ஓ மை கடவுளே

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கதிரவன் தன் கதிர்களை ஏராளமாக வாரி வழங்கிக் கொண்டிருக்கும் அந்த உச்சி வெயிலில் கண்களை மூடி நின்றுக் கொண்டிருந்தவளுக்கு வயிற்றில் பயப்பந்து உருள,சிப்பி போன்ற அந்த விழிகள் மூடியும் விழிகளைத் தாண்டி கண்ணீர் வழிந்துக் கொண்டிருந்தது.அந்த இரயில் சத்தம் காதைக் கிழிக்க கைகளை இறுக்கி தன் காதைப் பொத்திக் கொண்டவளோ உடல் நடுங்க நின்றிருக்க திடீரென்று அந்த சத்தம் பலமாக கேட்க இறுக்கி மூடிக் கொண்டவள் சிறிது நேரம் கழித்து சத்தம் எதுவும் இல்லாமல் போக கண்களைத் திறந்தாள்.திறந்தவள் எதிரில் இருப்பவனைக் கண்டு பயந்தாலும் திரும்பி இரயிலைப் பார்க்க அது வேறு ஒரு தண்டவாளத்தில் சென்று கொண்டிருந்தது."ச்ச்ச பயத்துல தண்டவாளம் மாத்தி நின்னுட்டமே என்று மனதில் புலம்பியவள் இப்போது வெளியில் வந்து நின்று கொண்டு எந்த பக்கம் இரயில் வருகிறது என எட்டி எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தாள்."ஒருவேளை கண்ணு தெரியாதோ" என்று முணுமுணுத்தவனைக் கண்டு தன் கோபக்கனல்களை கக்கியவள் மறுபடியும் விட்ட வேலையைத் தொடர்ந்தாள்."ஏன் சாகப் போறீங்கனு தெரிஞ்சுக்கலாமா" என்றவனிடம்
எந்த பதிலும் கூறாமல் தன் வேலையைப் பார்த்துக் கொண்டிருக்க
" ஏம்மா பச்சை சுடிதார் உன்னைத் தான் கூப்பிடுறேன் "என்றவனை நோக்கி" யாருங்க நீங்க உங்ககிட்ட நான் ஏன் சொல்லணும் அட்வான்டேஜ் எடுத்துக்காதீங்க"என்று பொரிந்தவளிடம் பிஸ்கட்டை நீட்டியவன் "உனக்கு கோபம் வந்தா நீ நீயா இருக்க மாட்ட " என்று நக்கல் தொணியில் கூற
அவனை முறைத்தவள் சற்று தள்ளி நின்றுக் கொண்டாள்."இன்னும் கொஞ்ச நேரத்துல நீங்க சாக போறீங்க நானும் சாக போறேன்" என்றவனை சந்தேகப் பார்வைப் பார்க்க தன் பேண்ட் பாக்கெட்டில் இருக்கும் விஷப் பாட்டிலை எடுத்துக் காண்பிக்க அதைக் கண்டு அதிர்ந்தவளுக்கும் "இவன் ஏன் சாகப் போறான் என்ற எண்ணம் எழாமல் இல்லை"
ஆனால் எதையும் கேட்காமல் முகத்தைத் திருப்பிக் கொண்டவள் ஒரு பயத்தில் நடுங்கிக் கொண்டிருக்க
அதைக் கண்டுகொண்டவனோ
"இரயில் தண்டவாளத்துல இறந்தவங்களை பாத்திருக்கீங்களா?பார்க்கவே கொடூரமா உடல் நசுங்கி இரத்தம் வந்து " என்றவன் முகபாவனையிலே அவள் இன்னும் பயந்துவிட்டாள்."அப்படியாங்க" என்று கேட்டவளிடம்
"ஆமாங்க நானும் இரயில் முன்னாடி விழுந்துடுவோம் அப்படினு தான் நினைச்சுட்டு இருந்தேன்.அப்புறம் விஷம் குடிச்சுக்கலாம்னு மாத்திட்டேன் பாருங்க சர்க்கரை கூட வெச்சுருக்கேன் கசக்கும்ல அதுக்காக" என்றவனை பாவமாக பார்த்தவள் என்ன செய்வது என்று தெரியாமல் முழித்துக் கொண்டிருந்தாள்."வாங்களேன் நம்ம இரண்டு பேரும் இந்த விஷத்தை சேர் பண்ணிக்கலாம்"
என்றவனை நம்பாத பார்வை பார்த்தாள்.
அவள் கடந்து வந்த ஆண்கள் அப்படி..."உங்களை ஒன்னு பண்ணிட மாட்டேன்ங்க தாராளமா என்னை நம்பலாம் அப்புறம் முக்கியமான விஷயம் உங்களுக்கு அவ்ளோலாம் சீன் இல்லை மொக்க பிகர் தான் நீங்க" என்றவனைக் கண்டு புன்னகைத்தவள் வேறுபுறம் திரும்பிக் கொண்டாள்.ஐந்தடி உயரத்தில் மாநிறத்திற்கும் மேல் உள்ள அவள் நிறம் கதிரவனின் உபயத்தால் தங்கம்போல மின்ன,மை தீட்டாத அந்த கூர் விழிகள் கூறியது அவள் மீன்விழியாள் என்று.
ஸ்பிரிங்க் போன்ற அவள் கூந்தல் அடிக்கடி வீசும் அந்த தென்றலில் ஆடிக் கொண்டிருக்க புருவத்திற்கு இடையில் வைத்திருக்கும் பொட்டும் அதற்கு மேல் பூசியிருக்கும் பட்டையும் அவளை அழகியாகத் தான் காட்டியது.
அழுதிருப்பாள் போல...
அந்த மீன்விழிகள் இரண்டும் சிவந்து கருவளையம் வந்திருந்தது ஒரே இரவில்."சரிங்க அதான் விஷம் குடிச்சு சாகலாம்னு முடிவு பண்ணியாச்சே அப்புறம் எதற்கு இங்கே வாங்க போலாம் " என்றவனை ஏனோ நம்ப தோணியது அவளுக்கு."ஏங்க நம்ம ஒன்னா விஷம் குடிச்சு செத்துட்டா காதலர்கள் விஷம் குடித்து தற்கொலை அப்படினு தானே வரும்" என்றவனைக் கண்டு அதிர்ந்தவள்
"அய்யோ " என அலற"அதுக்கும் ஒரு ஐடியா இருக்குங்க விஷம் குடிச்சதும் உடனே சாக மாட்டோமே! நீங்க இங்கேயே இருந்துக்கோங்க நான் வேற எங்கேயாவது போயிடுறேன் " என்றவனைக் கண்டு வியந்தவள் இப்படியும் ஆண்மகன்கள் இருப்பார்களா என்று தான் நினைத்தாள்.சிறிது தூரம் நடந்து வந்தவர்கள் ஒரு பார்க்கைக் கண்டு உள்ளே சென்று ஒரு மேசையில் அமர "இப்போவே குடிச்சுடுலாம்ங்க நான் கொஞ்ச நேரம் கழிச்சு தண்டவாளத்துக்கிட்ட போயிக்கிறேன்" என்று கூற சரி என தலையசைத்தவள்
அதை கைகளில் வாங்கினாள்.பாட்டிலையே வெறித்துக் கொண்டிருந்தவள் கண்கள் கலங்க அதைத் துடைக்க கூட மனமில்லாமல் எதற்கு இப்போது கோழைப் போல தற்கொலை ? வேணாம் என மனது சொல்ல மூளையோ நீ குடி உயிர் வாழக்கூடாது எனக் கத்த இறுதியில் மூளை தான் வென்றது.வாயின் அருகே கொண்டு சென்றவள் பாதியை உள்ளே சரித்து மீதியை அவனுக்குக் கொடுத்தாள்.
சர்க்கரை என்றவனிடம் வேண்டாம் என தலையசைத்தவள் கசப்பாவே இல்லை என பதிலலித்தாள்." நான் தேன்மொழி அப்பா அம்மா இல்லை அனாதை ஆசிரமத்துல தான் வளர்ந்தேன்.
கஷ்டப்பட்டு பி.காம் படிச்சு ஒரு சின்ன வேலை,லேடிஸ் ஹாஸ்டல்னு வாழ்க்கை அப்படியே போச்சு அப்போதான் அவன் வந்தான்" என்றவள் கண்களில் இன்னும் அவன் மீதான காதல் சிறிது இருக்க வெறுப்பு கோபம் அதை மறைத்தது.
"சந்தோஷ் என் வாழ்க்கைல இனி அவன் மட்டும் தான் சந்தோஷம்னு வாழ்ந்துட்டு இருந்தேன் ஆனால் அவன் அவன்..." என்று திணறியவள்
அது பார்க் என்பதையும் மறந்து அழுக ஆரம்பித்தாள்.
அவனால் அவள் அழுவதை பார்க்கவே முடியவில்லை.
அவனுக்கும் கண்கள் கலங்க "வேணாம் மொழி அழாதீங்க" என்று கூற என் சந்தோஷ் கூட அப்படித்தான் கூறுவான் என்றவளோ மறுபடியும் தேம்ப ஆரம்பித்தாள்.கண்களை அழுந்த துடைத்தவள்
" அவனுக்கு வேணும்ங்கிறது நான் இல்லைங்க என் உடல் மட்டும் தான்.
அவன் தேவை தீர்ந்ததும் நான் வேணாம்னு போயிட்டான்.
என்னை காதலிக்கவே இல்லையாம்"
என்றவள் விரக்தி புன்னகை செய்ய
அவனுக்கு என்ன கூறுவதென்றே தெரியவில்லை."அவனுக்கு என் காதல் வேணாம் காமம் மட்டும் போதும்னு சொன்னது கூட பெரிசா படலங்க என்னை காதலிக்கவே இல்லையாம்.
பலபேர் இப்படி தான ஏமாத்துறாங்க...
இதுக்குதான் நிறைய இடம் இருக்கே ? காதலை ஏன் கொச்சப்படுத்துறாங்கனு தெரியல.
என்னோட காதல் உண்மை"என்றவள்
" நான் இழக்கக் கூடாததை இழந்துட்டேனு சாக வரலங்க என்னோட காதல் இப்படி தோற்றுவிட்டதேனு தான் சாக வந்தேன்" என்று கூறி அமைதியாக அமர்ந்திருந்தாள்.
அந்த அமைதியையும் தாண்டி ஏமாற்றம்,வெறுப்பு,சோகம், காதல் என அனைத்தும் அந்த கண்களில் இருந்தது."நான் சந்தோஷ் " என்று கூறியவனை அதிர்ந்து நோக்கியவள் எதுவும் பேசாமல் பார்வையை விலக்கிக் கொள்ள " ஒரு பெண்ணை காதலிச்சேங்க கெத்தா காலரை தூக்கிவிட்டு சொல்லுவேன் என்னோட காதல் தான் இந்த உலகத்துலேயே சிறந்தது என்று ஆனால் " என்று நிறுத்தியவனுக்கும் கண்களில் கண்ணீர்." அவளை முதன்முதலில் இந்த பார்க்கில் தாங்க பார்த்தேன் இதோ இந்த மாதிரி ஒரு பச்சை வண்ண சுடிதார்ல இயற்கை தேவதைக்கு போட்டியா அவ முகம் ,மின்னலுக்கு போட்டியா அவள் சிரிப்பு,சிவப்பு நிற ரோஜாக்கு போட்டியா அவ இதழ் இப்படி சொல்லிட்டே போலாம்...
அவளைப் பார்த்ததுக்கு அப்புறம் அவ மட்டும் தாங்க என் நினைவுல இருந்தா.
ஒரு குழந்தைக் கிட்ட குர்குரே வேணும்னு சண்டை போட்டு அதை பிடுங்கி அவளோட வாய்க்குள்ள போட்டுகிட்டு கை தட்டி சிரிக்கிறா எனக்கு ஒரு செகண்ட் யாருடா இங்கே குழந்தைனு தோண ஆரம்பிச்சுடுச்சு"என்றவன் இதழ்கள் விரிந்தது பழைய நினைவுகளில்."அவ வேலைக்கு சேர்ந்த அதே இடத்துல நானும் சேர்ந்தேன்.
அவ இடத்துல தினம் தினம் ஒரு குர்குரே பாக்கெட் வாங்கி வெச்சுடுவேன் அதுகூடவே அவளை மாதிரி அழகான ஒரு ரோஜாப்பூவும்.
அவளுக்கும் அதைப் பார்த்து ஒரு தேடல் யாரு இது கண்டுபிடிக்கணும்னு.
அவளுக்கு தலைவலினா அவ டேபிள்ள தைலம்,காபி,மாத்திரைனு எல்லாம் இருக்கும்.
அதோட ஒரு துண்டு பேப்பர்ல
வித் லவ்
உன் சந்தோஷத்திற்காக மட்டுமே காதலிக்கும் உன் சந்தோஷ்
அப்படினு எழுதி வேற வெச்சுடுவேன்.சின்ன வயசுல இருந்தே பாசத்துக்காக ஏங்குனவ அவ இந்த முகம் தெரியாத என் பாசத்துகாக அவ ஏங்க ஆரம்பிச்சாங்குறது தான் உண்மை.
நான் காட்டுற அக்கறை,பாசம் ஒருசமயத்தில் அவளுக்கு என் மேல காதலையும் ஏற்படுத்திருச்சு.
யாருனே தெரியாத என்மேல!!!
நான் என் வேலையை செஞ்சதை விட அவள பாத்துக்கிட்டு இருக்கிற வேலையை செஞ்சது தான் அதிகம்.
அவள் கண்களில் எனக்கான காதலையும் நான் கண்டுகொண்டேன்..
என் காதலை சொல்ல போனேன்" என்றவன் முகத்தில் மொழி காட்டிய அதே விரக்தி புன்னகை.தன்னவளின் கண்களில் காதலைக் கண்ட அடுத்த நொடியே அவளிடம் சந்தோஷ் நான்தான்னு சொல்லிடணும் என நினைத்தவன்
அடுத்த நாளுக்காக காத்திருந்தான்.பலமுறை அவளிடம் எப்படி காதலைக் கூறவேண்டும் என யோசித்து கண்ணாடியே கதியாக கிடந்து வெட்கப் புன்னகையெல்லாம் செய்து மறுநாள் புன்னகை முகமாக வர அது அடுத்த நொடியே பறந்து போனது.அங்கு மொழி வேறு ஒருவனிடம் தன் காதலைக் கூறிக் கொண்டிருந்தாள்.நினைவுகளில் இருந்து மீண்டவன் அவளிடம் தொடர்ந்தான்."அவ வேற ஒருத்தனை சந்தோஷ்னு நினைச்சு எனக்கான அவள் காதலை அவன் கிட்ட சொல்லிட்டு இருந்தா செத்துட்டேங்க அந்த நிமிஷமே" என்றவன் தலைக்கு கை கொடுத்து அமர்ந்துகொள்ள கண்களில் கண்ணீர் வழிந்தது."ஒவ்வொரு முறை அவளோட அவனைப் பார்க்குறப்போ இது நான் இருக்க வேண்டிய இடம்டானு கத்த தோணும்.ஆனால் அவ கண்கள்ள பாக்குற காதல் எனக்கே எனக்கானதுனு நினைச்சுட்டு போயிடுவேன்.
அவகிட்ட நான் போய் சொல்லலாம் நான் தான் அந்த சந்தோஷ்னு ஆனால் அவ அவனை நம்ப ஆரம்பிச்சுட்டா.என்னை அவளுக்கு யாருனே தெரியாது நான் எப்படி போய் சொல்ல நான் தான் உன் சந்தோஷ் மொழினு " என்றவன் அவளைக் காண அவள் கல் போல் அமர்ந்திருந்தாள்.
அவள் முகம் எந்தவொரு உணர்ச்சிகளையும் பிரதிபலிக்காமல் சிலை போல் அவள் இருக்க
அவன் தொடர்ந்தான்."இப்போ அவ தன்னோட காதல்ல தோத்துட்டேனு சாக வந்துருக்கா முட்டாள் மாதிரி அடியேய் லூசு உன் காதல் உனக்கா மட்டும் தான் இங்கே காத்துட்டு இருக்கு நீ காதல்ல தோற்கலனு நான் எப்படி சொல்லுவேன் " என்றவனைக் கண்டவள் கண்களோ திறந்து விட்ட அணை போல் கண்ணீரை பொழிந்துக் கொண்டிருக்க அதைத் துடைத்தவன்
" உன் காதல் எனக்கானது மொழி உன் காதல் உனக்காக காத்துக்கிட்டு இருக்கு நீ மட்டும் தான் வேணும் உன் மனசு மட்டும் தான் வேணும்னு" என்றவனிடம்" வேணாம் சந்தோஷ் நான் உனக்கு தகுதியானவ இல்லை" என்று கூற" வேற யாரு மொழி எனக்குத் தகுதியானவ? என் மனசு முழுக்க இருக்கிறது நீ மட்டும் தான்.நீ இல்லாத வாழ்க்கை எனக்கு நரகம் தான்.அதான் நானும் சாகலாம்னு முடிவு பண்ணிட்டேன்" என்றவன்
"நீ என் காதலுக்கு சம்மதம் சொல்லல நான் இந்த விஷத்தைக் குடிச்சிடுவேன்" என்று கூற"இப்போவும் இந்த மாதிரி ப்ளாக்மெயில் பண்ணிட்டு தான் இருக்கீங்கள்ள" என்றவள் அவனைப் பார்த்து வெற்றுப் புன்னகை ஒன்றை உதிர்த்தாள்."சத்தியமா இது ப்ளாக் மெயில் இல்ல மொழி உன்மேல இருக்க அதீத அன்பு தான் இப்படிப் பட்ட வார்த்தைகளால் வெளிப்பட காரணம்.சரி விடு நீ சாக வேணாம்.எனக்கு நல்ல தோழியா இரு உன் மனசு மாறுனா அப்புறம் பார்க்கலாம் " என்றவன் பேச்சைக் கண்டு சிறிது மனம் மாறியவள்"ஆனால் நான்தான் விஷம் குடிச்சுட்டனே " என்று கூற"ஆமா ஆமா இன்னும் சாகாம இருக்கப்போவே தெரிய வேணாம் அது விஷம் இல்லைனு தேன் பாட்டில் உனக்கு சந்தேகம் வரக்கூடாதுனு பாகற்காய் ஜூஸை கொஞ்சம் கலந்துட்டேன் " என்றவனை முறைக்க முயன்று அதில் தோற்று சிரித்து விட்டாள்..அவள் புன்னகையைக் கண்டவனுக்கு எதையோ சாதித்தவன் போல் உணர்வு தோன்ற " நீ அழகி மொழி " என்று தன்னை மறந்து கூறஇப்போது எழுந்து நின்று இடுப்பில் கை வைத்து முறைத்தவள் " மொக்கை பிகர்னு சொன்ன " என்றவளிடம்"அது சும்மா உல்லுலுலாய்க்கு "
என்றவன் "ஆமா எதுக்கு இவ்வளவு பெரிய பட்டை பொட்டுக்கு மேலே " என்று கேட்டான்."அதுவா நான் முதன்முறை சாகப்போறேன்ல கொஞ்சோ பயம் அதான் இந்த பட்டை " என்று கூறியவளைக் கண்டு சத்தமாக நகைத்தவன்
"ஆமா மத்தவங்க மட்டும் அடிக்கடி சாகுறாங்க பாரு லூசு லூசு "
என்றவனை அடிக்க அவள் கல் தேட" ஓ மை கடவுளே" என்று அலறியவன் ஓட ஆரம்பிக்க அவளும் துரத்த ஆரம்பித்தாள்.ஓட ஆரம்பித்தவன் நின்று அவளையும் கை நீட்டி தடுத்து " தற்கொலை மட்டுமே எல்லாத்துக்கும் விடை இல்லை புது ஆட்களை நம்ப கூடாதுனு சொல்லி கொடுக்கும் பெற்றோர்கள் இனி யாரையுமே நம்பாதீங்கனு சொல்லி கொடுங்க.ரோட்டில போறப்போ ஒரு சொறி நாய் கடிச்சுட்டா ஊசி போட்டுட்டு அடுத்த வேலையை பாக்குறதில்லையா? அந்த மாதிரி தான் பெண்களுக்கு மட்டும் கற்புங்கிறது இல்லை ஆண்களுக்கும் தான்.அவனே தனக்கு ஒன்னும் நடக்கலனு சுத்துறப்போ நம்ம ஏன் சுதந்திரமா நாட்டில் வலம் வரக்கூடாது.காதல்னு ஏமாத்துறவங்களை நம்பி வாழ்க்கையை ஒப்படைக்காதீங்க.
இதனால் தான பெற்றோர்கள் காதல்னாலே பயப்படுறாங்க.
நமக்கு தெரியாமலே ஒரு அழகான வாழ்க்கை, அதில் ஒரு அழகான காதல் நமக்காக கடவுள் எழுதி வெச்சுருப்பார்.மொழிக்கு நடந்த அதிசயம் நம் வாழ்விலும் நடக்கலாம்.
அதுவரை வெயிட் பண்ணுங்க.
அந்த வாழ்க்கை கிடைச்சதும் நீங்களும் சொல்லுவீங்க ஓ மை கடவுளே என்று..." என்றவன் நீ ஸ்டார்ட் பண்ணு செல்லம் என ஓட ஆரம்பிக்க
அவளும் சிரித்தவாறே அவனைத் துரத்த ஆரம்பித்தாள்.ஆதர் அட்வைஸ் பண்ணா யாருப்பா கேட்கிறாங்க. அதான் சந்தோஷையே பண்ண வெச்சுட்டேன்.
மொழிக்கான உண்மையான சந்தோஷம் சந்தோஷ் உருவத்தில் கிடைத்துவிட்டது.
உங்களுக்கும் அந்த கடவுள் அந்த சந்தோஷத்தை தர சரியான நேரத்தை எதிர்ப்பார்த்திட்டு இருப்பார்.
அதுவரை நீங்களும் காத்திருங்க.
ப்ரியமுடன்
தனு❤
 

Attachments

  • IMG_20200718_145626.JPG
    IMG_20200718_145626.JPG
    187.9 KB · Views: 143

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Athai ma.... :love: :love: suicide mattum ella problem kum solution illanu super ra solli irrukinga...ennaku sandhosh character romba pidichirku...aven love ...phaaa;);)...:LOL:apram Thenla pavakka juice uhh haha ....superb stry athai. ..all the best (y):love:
 
OP
im_dhanuu

im_dhanuu

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Athai ma.... :love: :love: suicide mattum ella problem kum solution illanu super ra solli irrukinga...ennaku sandhosh character romba pidichirku...aven love ...phaaa;);)...:LOL:apram Thenla pavakka juice uhh haha ....superb stry athai. ..all the best (y):love:
Thank u da chellakutty😍😍😍
 

Sevanthi durai

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
எத்தனை முறை படிச்சும் சலிப்பு தட்டாத கதை.. செம நட்பே.. :) :) :)
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN