தீண்டல் -2

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
தீண்டல் -2

சன்னமாக பெய்துக்கொண்டிருந்த மழையில் அருணும் நவிலனும் அந்த இலட்சுமியம்மாள் லேடிஸ் ஹாஸ்ட்டலின் முன்பு காரை நிறுத்தினார். டேய் என்னடா கால் பண்ணி நான் ஹாஸ்ட்டல் முன்னாடி நிக்கிறேனு சொன்னா இன்னும் ஆள காணோம்! என்ற நவிலனிடம் அவ இன்னும் பல்லுக்கூட விலக்கியிருக்க மாட்டா! அவள நம்பி நீ வேற பிளான் போடுற.. அட போடா ! என்று சலித்துக்கொண்டான் அருண்.
சரோஜா சமானிக்காலோ!!!!
என அதற்குள் அருண் போன் அடிக்க, எடுத்தவன், மச்சான் இந்த பிளான் எல்லாம் வேலைக்காகாது நீ அங்கியே வெயிட் பண்ணிட்டே இரு கொஞ்ச நேரத்துல ஆபிஸ் டைம் வந்துடும் . போய் அந்த சொட்ட எச்சார் மண்டையே பார்த்து ரசிச்சிப்போம் என்று மறுமுனையில் புலம்பியவனின் மண்டையில் ஒன்று போட்டு, போனைப் பிடுங்கி டேய் இன்னும் டூ மினிட்ஸ்ல அங்க இருப்போம் என்றாள் காண்டிபா.
டேய்! போலாம் காரை எடுங்க என்றவளைப் பார்த்து, டேய் நான் சொல்லல மழை காரணம் இல்லாமல் எல்லாம் பெய்யாது என்றான் அருண் நவிலனைப் பார்த்து. டேய் எரும வாங்குனது பத்தாததுனு நினைக்கிறேன் என்றவளை பார்த்து மன்னித்து விடு குலதெய்வமே என்றவன்...டேய் நவி காரை எடுத்து தொலை இவ கூட பராவலை அங்க இருக்கிறவ குமட்டிலே குத்துவா லேட் ஆன என்றான் அருண்.
அடுத்து அந்த கார் சென்று நின்றது சரவணப்பட்டியில் தான். அங்கு நிழல்குடையில் நடுங்கிக் கொண்டே நின்றுக்கொண்டிருந்தனர் இருவரும். டேய் சதீஷ் லேட் ஆகுதுடா பாரு இந்த எருமைங்கல இன்னும் காணோம். என் ஆளுக்கு மட்டும் நான் இப்படி ஊர் சுத்துறது தெரிஞ்சது பிரேக் அப் தான் என்று காத்திருப்பை பொறுக்க முடியாமல் இதழ்யா சதீஷிடம் கத்திக்கொண்டிருந்தாள்.
அவனுக்கு ஐய்யோ என்று இருந்தது. கன்னத்தில் கைவைத்து அவள் புலம்புவதையும் ரோட்டையும் பார்த்திருந்தவன், அவள் கையைப் பிடித்து வந்துட்டாங்க!!! என்றான். பின் இருவரும் காரில் ஏறிக்கொண்டனர். டேய் நவி! ஏன்டா ...இவ்வளவு லேட் நான் இன்னும் கொஞ்ச நேரத்துல காது வலியில செத்து இருப்பேன் என்று புலம்பிய சதீஷை முறைத்தே வாயடைக்க வைத்து விட்டாள் இதழ்யா.
பின் அந்த காரே மிகவும் கலகலப்பானது. அருண் இதழ்யாவின் டிபன் பாக்ஸை காலி செய்துக் கொண்டிருக்க , காண்டிபா இதழ்யா சதீஷ் மூவரும் போனில் பப்ஜி விளையாடிக்கொண்டிருந்தனர். மெதுவாக வந்த கார் மேட்டுப்பாளையம் வந்தவுடன் சற்று வேகம் எடுக்கத்தொடங்கியது. எஸ் நீங்களே கெஸ் பண்ணியிருப்பீங்க! இந்த ஐந்து வாலுங்களும் ஊட்டி போயிட்டு இருங்குங்க இன்று ஆபிஸை கட் செய்துக்கொண்டு.....என்னவா இருக்கும்???? யோசிச்சிட்டே இருங்க. அதுக்குள்ள இந்த ஐந்துப் பேர் பத்தியும் பார்த்திடலாம்.
அருண் சதீஷ் நவிலன் சிறுவயது முதலே நண்பர்கள் என்பதால் இன்று வரை சீக்கிரட்ஸ் என்பதே மூவரிடமும் கிடையாது. சதீஷ் வயது 30. அப்பா குழந்தைவேல். பழக்கடை வியாபாரம். அம்மா தங்கம். இல்லத்தரசி. தங்கை ஒருத்தி இருக்கிறாள் நிதர்சனா , வயது 22.​
இதழ்யா வயது 26 இவர்கள் கல்லூரியில் பைனல் இயர் படிக்கும் போது பஸ்ட் இயர். ரேகிங்கில் தொடங்கிய சந்திப்பு பின் சிறு சிறு சீண்டலுக்கு பின் நீங்கா நட்பாய் ஆனது. இவர்களுக்காவே டெல்லியில் கிடைத்த வேலையை விட்டு இந்த கம்பனியில் ஜாயின் செய்துக்கொண்டாள்.
அடுத்து காண்டிபா. வயது 25.இவள் எப்படி இவர்களுடன் ஒட்டிக்கொண்டாள் என்பது இன்றுவரை புரியாத புதிர் தான். காண்டிபா அப்பா மராட்டியர் அம்மா தமிழ் . படித்தது எல்லாம் மும்பையில் . வேலை நிமித்தமாக இங்கு வந்தவள் அப்படியே இவர்களுடன் ஐக்கியமாகிப்போனாள்.
டேய் , விளையாண்டது போதும் சீ அவுட் சைட். எவ்வளவு பிளசண்ட்டா இருக்குல என்றான் நவிலன். ஆமாடா எவ்வளவு பிளசண்ட்டா இருக்கு என்று வழியில் தெரிந்த பெண்களைப் பார்த்து வாய் பிளந்தப்படி சொன்னான் அருண். சதீஷ் உடனே , நவி இவனயெல்லாம் திருத்தவே முடியாது, போன வாரம் தான் தீஷித்தாவோட பிரேக் அப்பாச்சு ஒரு பீளிங் கூட இல்ல. அந்த பொண்ணு பாவம் என்னமோ இவன் உண்ணாமல் உறங்காமல் இருப்பான்னு நினைச்சிட்டு எனக்கு கால் பண்ணி விசாரிக்குது. டேய் எரும எதுக்குடா அவள பிரேக் அப் பண்ண. வீட்ல பேசறதா சொன்னா அதுக்குள்ள என்ன டா என்றான்.
அது எல்லாம் செட் ஆகாது மச்சி என்ற அருணை அதான் ஏன்டா?? இப்ப சொன்னையே அந்த காரணத்துக்கு தான். நான் என்னடா சொன்னேன் உன்ன பத்தி விசாரிச்சானு தானே சொன்னேன் என்றான். ம்ம் அதான் எனக்கு எல்லாம் என் இன்டிப்பெண்டன்ஸி பாதிக்க கூடாது மச்சி. நானும் அவள எந்த விதத்திலும் டிஸ்டப் பண்ண மாட்டேன். கல்யாணம் என்பது ஒரு கான்டிராக்ட் மாறி தான் என்னை பொறுத்த வரை என்றவனை நீ இதுக்கு கல்யாணம் பண்ணாமலே இருக்கலாம் என்று அவனை சாட்டினாள் இதழ்யா.
அந்த பெண் எவ்வளவு அக்கறையா விசாரிக்கிறா அந்த மாறி அன்பு கிடைக்காம எவ்வளவு பெரு இந்த உலகத்துல கஷ்டப்படுறாங்க தெரியுமா... கல்யாணம் என்பது வெறும் உடல்பசிக்கு மட்டும் இல்ல வயது இருக்கும் வரை தான் இதுவரும். காலம் போன கடைசியில துணையோட இருப்பே யானைப் பலம் தரும் டா . உனக்கு எல்லாம் எங்க புரியப் போகுது , போய் தொலை ! என்று உணர்ச்சி வசப்பட பேசியவளுக்கு தண்ணீர் எடுத்து தந்தான் நவிலன். இதழ் , கூல்! டோண்ட் பீ சீரியஸ். அவன் அப்படி தான் . விடு! நீ டென்ஷன் ஆகாத. அவனுக்கானவளப் பாத்தானா எல்லாம் மாறிடும். லீ விட் வந்த வேளையை பார்ப்போம், என்று ஊட்டியில் பேமஸ் ஆன தாஜ் ஹோட்டல் முன்பு கார் நின்றது.
ஐஐஐஐஐ பிரியாணி! என்று அருணும் இதழ்யாவும் ஒரு சேர இறங்கினர். இதுங்கள பாரு இப்ப தான் இரண்டும் உள்ள கத்திட்டு இருந்ததுங்க. இப்ப பாரு! என்று தலையில் அடித்துக்கொண்டான் சதீஷ். ஆபிஸ் லீவு போட்டுக்கொண்டு ஐவரும் சீரியஸ் ஆக ஊர் சுத்தவெல்லாம் இல்லைங்க. மழை பெய்து மனம் நல்ல நிலைமையில் இருந்தா கிளம்பி விடுவாங்க! ஊட்டிக்கு டீயும் பிரியாணியும் சாப்பிட.....
ஜில் என பெய்யும் அந்த மழையில் சுடாய் பிரியாணியும் டீயும்.....அப்பா!!!! என்ன பீல்ல . அதை தான் ஐவரும் அனுபவித்து கொண்டிருந்தனர்.
உணவு உண்டு முடித்தவுடன் , தான் போக வேண்டிய இடத்திற்கு நவிலன் காரை சென்று நிப்பாட்டி, அருணிடம் காரை கொடுத்துவிட்டு தன் கேமிராவை எடுத்துக்கொண்டு கிளம்பினான். டேய் எத்தன மணிடா????? மூணு டா என்றான் நவிலன். பத்திரம் டா மச்சி என்று அருண் காரை எடுத்துக்கொண்டு தன் எஸ்டேட்டுக்கு அவர்களை அழைத்து சென்றுவிட்டான்.
இது எப்போதும் நடக்கும் விசியம் தான் என்பதால் நண்பர்கள் பெரிதும் ரியாக்ட் செய்யவில்லை. நவிலனுக்கு போட்டோகிராபியின் மேல் ஆலாதி காதல். அதிலும் ஒயில்ட் லைப் போட்டோ கிராபி என்றால் உயிர். பொதுவாக அருணும் சதீஷும் கொஞ்சம் லொட லொட வாய் என்றால் நவிலன் நேர் எதிர்மறை. கொஞ்சம் இன்டிரோவேட். அவனுடைய வாழ்க்கைகான தேடல் என்பது அவனை தவிர வேறு யாருக்கும் புரியாது. நண்பனின் தனி ஸ்பேஸ் வேண்டி மற்றவரும் அவனை தொல்லை செய்வதில்லை.
அவர்கள் நால்வரும் அருணின் எஸ்டேட்டிர்க்கு சென்றனர். நல்ல சாப்பாடு நல்ல தூக்கம் நால்வருக்கும். பின் கொஞ்ச நேரம் விளையாட்டு ......
டெய் டைம் ஆச்சுடா அருண்! இப்பவே என் ஆளு கால் பண்ணி சாவடிக்கிறான். கிளம்புலாம் டா என்றாள் இதழ்யா. உடனே அருண் , இதுக்கு தான் நான் வேண்டாம் என்று சொல்கிறேன் என்றவனை நீ ஸ்டாப் பண்ணு உன் பேச்சை கேட்டா அவ்வளவு தான். எனக்கு பிடிச்சியிருக்கு நான் அதை வேதனையா பாக்குல காதலா என் மேல உள்ள அக்கறையா பாக்குறேன் என்றாள். வாட் எவர் !!! சரி வாங்க கிளம்பலாம் என்று காரை எடுத்துக்கொண்டு நவிலன் எப்போதும் வரும் ஸ்பாடிற்கு வந்தனர்.
அங்கு சட்டை முழுசும் சேருடன் கையில் கொஞ்சம் சீராய்புடன் நின்றிருத்தவனைப் பார்த்து பயந்து போனார்கள் நால்வரும். காரை விட்டு இறங்கி அவன் அருகே ஒடினாள் காண்டிபா. நவி ஆர் யு ஓ.கே என்றாள். பர்ப்பக்ட் என்று அவளை பார்த்து புன்னகை புரிந்தவன் , கேமிராவை டிக்கியில் வைத்து விட்டு காரை கிளப்பினான்.
இதுவும் யாரும் கண்டுக்கொள்ளவில்லை. இவர்களுக்கு என்ன ஆபிஸ்கே தெரியும். காண்டிபாவிற்கு நவிலன் மேல் சிறு விருப்பம் இருக்கிறது என்று......நவிலன் அதை கண்டுக்கொள்வதில்லை. அவனைப் பொறுத்த வரை பிரண்ட்ஸ் கூட நோ லவ் ...சோ அவள் நெருங்க நினைக்கும் சமயம் அவளை காயப்படுத்தாமல் தவிர்த்து விடுவான். அது தான் இப்போதும் !!!!!
பின் ஒவ்வொருத்தரையும் அவர்கள் வீட்டில் விட்டு விட்டு அருணும் நவிலனும் தங்கள் இருப்பிடம் நோக்கி பயணப்பட்டனர். டேய் மச்சி ! இன்னைக்கு எப்படி இருந்தது போட்டோகிராப்பி சேஷன் என்றான் அருண். அட நீ வேற ஒத்த யானைக்கிட்ட மாட்டிக்கிட்டேன் டா. அதான் இவ்வளவு சேரு காயம். மழைனால ஓடவும் முடியில. வீட்டுக்கு வா காட்டுறேன் நல்ல வந்தது போட்டோஸ் என்று ஆர்வமாய் கூறிக்கொண்டே வந்தவன் ....எதோ நியாபகம் வந்தவனாக டேய் டைம் என்ன? என்றான் அருணிடம். 8.00 மணி டா மச்சி....... ஓ காட் அந்த எருமமாடு வேற பிக் அப் பண்ண சொல்லுச்சே! யாருடா என்றான் அருண். அதான் உன் தென்னுமா! என்றான். டேய் இன்னைக்கு என் கூட தங்கிக்கோ! நாளைக்கு உன்ன விடுறேன் இப்பவே லேட் ஆகிடுச்சி என்று அவன் பதில் எதிர்பாராமல் வண்டியை அவள் ஆபிஸ்க்கு கிளப்பி விட்டான் நவிலன்.
எஸ் யுஸ் வல் லேட் தான்!!!! கோபத்துடன் ஆபிஸ் வாசலில் நின்றிருந்தவள், தன் அண்ணனின் வண்டியைப் பார்த்ததும் இன்னும் எகிறி விட்டது. ஆத்திரத்தில் கதவை பாடார் என திறந்தவள், உள்ளே அருணைப் பார்த்ததும் ....டேய் விலங்காதவனே நீ என்னடா பண்ற உள்ள ....டேய் அண்ணா என்று நவிலனைப் பார்த்தவளுக்கு புரிந்துப் போனது. இரண்டு பைத்தியங்களும் எங்கு போனது என்று!!!!!! உங்கள எல்லாம் திருத்தவே முடியாதுடா என்று கார் பின் சீட்டில் அமர்ந்துக்கொண்டாள்.
வீடு வந்ததும் காரில் இருந்து இறங்கினார்கள். டேய்! அண்ணா பின் பக்கமா உன் ரூமிற்கு போ. அம்மா பாத்தாங்க! வருத்தப்படுவாங்க. நானும் அருணும் முன்பக்கமா வறோம். நான் சமாளிச்சிக்கிறேன் என்றாள். அவனும் சரி என்று சென்றுவிட்டான். பின் உள்ளே சென்றவர்களைப் பார்த்து தட்சனி வா! வா ! அருண். எப்படி இருக்க! எப்படி வந்த கார் ரிப்பேர்னு சொன்னாங்க என்றார். அது ...........என்று இழுத்தவனை, அம்மா அண்ணன் தலை வலிக்குதுனு முன்னமே வந்துடுச்சி வீட்டுக்கு, நீ பாக்குல. அருணிடம் காரை கொடுத்து என்னைப் பிக் அப் பண்ண சொல்லிட்டான் என்றாள். ஓஓஓஓ நான் கவனிக்கவே இல்லையே நவியை என்று யோசித்தவரை யோசிக்க விடாமல், நீ போய் சாப்பாட்ட எடுத்து வை. இன்னைக்கு லவ் மேனியா ஸ்சோல ஒரு நல்ல காதல் கதைனு நீலா சொன்னா. நான் ரேடியோ போடுறேன் என்று ஓடிவிட்டாள்.
அவர்கள் வீட்டில் டி.வியை விட ரேடியோ தான் அதிகம் கேட்கப்படும். எஸ் கண்டிப்பாக தென்றல் ஸ்டேசன் மட்டும் தான். வீட்டில் ஒரு சேர அனைவருக்கும் பிடிக்கும் சோ "லவ் மேனியா" . பல சுவாரஸ்யமான காதல் கதைகள் கடிதம் மூலமா இவங்க ஆபிஸ்க்கு வரும். அதில் நல்லதா பார்த்து இவர்கள் படித்து காண்பிப்பார்கள். இதில் அந்த கதைகளை விட அதை படிக்கும் ஆளின் வசிகரமான குரலுக்கு அடிமைகள் பல பேர்.
குளிச்சு முடித்து சமையல் அறைக்கு சென்று தன் அன்னைக்கு உதவினான் நவி. என்னாச்சு நவி ! முன்னமே வந்துட்டியாம் தென்றல் சொன்னா... என்னாச்சு பா நானும் கவனிக்கவே இல்லைப் பாரேன் என்று வருத்தப்பட்டவரை ...ஒன்னும் இல்லமா நல்ல இருக்கேன் . கொஞ்சம் டையர்ட் தூங்கிட்டேன். சரி வாங்க அந்த எரும வேற கத்துகிறது என்று டைனிங் டேபிளிற்கு வந்தனர்.
அனைவரும் உணவருந்திக் கொண்டே அன்றைய லவ்மேனியா ஸ்சோவை மும்மரமாக கேட்டுக்கொண்டிருந்தனர்.
ஹோய் ஹல்லோ வணக்கம். நீங்க கேட்டுக்கொண்டிருப்பது மெட்ரோ ரேடியோ 97.9 FM. நேரம் சரியா இரவு ஒன்பது மணி. உங்க பேவ்ரட் ஸ்சோ லவ்மேனியாவுடன் நான் உங்க மாயோன் என்றான் அவன். தென்றலாய் வருடும் குரல். இன்னைக்கு நாம பார்க்கும் கடிதம் சென்னையில் இருந்து வந்திருக்கு.
வணக்கம் மாயோன். நான் நளினி ( பெயர் மாற்றப்பட்டுள்ளது ) . நான் மெட்ராஸ் யுனிவர்சிட்டியில் எம்.எஸ்.சி படிக்கிறேன். நானும் அவனும் முதல் முதலாய் சந்தித்துக்கொண்டது ஒரு வாசகசாலை நிகழ்வில் தான். அவன் நல்ல உயரம் கொஞ்சம் கருப்பு . அப்படியே சேதுபதி படத்தில் வரும் விஜய்சேதுபதி மாறி இருப்பான். அன்று அவன் தான் புக் ரிவ்யு பண்ணான் . முகமது பசீர் உடைய பால்யகால சகி. முடிவில் அந்த புத்தகம் பற்றி அவனிடம் பேசப் போய் தொடங்கியது தான் எங்கள் நட்பு. பேசின பின்பு தான் அவனும் என் கல்லூரி என்று எனக்கு தெரிந்தது. அழகான நட்பு காதலாய் மாறியது அன்று தான்.
நேயர்களே இப்ப உங்களுக்கான அழகான பாடல் வருகிறது. கேட்டுக்கொண்டு வாங்க அடுத்து அவங்க வாழ்க்கையில் என்ன ஆனாது என்று பார்ப்போம்.........

பயணிப்போம்🛵
 

Author: sagimoli
Article Title: தீண்டல் -2
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN