காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 13

Bhagi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இரு தினங்களாக உறக்கமின்மையால் அசதி கொண்ட கேஷவின் கண்களும் உடலும் ஓய்வுகொள்ளவும் மறுத்து திடும்மென தூக்கத்தில் இருந்து விழித்துக்கொண்டன... கண்களை கசக்கிக்கொண்டு கடிகாரத்தை பார்க்க மணி 7 ஐ நெருங்கிக் கொண்டிருந்தது... தனது அறையை சுற்றிலும் ஒரு முறை பார்வையை ஓட்டியவன் கண்களில் டேபிளின் மேலே உள்ள காபி பிளாஸ்கினை கண்டு அன்னையை நினைத்து இதழில் புன்னகை தவழ்ந்தது. அதே நேரம் அவன் கைபேசி இசை எழுப்ப எண்களை பார்த்தவனின் முகம் முழுக்க குழப்பம். இவன் ஏன் இந்த நேரத்துல கால் பண்றான். தெரிஞ்சி இருக்குமோ என்று எண்ணியிருக்க கைபேசி விடாமல் தொடர்ந்து அழைக்கவும் அதை ஸ்வைப் செய்து காதில் பொருத்தினான்.

“ஹலோ கேஷவ்”

அண்ணனின் குரலை கேட்டதும் "சொல்லு ஜெய் எப்படி இருக்க , ஃப்ராக்டீஸ்லாம் எப்படி போகுது?... என்ன காலையிலேயே போன்?..." என்று படுக்கையை விட்டு எழுந்தவன் அன்னை வைத்துச்சென்ற காபியை கப்பில் சாய்த்து பால்கனியின் கைப்பிடி சுவரில் சாய்ந்துகொண்டு ஆசுவாசமாக சுவைக்க ஆரம்பித்தான்.

"எனக்கென்னடா நான் நல்லாதான் இருக்கேன்..." என்று அலுப்பாய் கூறிய ஜெய் , கேஷவ்... என்று நித்தினான். "நீ எப்படி இருக்க கேஷவ்... உனக்கு விருப்பம் இல்லாத இடத்துல விட்டுட்டு உன்னை ரொம்ப கஷ்டபடுத்திட்டேனாடா" என்று வருத்தமாக பேசியதும்

ஜெய் கூறவருவது புரிந்து கொண்ட கேஷவ் "என்ன சொல்ற ஜெய்.... நீ என்னை கஷ்டப்த்தால1!படுத்தினியா...!!!!" என்று ஆச்சர்யமான குரலில் கேட்டான்

தம்பியின் விளையாட்டு குணம் தெரிந்தவன் "தெரியும் டா நடிக்காத.... இப்போதான் கார்ததிக் கிட்ட பேசினேன். அவன் எல்லாத்தையும் சொல்லிட்டான்... நீ ஏன் கேஷவ் இவ்வளவு பெரிய ரிஸ்க் எடுத்த" என்று கேட்டவனின் குரலில் ஏதேனும் நேர்ந்திருந்தால் என்ன செய்வது என்ற பதட்டம் தெள்ள தெளிவாய் தெரிந்தது

அண்ணணின் குரலில் இருந்த வருத்தத்தை உணர்ந்தவன் "சாரி ஜெய் பட் வேற வழி தெரியல... இண்டஸ்டீரில உனக்கு எவ்வளவு பெயர் இருக்குன்னு இதுல வந்த பிறகுதான் தெரிஞ்சிகிட்டேன். உன் திறமை ,உன் உழைப்பு, ஏதும் நான் பொறுப்பேத்துகிட்ட பிறகு கெட்டு போகறது எனக்கு பிடிக்கல" என்று அண்ணணுக்கு புரியும்படி கூறினான்.

"டீலர்கிட்ட பேசி இருக்கலாமே டா அதுக்குன்னு இவ்வளவு ரிஸ்க் தேவையா ???... நீயூம் மோகனும் தான் அதை ஆப்ரேட் செய்தீர்களாமே!! ஏதாவது அசம்பாவிதம் நடந்திருந்தால்... என்ன ஆகியிருக்கும் அம்மாவுக்கு என்ன பதில் சொல்லி இருப்பேன்". என்று கலங்கிப்போய் பேசினான் ஜெய்

அவன் கரகரப்பில் அண்ணனை நினைத்து நெகிழ்ந்தவன் "எனக்கு ஒன்னும் இல்ல பயப்படாத ஜெய்... நாங்க பக்காவா பிளான் பண்ணிதான் செய்தோம். சோ டோன்ட் வொரி நான் விரும்பி ஏத்துக்கிட்டதோ இல்ல என் விருப்பம் இல்லாம என்னிடம் வந்து சேர்ந்ததோ... ஆனா நீ வரும் வரை நிறுவனம் என் பொறுப்பு அதுல எது வந்தாலும் என்னையே சேரும்... என் கடைசி முயற்சி வரை செய்து பாக்கனுமுன்னு ஒரு வெறி... ஜெய்... நீ எடுத்த பேரு அது எப்பவும் உருகுலையாம இருக்கனும்" என்று நிறுத்தி நிதானமாக கூறிய கேஷவ் ஜெயந்தனுக்கு புதியது .அவனுக்கு தெரியும் தம்பியின் திறமை ஆனால் இத்தனை அளவு அவன் மனஉறுதியை கண்டதில்லை தம்பியின் செயலை நினைத்து பெருமை கொண்டவன் என் தம்பின்னு உன்னை சொல்லிக்க எனக்கு எவ்வளவு பெருமையா இருக்கு கேஷவ் என்று மனம் திறந்து பாராட்டினான்..

"சரி சரி பேசி என்னை டார்ச்சர் பண்ணி பாராட்டினது எல்லாம் போதும் வேற வேலை இருந்தா போய் பாரு..." என்றவனின் குரலில் கேலி இழையோட "ஓ.... உனக்கு தான் அங்க வேலையே இல்லையே சரி போய் பிராக்டீஸா பாரு சின்னபுள்ள தனமா காலங்காத்தல போன் பண்ணிக்கிட்டு மனுசனுக்கு இங்கு எம்புட்டு வேல இருக்கு நை நைன்னு ஃபோனை போட்டு பேசிக்கிட்டு என்று கூற

"டேய்" என்று ஜெய் மிரட்ட

"ஐ யெம் எஸ்கேப்" என்று போனை அனைத்தவன் குளியலறைக்குள் புகுந்தான்

சுப்பிரமணி சுவாமி திருக்கோயில்

மங்கள மேள இசை முழங்க, நாதஸ்வர ஒலி எழுப்ப, கோவில் மணிமண்டபத்தின் நடுவே வண்ணமலர்களின் வர்ணஜாலத்தில் அலங்கார மணப்பந்தலில் அய்யர் கொடுத்த கூரை பட்டுடுத்தி அழகிய சிற்பமாய் தலை தாழ்த்தி நிலம் பார்க்க கண்களில் எவ்வித உணர்ச்சியும் இன்றி நிர்மலமான முகத்துடன் பார்கவி மனையில் இருக்க பட்டு வேட்டி சகிதமாக கழுத்தில் மாலையுடன் ஆண்மையின் மிடுக்காய் கம்பீர தோரணையுடன் மணமகன் அமர்ந்திருக்க ஐயர் மந்திரம் ஓத தேவாதி தேவர்கள் வந்து வாழ்த்த சுற்றமும் நட்பும் ஆசிகூற பெண்ணவள் பொன்மேனியில் புது மஞ்சள் கயிறு உரச தன்னில் சரிபாதி ஆக்கிக்கொண்டான் கேஷவ்.

பெற்றவர்கள் தங்கள் முகங்களில் புன்னகையுடன் கூடிய நிம்மதி ரேகையும் படர்ந்து உள்ளங்கள் மகழ்ச்சியில் நிறைந்து பூரித்துபோயிருந்தது.

அனைத்து சடங்கும் முடிந்து மெட்டி அணிவிக்க பெண்ணவளின் வாழைதண்டு காலெடுத்து மாவிலை பாதத்தை அம்மியில் வைக்க வெள்ளி மெட்டி எடுத்து கொவ்வை பழமாய் சிவந்த வெண்பஞ்சி விரல்களில் அணிவிக்க மந்திரத்திற்கு கட்டுண்ட பதுமையாய் மனிதர்கள் ஆட்டுவிக்கும் பாவையாய் நின்றிருந்தாள் பார்கவி.

"பொண்ணு மாப்பிள்ளை போய் பெத்தவாளாண்ட ஆசிர்வாதம் வாங்கிண்டு, அப்படியே போய் சாமிய சேவிச்சிட்டு வாங்கோ" என்று ஐயர் உரக்க கூறினார்.

மணபந்தலை விட்டு வந்தவர்கள் பெண்ணை பெற்றவர்களான மாணிக்கம் மஞ்சுளாவின் கால்களில் விழப்போக கேஷவ்வை தடுத்த மாணிக்கம் இருவரையும் வாழ்த்தி கேஷவ்வின் கை பற்றினார். "மாப்பிள்ளை ரொம்ப நன்றி என் பெண்ணை" என்று நா தழுதழுக்க வார்த்தைகள் முட்டி மோதி முழுமையாய் கூற முடியாமல் கரகரக்க மாணிக்கத்தின் கரங்களில் தன் கரத்தைக்கொண்டு அழுத்தம் கொடுத்தவன் அவர் மனநிலையைக் கணித்து "அங்கிள்" என்று அழைத்தான்.

"இன்னும் என்ன அங்கிள் ஆட்டுக்குட்டின்னு, இப்போ அவர் உன் மாமனார் அழகா உரிமையா மாமான்னு கூப்பிடு" என்று உர்ச்சாகமாய் ஆதி கூற அம்மாவை பார்த்தவன் தந்தையின் சிரிப்பும் கண்களில் பட "மாமா நீங்க என்னை தராளமா நம்பலாம்" என்று உறுதியளிக்க மாணிக்கத்தின் கண்கள் பனித்தது மகளை ஆதுரமாக அணைத்து தலையை வருடி மனம்தளராம இருக்கனும் டா எல்லாம் நல்லதுக்குதான் என்று கூறி அறிவுத்தினார். பின் தாயின் கரம் பிடித்து மஞ்சுளாவின் தோள்களில் சாய்ந்தவளை தாயுள்ளம் வாரிஅணைத்து உச்சியில் முத்தம் வைத்து மகளின் மனநிலையை நினைத்து வருத்தம் கொண்டது.

ராஜராமன் ஆதிநாரயணியிடம் வந்து ஆசிபெற நல்வார்த்தை கூறி வாழ்த்தியவர்கள் பார்கவியை அணைத்துக்கொண்டு மகிழ்ச்சியை வெளிப்படுத்தி கன்னத்தில் முத்தம் வைத்து கொண்டாடிய ஆதிநாரயணியின் செய்கையில் பெண்ணை பெற்றவர்கள் தங்கள் மகள் நல்ல இடத்தில் வாழ்க்கை பட்டதை நினைத்து மனம் நிறைந்து இருந்தது.

பார்கவியை அணைத்துக்கொண்ட தியாவின் கண்களில் நீர் திரள "அக்கா அக்கா" என்று கேவினாள்... தந்தைக்காக கல்யாணத்திற்கு அரை மனதாய் சம்மதம் சொன்னவள் இப்போது நடந்திருந்த சம்பவங்களால் மேலும் மனம் நொந்திருப்பாளே அவள் மனம் என்ன பாடு பட்டிருக்கும் யார் எவர் என்று அறியாமலேயே வாழ்கைபட்டிருக்காளே அவளுக்கு எந்த கஷ்டமும் இல்லாமல் அவளின் மனதிற்கு பிடித்தவாறு வாழ்க்கை இருக்க வேண்டும் என்று நினைத்து மருகியவளின் கண்களில் நீர் வழிய இருந்தவள் தன்னை நிதானப்படுத்திக் கொண்டு திரும்பி கேஷவை பார்க்க எந்தவித முகமாறுதல்களும் இன்றி நின்றுக்கொண்டிருந்தான். எவ்வளவு பெரிய அடி வாழ்வில் திரும்பி எழ முடியாத அளவுக்கு விழம் அடியை தன் அக்காவிற்க்கு விழாமல் தாங்கியவர் என்ற மரியாதை பிறக்க அக்காவை பார்த்துக்குங்க அத்தான் என்று கூறி தன் வாழ்த்துக்களை தெரிவித்தாள் தியா. அவளின் வாழ்த்திற்க்கு சிரிப்புடன் நன்றி கூறியவன் ஒரு சின்ன தலை அசைப்புடன் அவ்விடத்திலிருந்து முருகர் சன்னதிநோக்கி செல்ல அவனை தன்னிச்சையாய் பின் தொடர்ந்தாள் பார்கவி.

என்னைய்யன் கந்த வேல் முருகன் கலியுக கடவுளாம் சுப்பிரமணிசுவாமியை வணங்கி சந்நிதியில் நிற்க இருவரும் இருவேறு மனநிலையில் இருந்தனர். கேஷவிற்க்கோ ஏன் தன் மனம் என்றும் இல்லாத திருநாளய் இவ்வளவு அமைதி நிம்மதியுடன் இருக்கிறது இந்த திருமணம் ஏன் என் மனதினை பாதிக்கவில்லை. இந்த படபட பட்டாசு கண்ணீர் சிந்த நான் ஏன் மனையில் அமர்ந்தேன் என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவன் இரு கரம் கூப்பி கண்களை மூடி நின்று கொண்டிருந்தான்.

பெண்ணவள் மனமோ "எனக்கு ஏன் இப்படி ஒரு சோதனை நான் என்ன தவறு செய்தேன். தனக்கு மட்டும் ஏன் இப்படி நடக்கிறது" என்று தன் மனதின் புலம்பல்களை இறைவனிடத்தில் சேர்க்க ஐயர் தீபராதணை தட்டை நீட்டினார். இருவரும் ஒன்றாய் ஆரத்தியை தொட இருவரின் கையும் ஒரே சமயத்தில் தீண்டிக் கொள்ள இருவரும் கையை எடுத்துக்கொண்டு ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டு அமைதியாய் இருந்தனர்... இருவருக்கும் அட்சதை தூவிய அய்யர் இன்று போல் என்றும் மணமொத்த தம்பதிகளாய் இருக்க வேண்டும் என்று வாழ்த்தி பிரசாதம் வழங்கினார்.

"மாணிக்கம் நீயும் தங்கச்சியும் நம்ம கார ஃபாலோவ் பண்ணி வீட்டிற்கு வாங்க நானும் ஆதியும் இந்த காருல போறோம்... கல்யாணஜோடி அவன் கார்லேயே வரட்டும்" என்று கூறியவர் "முன்னால சாந்தாக்கு போன் பண்ணி ஆரத்தி ரெடி பண்ண சொல்லிடுறேன் என்ன நாரயணி என்று மனைவியை யோசனை கேட்க

"ம் அப்படியே பண்ணிடலாங்க நேரா நம்ம வீட்டுக்கு போயிட்டு அப்படியே அண்ணா வீட்டுக்கும் போயிடலாம் என் மருமக ரொம்ப களைப்பா இருக்கா அதனால ஒரு ரெண்டு மூனு நாள் அண்ணா வீட்டுலே விட்டுட்டு வந்திடலாங்க" என்று கூறியவர் "மற்றதை வீட்டுல போய் பேசிக்கலாம்" என்று காரில் ஏற மற்றவர்களும் தங்களுடைய காரில் ஏறி பயணமானார்கள்.

கேஷவ் காரை ஓட்ட அவன் பக்கத்தில் மணக்கோலத்தில் அமர்ந்திருந்தாள் பார்கவி. இருவர் மட்டுமே ஆனால் புதுமண தம்பதியர்களின் குதூகலமோ இந்த தனிமையின் ஏகாந்தத்தின் சிலிர்ப்போ ஏதும் இன்றி வெறுமையான பார்வையோடு கார் ஜன்னல் வழியே பார்வையை பதியவைத்திருந்தவள் தலையை கதவில் சாய்ந்திருந்தாள்.

நேர்பார்வையோடே காரை செலுத்திக்கொண்டு வந்தவனின் மனத்திலோ மணிக்கொருமுறை கவியின் முகமே மனகண்களில் நிழலாட அவளை திரும்பி பார்க்க கண்களில் நீர்மணிகள் கோர்த்திருக்க பார்த்தவன் இன்னும் அந்த கேடுகேட்டவனை தான் நினைத்து அழுகின்றாளோ என்று எண்ணம் வர கோவம் கொண்டு காரை வேகமாக செலுத்தினான் எதுவுமே கருத்தில் பதியாமல் தான் இருந்த நிலையிலேயே இருந்தவளின் பிம்பம் மனதினை பிசைய தான் கொண்ட கோபத்தை ஒதுக்கி வைத்தவன் நிதானமாய் காரை செலுத்தினான்.

பார்கவியோ கிட்டதட்ட 3மணி நேரத்திற்க்கு முன்னால் நிகழ்ந்த நிகழ்ச்சிகளின் அதிர்ச்சியில் பிடியில் இருந்து முழுவதும் மீளாமல் அந்த சூழலிலே சுழன்று கொண்டிருந்தவள் மணவரையில் நிகழ்ந்ததை மனக்கண் முன் கொண்டுவந்தாள்.

கூரை பட்டு உடுத்தி கல்யாணமாலையிட்டு மணப்பெண்ணாய் பல்வேறு சிந்தனையுடன் அமர்ந்திருந்தாள் பார்கவி அவளை கண்டதும் "ஐ அக்கா நீ பார்க்க செமையா இருக்க!!! எனக்கே உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு ....என்று கூறி அவளின் தோள்களில் திய சாய்ந்து கொண்டாள்

தங்கையின் தலை வருடியவள் வார்தைகள் ஏதும் இன்றி மௌனமாய் அமர்ந்திருந்தாள் "அக்கா என்ன இது இப்படி சோகமா இருக்க.... நல்லாவே இல்ல... நீ இப்போ பார்க்க எப்படி இருக்க தெரியமா வானத்துல இருந்து இறங்கி வந்த தேவதை மாதிரி என்றதும் அவளை பார்த்து புன்னகையுடன் கைபிடித்தாள் கவி

புது மனுஷங்க புது இடம் இந்த ஃலைப் ஸ்டைல் பழக நாள் ஆகும் அதான் ஒரே யோசனையா இருக்கு அவர் எப்படி ஏதுன்னு ஒன்னும் தெரியாது இன்னும் எதுவும் தெளிவா அவர்கிட்ட பேசல என்றாள் கவி

கவியின் கூற்றில் இருக்கும் உண்மையை உணர்ந்தவள் அக்கா மாமாவை பார்க்கும் போது எனக்கு நல்ல மாதிரியாதான் தெரியுது உன்னை நிச்சயம் புரிந்துகொண்டு உன் மனம் கோணாமல் நடப்பார் என்னும் போது பொண்ணு ரெடியா என்று கேட்க அங்கு வந்த சித்துவை பார்த்ததும் அந்த பேச்சை பாதியிலையே நிறுத்தியவள் வேட்டி சட்டையில் அவனின் தோரணையில் மெய்மறந்தாள்.

அவளின் நடவடிக்கைகள் தெரியாதவன் கவி ஆண்டி உன்னை ரெடியானு பார்த்துட்டு வர சொன்னாங்க நீ ரெடியா அம்மாவையும் ஆண்டியையும் அனுப்பி வைக்கிறேன்... அங்க எல்லாரும் வந்துட்டாங்க என்றவன் கேட்டரிங் என்ன ஆச்சின்னு தெரியல நான் போய் பார்க்கிறேன்... விது நான் வரத்துக்குள்ள கல்யாணம் முடிஞ்சுடுச்சினா உன் மொபைல்ல ஒரு வீடியோ எடுத்து எனக்கு காட்டுரியா என்று எப்போதும் போல் அவளிடம் கேட்க

அவனின் அழகில் மயங்கினாலும் தன்னை கண்டுகொள்ளமல் அலைகழித்து கொண்டிருக்கும் சித்துவிடம் ம்ஹீம்..... முடியாது செய்ய மாட்டேன் நான் ஏன் அதை செய்யனும் ஃபிரெண்டு மேல அவ்வளவு அக்கறை இருக்குங்க இருந்து கல்யாணத்தை அட்டன் பண்ணிட்டு போக வேண்டியது தானே என்றவள் பிரெண்ட விட சாப்பாடு தான் முக்கியமா என்று கடுப்படித்து அவனை உடன் இருக்க வைக்க வழிவகை தேட

சித்துவோ என் பிரெண்டோட கல்யாணத்துல யாரும் சாப்பாடு நல்லா இல்லன்னு ஒரு குறை சொல்லிவிட கூடாது இல்லையா அதனால சாப்பாடு தான் முக்கியம் என்றவன் கவி முடிந்த அளவுக்கு நான் டைமுக்கு வந்திடுவேன் அப்படியும் வர தாமதமானல் கோவிக்க கூடாது சரியா என்று தன் வாழ்த்துகளை தெரிவித்தவன் அதோடு பேச்சு முடிந்தது என்ற பாவனையில் அந்த இடத்தை விட்டு அகன்றான்...

அவன் சென்ற திசையே பார்த்துக்கொண்டு நின்றிருந்தவளை தோழிகள் புடை சூழந்து கொண்டு கவியை நோக்கியவர்கள் அக்கா சூப்பரா இருக்கிங்க.... செம கண்கள் கா உங்களுக்கு அப்படியே பேசுது கா என்று அவளின் புகழ்பாடியபடி அங்கே கலகலத்துக் கொண்டிருந்ததில் அப்போது சித்துவின் தாக்கத்திலிருந்து தற்காலிகமாக வெளியே வந்தாள் தியா.

ஆதியும் ராஜராமனும் கோவிலுல் நுழைய வாசலிலேயே வரவேற்றபடி நின்றிருந்த மாணிக்கம் தம்பதியினர் அவர்களை வரவேற்று உள்ளே அழைத்து சென்று அமரவைத்தவர்கள் மற்ற சொந்த பந்தங்களையும் வரவேற்றுக்கொண்டிருந்தனர்.

பொண்ண அழைச்சுன்டு வாங்கோ நாழி ஆகிறது என்று அய்யரின் குரலில் மணப்பெண்ணை அழைத்து வந்து மனையில் அமர வைக்க மாப்பிள்ளைய அழைச்சிண்டு வாங்கோ என்றதும் அரவிந்தை அழைக்க சென்றவர்கள் மிகுந்த பதட்டத்துடன் அவன் பெற்றோர்களிடம் ஏதோ கூறினர் பெற்றவர்கள் பரபரப்புடன் சலசலக்க சொந்த பந்தங்கள் மாப்பிள்ளை வீட்டினரை சூழ்ந்து கொண்டனர்.

என்ன சம்மந்தி என்ன ஆச்சி மாப்பிள்ளை எங்கே என்று அவர்களை கூட்டத்தை விளக்கி பெற்றவர்களிடம் மாணிக்கம் விசாரித்தார்.

நான் எப்படி சொல்வேன் சம்பந்தி என் பையனை காணும் என்று பதட்டத்துடன் கூறினார் அரவிந்தனின் தந்தை

அப்போது மாணிக்கத்தின் செல் ஒலித்தது பெயர் இல்லமல் பிரைவேட் கால் என்று திரையில் மிளிர்ந்தை யோசனையுடன் ஆன் செய்து காதில் பொருத்தினார் மாணிக்கம்

என்ன லாயர் சார் என்ன மாப்பிள்ளைய காணுமா??.... தேடுங்க தேடுங்க நல்ல தேடுங்க இன்னும் அரை மணி நேரத்துல உங்க பொண்ணு கழுத்துல தாலி ஏறனும் ல???.... சரி சரி இப்போவே 10 நிமிசம் போயிடுச்சி தேடுங்க சார்.. தேடுங்க என்று விகாரமாய் ஒரு குரல் பேசியது

ஹலோ ஹலோ யாரு யாரு பேசுறது நீதான் ஆரவிந்த கடத்தி வைசசிருக்கியா டேய் மரியாதையா என் மாப்பிள்ளையா விட்டுடுடா நான் லாயர் என்கிட்டயே விளையாடுரியா என்று அவர் எதிர்த்து பேசி அவனை சாட

நீங்க ஒரு லாயர்ன்னு தெரியலமலேயா உங்க கிட்ட விளையாடி இருப்பேன்னு நினைக்கிரிங்க எல்லாம் எங்களுக்கு தெரியும் சார் நீங்க கொஞ்சம் அடங்குரிங்களா என்று மறுமுனையில் இருந்து கர்ஜனை வர

டேய் ஏன்டா கடத்தி வச்சி இருக்க போலீஸ்க்கு போனேன் வை நீயெல்லாம் அவ்வளவு தான்டா என்று அவனை மிரட்டும் தோணியில் பேஞினார் மாணிக்கம்.

ஹோ... அவ்வளவு பெரிய தில்லாலங்கடியா நீ உன்னால முடிஞ்சத நீ பாரு மனசுல உன் பொண்ணு கல்யாணம் நடக்கனுமுன்னு எண்ணம் இருந்த இன்னும் அரைமணி நேரத்துல உன் கையில இருக்க மொத்த எவிடன்சும் என் கைக்கு வந்தாகனும் இல்ல கழுத்துல தாலி ஏமலேயே உன் பொண்ணு இருந்திட வேண்டியதுதான் என்று பயம்காட்ட

ஏய்... யாருடா நீ எவன் கைகூலி டா நீ எந்த ஆதாரமும் என்கிட்ட இல்ல என் பொண்ணு கல்யாணம் நடக்கனும் அரவிந்த வீட்டுங்கடா என்று மேலும் பொங்கி எழுந்தார்

நான் யார் என் ஊர் பேர் முக்கியம் இல்ல லாயர் உன் மக கல்யாணம் முக்கியம் அதுக்கு உண்டான வேலைய மட்டும் பார் யாரை ஏமார்த்த பாக்குற எல்லாம் உன் கிட்டதான் இருக்கு அதை உடனே கொண்டுவந்தா அடுத்த முகுர்த்தத்துல உன் பொண்ணு கல்யாணம் நடக்கும் இல்ல இவனை குத்தி கொலை பண்ணிட்டு ரயில்வே தண்டவளத்துல போட்டு போயிட்டே இருப்போம் இன்னும் அரைமணி நேரத்துல கால் பண்றேன் போலீஸ் கேஸ் அது இதுன்னு போன உன் மாப்பிள்ளைய உயிரோட பாக்க முடியாது என்று மிரட்டியவன் போனை கட் செய்தான்.

சம்மந்தி சம்பந்தி என் பையன் எங்க இருக்கானாம் எப்படி இருக்கானாம். என்று மணமகனின் தந்தை பேச

இன்னும் என்ன சம்மந்தி சம்மந்தி நம்ம மகன் உயிரே அங்க ஊசலாடிகிட்டு இருக்கு இதுல இதுதான் குரைச்சல் இங்க பாருங்க நீங்க என்ன செய்விங்களோ ஏது செய்விங்களோ எங்களுக்கு தெரியாது என் புள்ளை ஊடம்புல ஒரு கீரல் இல்லாம வந்து நிக்கனும் என்று மனமகனின் தயார் பேசிட ஒன்றும் புரியாமல் மனமேடையை விட்டு எழுந்து நின்றாள் பார்கவி..... அவளிக்கு ஒன்றும் புரியவில்லை தலை சுற்றுவது போல் தள்ளாட ஒரு நிலையில் இருக்கமுடியமல் விழ இருந்தவளை நாராயணியும் சித்துவின் அம்மா ராதாவும் தாங்கி கொண்டார்கள்.

அம்மாடி கவி வாடம்மா வா இப்படி வா என்று ஆதாரவாய் அனைத்து தன் பக்கத்திவ் நிறுத்திக்கொண்ட நாராயணி அவளின் தலை வருடிக்கொண்டே என்னங்க உங்களால ஏதும் செய்ய முடியாதாங்க போலீஸ் தான் போக முடியாது வேற ஏதாவது ஐடியா பண்ணலாம்ல என்று கணவர் ராஜாராமனை கேட்க

டேய் மாணிக்கம் என்ன சொன்னான்டா அந்த ராஸ்கல் அவனுக்கு என்னதான் வேனுமா பேசாம நமக்கு தெரிஞ்ச ஹையர் அபிஷியல் ஆபிஸர்கிட்ட போயிடலாமா டா என்றார்.

போலீஸ்க்கு போனா கொலையே பணாணிடுவேன்னு மிரட்டுரான் டா அவன் கேக்குரது எவிடன்ஸ் டா அதை வாங்கதான் அரவிந்த்வோட உயிர பணயமா வைச்சு இருக்கான் இன்னும் அரை மணி நேரத்துல அது வேணுமாம் அவனே எங்க வரனுமுன்னு சொல்றேன்னு சொல்லி இருக்கான் என்றவர் இதுல 1000 பேரோடா வாழ்க்கை இருக்கு ராஜா எப்படி எப்படி அவங்களுங்கு துரோகம் செய்ய முடியும் அப்படியும் அவன்கிட்ட கொடுக்கனுமுன்னு இருந்தா அது என்கிட்ட இல்லயே நான் என்ன செய்யுறது என்னால ஒரு முடிவுக்கு வர முடியலையே டா என்று உணர்ச்சி பிழம்பாய் கணணீர் விட

என்னங்க இது நம்ம பொண்ணோட வாழ்க்கைங்க அவர் நம்ம பொண்ணுக்கு நிச்சயம் பண்ண மாப்பிள்ளை மணமேடை வரை கல்யாணம் வந்துட்டு இப்படி நின்னுபோறத்துக்கா அவளை பெத்து வளத்தோம் அவரோட உயிர காப்பத்தனும்ங்க என் மகளுக்கு கல்யாணம் நடக்கனும்ங்க என்று மகளுங்காக மஞ்சுள கணவரிடம் கண்ணீர் விட

அய்யா சாமி உங்க பிரச்சனையில என் புள்ளைய சாக அடிச்சிடாதிங்க தயவு செய்து என் புள்ளைய எங்களுக்கு திரும்பி கொடுத்துடுங்க உங்களுக்கு புண்ணியமா போகும் நீங்களும் வேனா உங்க உறவும் வேணா எங்க புள்ளைய உயிரோட என் கண்ணால பார்த்த போதும் என்று அரவிந்தின் தாய் வார்த்தைகளால் கவியின் மனதை ரணமாக்கினார்.

என்னம்மா இப்படியெல்லாம் பேசுரிங்க உங்களுக்கு மகன் என்றால் எங்களுக்கு மருமகன் இல்லையா எங்க பொண்ணோட வாழ்க்கை அதுல அடிங்கி இருக்கு மறந்திடாங்கம்மா நாங்க அமைதியாவ இருப்போம் பொருமையா இருங்க மாட்டிக்கிட்டு இருக்கரது அரவிந்த அவர உயிரோட மீட்கரத பத்தி மட்டும் பேசுங்க மத்த விஷயத்தை அப்புறம் பேசிக்கலம் என்றார் சித்தார்த்தின் தகப்பனார் நவநீதன்.

என்ன அப்புறம் பாக்குறது என்னங்கைய்யா அப்புறம் பாக்குறது உங்கள பழிவாங்கவும் உங்ககிட்ட இருக்குறத வாங்கவும் என் மகன் உயிர வைச்சிதான் விளையாடுவாங்களா நல்லா குத்துக்கல்லாட்டும் இருக்கா உங்க பொண்ணு அவளை கடத்திக்கிட்டு போக வேண்டியதுதானே என்று உதாசினாமாய் பேச இன்னும் இன்னும் மரத்துபோனது பார்கவிக்கு

தொடரும்
 
Last edited:

Author: Bhagi
Article Title: காதலில் உள்ளங்கள் பந்தாடுதே பகுதி 13
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN