என்னடி மாயாவி நீ: 3

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 3

விடியற்காலையில், விடியும் பொழுதில் வந்து இறங்கிய விஷ்ணுவை கண்டு மகிழ்ந்தனர் அவனது பெற்றோர். அவனை கண்ட ஆனந்த களிப்பில் சுப்பிரமணியனோ, "வாப்பா போன வேலையெல்லாம் நல்ல படியா முடிஞ்சிருச்சா?" எனக் கேட்க விஷ்ணுவோ நல்லா போனுச்சு பா, என்ன உங்கள தா ரொம்ப மிஸ் பண்னேன் என மொழிந்தான். "என்னைய மட்டுமப்பா மிஸ் பண்ண?" என அவனுடைய தந்தை குறும்பு கூத்தாட கேட்க, வசீகர சிரிப்பை உதிர்த்தவன் "அம்மாவையும் தான்ப்பா, ஆனா உங்கள கொஞ்சமா அம்மாவை மட்டும் நெறயா", என அப்பாவின் பிள்ளைக்கு தப்பாமல் பிறந்திருந்த விஷ்ணுவை கண்ட தந்தைக்கு சிரிப்பை உண்டாக்கியது அவனது பதில்.

அம்மா, அப்பா இருவரையும் விஷ்ணு பாசமாக பார்த்துக்கொள்வான். ஆனா, அம்மா மீது மட்டும் விஷ்ணுக்கு தனி பாசம் என்று தான் சொல்ல வேண்டும். ஏனென்றால், அவர்கள் இருவரது பிணைப்பு அப்படி என்றால் அதற்கு மிகையில்லை.

அழகான சிறிய குருவி கூடு போல தான் இவர்களது குடும்பம். இந்த குடும்பத்தின் ஒரே வாரிசு என்றால் அது விஷ்ணு மட்டுமே. ஆதலால், பெற்றோர்களின் மொத்த அன்பின் உருவம் தான் விஷ்ணு.

மகனின் சிரிப்பு ஓசையை கேட்டுக்கொன்டே இவர்களுக்குள் நுழைந்த வசந்தா எல்லா வசனத்தையும் கேட்டிருந்தார் ஏற்கனவே.
"ஏன்மா இவளோ நேரம் கூப்பிடுறேன், வந்து பாத்துட்டு போனாதான் என்னமா", என கோபப்படும் போது கூட பாசமான வார்த்தைகளை வெளிப்படுத்தும் தந்தையின் தாய் மீதுகொண்ட காதலை மனதில் மெச்சிக்கொண்ட விஷ்ணு, வெளியில் "ஏன் பா அம்மாவ திட்டுறீங்க விடுங்கப்பா" என கூறி அன்னையை கட்டிக்கொண்டான். "ஏன்ப்பா இளச்சு போயிட்ட, ஒழுங்காவே சாப்பிடாலய. அங்க சரியான சாப்பாடு இல்லையப்பா"என கவலையோடு வினாவிய அம்மாவிடம்," உன் கையாள சாப்பபிடலைல அதான் மா, ஒன்னும் இல்லமா இப்ப உங்க கையாள சாப்பிட்ட சரி ஆகிடுவேன்", என கூறியவுடன் அவனின் தாயோ, "நீ போய்ட்டு பிரெஷ் ஆகிட்டு வாப்பா சாப்பிடலாம்"என கூறி சமையல் அரண்மனையில் ஆட்சி செய்ய ஆரம்பித்தாள், வசந்தா. ஏனென்றால், அவரிடம் ஏக்கத்தோடு கேட்டது அவரது இளவரசன் ஆச்சே.

ஒன்றாக மூவரும் அமர்ந்து உணவருந்தும்போது விஷ்ணு,
"இன்னைக்கு இரவு உங்ககிட்ட முக்கியமான ஒரு விஷயம் பேசணும்"என இதை மட்டுமே கூறி பெற்றோர் இதை பற்றி விசாரிப்பதற்கு முன்பாகவே அவ்விடத்தை விட்டு நீங்கினான். நான் என்னோட (மனதில் உங்க மருமகள) நண்பனை பாத்துட்டு வரேன் என சொல்லி கிளம்பிட்டான் ஆதிகா வீட்டிற்கு...

அவனுக்கு இப்போது தெரியவில்லை எந்த சூழ்நிலை வந்தாலும் ஆதிகா தான் எப்பவுமே நம்ம அம்மாவுக்கு மருமகள் என.

தமிழ் நாட்டிலிருந்து ஒரு போன் கால் நியூ யார்க் வரை தாவி சென்றது காற்றிலே.
அதை உயிர்ப்பித்து காதில் வைத்தவன் "சொல்லுங்க மாமா"என கூற உனக்கு பொண்ணு பாத்துருக்கேன்பா, ஜாதகமும் பாத்துட்டேன் ரொம்ப பொருத்தமா இருக்கு நீ மட்டும் சரின்னு சொல்லிட்டா மேற்கொண்டு பேசலாம் என கூற, வர்ஷிதோ "சரிங்க மாமா
உங்களுக்கு சம்மதம்னா எனக்கும் சம்மதம் மாமா, நான் அப்புறம் கூப்பிடுறன்"என அவர் பேச இடம் விடாதபடி இவன் போன் காலை கட் செய்தான்.

ஜாதகம் பொருத்தம் இருந்து என்ன செய்றது, மனசுக்கு புடிக்கணுமே... பார்போம் வாழ்க்கை அழைச்சிட்டு போற பாதையில போவோம் என மனதை மாற்ற முயற்சி செய்தான். முயற்சி செய்தும் அவனது அம்மூவை
மறக்கமுடியவில்லை அவனால், அவனது காதல் சுமந்த இதயத்தால்...

காதல் சுமந்த ஒரு நெஞ்சம் இங்கே டிராபிகில் பயணத்தில் இருந்தது... இந்த காதலுக்கு சொந்தக்காரியான ஆதிகவோ வீட்டில் அவனுக்காகவும், தங்கள் உள்ளத்திலுள்ள காதலை பெற்றோரிடம் கூறி சம்மதம் வாங்குவதற்காகவும் தன்னை தயார் படுத்திக்கொண்டிருந்தாள். எந்த நிலை வருகை புரிந்தாலும் காதலை மட்டும் விடக்கூடாது எனும் முடிவில் தீவிரமாக திளைத்திருந்தனர் இருவருமே...

இந்நேரத்தில் இருவரின் எண்ணமும் ஒன்றே...

காதல் கொண்ட நெஞ்சம்
இரண்டும் ஏங்குகிறது...
காதலுக்குள் சரணடைந்து
காதல் பந்தத்துக்குள்
தங்களை தொலைத்துக்கொள்ள...

மேசை மீது இருந்த ஆதிகாவின் போட்டோ பிரேம் ஒன்று காற்றினால் அசைவு கொண்டு கீழே சாய்ந்ததால்,
விஷ்ணுவின் நினைவுகள் பொதிந்து இவர்களின் காதலினால் உயிர் பெற்று, உயிர் வாழ்ந்து கொண்டிருந்த ஹீரோ பேனா கீழே விழுந்து சுக்கு நூறாக உருமாறி உயிரை துறந்தது. அதை கண்ட ஆதிகாவுக்கு உயிரே இல்லாமல் உறைந்து போனது போல ஒரு உணர்வு உச்சி முதல் பாதம் வரை பரவியது. தினமும் ஒரு முறையாவது இந்த பேனாவிடம் பேசுபவள், இனி அவன் இருக்கையில் எதற்கு இந்த பேனா என கேள்வி கேட்டுக்கொண்டு மனதை தேத்திக்கொண்டாளும் இவளுக்குள் பதற்றமாகவே இருந்தது.

சாலையிலோ ஒரு பெருத்த கூட்டம். சாலையின் இருபுறங்களிலும் நிறைய வாகனங்கள் நிறுத்தி கிடந்தன. கூட்டத்தில் இடம்பெற்றிருக்கும் எல்லா மக்களும் என்ன ஆச்சு? யாருக்கு அடிபட்டது? என பல கேள்விகளை எழுப்பினர். விபத்துக்குள்ளான வாகனத்தின் எல்லா உறுப்புகளும் சுக்கு நூறாகி போயிருந்தன. அப்போ அடிப்பட்டவரின் நிலை என்னவோ? என சிலர் புலம்பினர்.

கூட்டத்தில் உள்ள ஒருத்தருக்கும் தெரியவில்லை அடிப்பட்டவர் யாரு என்று... பல மனிதர்களும் மனிதநேயமற்று வெறும் வேடிக்கை மட்டுமே நடத்திக்கொண்டிருந்தனர். சில மனிதம் உள்ள மனிதர்களே உதவி செய்து ஆம்புலன்ஸை அழைத்தனர்.

(என்ன நேயர்களே, இந்த கூட்டத்துல விஷ்ணு மாட்டிகிட்டு ஆதிகா வீட்டிற்கு தாமதமா போகப்போறாணு தானே யோசிக்கிறீங்க. அதுதான் இல்ல, இந்த கூட்டத்துக்கு காரணமே இவன் தான்.)

சூரியன் மறைந்த பிறகு பகல் முடிவது போல, இனி நம் வாழ்க்கையும் நமக்கு முடிந்துவிட்டது என சாலையில் விபத்துக்குள்ளாகி, உடல் உணர்வுகளற்று, மனதில் சுமந்த ஆசையெல்லாம் நிறைவேறாமல் பொய்யென ஆக, இறுதியில் இவ்வுயிரை கொடுத்த கடவுளே அதை கறந்து கொண்டிருக்க, அவ்வுயிருக்கு சொந்தமான உடலோ, தன் தாயிடம் குடித்த பாலெல்லாம் உருமாறிய ரத்தத்தில் ஊறி கிடந்தது.

கூட்டத்தில் ஒருவர் மட்டும் அடிப்பட்டவரின் போன் எட்டி விழ, அதை எடுத்து இந்த துற்செய்தியை சம்மந்தப்பட்டவர்களிடம் தெரிவிக்கவேண்டும் என contact list ஐ பார்த்து, அடிப்பட்டவரின் பெற்றோருக்கு போன் செய்தார். போனில் மறுபுறமோ அதிர்ச்சியில் அதிர்ந்து, சோகத்தை அடக்கமுடியாமல் கதறினர், விஷ்ணுவின் பெற்றோர்.

கொஞ்சம் நேரத்திற்கு பிறகு, கூட்டம் கலைய, மக்கள் விலக, ஆம்புலன்ஸ் வந்தது அந்த உடலை மருத்துவமனைக்கு எடுத்து செல்லவதற்கு. ஆசைகளோடு பைக்கில் தனது இறுதி பாதைகளில் பயணித்த அந்த வாலிபனின் உடலை போஸ்ட்மார்டம் செய்து வீட்டிற்கு கொண்டு வந்தனர்.

முதல்முறையாக விஷ்ணு தன் வீட்டிற்கு வர போகிறான் என எதிர்பாத்த ஆதிகாவிற்கு, அவனின் இறுதி சடங்கிற்கு தான் போவோம் என சிறிதும் எதிர்பார்க்கவில்லை.

இப்படி என்ன கைவிட்டுட்டியே என புலம்பியும் ஆதிகாவால் அழுகமுடியவில்லை. அவளால், மனம் திறந்து தனது ஆத்திரத்தை கொட்டவும் முடியவில்லை. ஏனென்றால், அவள் காதலித்ததுதான் யாருக்கும் தெரியாதே. அவளும் தோழன் என்றே பெற்றோரிடம் கேட்டு விஷ்ணு வீட்டிற்கு வந்திருந்தாள். இனிமேல், தங்களது காதல் தெரிந்தும் என்ன பயன்? .... வசந்தாவோ ஒரு பக்கம் கதறி அழ, சுப்பிரமணியனோ மனமுடைந்து அமர்ந்திருந்தார்,தனது ஒரே ஒரு ஆசை மகனை பறிக்கொடுத்த பறித்தவிப்பில்...

அவனின் காதலுக்கு சொந்தமான நெஞ்சமோ சோகத்தை வெளிப்படுத்த முயன்றும், அவளின் ஆசை மனம் அதிர்ச்சியடைந்து, அழுகை கண்ணை விட்டு தாண்ட மறுத்தது. அவளுக்கு உயிரை யாரோ சிறைப்படுத்தியது போல ஒரு உணர்வு உள்ளுக்குள் ஊறியது. அவளின் பல கனவுகளை, விஷ்ணுவின் இறப்பு குழி தோண்டி புதைத்துவிட்டது. அவளின் சோகம், துக்கம், ஏமாற்றம் எல்லாம் சேர்ந்து மனதில், அவளுக்கு பாரமாக அமர்ந்தது.

மேடையேற கூடுமோ
மீண்டும் நமது நாடகம்....

நீயும் நானும் சேர்வதால்
யாருக்கென்ன பாதகம்...

யாரை சொல்லி நோவது
காலம் செய்த கோலம்....

உன்னை என்னை
வாட்டுது காதல்
செய்த பாவம்...

சில பொழுதுகள் யாருக்கும் தெரியாமலே அழுது, கஷ்டத்தை வெளியில் வெளிபடுத்த முடியாமல், அந்த சிறு பேதையின் மன பாரம், அவனின் மீது மட்டுமல்ல காதல் மீதும் வெறுப்பை அழைத்துக்கொண்டது.

நாட்கள் உருண்டோட, கல்யாணத்திற்கு முதல் நாள்தான் இந்தியாவிற்கு வந்திறங்கினான் வர்ஷித். இவனது மாமாவான சுப்பையன், இவன் இனிமேலாவது சந்தோசமாக இருக்க வேண்டும் என கடவுளை பிரார்த்திக்கொண்டார்.

தனது காதலின் கடைசி பக்கம் என இந்த திருமணத்தை நினைத்தவனுக்கு தெரியவா போகிறது, இந்த பந்தம் தான் அழகான காதல் அடங்கிய வாழ்க்கையின் முதல் பக்கம் என்று.

காலை பொழுது அழகாக துவங்க, வர்ஷித்தின் மனம் முழுவதும் ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிடுவோமோ என்ற குற்ற உணர்ச்சி சுமந்துக்கொண்டிருந்தது. பிறகு, ஆறடி ஆளுயரத்திற்கேற்ப பட்டு வேஷ்டி சட்டை அணிந்து மாப்பிள்ளை தோரணையில் மணமேடை ஏறினாலும் அவனின் மனதிலும் முகத்திலும் திருமண கலை சிரிதும் தென்படவில்லை.

பல மந்திர சொற்களோடு, தேவர்களின் ஆசியோடு, மனம் நிறைந்த இந்த ஜோடியின் சொந்தங்களின் திருப்தியோடு, இவர்களின் திருமணம் சாதாரணமாகவே நிகழ்ந்தது, மலைக்கோட்டை மாநகரிலே...திருமண தம்பதி இருவரின் உள்ளங்கள் மட்டும், அழகான, மீண்டும் அனுபவிக்க இயலாத இந்த திருமண தருணத்தை ரசிக்க முடியாமல் தவித்துக்கொண்டிருந்தது. தாலியால் மூன்று முடிச்சு போடும் வரை தனது மனையாளின் நிலா முகத்தை அவன் நேரிலும் பார்க்கவில்லை, மாமா போனில் போட்டோ அனுப்பியும் பார்க்கவில்லை. ஒரு வேலை பார்த்திருந்தால் வேண்டாம் என மறுத்திருப்பானோ என்னவோ... ஆனால், விதிக்கு தெரியுமே யாருக்கு யார் என்று... அதனாலே, இருவரையும் இணைத்து வைத்து வேடிக்கை பார்த்தது.

தன் வாழ்க்கையோடு வெறும் தாலியால் போட்ட முடிச்சியின் காரணமாக சொந்தமானவளின் பிறை நெற்றியில் குங்குமம் வைக்கும்போதுதான், தனது இருவிழியால் அவளது திருமுகத்தை பார்த்து அதிர்ந்தான்... அவளது கலங்கிய விழிகளை கண்டு. அவளது விழிகளில் சுரந்த நீரை பார்த்து அதிர்ந்தானோ அல்ல, அவளது விழிகளை கண்டு அதிர்ந்தானோ அது அவனுக்கு மட்டுமே புலப்பட்ட விஷயமாகும்.

அந்த விழிகளுக்கு சொந்தக்காரி ஆதிகா தான் என்றால் அதில் பொய்யில்லை.

கல் போன்ற இவனது இறுகிய மனம் இளகுமா? காதல் மீது வெறுப்பு கொண்ட இவளது உள்ளமும் துளிர்விடுமா? அடுத்த அத்தியாயத்தில் பாப்போம்...


என்னடி மாயாவி நீ: 2


என்னடி மாயாவி நீ: 4
 
Last edited:

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 3
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN