என்னை தீண்டிவிட்டாய் 5

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
யாரென்று
எண்ணி
தஞ்சமடைந்தாய்
என்னை....

ஒருவாரம் கடந்த நிலையில் ஞாயிறன்று காலை ஷாகரின் அத்தைகள் பெண்கள் ஷாகரின் மாளிகைக்கு படையெடுத்தனர்.... மாதம் ஒரு ஞாயிறன்று இந்த படையெடுப்பு நடைபெறுவது வாடிக்கையே..... அன்று முழுவதும் அந்த மாளிகையில் ஒரே ஆர்பாட்டமாகத்தான் இருக்கும்....
காலையிலேயே ஆஷிகா,ஆத்விகா, கேஷிகா, ரித்திகா,க்ருத்திகா ஐவரும் வந்துவிட அவர்களை என்றும் போல் வசுமதி கவனிக்க அவர்களோ எப்போதும் போல் தங்களின் அத்தானின் அறைக்கு படையெடுத்தனர்....

அங்கு சென்றவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது...

ஷாகரின் அறைக்கதவை தட்டிய போது அது தானாக திறந்துகொள்ள உள்ளே எட்டி பார்த்த ஐவரும் வியந்துநின்றனர்...

“கேஷி நாம சரியான அட்ரசுக்கு தானே வந்திருக்கோம்..” என்று ஆத்விகா கேட்க ஆஷிகா

“உனக்கு ஏன் என்றைக்கும் இல்லாமல் இன்னைக்கு இப்படியொரு சந்தேகம்??” என்று கேட்க ரித்திகாவோ

“எனக்கும் அதே டவுட் தான்பா... நாம ஷாகர் அத்தான் வீட்டுக்கு தான் வந்திருக்கோமா??? இல்லை லேட்டா வந்துட்டோமா??” மேலுமொரு கேள்வியை எழுப்ப அதில் கடுப்பான ஆத்விகா

“எதுக்குடி இப்படி லூசுத்தனமா கேள்வி கேட்டுட்டு இருக்கீங்க?? நாம ஷாகர் அத்தான் வீட்டுல தான் இருக்கோம்.. வழமையை விட இன்றைக்கு கொஞ்சம் ஏர்லியா வந்துட்டோம்.. அதுக்கு என்னடி இப்போ...??”

“இது ஒரு டியூப் லைட்டு.... லேட்டா தான் பத்தும்... ஏன்டி எப்பவும் அத்தான் இந்த நேரத்துல சயனநிலையில தானே இருப்பாரு.. இன்னைக்கு என்ன புதுசா அதுவும் இவ்வளவு சீக்கிரம் எழுந்து வெளிய போயிட்டாரு.... என்னவா இருக்கும்??”என்று கேஷிகா யோசனையில் இறங்க

“ஏதாவது அவசர வேலையா இருக்கும்.. அதான் போயிருப்பாரு.. இதுல என்னடி யோசனை வேண்டியிருக்கு??” என்று அறிவுபூர்வமாய் பதிலளித்த ஆத்விகாவை மற்ற நால்வரும் முறைத்தனர்... அவர்கள் அவ்வாறு முறைப்பதற்கு காரணமும் இருந்தது..

இவ்வாறு இவர்கள் ஒன்றுகூடல் நாளை முடிவு செய்யும் போது ஷாகர் வீட்டில் இருப்பதை அவனிடம் உறுதி செய்துகொள்வர்.. இதுநாள் வரை ஒன்றுகூடல் நாளில் அவர் ஐவரும் வந்து தான் அவனை துயிலெழுப்புவர்... இன்றோ ஷாகர் அறையில் இல்லாது இருந்ததே அவர்களது யோசனைக்கு காரணம்...
க்ருத்திகா

“ இப்படி இங்க நின்று யோசிக்கா அத்தைகிட்டயே கேட்போம்....” என்று யோசனை சொல்ல அனைவரும் மாடியிலிருந்து இறங்க தயாரான சமயத்தில் ஆஷிகா

“ஹேய் வெயிட்.. அங்க பாருங்க...” என்று அந்த தளத்தின் இறுதியிலிருந்த ஒரு அறையை காட்ட அனைவரும் அங்க பார்க்க அந்த அறையின் வாசலில் சுற்றில் சாய்ந்தபடி உள்ளே எதையோ பார்த்தபடி நின்றிருந்தான் ஷாகர்...

ஐவரும் இவன் அங்கே என்ன செய்கிறான் என்று அறிய முயல சத்தமின்றி பூனை நடை நடந்து அறை வாசலிற்கு வர ஷாகரோ அறைக்குள் சென்றான்.. இவர்களும் பின்னாலே சென்று பார்க்க அங்கே கட்டிலில் குழந்தையாய் தலையணையை கட்டியபடி உறங்கிக்கொண்டிருந்த ஆதிராவின் மீது பெட்ஷூட்டினை இழுத்து போர்த்திவிட்டவன் எச்சில் படாதவகையில் அவள் முன்னெற்றியில் இதழொற்றிவிட்ட கட்டிலருகே முழந்தாளிட்டவன் அவளை கண்டு ரசித்தபடி அவள் கேசம் கோதிவிட இங்கு ஐவருமே வாயை பிளந்தபடி பேச்சற்று நின்றனர்.... அவர்கள் ஐவரும் கனவு காணவில்லை என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள தம்மை கிள்ளிப்பார்த்துக்கொள்ள அது தந்த வலியில் காண்பது அனைத்தும் உண்மை என்று ஊர்ஜிதப்படுத்தியவர்கள் அங்கேயே செய்வதறியாது நின்றனர்.. ஒருகட்டத்தில் சூழ்நிலை உணர்ந்த ஆஷிகா ஷாகர் தங்களை பார்ப்பதற்கு முன் அங்கிருந்து அகலவேண்டுமென்று எண்ணி மற்றைய நால்வரையும் இழுத்துக்கொண்டு தோட்டத்துக்கு வந்தாள்...

அவளது இழுப்புக்கேற்று வந்தவர்களின் மனதில் ஆயிரம் கேள்விகள்... யாரிந்த பெண்?? எதற்காக இங்கு தங்கியிருக்கிறாள்..?? அத்தானுக்கும் அவளுக்குமான உறவு என்ன?? அத்தான் எதனால் இப்படி நடந்து கொண்டார்..?? என்று பல கேள்விகள் படையெடுக்க பதில் தெரியாது ஒருவர் முகத்தை மற்றவர் பார்த்துக்கொள்ள எல்லோரும் அதே குழப்பம் என்று புரிந்தது..

“யாருடி அவங்க?? எதுக்கு நம்ம மாமா வீட்டுல தங்கியிருக்காங்க?? அத்தான் கூட இவங்க இங்க தங்கியிருக்கதை பத்தி எதுவும் சொல்லலையே....” என்று ஆத்விகா தொடங்க க்ருத்திகா

“ஆமாபா... நேத்து பேசும் போது கூட அத்தான் எதுவும் சொல்லலையே... “

“அதுமட்டுமா இன்னும் என்னென்னமோ நடக்குது போலவே....??” என்று கேஷிகா கூற

“ஐயோ பதில் தெரியலைனா மண்டை வெடிச்சுரும் போலயிருக்கே... வாங்கடி அத்தான் கிட்டடேயே கேட்டுடுவோம்..” என்று ஆஷிகா கிளம்ப அவளை தடுத்த ரித்திகா

“என்னனு கேட்ப அத்தான் நீங்க கிஸ் பண்ணீங்களே அந்த பொண்ணு யாருனு கேட்பியா?? யார்டி இவ விவரம் புரியாதவ..... கொஞ்சம் பொறுமையா இரு.. முதல்ல அவங்க யாருனு அத்தைகிட்ட கேட்போம்... பிறகு அத்தானுக்கும் அவங்களுக்கும் என்ன ரிலேஷன்ஷிப்னு தெரிஞ்சிப்போம்.. எனக்கு என்ன தோனுதுனா அத்தானுக்கு அந்த பொண்ணு மேல ஒரு இது இருக்கு போல... ஆனா அது உண்மைக்குமே இருக்கா.. எந்த அளவுக்கு இருக்குனு கண்டுபிடிக்கனும்... அப்படியிருந்தா நம்மகிட்ட அதை சொல்லாததுக்கு பனிஸ்மண்ட் கொடுக்கனும்..” என்று கூற க்ருத்திகாவோ

“இவ என்ன ஏதோ மர்மகொலை கேசை கண்டுபிடிக்க போற சி.பி.ஐ டீம் ஹெட் மாதிரி பேசுறா?? இந்த சப்ப மேட்டருக்கு இவ்வளவு சீன் தேவையில்லடி...” என்று சலித்துக்கொள்ள ரித்திக்காவே

“என் உடன்பிறப்பே இது சப்ப மேட்டாரா உனக்கு?? இது அத்தானோட லவ் மேட்டரு.. அது நமக்கு ரொம்ப முக்கியமான மேட்டரு.. நீ என்ன சப்ப மேட்டருனு சொல்லுற??” என்று கூற ஆத்விகாவே

“இப்போ இந்த விவாதம் ரொம்ப முக்கியம்.. வாங்கடி நடந்தது நடப்பதை நடக்கப்போவதை கண்டுபிடிப்போம்... அது தான் இப்போ ரொம்ப முக்கியம்..” என்று கூற அதை ஆமோதித்த மற்றைய நால்வரும் வீட்டினுள் சென்றனர்..
கிச்சனில் சமையலை மேற்பார்வை பார்த்துக்கொண்டிருந்த வசுமதியிடம் வந்த ஐவரும்

“அத்தை பிரேக் பாஸ்டுக்கு என்ன ஸ்பெஷல்??” என்று கேட்க வசுமதி அவர்கள் ஐவருக்கும் பிடித்தபடி ஒவ்வொரு ஐட்டத்தையும் கூறினார்.. வழமைபோல் தம் அத்தையை கட்டிக்கொண்டனர் அந்த ஐவரும்.. அப்போது ஆத்விகா

“அத்தை நம்ம வீட்டுக்கு கெஸ்ட் யாராவது வந்திருக்காங்களா??”என்று விசாரிக்க ஆதிராவின் உடல்நிலை சரியில்லாததால் அவளை இங்கு தங்க வைத்திருப்பதை கூறினார்....

“ஷாகர் எழுந்துட்டானா???”

“ஆமா அத்தை நாங்க போனப்போ அத்தான் ரூம்ல இருக்கல... சும்மா விசிட்டஸ் ரூமுக்கு போகலாம்னு எட்டி பார்க்கும் போது தான் ஆதிரா இருந்ததை பார்த்தோம்... அதான் யாருனு கேட்டோம்...”

“சரிமா... இந்தாங்க காபியை குடிங்க...” என்று ஐவருக்கும் ட்ரேயில் இருந்த தேநீர் கோப்பையை நீட்ட அதனை எடுத்து குடித்த ஐவரும் நடுச்சாலைக்கு வந்தனர்... அப்போது ஷாகர் கீழே வர

“ஹே வாண்டுகளா எப்போ வந்தீங்க???”

“நாங்க வந்து ரொம்ப நேரமாச்சு... நீங்க எப்போ எழும்புனீங்க????” என்று க்ருத்திகா கேட்க...

“இப்போ தான் மா... “

“இல்லையே... நாங்க வந்து பார்த்தப்போ நீங்க ரூம்ல இருக்கலையே...” என்று கேஷி வினவ

“அது.. அது வாஷ் ரூம்ல இருந்திருப்பேன்...”

“இல்லையே அத்தான்.. வாஸ்ரூம் டோர் லாக் ஆகியிருக்கலையே...” என்று ஆஷிகா கேட்க அப்போது அங்கு வந்தார் பிரகஸ்பதி... ஐவரும் அவரைக்கண்டதும் ஒரு சேர காலை வணக்கத்தை தெரிவிக்க அதை ஏற்றுக்கொண்டவர் அவர்களின் நலம் விசாரித்தார்...
ஷாகரும் அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி எழுந்து சென்று தன் அன்னையிடம் தேநீர் கேட்டு பருகியவன் தன்னறைக்குள் புகுந்து கொண்டான்.....

பிரகஸ்பதி எங்கேயோ வெளியே செல்லவிருப்பதாய் கூறி விடைபெற ஐவரும் தம் அத்தான் பற்றிய ஆராய்ச்சியில் இறங்கினர்....

“இந்த அத்தான் நமக்கு தெரியாம என்னமோ திருட்டுதனம் பண்ணுறாரு....”

“ஆமா க்ருத்தி.... இவரை என்ன பண்ணலாம்???”என்று ஆஷிகா கேட்க

“இன்னைக்கு கெட்டுகெதர்ட தீம் அத்தானின் மர்மக் காதல்... இன்னைக்கு அத்தானே அவரோட லவ் மேட்டரை நம்மகிட்ட ஓபன் பண்ணனும்... அது தான் இன்னைக்கான டெஸ்டினேஷன்....” ரித்திகா கூற

“அது சரிபா.... ஆனா இது வண் சைடா டபுள் சைடானு தெரியலையே???” ஆத்விகா கேட்க ஆஷிகாவோ

“வண் சைட்னா டபுள் சைட்டா மாத்திடலாம்... டபுள் சைட்னா இன்னைக்கு புல்லா வச்சி ஓட்டிடலாம்...” என்று சாதாரணமாக கூற மற்ற நால்வரும் அதை ஒப்புக்கொண்டனர்...

படுக்கையிலிருந்து எழுந்த ஆதிரா தன் காலைக்கடன்களை முடித்துக்கொண்டு சிவப்பு நிற டாப்புடனும் கருப்பு நிற பெக்கி பாட்டமுடனும் தயாராகி ஹாலிற்கு வந்தாள்..

அப்போது ஷாகரின் அத்தைமார் ஐந்து ரத்தினங்களும் நடுஹாலில் அமர்ந்து அரட்டை அடித்துக்கொண்டிருந்தது..
அப்போது அங்கு வந்த ஆதிராவை கண்ட ஐவரும் ஒரு மர்மப்பார்வையை பரிமாறிக்கொள்ள அவர்களது இந்த செயலை கண்டு குழம்பிய ஆதிரா ஷாகரின் அன்னையை தேடிக்கொண்டு கிச்சனிற்குள் செல்ல முயல அவளது நடையை தடுத்தது

“அக்கா” என்ற ஐவரின் அழைப்பு...

ஆதிராவோ முதலில் புரியாது செல்லமுயன்றவள் பின் திரும்பிப்பார்க்க ஐவரும் அவளை எதிர்பார்த்திருந்ததை போல் இருந்தது...
எதற்கும் சந்தேகத்தை தீர்த்துக்கொள்ள எண்ணிய ஆதிரா

“என்னையவா கூப்பிட்டீங்க??” என்று ஆதிரா கேட்க சோபாவில் அமர்ந்திருந்த ஐவரும் ஒரு சேர சுற்றும் முற்றும் பார்த்துவிட்டு க்ருதிகாவோ

“ஹால்ல நீங்க மட்டும் தானே இருக்கீங்க அக்கா.. அப்போ உங்களை தான் கூப்பிட்டோம்..”

“எதுக்கு அக்கா எல்லாம்?? நான் ஷாகர் சாரோட ஆபிஸில் வர்க் பண்ணுற ஸ்டாப் தானே.. என்னை நீங்களும் பெயர் சொல்லியே கூப்பிடுங்க.. ஐயம் ஆதிரா...”

“நீங்க ஷாகர் அத்தான் ஆபிஸ்ல வேலை செய்யிற ஸ்டாப்பா இருக்கலாம் அக்கா... ஆனா இப்போ நீங்க இந்த வீட்டோட கெஸ்ட்.. அதுவும் அத்தானுக்கு ரொம்ப ஸ்பெஷல் கெஸ்ட்....அதோடு ப்யூச்சர்ல... அதைவிடுங்க... சோ உங்களை நாங்க அக்கானு தான் கூப்பிட போறோம்...” என்று கேஷிகா கூற மற்றவர்களும் அதை ஆமோதிக்க அவர்கள் பேச்சில் சிரித்த ஆதிரா

“உங்க விருப்பம் எதுவோ அது படியே கூப்பிடுங்க..” என்றவள் அவர்களோடு அமர்ந்து அரட்டையடிக்கத்தொடங்கிவிட்டாள்... ஐவரும் ஆதிராவோடு பேசி அவள் குணநலன்களை ஆராயத்தொடங்கினர்.. தங்கள் தமையனுக்கு நிகரான அத்தானின் தேர்வு சரியானதா என்ற ஆராய்ச்சியில் ஈடுபட்டவர்களுக்கு ஆதிராவை பற்றி எந்தவொரு எதிர்மறையான எண்ணமும் மனதில் எழவில்லை.... அதோடு அவளுடைய அழகும், உள்ளதை உள்ளபடி உரைக்கும் நளினமும் , சிரித்தமுகமாய் அவள் பதில் கூறும் அழகும் அவர்களை பெரிதும் கவர்ந்திருந்தது.... அவளது ரசனைகள் தேர்வுகள் அனைத்திலுமே ஒருவித நளினம் இருந்தது... இவ்வாறு ஆதிராவுடனான உரையாடலினூடக ஐவரும் ஆதிராவை மனமார தங்கள் அத்தானின் மனைவியாக ஏற்றுக்கொண்டனர்....

சில விநாடிகளின் ஷாகர் ஹாலிற்கு வர அவனின் கள்ளத்தனத்திற்கு இன்று முடிவுகட்டவேண்டுமென எண்ணி ஆத்விகா
“என்ன அத்தான்... இன்னைக்கு ரொம்ப சீக்கிரம் எழுந்துட்டீங்க போல...”

“இல்லையே மா.. எப்பவும் போல தான்...” என்று ஷாகர் சோபாவில் அமர்ந்தபடி கூற ஆத்விகாவோ

“பார்த்தியா க்ருதி.. நான் தான் சொன்னேனே... அத்தான் ரூம்ல தான் தூங்கிட்டு இருப்பாருனு... அத்தானுக்கு தூக்கத்துல பக்கத்து ரூமிற்கு நடந்து போற வியாதியெல்லாம் இல்லை.... நீ தான் அனாவசியமாக ஏதோ சொன்ன...” என்று ஆத்விகா கூற ரித்திகாவும் அவளுடன் கைகோர்த்து

“ஆமா க்ருத்தி... நாங்க தான் சொன்னோமே... அத்தானா இருக்காது... அந்த ரூம் கர்ட்டன் தான் உனக்கு அப்படி தெரிஞ்சிருக்கும்னு...நீ தான் சந்தேகப்பட்ட...”

“பூனைக்குட்டி என்னைக்காவது ஒரு நாள் பையை விட்டு வெளிய வந்துதானே ஆகனும் அப்போ பார்த்துக்கலாம்...” என்று ஷாகரை பார்த்தபடி க்ருதிகா கூற ஷாகரோ இன்று காலை தான் ஆதிராவின் அறைக்கு சென்றதை பார்த்துவிட்டனரோ என்று உள்ளே யோசித்துக்கொண்டு வெளியே சகஜமாய் இருப்பதைபோல் காட்டிக்கொண்டான்....

ஷாகர் வந்ததில் இருந்து அவன் பார்வை கள்ளத்தனமாய் ஆதிராவையே வட்டமிடுவதை கண்டுகொண்ட ஐவரும்

“இருடா மவனே உனக்கு இன்னைக்கு வைக்குறோம் ஆப்பு..” என்று மனதில் முடிவெடுத்தாக்கொண்டு கேஷி

“அக்கா நீங்க சினிமா எல்லாம் பார்ப்பீங்களா??”

“ம்ம் பார்ப்பேனே...”

“உங்க பேவரிட் ஹூரோ யாரு அக்கா..??”

“வேற யாரு சூர்யா தான்..”

“ஐயோ நீங்க சுத்த வேஸ்ட்டு அக்கா..” என்று ஆஷிகா கூற

“ஏன்மா...”

“பின் என்ன அக்கா அங்கிள்ல போயிட்டு பேவரிட் ஹூரோனு சொல்லுறீங்க...??”

“என்னது அங்கிளா??”

“ஆமா.. இரண்டு பிள்ளைக்கு அப்பாவ அங்கிள்னு சொல்லாமல் வேற எப்படி சொல்லுறதாம்...” என்று கேஷி கூற ஆத்விகா அவளை படுபயங்கரமாய் முறைத்தாள்...
அதை பொருட்படுத்தாத கேஷிகா

“இப்போ ரீசண்டா உள்ள ஹூரோஸ்ல உங்களுக்கு யாரை பிடிக்கும்.... பேச்சுலர் ஹூரோசை மட்டும் தான் சொல்ல முடியும்...??”

“ம்ம்ம்... ரீசண்டானா துருவ் விக்ரம் ரொம்ப பிடிக்கும்...”

“வாவ்.... செம்ம க்யூட்ல...” என்று ஆஷி ஷாகரை ஓரக்கண்ணால் பார்த்தபடிகூற கேட்க ஆதிராவும்

“ஆமா... செம்ம ஹேண்ட்சம்.. அவரோட சிரிப்பு எதிர்ல இருக்கவங்கள இம்ப்ரஸ் பண்ணுற மாதிரி இருக்கும்... அதோடு ப்ளக் தான் அவங்களுக்கு ரொம்ப சூட் ஆகும்.... பஸ்ட் மூவிலேயே அட்டகாசமா நடிச்சிருக்காங்கனு சொன்னாங்க... நான் இன்னும் பார்க்கலை.... பட் ஐ வல் ஹிம்..” என்று ஆதிரா தன் மனம் கவர்ந்த நடிகரை பற்றி கூற ஷாகருக்கோ உள்ளுக்குள் புகைந்தது...

எந்தவொரு ஆண்மகனுக்கும் தன் மனைவியோ காதலியோ தன்னை தவிர்ந்து வேறு ஆண்மகனை வர்ணிப்பதில் விரும்புவதில்லை.. தன்னை தான் அவர்கள் முதன்மை படுத்தவேண்டுமென்று எதிர்பார்ப்பார்கள்... இது அன்பின் பிணைப்பால் உருவாகும் ஒரு சிறு எதிர்பார்ப்பு..... அவ்வளவு... இது பெண்களுக்கும் பொருந்தும்...

இதை அறிந்தே ஷாகரின் அத்தைமார் பெற்ற ரத்தினங்கள் ஐந்தும் அவனை வம்பிழுத்துக்கொண்டிருந்தனர்.. இதற்கு ஆதிராவும் ஒத்துழைப்பு வழங்கிட கடுப்பின் உச்சகட்டத்தை அடைந்த ஷாகர் அங்கிருந்து எழுந்து கொள்ள ரித்திகாவோ

“என்ன அத்தான்... அதுக்குள்ள எழும்பிட்டீங்க...இப்போ தானே ஆரம்பிச்சிருக்கோம்..”

“இ..இல்லை... ஒரு வர்க் பெண்டிங்கில் இருக்கு... அதல முடிச்சிட்டு சீக்கிரம் வர்றேன்...”என்று அங்கிருந்து நகர முயல அவனை தடுத்த ஆத்விகா

“அதெல்லாம் முடியாது.... நாங்க உங்களுக்கு ஒரு வாரத்துக்கு முன்னாடியே எந்த வர்க்கும் வச்சிக்க கூடாதுனு சொல்லிட்டோம்... அதனால நீங்க இன்னைக்கு எந்த வர்க்கும் பண்ண முடியாது... மீறி பண்ணா அவ்வளவு தான்..” என்று கூற ஷாகரோ தன்நிலையை நொந்துகொண்டே அங்கு அமர்ந்துகொண்டான்....

அப்போது ரித்திகா

“அத்தான் உங்க ப்ரெண்ட் நதியா எப்படி இருக்காங்க??”

“நீ யாரை கேட்குற ரித்தி??”

“அதான் அத்தான்..உங்க காலேஜ் மேட் நதியா.. அவங்க கூட உங்களுக்கு ப்ரபோஸ் பண்ணாங்கனு சொன்னீங்களே.. அவங்க தான்...”

“அவளா... ம்ம் நல்லா இருக்கா... இப்போ எதுக்கு நீ அவளை பத்தி கேட்குற??”

“இல்லை அவங்களை பத்தி நேத்து நியாபகம் வந்திச்சு... அவங்க உங்களுக்கு லவ் டார்ச்சர் குடுத்தது நீங்க அவங்களை இக்னோர் பண்ணதுனு நீங்க சொன்னது நியாபகம் வந்திச்சு அதான் கேட்டேன்... ஆனா அத்தான் எதுனால அவங்க ப்ரோபோசலை நீங்க அக்செப்ட் பண்ணலை ..??”

“எனக்கு அவ மேல எந்தவொரு பீலும் வரலைமா.. அதான் ரிஜெக்ட் பண்ணேன்...”

“சரி இன்கேஸ் உங்களுக்கு அவங்க மேல லவ் வந்திருந்தா என்ன பண்ணியிருப்பீங்க??”

“வேற என்ன பண்ணியிருப்பேன்?? ஓகே சொல்லியிருப்பேன்...”

“அதான் எப்படி சொல்லியிருப்பீங்கனு நடிச்சிக்காட்டுங்க....”

“என்ன ரித்தி...”

“சும்மா நடிச்சிக்காட்டுங்க அத்தான்... கேஷி நீ போயிட்டு அந்த நதியா மாதிரி ஆக்ட் பண்ணு... அத்தான் கேஷி தான் அந்த நதியா நீங்க இப்போ ஆக்ட் பண்ணுங்க...”
என்று கூற ஷாகரோ வேண்டா வெறுப்பாய் எழுந்து சென்றவனை நச்சரித்து அவனை நடக்கச்சொல்ல அவனும் அவர்களின் விருப்பத்திற்கிணங்க சற்று அசத்தலாய் நடத்துகாட்டினான்...

அவன் நடிக்கத்தொடங்கியபோது சகஜமாய் இருப்பதுபோல் காட்டிக்கொண்ட ஆதிரா அவன் காதல் வசனம் பேசத்தொடங்கியதும் அவளுள் பொறாமை எட்டிப்பார்க்க அது சிறிது நேரத்தில் கோபமாய் மாறத்தொடங்கியது...
நால்வரும் ஷாகரின் நடிப்பை ரசிப்பது போல் ஆதிராவின் புகைச்சலையும் அவளது போலிச்சிரிப்பையும் ரசித்துக்கொண்டிருந்தனர்...

ஷாகர் நடித்து முடித்தும் ஆத்வி

“சூப்பர் சூப்பர் சூப்பர் அத்தான்.... சான்சே இல்லை போங்க... உங்க நடிப்பை பார்த்த பர்னிங் ஸ்மெல் எல்லாம் வந்தது...”

“என்னது??”

“அதான் அத்தான்.. உங்க நடிப்புல இருந்த பயர் வெளியில தெறிச்சு இந்த வீடே பர்னிங் ஆகியிருக்கும்னு சொல்ல வந்தேன்..” என்று ஆத்வி ஆதிராவை பார்த்தபடி சொல்ல மற்ற அனைவரும் அதை ஒரு சிரிப்போடு ஆமோதித்தனர்...
இவ்வாறு இருவரிடமும் காதல் உள்ளதல அறிந்து கொண்ட ஐவரும் கிடைத்த சந்தர்ப்பங்களிலெல்லாம் அவர்களிருவரையும் வம்பிழுத்து கேலி செய்தனர்...
அன்று நாள் முழுவதையும் இருவரையும் மையப்படுத்தி களித்தவர்கள் வீட்டிற்கு கிளம்பும் முன் தங்கள் அத்தானை கார்டினிற்கு தனியாக அழைத்து சென்றனர்..

“அத்தான் உங்க கிட்ட ஒன்னு கேட்கனும்??”

“சொல்லு ஆஷி..”

“நீங்க உங்க லவ்வை ஆதிரா அக்காட்ட சொல்லிட்டீங்களா??”

“ஆஷி.. நீ..”

“எங்களுக்கு எல்லாம் தெரியும் அத்தான்... நீங்க லவ் பண்ணுறது அக்காவுக்கு தெரியுமா??”

“ஆமா.. ஆனா ஓகே சொல்லமாட்டேங்கிறா...”

“ஆனா அவங்களும் உங்களை விரும்புறாங்க...” என்று க்ருதி கூற ஷாகரோ

“எனக்கு தெரியும்... ஆனா அவ என்கிட்ட இருந்த விலகிப்போக ட்ரை பண்ணுறா....” என்று விரக்தியாய் பதிலளித்தான்...

“ஏன்...” ஆஷி கேட்க

“ஏதோ உப்பு சப்பில்லாத காரணமெல்லாம் சொல்லுறா.... அதான் அவளை எப்படி கரெக்ட் பண்ணுறதுனு தெரியலை...” என்ற ஷாகரிடம் கேஷி

“அப்போ நீங்க தான் பல குட்டிகரணம் அடிச்சு உங்க ஆளை கரெக்ட் பண்ணனும்..”

“நீங்களும் இந்த அத்தானுக்கு கொஞ்சம் ஹெல்ப் பண்ணலாமே வாண்டுகலா...” என்று ஷாகர் கேட்க ஆத்வியோ

“வாய்ப்பில்லை ராஜா வாய்ப்பே இல்லை... அவங்க உங்களை விரும்பலைனா அதுக்கு நாங்க ஏதாவது ஹெல்ப் பண்ணலாம்... ஆனா உங்க விஷயம் அப்படி இல்லை.... அதனால நீங்க தான் தீயாய் வேலை செய்யனும் அயத்தானோ ....” என்று கூறி மற்றலர்களிடமும் அதற்கு ஒப்புதல் கேட்க அவர்களும் அதையே வழிமொழிந்தனர்...
இவ்வாறு தன் அத்தானுக்கு காதலில் வெற்றிபெற வாழ்த்துகூறி ஐவரும் தத்தமது வீட்டிற்கு கிளம்பினர்.....

அவர்கள் கூறியது போல் ஆதிராவை மணக்க ஷாகர் பல குட்டிகரணங்கள் அடிக்க வேண்டுமோ????
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN