என்னடி மாயாவி நீ: 20

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னடி மாயாவி நீ

அத்தியாயம்: 20

ஆதிகா வர்ஷித்தை தன் மடியிலே போட்டு கொண்டு உட்கார்ந்த நிலையிலே உறங்கிவிட்டாள். நிலா ஓய்வெடுக்க கிளம்பியதும் தாமதம் செய்யாமல் தன் பணிக்கு வந்து அமர்ந்தான் ஆதவன்.

ஒளி கதிர்கள் ஜன்னலை தாண்டி ஊடுருவி வர்ஷித்தின் முகத்தில் பட்டது. தன்னவளின் மடியில் இருந்து அவனுக்கு கிளம்ப பிடிகொடுக்கவே இல்லை அவனது உறக்கம். திரும்பி புரண்டு புரண்டு அவன் படுக்க, அப்போதே தெரிந்துகொண்டான், தான் படுத்திருப்பது தன்னவளின் மடியில் என்று. விருட்டென எழுந்து அமர்ந்தான். அவள் உட்கார்ந்த நிலையில் தூங்குவதை கண்டதும் அவனது தூக்கமே தொலைந்து போனது.

'அய்யோ, நான் மடியில் படுத்ததால், இவள் இப்படியே அமர்ந்தே தூங்குறாளே' என தன் மீதே வருத்தப்பட்டுக்கொண்டான். அவளை சீராக படுக்கவைத்து விட்டு, பட்டு நெற்றியில் இதழொற்றிவிட்டு நகர்ந்தான். அப்போது, அவளது மென்மையே உருவான அவளது கையை பார்த்தான். விரல்கள் எல்லாம் சிவந்திருந்தது. 'நாம் நேத்து கோபத்தை கட்டுக்குள் கொண்டு வர, இவளின் கையை இறுக்கிப்பிடித்து காயப்படுத்திவிட்டோமே' என தன்னையே திட்டி நொந்து போனான், அவள் எதற்காக இதையெல்லாம் தாங்குகிறாள் எனகூட யோசிக்காமல்.

நேற்றைய நிகழ்வுகளை நினைக்க நினைக்க அவனுக்கு கோபம் வந்தது. அவனது அப்பாவின் ஒதுக்கம், அதற்கு அவர் சொன்ன காரணம் என எல்லாமே அவனை வதைத்தது.

காலையில் எப்போதும் போல இல்லாமல் சற்று கடுமையாகவே இருந்தான். ஆனால் ஆதிமா என அவளின் பெயரை மறக்காமல் ஒளிரவிட்டான்.


அலுவலகம் சென்றவனுக்கு அங்கு மிக பெரிய ஒரு விஷயம் காத்திருந்தது விஷ்ணுவின் இறப்பு பற்றி.

வர்ஷித்தின் போலீஸ் நண்பனும் விஷ்ணுவின் இறப்பு பற்றி கூறினான். "ராகேஷ் என்பவரால் அச்சிடேன்ட் செய்ய பட்டு, விஷ்ணுவை உயிரை விட செய்தான்" என வர்ஷித்திடம் கூறி முடித்தான். "ஆனால், என்ன காரணம் என தெரியவில்லை" என்ற நண்பனிடம் நான் பார்த்துக்கொள்கிறேன் என பதிலளித்தான் வர்ஷித்.

'ராகேஷ் விஷ்ணுவின் பெரியப்பா மகன் தானே, சொந்த சித்தப்பா மகனை கொள்ளும் அளவிற்கு என்ன நடந்திருக்கும். விஷ்ணுவும் இவனை பற்றி எதுவும் நம்மிடம் கூறியதில்லையே' என யோசித்துக்கொண்டே இருந்தவனுக்கு மிஞ்சியது தலைவலியும் கோபமும் தான்.


கோபத்தை கட்டி சுமந்தவனுக்கு மது அருந்தவேனும் என்பதுபோல் தோன்றியது வெகு நாட்களுக்கு. ஆதிகா அவன் வாழ்வில் வந்த பிறகு இந்த பழக்கத்தை கை விட்டிருந்தான். ஆனால் இப்போது கவலைகளை மறந்து தூங்கவேணும் என்றே மதுவை நாடினான்.

அலுவலகத்திலிருந்து தாமதமாக வந்தவனை கேள்வியோடு நோக்கினாள். ஆதிகா எதிர்பாக்காத ஒன்றை செய்து வந்தான் வர்ஷித். தாமதமானதும் சுப்பிரமணியனும் வசந்தாவும் உறங்க சென்றனர். அவனுக்காக ஆதிகா மட்டுமே காத்திருந்தாள்.

"எப்போதும் வருபவன் போல தெரியவல்லையே, இவனின் நடவடிக்கை ஏன் இப்படி இருக்கிறது, ஏன் இப்படி தள்ளாடுகிறான்?" என குழம்பி அருகில் சென்றவளுக்கு குமட்டி கொண்டு வந்தது மதுவின் வாடை. அவனை கை தாங்களாக அறைக்கு கொண்டு சென்று சட்டை பொத்தான்களை மட்டும் கழட்டிவிட்டாள். அவன் மதுவின் பிடியில் சிக்கியிருந்ததால், படுத்தவுடன் உறங்கி விட்டான். ஆதிகாவிற்கு தான் அவனின் இந்த பழக்கத்தை நினைத்து பயம் தொற்றிக்கொண்டது. 'நேற்றிலிருந்து கொண்ட சோகத்தை கைவிடவே இப்படி செய்திருப்பான்' என மனதை தேற்றி தூங்கினாள்.

காலையில் முழித்த ஆதிகாவால், எழும்ப இயலவில்லை. வர்ஷித்தின் கை கால்கள் எல்லாம் ஆதிகாவின் மேல் படர்ந்திருந்தது. அவளின் கையையும் பிடித்துக்கொண்டே தூங்கி கொண்டிருந்தான். இதனை கண்டவள், முறுவழித்து விட்டு கையை பிரித்து கொண்டாள்.


காலையிலே தலையை பிடித்து அமர்ந்தவனுக்கு, ஆதிகாவே லைம் ஜூஸுடன் வந்தாள். அவள் கோபமும் கொள்ளவில்லை. இவன்தான் சங்கடப்பட்டு மன்னிப்பு கேட்டான். அதற்கும், அவளிடத்தில் பதில் இல்லை. காலையில் சாப்பிட அமர்ந்தபோதுதான் கவனித்தான் அவளது "வருமாமா" என்றழைப்பை. இருந்தும் அவளிடம் ஏதும் கேட்கவில்லை. அதை பற்றி மேலும் சிந்திக்கவும் இல்லை. ஆனால், அவளது அந்த அழைப்பு அவணுக்குள் எல்லை இல்லா மகிழ்ச்சியை உருவாக்கியது. இவர்களின் தனிப்பட்ட அழைப்பை கண்டு பெற்றோர்களும் ஊடல் முடிந்தது போலும் உள்ளுக்குள் மகிழ்ந்து கொண்டனர். வசந்தா ஆதிகா வர்ஷித் பற்றி எல்லா வற்றையும் சுப்பிரமணியனிடமும் கூறி இருந்தார்.

அலுவலகம் சென்று, வேலைகளை தொடர்ந்தாலும் அவனின் மூளை சென்ற இடம் தனது அப்பாவிடமும் விஷ்ணுவின் இறப்பிற்கும் தான்.

' இந்த உலகத்தில் எவ்வளவு அப்பா தங்களின் பிள்ளைகளை தாங்குகின்றனர்.பாசத்தை கொட்டி வளர்க்கின்றனர். ஆனால் எனக்கோ இதை கொடுத்தே வைக்கவில்லை', என கவலைகொண்டான் சுப்பிரமணியன் காட்டும் பாசத்தை மறந்து, அம்மாவின் அருகாமையை தேடினான் வசந்தாவின் தூய்மையான அன்பை மறந்து.

'விஷ்ணு என்ன செய்தான்? அவனுக்கும் ராகேஷிற்கும் என்ன பிரச்சனை? அப்பாவிடம் கேட்போமா இல்லை வருந்துவார்களா? என்ன செய்வது' என யோசித்தான். 'இல்லை இதை சொல்லாமல் விட்டால் நமக்கு பித்து பிடித்துவிடும். அதைவிட, இன்னும் யாரையாவது இழக்க நேரிட்டால் என்ன செய்வது? நினைக்கவே பயமாக இருந்தது. இது குடும்பம் சார்ந்த பிரச்சனை கண்டிப்பாக அம்மா அப்பாவிடம் சொல்லவேண்டும்' என முடிவெடுத்தான். இதை மறந்தும் ஆதிகாவிடம் சொல்ல கூடாது, தெரிந்தால் வருத்தம் கொள்ளுவாள். அப்பா அம்மாவிடமும் இதை ஆதிகாவிடம் பகிர வேணாம் என கூறிவிட வேண்டும்.

மீண்டும் மீண்டும் இதுவே சிந்தையில் உலாவ, மறுபடியும் மதுவை நாடினான். யாரும் அளிக்காத நிம்மதியை போதை தருகிறது என உணர்ந்தான். ஆதிகா தாமதமாக வர்ஷித் வருவதை வைத்தே யூகித்துக்கொண்டாள் மதுவை அருந்திருப்பான் என.

அவனின் இந்த பழக்கம் தொடர்கதை ஆகிப்போனது. இதை பொறுக்காத ஆதிகாவிற்கு கோபம் வந்தது. இதை அத்தை மாமாவிடம் சொன்னால் வருத்தப்படுவார்கள் காரணம் அவனின் அப்பா என்றால் இருவரும் மனமுடைந்து போவார்கள் தங்கள் பாசத்தில் குறை வைத்துவிட்டோமா என்று. இதை அவர்களிடம் சொல்ல வேணாம் என முடிவெடுத்தவளுக்கு தெரியாதே வர்ஷித்தின் இன்னொரு பிரச்சனை. இரவு நேரம் கடந்து வருவதால், அவனின் இந்த நடவடிக்கையை அவர்கள் இருவரும் கவனிக்கவில்லை.

இதைப்பற்றி, காலையில் விசாரித்தால் அலுவலகத்திற்கு செல்பவனுக்கு தானே காலையில் துன்பம் தர கூடாது என இரவு பேச துடித்தாள். அதுவும் அவனிடம் நடக்காமல் போக வாரத்தின் விடுமுறை நாளை எண்ணி காத்திருந்தாள்.

விடுமுறை நாள் வரை, வர்ஷித்திடம் பாராமுகம் காட்டியே வந்தாள். இரவில் மட்டும், அவளின் கையை பிடித்து தூங்கும் போது அவள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. அவள் எதிர்ப்பார்த்த நாளும் வந்தது. அன்றும் அவள் பேசாமல் போகவும், ஆதிமா என்றான் பாவமாக. அவளோ, "உங்களுக்கு என்ன பிரச்சனை? , ஏன் இப்படி இருக்கீங்க? என்னதான் ஆச்சு? இந்த பழக்கதையெல்லம் எங்க கத்துக்கிட்டீங்க?" என கோபமாக கேட்டாள். அவனோ அவளின் கையை பிடித்து, "வேலையில கொஞ்சம் டென்ஷன்மா வேற ஒன்னும் இல்ல" என்றான் சமாதானம் படுத்தும் விதமாக. "அப்படினா பேசி சரி பண்ணுங்க. அத விட்டுட்டு இப்படி செய்தால் சரி ஆகிடுமா", அவனது முக சுருக்கத்தை கண்டு கோபத்தை கைவிட்டு அமைதியாக கூறினாள். "சரி நான் பாத்துக்கிறேன்மா, என்னைய மன்னிச்சிடுமா" என்றான் வர்ஷித். அதன் பிறகு அவனிடம் பாராமுகம் காட்டவில்லை ஆதிகா. வருமாமா வருமாமா என்றே சுத்தி சுத்தி வந்தாள்.

வர்ஷித்தும் அப்பா அம்மாவிடம் விஷ்ணு இறப்பை பற்றி கூறினான். "அவர்கள் இருவரும் வருத்தப்பட்டாலும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம். நீ எதிலும் தலையிட வேணாம், கவலைப்படாமல் இரு. அவர்கள் இருவரும் நினைத்ததை நிகழ்த்த எந்த எல்லைக்கு வேணாலும் செல்லும் ஜீவன்கள்" என கூறும்போது தந்தையின் முகத்தில் வெகு நாள் கழித்து கோபமும் மகனை இழந்த தவிப்பையும் கண்டான். அவனும் மேல ஏதும் கேக்காமல் ஆறுதலாக கைப்பற்றி அழுத்தம் கொடுத்துவிட்டு சென்றான், இதை பற்றி ஆதிகாவிடம் சொல்ல மாட்டோம் என அவர்கள் கூறிய பிறகே.

இரவில் அறைக்குள் சென்றவளின் கையை பிடித்து சுவற்றுக்குள் சிறை வைக்க, அவள் பயந்து அவனின் அருகாமைக்குள் அடங்கி போனாள். மூச்சுவிட மறந்து நின்றாள்.

"உன்னாலதான் நான் இப்போ நிம்மதியா இருக்கேன். நீ சொன்னதை செஞ்சிட்டேன் இப்போ டென்ஷன் இல்லாம இருக்கேன். இதுக்கு முழுக்க முழுக்க நீ தான் காரணம். இதுக்காக உனக்கு ஏதாவுது கண்டிப்பா தந்தே ஆகணும்"என காதலுடன் மொழிந்துகொண்டே அவளின் அருகில் நெருங்கி ஆதிகாவின் இதழ்களை தன் இதழுக்குள் பொதித்து கொண்டான்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 20
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN