பேதை மனம் அறிவானோ மேதை??

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஹலோ டார்லூஸ்...😘😘😘
நான் உங்க மின்மினி.. ✨✨✨
இப்பதான் எழுத வந்திருக்கேன்..
என்னோட ஸ்டோரிக்கான டீஸர்...
அந்த பால்நிலா வானத்தில் இருந்தப்படியே பூமியில் இருந்த நட்சத்திரங்களை (பெண் தேவதைகளை) ரசித்துக்கொண்டிருந்தது. பௌர்ணமி வெளிச்சத்தில் அந்த கோட்டை இன்னும் பிரகாசமாய் இருட்டிலும் ஒளிர்ந்தது.
பங்களாவின் ஓரமாக உருண்டையாக நீண்டு இருந்த தண்ணீர் பைப்பினை பிடித்து ஒரு கருப்பு உருவம் மேலே ஏறியது.. கோட்டையோ உயரமாய் இருக்க அந்த உருவத்திற்கோ மூச்சிறைத்தது. இருந்தும் விடாமல் முயற்சி செய்தபடி எம்பி எம்பி ஏறியது. ஒருவழியாய் நினைத்த ஜன்னலின் அருகே வந்து சேர்ந்திருந்தது. பின் மெல்லமாக ஜன்னலின் சுவற்றை பிடித்து தாவ, அந்த கோட்டைக்கு சொந்தக்காரனோ இருளின் குளிர்ந்த இதமான காற்றிற்காக ஏசியை கூட பொருட்படுத்தாமல் ஜன்னலை திறந்து வைத்திருந்தான்.
ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த உருவம் அவனை பார்த்து. அவனோ டபுள் காட் பெட்டை ஒருவனாய் நிறைத்து சுகமான தூக்கத்தை மேற்க்கொண்டிருந்தான். உடற்பயிற்சியின் காரணமாக அவனது உடல் மட்டுமின்றி அவனது கன்னங்களும் இறுகி போயிருந்தது. அவனது கண்களை மூடியிருந்தான் இல்லையெனில் அவனது கண்களின் ஒளியில் எதிரில் இருப்பவர்கள் பொசுக்கி விடுவர். அடிக்கடி வரும் கோபத்தால் மூக்கு சிவந்து சிவந்து "அடப்போடா.. நான் சிவப்பாவே இருந்துட்டு போறேன்.." என அவனிடம் கோபித்துக்கொண்டு எப்போதுமே சிவந்து இருந்தது. தூக்கத்தில் கூட சிரிக்கக் கூடாது என அவனது உதடுகள் உறுதிமொழி எடுத்தது போல அழுத்தமாக இருந்தது. சட்டையில் மேல் பட்டன்கள் இரண்டு கழற்றி விட்டிருந்தவன் ஆழ்நித்திரையில் இருந்தான்.
உள்ளே சென்ற உருவம், அருகில் இருந்த பூந்தொட்டியை தூக்கி அவனது தலையிலே போடப்போக, ஏதோ நினைவு வந்ததாக பூந்தொட்டியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டது. அந்த இருட்டில் அருகில் இருந்த டேபிள் மற்றும் ஷோபாவில் துழாவி துழாவி தேடிக்கொண்டிருந்தது.
"அட அங்க என்ன தேடுற??" என வாயை கேட்க ஆசைதான்.. ஆனால் அவன் விழித்துவிடுவானே என்ற பயத்தில் வாயை ஒரு கையால் பொத்தியவாறே தேடியது.. அப்போது அந்த இருட்டறையில் வெளிச்சம் தெரிய, பார்வை அதை நோக்கி சென்றது. அவனின் அருகே போன் பாடாய் படுத்தப்பட்டு கிடந்தது. அருகே சென்று எடுக்க முயல், பரந்து விரிந்திருந்த அவனின் உடலை தாண்டி எடுக்க முடியவில்லை..
எம்பி எம்பி ஒருவாறாக எடுத்துமுடிக்க, அதன் கெட்ட நேரமாய் நெற்றியில் இருந்து வழிந்தது ஒரு துளி வியர்வை. சட்டென அதை கேட்ச் பிடித்தது அந்த உருவம்.. ஆனால் கெட்ட நேரம் கெட்ட நேரம் தான்.. மற்றொரு துளி அவனின் கன்னத்திலே விழுந்திருந்தது. ஈரத்தை உணர்ந்த அவன் விழிகளை விரிக்க முயற்சிக்க, அந்த உருவமோ சடாரென அவனது கட்டிலின் அருகே படுத்துவிட்டது..
அவ்வுருவத்தினை அறிவானா??😍😍
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN