என்னை தீண்டிவிட்டாய் 3

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலால்
காதலிப்பதை காட்டிலும்
கடினமானது
காதலை காதல்
மனதினுள்
பூட்டிவைப்பது....

ஹாஸ்டலுக்கு வந்த ஆதிரா தன்னறையினுள் சென்று கதவை பூட்டிக்கொண்டு கட்டிலில் விழுந்தாள்... அவளது அறைத்தோழி மோஹனா ஊரிற்கு சென்றிருந்தபடியால் இன்று அந்த அறையில் அவள் மட்டுமே.... கட்டிலில் விழுந்தவளுக்கு இவ்வளவு நேரம் அடக்கப்பட்டிருந்த கண்ணீர் அணைப்புடைந்து வெளிவரத்தொடங்கியது.... இவ்வளவு நாட்கள் எதனை மறைக்க கஷ்டப்பட்டாளோ அதை ஷாகர் தெரிந்து கொண்டான் என்ற உண்மை ஒருபுறம் அவளிடம் மகிழ்ச்சியை உண்டுபண்ணாலும் மறுபுறம் வேண்டாம் இது நடைமுறைக்கு சரிவராது என்ற கலக்கத்தை உண்டுபண்ண மனம் தவறவில்லை.... ஆனால் இவ்வளவு காலமாக ஷாகரின் கீழ் பணியாற்றியதில் அவள் அனுபவத்தால் உணர்ந்த விடயம் அவன் ஒரு முடிவெடுத்துவிட்டால் அதிலிருந்து எக்காரணம் கொண்டும் பின்வாங்க மாட்டான்.... இந்த காரணத்தாலேயே அவன் தன் காதலை வெளிப்படுத்தியபோது மனதினுள் ஆசைகள் இருந்த போதிலும் அவள் அதை மனதினுள்ளே புதைத்துவிட்டு அவன் காதலை மறுத்தாள்.... ஆனால் அவ்வப்போது அவளது காதலையும் தாண்டிய அந்த உணர்வு அவளது விருப்பத்தை அவளுணராமலேயே அவன்முன் வெளிவர அதில் அவள் எண்ணத்தை அறிந்து கொண்ட ஷாகர் அவளது காதலை ஒப்புக்கொள்ள செய்துவிட்டான்..... ஆனாலும் அன்றொரு நாள் விதியின் சதியால் அவர்களுக்கு நடந்த அந்த சம்பவத்தை அவன் மறந்ததாக ஆதிரா எண்ணியிருக்க ஷாகரோ அதை தான் இன்னும் மறக்கவில்லை என்று கூறி இன்று அவனது காதலை உறுதிப்படுத்திக்கொண்டான்.... ஆனால் ஒரு இக்கட்டான நிலையில் தன்னை காப்பாற்றுவதற்காக நிகழ்ந்த அந்த சம்பவத்திற்கு அவனை பொறுப்பாளியாக்க விரும்பாததாலேயே ஆதிரா அவனது காதலை மறுத்தாள்......

வாய் வார்த்தைகளால் மறுத்த போதும் மனதினுள் தன்னிலையை எண்ணி வெறுத்தாள்...... ஆனால் ஷாகர் அவளை உரியமுறையில் அணுகி அவளை சம்மதம் சொல்ல வைத்துவிட்டான்..... அதன் பின் இது சரிதானா??? என்று சுய அலசலில் இறங்கியவளுக்கு பதில் பூச்சியமே... ஆனால் ஷாகரின்பால் ஒரு உரிமையுணர்வு மேலோங்கியிருப்பதை அவள் உணர்ந்தே இருந்தாள்......... அதனாலேயே அவள் இதுவரை காலம் அவனது பி.ஏ வாக பணியாற்றிக்கொண்டிருக்கிறாள்.. அதற்கு அவள் போர்வையிட்டிருக்கும் பெயர் நன்றிக்கடன்...... தன்னை அந்த இக்கட்டிலிருந்து காப்பாற்றியவனுக்கு இறுதிவரை சேவகம் செய்யவேண்டும் என்று தனக்குள் கூறிக்கொள்வாள்.....

ஆனால் மனமோ
“இறுதி என்பதில் நீ எதை கூற முற்படுகிறாய்???? அவன் ஜீவன் உள்ளவரை அவனுக்கு சேவகம் செய்யக்கூடிய ஒரே நபர் அவன் மனைவியாக மட்டுமே இருக்க முடியும்... அவ்வாறாயின் நீ அவனது மனைவியாய் இருக்க போகிறாயா????” என்று இடர் கேள்வி கேட்டு அவளை திண்டாடவைத்தது......

எதில் தொடங்கினாலும் எல்லாம் அந்த காதல் திருமணம் என்ற இரு வார்த்தைகளில் முடிவடைய அதில் மனமுடைந்தவளுக்கு கண்ணீரில் கரையவே முடிந்தது....
ஆனால் அவள் உணராத விடயம் ஷாகரை விட்ட விலக வேண்டும் என்று ஒருபோதும் அவளுக்கு தோன்றியதில்லை..... அதற்கான காரணத்தை அவள் தன் மனதிடம் கேட்டிருந்தாலே அவளுக்கு பதில் கிடைத்திருக்கும்..... ஆனால் ஷாகரின் உயரம் அவளை அதுபற்றி சிந்திக்கவிடமால் தடுத்தது...
இரவுமுழுவதும் கண்ணீரில் கரைந்தவள் அதிகாலை வேளையிலேயே கண்ணயர்ந்தாள்....

ஆதிரா இரவு முழுவதும் அழுகையில் கழிக்க அங்கு ஷாகரோ தன் பால்கனியில் நடை பயின்றான்.... ஆதிராவை ஹாஸ்டலில் இறக்கிவிட்டவன் தன் அன்னைக்கு அழைத்து தான் வர தாமதமாகும் என்றும் அதனால் தான் இன்று பாம் ஹவுஸில் தங்குவதாகவும் கூறியவன் தன் அன்னையின் சந்தேகக்கேள்விகளுக்கும் பதிலளிக்கவும் தவறவில்லை.... அன்னையுடன் பேசிமுடித்துவிட்டு தன் காரை கடற்கரை நோக்கி செலுத்தினான் ஷாகர்.....

அங்கு ஓரமாக காரை நிறுத்திவிட்டு அதிலிருந்து இறங்கி கடலை நோக்கி நடந்தவன் கரை மண்ணில் அமர்ந்துகொண்டு கடல்காற்றை சுவாசிக்க தொடங்கினான்...
இரவு வானில் வெண்ணிலவு ஒளி வீச அதே வானில் நட்சத்திரங்கள் ஆங்காங்கே சித்திரங்கள் வரைந்திருந்தது.... அதற்கு தாலாட்டு பாடிக்கொண்டிருந்தது கடலலைகள்.... கரையினை தொட ஆர்பரிக்கும் அலைகள் கரையை தொட்டதும் வந்த தடம் தெரியாமல் திரும்ப அதன் வருகையை பாறைகளை ஈரப்படுத்தி தெரிவித்திருந்தது..... அந்த ரம்மியமான வேளையில் இடையிடையே தன் இருப்பை அறிவித்தது உடலைத் தழுவிச்சென்ற கடல்காற்று..... சுற்றுப்புறமோ இத்தனையழகாய் இருக்க அதில் ஒன்றிக்க முடியாது அமர்ந்திருந்தான் ஷாகர்..... எப்போதெல்லாம் மன அமைதி வேண்டுமோ அப்போதெல்லாம் இரவு நேரம் கடற்கரையில் வந்து அமர்ந்துவிடுவான்.... அவனது மனது அமைதிப்படும் வரை கடலன்னையுடன் மனதால் உரையாடுவான்... அவ்வன்னையும் தன் மகனின் குழப்பங்களுக்கான பதிலை அலைகளின் மூலம் வெளிப்படுத்துவாள்...

அந்த கடலன்னையாலேயே இன்று தன் மகவின் குழப்பத்தை தீர்க்க முடியவில்லை.....
ஷாகரோ என்னசெய்வது என்று தெரியாது குழம்பி நின்றான்..... அவனால் ஒரு முடிவுக்கு வரமுடியவில்லை.... ஆதிராவை எவ்வாறு சரிகட்டுவது என்று அவனுக்கு புரியவில்லை.... எத்தனையோ பிசினஸ் டீலிங்கை சர்வசாதாரணமாக முடித்தவனால் இன்று தன் காதலியை சரிகட்ட முடியவில்லை... எதிரிலிருப்பவரின் பார்வையிலேயே அவர் அனுமானங்களை புரிந்து கொள்பவனுக்கு தன் காதலியின் எண்ணவோட்டத்தை அனுமானிக்கமுடியாததை எண்ணி கவலையாய் இருந்தது.....

அவனுள் பல கேள்விகள்...... ஆதிரா தன்னை கணவனாய் எண்ணும் பட்சத்தில் ஏன் விலகுவதிலேயே குறியாய் இருக்கின்றாள்??? அதற்கு தன் ஸ்டேட்டஸ் காரணம் என்றாலும் நான் அதனை சரிசெய்துவிடுவேன் என்று அவளுக்கு தெரியாதா????? தான் ப்ரோபோஸ் செய்தபோது கூட அவள் உடனேயே சம்மதிக்கவில்லையே.... அவளை சம்மதிக்க வைப்பதற்குள் நான் தலையால் தண்ணி குடிக்க வேண்டியதாகிவிட்டதே...... காதலை ஏற்ற போதும் அவள் விலகுவதிலேயே குறியாய் இருந்தாளே..... ஏன்???? மறைக்க முயன்ற காதல் அவளறியாமல் வெளிப்பட்டு சம்மதம் சொல்லிவிட்டதாலா....???? அதிலிருந்து தப்புவதற்காக தான் தன்னை விட்டு விலக முயல்கிறாளோ...????? ஆனால் இன்று காலை அவளல்லவா முதல் வாழ்த்து கூறினாள்????? பிரியம் இல்லாமலா இவ்வாறு நடந்து கொள்வாள்....?????? இல்லை....... இதில் வேறு ஏதோ ஒரு மர்மம் இருக்கின்றது...... அதை ஆதிரா நம்மிடம் சொல்லாமல் மறைக்கின்றாள்........ ஆனால் ஏன் மறைக்க வேண்டும்??????? எதனால் மறைக்கின்றாள்???????? கண்டுபிடிக்க வேண்டும்........ என்று முடிவெடுத்தவனுக்கு ஏதோ ஒரே தெளிவு பாதை கிட்டிய உணர்வு....... உள்ளம் தெளிந்தவன் அங்கிருந்து கிளம்பி தன் பாம் ஹவுசிற்கு சென்றான்... அங்கு சென்று படுக்கையில் விழுந்தவனுக்கு உறக்கம் வரவில்லை... தெளிவு கிடைத்த போதும் அதனை நடைமுறை படுத்தும் வழிதெரியாது மனம் குழம்பித்தவித்தது.... அந்த குழப்பம் அவன் உறக்கத்தை விழுங்கிக்கொள்ள உறக்கம் வராமல் பால்கனியில் நடை பயின்றவன் ஒரு கட்டத்தில் அயற்சியில் அங்கிருந்து பிரம்பு நாற்காலியில் அமர்ந்தவாறே உறங்கிவிட்டான்.....

அசந்த தூங்கிக்கொண்டிருந்த ஆதிராவின் உறக்கத்தை கலைத்தது கதவு தட்டும் சத்தம்.... மெல்ல கண் விழித்தவள் எழுந்து சென்று கதவை திறக்க வெளியே நின்றிருந்தாள் மோகனா.......

“ஆரா எவ்வளவு நேரம் கதவை தட்டுறது???? போன் பண்ணா போனை அட்டென்ட் பண்ணாம இப்படி தான் கும்பகர்ணி மாதிரி தூங்குவியா????? நான் உனக்கு ஏதோனு பயந்துட்டேன்.....” என்று நிறுத்தாமல் மோகனா வசைபாட அதை கேட்க ஆதிரா அங்கு இல்லை....
கதவை திறந்து விட்டவள் மீண்டும் கட்டிலிற்கு வந்து வீழ்ந்திருந்தாள்....

அவளது நடவடிக்கையில் இருந்து ஏதோ சரியில்லை என்றுணர்ந்த மோகனா அவளருகே வந்து அவள் உடலை தொட்டுப்பார்க்க அது அனலாக கொதித்தது....

“ஹேய் ஆரா இது என்ன உடம்பு இப்படி அனலாக கொதிக்குது???? என்னாச்சு மா.... நேற்றிலிருந்து இப்படி தான் இருக்கா???? வா டாக்டர்ட போகலாம்....” என்று ஆதிராவை மோகனா அழைத்து செல்ல முயல

“இல்லை மோகி.... லைட்டா பீவர் டாப்லட் போட்டுருக்கேன்.... இன்னும் கொஞ்ச நேரத்தில் ஓகே ஆகிரும்.... நீ போய் ப்ரெஸ் ஆகிட்டு வா....”

“ஏய் என்ன விளையாடுறியா???? இப்போ எல்லாம் புதுசு புதுசா ஏதேதோ காய்ச்சல்லாம் சொல்லுறாங்க.... நீ என்னடானா டாப்லட் போட்டிருக்கேன் சரியாகிரும்னு சொல்லுற???? முதல்ல நீ கிளம்பு....” என்று ஆதிராவை கட்டாயப்படுத்தி ஆஸ்பிடலுக்கு அழைத்து சென்றாள் மோகனா.... அங்கு அவளை பரிசோதித்த டாக்டர் மருந்தெழுதிகொடுத்துவிட்டு மேலும் சில டெஸ்டுகளை செய்யுமாறு அறிவுறுத்தினார்... அதை முடித்துகொண்டு இருவரும் ஹாஸ்டல் திரும்பினர்... ஹாஸ்டலுக்கு வந்த ஆதிரா அன்று ஒரு முக்கியமான மீட்டிங் இருப்பதாக கூறி மோகனா மறுக்க மறுக்க ஆபிசிற்கு கிளம்பினாள்....

ஆபிசிற்கு வந்தவள் காய்ச்சல் படுத்தியபோதும் அதை கண்டு கொள்ளாது அன்றைய மீட்டிங்கிற்கான வேலைகளில் தன்னை ஈடுபடுத்தி கொண்டாள்....
ஆபிசிற்கு வந்த ஷாகர் அவளது முகவாட்டத்தை வைத்து ஏதோ சரியில்லை என்று உணர்ந்து ஆதிராவிடம் விசாரிக்க அவளோ ஏதேதோ கூறி சமாளித்தாள்.....
மீட்டிங்கிற்கு தேவையான அனைத்தையும் ஒழுங்கு செய்துவிட்டு அது தொடர்பான கோப்புக்களை ஷாகரிடம் ஒப்படைத்தவளிடம்

“ஆது ஆ யூ ஆல்ரைட்??? உன் முகம் ரொம்ப சோர்வாக இருக்கே??? உடம்புக்கு முடியவில்லையா??? ஹாஸ்பிடல் போவோமா???”என்று பரிவுடன் கேட்க

“இல்லை ஷாகர்... ஐயம் ஆல்ரைட்... லைட்டா தலைவலி அவ்வளவு தான்... நீங்க அந்த பைல்சை பாருங்க...” என்று அவனை சமாதானப்படுத்த முயன்றாள்...
ஆனால் அவளது சமதானம் அவனுக்கு முழுதும் திருப்தியளிக்காமல் இருக்க அவளின் மேல் ஒரு கண்ணும் பைலின் மேல் ஒரு கண்ணும் என்று தன் வேலையை பார்த்துக்கொண்டிருந்தான்...
மீட்டிங்கினை வெற்றிகரமாக முடித்த ஷாகர் ஆதிராவை இன்டர்காமில் அழைக்க அதை அவள் எடுக்கவில்லை... அவளை தேடி அவளது கேபினுக்கு செல்ல அங்கு அவன் கண்ட காட்சி அவன் நெஞ்சை உறைய வைத்தது....

ஆதிராவின் கேபினுள் சென்றவன் அவளது இருக்கையில் அவள் இல்லாமல் இருக்க தன் விழிகளால் தேடியவனுக்கு இருக்கைக்கு அருகில் மயங்கி சரிந்து கிடந்த ஆதிரா தென்பட்டாள்... அவளை பார்த்ததும் அதிர்ந்தவன் தாமதிக்காது அவளருகே சென்று அவளை மடியில் ஏந்தியவன் அவள் கன்னம் தட்டி எழுப்ப முயன்றான்...

அவளது கன்னம் தட்டுகையில் அவனது கைகள் உணர்ந்த சூடு அவளுக்கு காய்ச்சல் என்பதை உணர்ந்த அவளை கையில் ஏந்தி அங்கிருந்த சோபாவில் படுக்கச்செய்தவன் அவளது தண்ணீர் போத்தலில் இருந்த தண்ணீரை முகத்தில் தெளிக்க அப்போதும் ஆதிராவிடம் எந்த அசைவும் இல்லை.... இனி தாமதிப்பது உசிதமல்ல என்று உணர்ந்தவன் டிரைவருக்கு அழைத்து வண்டியை எடுத்துக்கொண்டு என்ட்ரன்சுக்கு வருமாறு அழைத்தவன் ஆதிராவிற்கு தூக்கிக்கொண்டு செல்ல முயன்றவன் ஏதோ நியாபகம் வந்தவனாக ஆதிராவின் இன்டர்காமில் ரேகாவிற்கு அழைத்து விடயத்தை சுருக்கமாக கூறியவன் அவளை துணைக்கு வருமாறு அழைத்தான்...

அப்போது மேசை மீது கிடந்த ஆதிராவின் மொபைலும் கண்ணில் பட அதையும் எடுத்துக்கொண்டவன் ஆதிராவை தூக்கிக்கொண்டு வாசலிற்கு விரைந்தான்...அவன் வந்து சேரும் போது ரேகாவும் வந்துவிட வாசலில் காத்திருந்த காரினுள் பின்புறம் ரேகாவை ஏறச்சொன்னவன் அவள் மடியிலே ஆதிராவை கிடத்திவிட்டு அவன் முன்புறம் அமர்ந்து கொள்ள அவனது கார் வேகம் எடுத்தது...
இருபது நிமிடத்தில் கார் ஆஸ்பிடலை அடைந்து விட மற்றைய அனைத்தும் விரைவாக நடந்தது..... ஆதிரா உடனடியாக அவசர சிகிச்சை பிரிவிற்குள் அழைத்து செல்லப்பட மற்றைய அனைவரும் வெளியே காத்திருந்தனர்...

இதுவரை நேரம் இல்லாத பயம் இப்போது ஷாகரை ஆட்டிப்படைத்தது... காலையில் அவளது சோர்வான முகத்தை பார்த்து போதே அவளை ஆஸ்பிடல் அழைத்து வந்திருக்க வேண்டும்.. அவளது பேச்சை கேட்டு அப்படியே. விட்டிருக்க கூடாது என்று அவன் மனதினுள் தன்னைத்தானே திட்டிக்கொண்டான்... அவள் மயங்கி மடிந்திருந்த தோற்றம் அவன் முன் வந்து அவனை கலங்கடித்தது... ஆதிராவிற்கு என்னவோ ஏதோ என்ற பயத்தில் அடுத்து செய்யவேண்டியது குறித்து ஷாகரின் மூளையோ சிந்திக்க மறுத்தது... ஆனால் அவனது சிந்தனையை கலைக்கவென ஒலித்தது ஆதிராவின் மொபைல்.. அதை எடுத்து பார்த்தவன் அதில் மோகி என்றிருக்க அழைப்பை எடுத்து காதில் வைத்த அடுத்த நொடி

“ஆரா நீ ஆபிசுக்கு லீவு சொல்லிட்டு உடனே ஜி.எச்சிற்கு வா... பஸ்ஸில் வராதா ஏதாவது கேப் புக் பண்ணி வா... இல்லை நீ வராதே... நானே வந்து உன்னை அழைச்சிட்டு போறேன்... ஏதும் ஸ்டெயின் பண்ணிக்காத... நான் இன்னும் ஒரு பத்து நிமிடத்தில் உன் ஆபிஸில் இருப்பேன்...” என்று எதிர் முனையில் மோகனா தன் பாட்டில் பேசிக்கொண்டே அவளை இடைநிறுத்த முயன்ற ஷாகர் அதுமுடியாமல் போகவே

“ஹலோ மிஸ்.... கொஞ்சம் கேப் விட்டு பேசுங்க.... எதிர்புறம் யாரு பேசாராங்கனு தெரியாமல் நீங்க பாட்டுக்கு பேசிட்டு போறீங்க....” என்று ஷாகர் குரல் கொடுத்ததும் சில கணங்கள் எதிர்புறம் எந்த சத்தமும் இல்லை... பின் மோகனா மீண்டும்

“இது ஆதிரா போன் தானே..??” என்று கேட்க அதற்கு ஆம் என்று கூறிய ஷாகர் அவள் யாரென்று விசாரித்துவிட்டு ஆதிராவை ஆஸ்பிடலில் அட்மிட் செய்திருப்பதை மோகனாவுக்கு தெரிவித்தான்...

“ரொம்ப தாங்ஸ் சார்... அவளை சரியான நேரத்தில் ஆஸ்பிடலில் சேர்த்தீங்க.... அவளுக்கு ஐ.ஜி.எம் அன்டிபாடி டெங்கு டெஸ்டில் பாசிடிவ் என்று ரிசல்ட் வந்திருக்கதா இப்போ தான் ஆஸ்பிடலில் இருந்து கால் பண்ணாங்க... அதோடு உடனடியாக வந்து அட்மிட் ஆகவும் சொன்னாங்க....”

“என்னது டெங்குவா???” என்று ஷாகர் உச்சக்கட்ட அதிர்ச்சியில் கேட்க மோகனாவோ

“ஆமா சார்... பிளட் கவுன்ட்டும் குறைவாக இருப்பதாக சொன்னாங்க....”

“சரி நீங்க இப்போ எங்க இருக்கீங்க..??”

“ நான் இப்போ தான் சார் என்னோட ஆபிஸில் இருந்து வெளியே வருகிறேன்...”

“சரி அப்போ நீங்க டெஸ்ட் எடுத்த அந்த ஆஸ்பிடலுக்கு போய் ஆதிராவோட ரிப்போட்சை கலெக்ட் பண்ணிட்டு இங்கு சிட்டி ஆஸ்பிடலுக்கு வாங்க... எனக்கு நீங்க டெஸ்ட் எடுத்த ஆஸ்பிடல் பெயரையும் நம்பரையும் ஆதிரா நம்பருக்கு டெக்ஸ்ட் பண்ணிவிடுங்க... நீங்களும் எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் வாங்க” என்றுவிட்டு போனை அணைத்தவன் அடுத்த வேலைகளை கவனிக்க தொடங்கினான்... மனது ஒருபுறம் பதைபதைத்தாலும் கைகளோ அதன் வேலைகளை செய்து கொண்டிருந்தது....

முதலில் ஆதிரா டெஸ்ட் எடுத்த ஆஸ்பிடலுக்கு அழைத்தவன் ஆதிராவை இப்படி அட்மிட் பண்ணியிருப்பதாகவும் அதனால் உடனடியாக ரிப்போட் தேவைப்படுவதாகவும் ஆதலால் தாமதிக்காது தன் மெயிலடிக்கு மெயில் செய்யுமாறு வேண்டினான்... நிர்வாகமும் நோயாளியின் நிலையை கருத்தில் கொண்டு அவனது வேண்டுதலை நிறைவேற்றியது.... ஆதிராவின் ரிப்போட் கிடைத்ததும் தாமதிக்காது அது தொடர்பாக டாக்கருக்கு தெரிவித்தவன் அவர்கள் ட்ரீட்மென்ட் தொடங்க தன்னாலான அனைத்தையும் செய்தவன் ஓய்ந்து போய் அமர்ந்தான்.. இதற்கிடையில் மோகனாவும் வந்துவிட ஆதிராவிற்கு துணையாய் அழைத்து வந்திருந்த ரேகாவை தனது காரிலேயே ஆபிஸிற்கு அனுப்பினான்... அவசர சிகிச்சை பிரிவிற்கு வெளியே போடப்பட்டிருந்த இருக்கையில் மோகனா அமர்ந்திருக்க அவள் கொண்டுவந்திருந்த ஆதிராவின் ரிப்போட்சை டாக்டரின் ஒப்படைப்பதற்காக அவரது அறையை தட்டிவிட்டு உள்ளே சென்றான் ஷாகர்... அவனை வரவேற்றவர் அவனது கையில் இருந்த ரிப்போட்சை வாங்கியவர் அதை பத்திரப்படுத்திக்கொண்டிருக்கும் போது ஷாகர்

“டாக்டர் ஆதிரா இப்போ எப்படி இருக்கா?? அவளோட ஹெல்த் கண்டிஷன் எப்படி இருக்கு??”

“அவங்களுக்கு டெங்கு பீவர்னு உங்களுக்கு தெரியும்னு நினைக்கிறேன்... இது கொஞ்சம் சிவியரான பீவர்... மற்றைய வைரஸ் ப்ளூ மாதிரி இல்லை....இது பிளேட்லட்சை சடுனா குறைச்சிரும்.... அதோடு இவங்களுக்கு டெங்கு பீவர் மோர் தேன் த்ரீ டேஸ்ஸா இருக்குனு ரிப்போட்ஸ் சொல்லுது...”

“இல்லை டாக்டர்... அவ நல்லா தான் இருந்தா.... இன்னைக்கு மார்னிங் தான் சோர்வாக இருந்தா...”

“இது சாத்தியம் தான் மிஸ்டர் ஷாகர்.... சிலருக்கு சிம்டம்ஸ் முதலில் தெரியாது.... த்ரீடு போர் டேஸ்கு பிறகு தான் தெரியும்... மிஸ் ஆதிராவுக்கும் அப்படி தான் போல... ஆனா அது தான் அவங்களோட இந்த க்ரிட்டிக்கலான சிட்டுவேஷனுக்கு காரணம்... லேட் பண்ண லேட் பண்ண இந்த பீவர் சிவியர் ஆகிட்டே போகும்...”

“ஐயோ டாக்டர் என்ன சொல்லுறீங்க?? அப்போ ஆதிரா....”

“மிஸ்டர் ஷாகர் ஆதிராவை காப்பாற்றிடலாம்... ஆனா அவங்க ரிக்கவராக கொஞ்சம் டைம் எடுக்கும்... அதோடு அவங்களை தொடர்ந்து எங்களுடைய கண்காணிப்பில் தான் வைத்திருப்போம்.... அவங்களுடைய பிளட்கவுட்டை அதிகரிக்க வைத்துவிட்டால் அவங்க சீக்கிரம் குணமாகிருவாங்க... ஆனா நிமிஷத்துக்கு நிமிஷம் அவங்க பிளட் கவுண்ட் குறைந்துகொண்டே போகுது.. அதுதான் கொஞ்சம் கவலைக்குரியதாக இருக்கு....”

“டாக்டர்...”

“கவலைப்படாதீங்க மிஸ்டர் ஷாகர்... ஆதிராவை கியோர் பண்ணிரலாம்...... நான் இதை ஏன் உங்களிடம் சொல்றேனா நோயாளியோட நிலையை அவங்க வீட்டு ஆட்களுக்கு தெரியப்படுத்துறது ஒரு டாக்டரா என்னோட கடமை... அதான் அவங்களுடைய நிலையை உங்களுக்கு தெரியப்படுத்தினேன்...”

“டாக்டர் அப்போ ஆதிராவுக்கு ஏதும் பிராப்ளம் இல்லை தானே??”

“85% அவங்க உயிருக்கு உத்தரவாதம் தர என்னால் முடியும்... ஆனால் அவங்களோட பிளட் கவுண்ட் தொடந்து குறைந்துகொண்டே போனால் கொஞ்சம் ரிஸ்க் இருக்கு... சோ..” என்று டாக்டர் நிறுத்த அதற்கு பின் என்ன கேட்பதென்று ஷாகருக்கு தெரியவில்லை... அவரது வார்த்தைகள் அவனை மிகவும் கலவரப்படுத்தியிருந்தன.... டாக்டருக்கு நன்றி கூறிவிட்டு வெளியே வந்தவனுக்கு தன்னை சுற்றி நடப்பது எதுவும் கருத்தில் பதியவில்லை..... அங்கிருந்து நாற்காலியில் தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்தவனுக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது... ஆண்பிள்ளை அழக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டதாலோ என்னவோ அந்த அழுகை அவனது கண்களில் இருந்து வெளிவரவில்லை.... ஆதிராவை நினைக்கையில் அவன் மனம் படும்பாட்டை அவனால் தணிக்கமுடியவில்லை...

தான் இருந்தும் ஆதரவற்று தவிக்கும் நிலையில் அவளை தனியே விட்டது தவறு என்று அவன் மனம் அவனை சாடியது... அவளை விரும்பியதை தவிர வேறு எந்த மகிழ்ச்சியை அவளுக்கு கொடுத்தேன்??? அவளது நலன் அறிந்தேனா?? அவளது துக்கம் அறிந்தேனா???இல்லை அவளுக்கு பிடித்தது ஏதேனும் இதுவரை செய்துள்ளேனா??? எதுவுமே இல்லையே.... தினம் தினம் என்மேல் அவள் கொண்ட காதலை மறைக்க அவள் பிரம்மப்ரயத்தணப்பட்டு வேதனைப்படுவதை மட்டுமே என்காதல் பரிசாக அளித்தது.... நேற்று அந்த சங்கிலி அவள் கழுத்தில் இருப்பதை நான் பார்க்காவிடின் இப்போதும் அவளிடம் உரிமை எடுத்துக்கொள்ள தயங்கிதானே இருந்திருப்பேன்??? என்னை விலக்கிய முயன்றவள் அவள் மீதான என் உரிமையை மறைத்ததேன்??? ஆனால் பதில் தான் அவனிடம் இல்லை...
தன்னுள் மருகியபடி. இருந்தவனை கலைத்தது மோகனாவின் குரல்...

“சார் நீங்க வேணும்னா கிளம்புங்க சார்.... நான் ஆராவை பார்த்துக்கிறேன்....”

“பரவாயில்லை...மிஸ்...”

“மோகனா..”

“மோகனா... நான் உங்க துணைக்கு இருக்குறேன்... ஆதிரா கண்முழிச்சதும் கிளம்புறேன்...” என்றவன் தனது சிந்தனையிலேயே சுழன்றான்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN