காத்திருந்த காதல்:- பகுதி-2

Priyamudan Vijay

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கல்லூரி இனிதே ஆரம்பமானது.. முதலாம் ஆண்டு பி.காம் (அக்கவுண்ட்ஸ்) எடுத்திருக்கும், நம் ஜீவா, அவன் வகுப்பறைக்குள் நுழைந்தான். நுழைந்ததும், தன் வகுப்பு தோழர்கள் அதிகமாக இருப்பதை கவனித்தான்.
'என்னது இது? காலேஜ் குள்ள வரும்போது மொத்தம் 35 பேரு தான் என் டிபார்ட்மெண்ட்-ல னு சொன்னாங்க.. இங்க பாத்தா, 60 பேருக்கு மேல இருப்பாங்க போலையே..! ' என்றெண்ணிய ஜீவா, முதல் பெஞ்சில் அமர்ந்தான். பேக்-ஐ கீழே வைத்துவிட்டு கரும்பலகையைப் பார்த்தவன் அப்பொழுது தான் உணர்ந்தான், பி.காம் (அக்கவுண்ட்ஸ்) டிபார்ட்மெண்டும், பி.காம்(சி.ஏ) டிபார்ட்மெண்டும் ஒரே வகுப்பறையில் இருக்கிறார்கள் என்று.
வகுப்பறைக்குள் வந்த ஆசிரியர், தன்னை அறிமுகம் செய்த பின்னர்,
"பி.காம் (அக்கவுண்ட்ஸ்) அண்ட் பி.காம் (சி.ஏ) இந்த ரெண்டு டிபார்ட்மெண்டும் முதல் வருஷம் மட்டும் ஒரே கிளாஸ்-ல இருப்பீங்க. அடுத்த வருஷத்துல இருந்து, வேற வேற கிளாஸுக்கு போயிருவீங்க. ஓ.கே வா?" என்று கூறி முடித்தவர், அன்றைய வருகைப் பதிவை கணக்கெடுத்தார். அதில் ஒரு பெண் மட்டும் வரவில்லை. அவர் தான் நம் நாயகி மீனா.
"மீனா... மீனா.." என்று நான்கு முறை அழைத்த பின்னும் பதிலில்லை என்பதால் அவள் ஆப்சென்ட் என்று குறித்துக்கொண்டார் ஆசிரியர்.
"முதல் நாளே வரலையா காலேஜுக்கு?" என்று தனக்குள் புலம்பிய ஆசிரியர், மாணவர்களை ஒவ்வொருத்தராக தங்களை அறிமுகம் செய்து வைக்கச் சொன்னார்.
இப்படியாக பதினைந்து நாட்களும் கடந்தது. இந்த பதினைந்து நாட்களும் மீனா, கல்லூரிக்கு வரவில்லை. ஒரு கட்டத்தில் பி.காம் துறை சார்ந்த அனைவரும் அவள் கல்லூரி விட்டு போயிவிட்டாள் என்றே எண்ணினர்.
கல்லூரி ஆரம்பித்து பதினாறாவது நாளில், நம் ஜீவா, தனது வகுப்பறைக்கு செல்ல.. வகுப்பறை காலியாக இருப்பதை கவனித்தவன்,
'இன்னைக்கு ரொம்ப சீக்கிரமா வந்துட்டோமோ?' என்றெண்ணியப்படி தனது இருக்கையில் அமர..அதே வரிசையின் கடைசி இருக்கையில் ஒரு பெண் தன் தலையை, பெஞ்சின் மீது வைத்து கவிழ்த்தியப்படி அமர்ந்திருந்தாள்.
'யாரு இது? இவள இதுக்கு முன்னாடி நம்ம க்ளாஸ்-ல பார்த்ததே இல்லையே..!' என்று யோசித்தவன் மற்ற மாணவர்கள் வரும் வரை எதுவும் அப்பெண்ணிடம் பேச வேண்டாம் என்று முடிவெடுத்தான். சற்று நேரத்தில் சக மாணவர்கள் வந்தும், எவரிடமும் பேச்சுக்கொடுக்காமல், தலையை பெஞ்சில் வைத்தப்படியே படுத்திருந்த அப்பெண்ணை பார்த்தவன்,
'இந்த பொண்ணு யாரு..? ஒருவேளை..இவ தான் அந்த ஆப்செனட் ஆன பொண்ணு மீனா-வோ? ஏன் இவள் யார்கிட்டேயும் பேச மாட்டேங்குறா? புது இடம்-ங்கறதால பழக யோசிக்குறாள் போல..' என்று நினைத்தவன், மீனாவை கவனிக்க ஆரம்பித்தான்.
வருபவர், அவளைப் பார்த்துவிட்டு எதுவும் பேசாமல் போய்விடுவதைக் கவனித்த ஜீவா, தானே அவளிடம் போய் பேசுவதாக முடிவெடுத்தான். அப்பொழுது மீனா, தன் தலையை நிமிர்த்தினாள்.. அவளைப் பார்த்த ஜீவா, வாயடைத்துப் போனவனாக...
'ஈஈஈஈஈஈஈ... என்ன இவ இவ்வளவு அழகா இருக்கா????!!!! ஆனா, முகம் ஏன் இப்படி வாடி போயிருக்கு? சோகமா இருக்கா போலேயே...! சோகமா இருக்கும்போதே இவ முகம் இவ்வளவு அழகா இருக்குதுனா, சிரிச்சா எவ்வளவு அழகா இருப்பா???!!! ' என்று எண்ணியவனின் கண்கள் மின்னியது.
கண்கள் மின்ன பார்த்துக்கொண்டிருந்தவனை மீனா நோக்க..
'ஹய்யோ...!!!!! பார்க்குறாளே..பார்க்குறாளே..பார்க்குறாளே...!! ' மேலும் ஜீவாவின் கண்கள் மின்னின.

சற்று நேரத்தில் ஆசிரியர் வந்து பாடம் நடத்த ஆரம்பிக்க..ஜீவாவின் மனம் ஏனோ, மீனாவை சுற்றியே உலா வந்தது. பாடத்தைக் கவனிக்காமல் அவளைத் திரும்பிப் திரும்பிப் பார்த்தபடியே இருந்தான். இடைவேளை நேரத்தில், மீனாவைப் பார்த்த ஜீவாவிற்கு அவள் அழுதுக்கொண்டிருப்பது தெரியவரவே..அவன் மனம் பதறியது. அவளின் மனதை மாற்ற எண்ணியவன், மீனா உட்கார்ந்திருந்த இருக்கைக்கு முன்னிருக்கையில் அமர்ந்தான்..
"ஹாய் ங்க..! நான் ஜீவா.. ஜீவக்காருண்யன். நீங்க ஜீவா-ன்னே கூப்பிடலாம். உங்க பெயர் மீனா தானே?" என்று ஜீவா கேட்க..
"ம்ம்ம்.. ஆமா." என்றவளின் முகம் வாடியிருக்க..மேலும் தன் பேச்சைத் தொடர்ந்தான் ஜீவா.
"நைஸ் நேம். அப்பறம்.. மீனா, நீங்க பி.காம் அக்கவுன்ட்ஸ்-ஆ?" என்று கேட்டவனின் மனம் ஏனோ, மீனாவிடமிருந்து 'ஆம்' என்ற பதிலை எதிர்ப்பார்த்தது. ஆனால் மீனாவோ,
"இல்ல.. பி.காம் (சி.ஏ)" என்ற பதிலில் ஜீவா வருத்தமாக.. அதைக் கண்டுக்கொண்ட மீனா,
"ஏன் சோகம் ஆகிட்டீங்க?" என்று கேட்டு வைத்தாள்.
"அது..அதுவந்து.. தூக்க கலக்கமாக இருக்கு. அதான் உங்களுக்கு அப்படி தெரியுது போல. நானாவது பரவாயில்ல, இப்போ தான் சோகமாக தெரியுறேன். நீங்க காலையிலிருந்தே ரொம்ப சோகமாக தெரியுறீங்க. ஏன்?"
"முதல்ல.... இது புது இடம்-ங்கறதால மட்டும் தான் வருத்தமா இருந்தேன். ஆனா, அப்பறம்..." என்று மீனா இழுக்க..
"அப்பறம் என்னங்க?"
"நீங்களே பாருங்க ஜீவா.. என் பக்கத்துல யாராவது உட்கார்ந்திருக்காங்களா? இப்படி இருந்தா, சோகமா இல்லாம என்ன பண்ணுறது?" என்ற மீனாவின் முகம் மேலும் வாட..
"ஓ.. இதான் விசயமா? நான் ஒன்னு கேட்டா தப்பா எடுத்துக்கமாட்டீங்களே...?" என்ற ஜீவாவின் கேள்விக்கு, மீனா, 'இல்லை' என்ற பதில் அளிக்கவே.. ஒரு பெருமூச்சுடன் தன் பேச்சைத்தொடர்ந்தான் ஜீவா..
"அது.. அது வந்து..."
"சும்மா கேளுங்க ஜீவா."
"ம்ம்..... நீங்க சரின்னு சொன்னா.....நான் வேணும்னா, உங்க பக்கத்துல... உங்க பக்கத்துல...உட்கார்ந்துக்கலாமா?" என்று ஜீவா தயங்கி தயங்கி கேட்கவும். யோசிக்கலானாள் மீனா... சில வினாடிகளில், அவள் 'சரி' என்கவும், அதிசயித்த ஜீவா...
"நிஜமாவா?" என்று கேட்க..
"நிஜமா தான் ஜீவா.."
"அப்போ நான் என்னோட பேக் எடுத்துட்டு வரட்டுமா?" என்று ஜீவா கண்கள் மின்ன கேட்க..
"ம்ம் வாங்க ஜீவா." என்றவள், ஜீவா அமரும் அளவிற்கு இடம் விட்டு அமர்ந்தாள் மீனா.
மிக வேகமாக தனது நோட்டுகள், பேனா, பேக் எல்லாம் எடுத்துக்கொண்டு.. மீனாவின் இருக்கைக்கு வந்தான். பேக்கினை கீழே வைத்துவிட்டு, இருக்கையில் அமர்ந்தவன், தனது இடப்புறத்தில் அமர்ந்திருந்த மீனாவை ஒரு கணம் தன்னை மறந்து பார்த்தான். தன்னை ஜீவா பார்த்துக்கொண்டிருப்பதை உணர்ந்த மீனா, கேள்வியாக அவனைப் பார்க்க.. ஜீவாவோ,
"அது... ப்ரண்ட்ஸ்????" என்று டக்கென்று சமாளிப்பதற்காக தன் கையை நீட்டி ஜீவா கேட்க... மீனாவும் அதனை ஒப்புக்கொண்டு தன் கையைக்கொடுத்தபடி...
"ம்ம்..சரிங்க.. ப்ரண்ட்ஸ் " என்று புன்னகைத்தபடி கைக்குலுக்கியவளை ரசித்துப்பார்த்த ஜீவா, தன்னிலை உணர்ந்தவனாக தன் தலையை ஆட்டிக்கொண்டான்.. தொண்டையை செருமியபடி, மேற்கொண்டு பேசினான் ஜீவா..
"ப்ரண்ட்ஸ்-னா, 'வாங்க-போங்க'- னு கூப்பிடாத பா. ப்ரண்ட்ஸ்-குள்ள மரியாதைலாம் வேண்டாம். சரியா?" என்று ஜீவா, தன் புருவங்கள் உயர்த்தி மீனாவிடம் கேட்க....
"ம்ம்..ஓகே.. நீயும் 'வா-போ' -னே கூப்புடு ஜீவா.." என்று புன்னகைத்தப்படி தன் பையிலிருந்து நோட் ஒன்றை எடுத்து தன் பெயரினை எழுதிக்கொண்டிருந்தவளை வைத்த கண் எடுக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் ஜீவா.
__________________________________
ஜீவா-மீனா.. இரண்டு பேரும் நண்பர்களாகிவிட்டனர். அடுத்து என்ன நடக்கபோகிறதென்று இனி வரும் அத்தியாயங்களில் பார்ப்போம்.



***********​
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN