன் போல பேசினாலும் அர்மிதாவின் கைகளைப் பற்றி அவன் பக்கத்தில் உக்கார வைத்தான்.

"போதும் அர்மி,இனி இந்த வெளி வேஷம் வேண்டாம்.நீ இல்லாமல் என்னால வாழ முடியாது.தெரியாம செஞ்ச தவறுக்கு இந்த தண்டனை ரொம்ப வலிக்குதுடி.உன் விஷம தனத்திற்கு எப்பவும் நாந்தானே பலி ஆவறது,அதான் காதலையும் விளையாட்டா எடுத்துக்கிட்டியோனு கோபம்,வலி.பட், என்மேல நீ வெச்சிருந்த காதல் நிஜம்னு உன் மழைக்கால முதல் முத்தம் உறைக்க வெச்சது.எனக்காக நீ தந்த கிப்ட் புரிய வெச்சது.இத்தனை ஆண்டுகள் தனிமை, நீ இல்லாமல் நான் இல்லனு தெளிய வெச்சிருச்சு அர்மி. ஐ லவ் யூ சோ மச் டியர்." அழுத்தமாய் ஆனால் தெளிவாய் வார்த்தைகள் அவனிடமிருந்து வெளிப்பட்டன.


அர்மி மௌனம் காத்தாள். நடந்த நிகழ்விற்கு அவளும் காரண கர்த்தா அல்லவா? மெல்ல அவன் கை விரல்களைப் பற்றினாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN