என்னடி மாயாவி நீ: 24

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்: 24

ராகேஷ் அந்த இரவில், 'நாம் பழி தீர்க்க வேண்டிய கடமை இன்னும் முடியல' என நெஞ்சில் வஞ்சகம் புதைத்து கொண்டிருந்தான். அவனது அப்பா, "என்னடா என்ன ஆச்சு ஏன் இவ்ளோ கோபமாக இருக்க?" என கேட்க அவனோ, "எல்லாம் உங்க தம்பிதான் டாட்" என கூற அவரோ அவன் 'என்ன செய்தான் அவன் நம்ம டீலுக்கு ஒத்துக்கலயா?" என வன்மத்துடன் கேட்டார். நான் அவரிடம் சென்று, 'உங்க சொத்துக்கு வாரிசு நானாக இருக்க ஆசைப்படுகிறேன்" என கூறியபோது அவர் "நான் இருக்கும் வரையில் இந்த சொத்து உனக்கும் இல்லை உங்கப்பனுக்கும் இல்லை. விஷ்ணு இல்லனா என்ன என்னோட வாரிசா நான் வளர்த்த புள்ள என்னோட புள்ள வர்ஷித் இருக்குறவரைக்கும் உனக்கு அந்த கவலை வேணாம் நாங்களே பாத்துக்குறோம் எனக்கு அப்பறம் என்னோட வர்ஷித் பாத்துக்குவான் கூடிய சீக்கிரமா என்னோட சொத்துக்கு அவன்தான் வாரிசுன்னு அறிவிப்பேன்" என திமிராகவே பதிலளித்தார்.

ஏற்கனவே சுப்பிரமணியனிடம் ராகேஷ் வந்து துக்கம் விசாரித்து சென்றான். எந்த ஒரு நல்ல கெட்ட விஷயத்திலும் பங்கெடுக்காதவன் எதற்கு இப்போ வந்தான் என குழப்பமாய் இருந்தவருக்கு வர்ஷித் வந்து விஷ்ணுவின் இறப்புக்கு ராகேஷ் தான் காரணம் என சொன்னபிறகுதான் புரிந்துகொண்டார் அவன் இப்படி நடிக்கிறான் என. என்ன ஆனாலும் சொத்து மட்டும் அவனிடம் போகவே கூடாது வர்ஷித்தை வாரிசாக அறிவிக்க வேண்டும் அவன் சம்மதிக்கவில்லை என்றாலும் ஒத்துக்கொள்ள வைக்கணும் என முடிவு கொண்டார். இதனால் வர்ஷித்தை பழி வாங்க அடி போட்டான் ராகேஷ். அவனையும் அவன் குடும்பத்தையும் அழிக்கவேண்டும் என திட்டம் தீட்டினர் ராகேஷும் அவனது அப்பாவும் அந்த அடர்ந்த இரவில்.

அங்கு ஊடலில் முடிந்த அவர்களது ஆரம்பமே இல்லாத கூடலை நினைத்து இருவரும் விலகி படுத்தனர். ஆதிகா அவளுக்கு முதுகுகாட்டி படுத்திருக்கும் வர்ஷித்தின் முதுகை பார்த்துக்கொண்டிருந்தாள். 'ஐயோ சற்று நேரத்திற்கு முன் எப்படி எல்லாம் நடந்து கொண்டான், சாமியார் என்ற எனது கணிப்பை பொய்யாக்கி விட்டானே. ரொமான்டிக்கா பேசுறான், ஆசையா முத்தம் எல்லாம் கொடுத்தானே' என அவனின் செயலை நினைத்துக்கொண்டே அவன் முத்தமிட்ட தனது இதழை வருடி பாத்தாள், வெட்கம் வந்து ஒட்டிக்கொண்டது. 'புள்ள ரொம்ப ஏமாந்து போயிட்டே, அத்தை இதுக்குத்தான் புடவை கட்ட சொன்னாங்க போல' என நினைத்து சிரித்துக்கொண்டாள். 'ரொம்ப ஆசையா வந்தானே சொன்ன ஒரே வார்த்தையிலே இப்படி திரும்பி படுத்துட்டான்' என அவனுக்கு வருத்தம் கொண்டாள். 'நான் ஏதோ ஒரு பதட்டத்துல, அடுத்து எப்படி எதிர்கொள்ள போகிறோம்னு ஒரு பயத்துல தானே இப்படி சொன்னேன், அதுக்கு பொசுக்குன்னு திரும்பி படுத்துக்குவானா ஐயோ இது என்ன, இப்போ நாமளே அவதி படுகிறோமே'. இவன் முன்னாடியே சொல்லிருந்தா அதுக்கு தயார் ஆகியிருப்போமோ... என ஒரு பக்கம் நினைக்க ச்ச இது என்ன பரிச்சையா தயார் ஆக என மறு பக்கம் தன் நிலையை எண்ணி மானசீகமா தலையில் அடித்து இதுக்குமே அவனை குற்றம் சாட்டினாள்.

முடிவுக்கு வந்தவளாக சரி அவன்கிட்ட பேசுவோம் கோபப்பட்டா என ஒரு கணம் யோசித்தவள் பரவாயில்லை பேசி சமாளிப்போம் என உறுதியாக வரு மாமா என கூப்பிட அவளின் பரிதாபம் வார்த்தை வெளி வாராமல் சதி செய்தது. மீண்டும் அவள் அழைக்க அவனுக்கு அவள் ஏதோ முணுமுணுப்பது போல் தோன்றியது. அவளை தீண்டி அவனுக்குள் இருந்த உணர்வுகள் எழும்பி பாதி நேரத்தில் அது கிடைக்காமல் போக உணர்வுகள் எல்லாம் பேயாட்டம் போட அதை அடக்க முடியாமல் அவன் திணறவே அவளுக்கு முதுகு காட்டி படுத்து கொண்டான்.

அவள் கூப்பிடும் அவன் திரும்பவில்லை என்றதும் செய்வதறியாமல் திகைத்து கடைசியில் அவனை சமாதானம் செய்து தன்னை கொடுக்க முடிவு செய்தவள் அவனின் வெற்று முதுகை கட்டிக்கொண்டு நடுமுதுகில் முகம் புதைத்து முத்தம் கொடுத்தாள். அவளின் தளிர் விரல் அவனது மார்பில் விளையாட அவனுக்கு பெரும் சோதனையாக இருந்தது. "என்ன" என்றான் மொட்டையாக, "என்ன என்னனு கேட்டா நான் என்ன சொல்றது" என அவளும் பதிலுக்கு கேட்டாள். தீடிரென்று ஆதிகாவை தனக்கு முன் பக்கம் கொண்டு வந்து அவளை கைவளைவுக்குள் வைத்துக்கொண்டு காதில் மீசை முடி உரச "என்ன" என்று மெதுவாக கேட்டான். பெண்ணவளோ மெல்ல மெல்ல சுயத்தை தொலைக்க ஆரம்பித்தாள். "சாரி" என்றாள் இருவரது முகமும் உரசும் அளவில் அருகில் இருந்தது. இருவருக்கும் எதிர்திசையில் உள்ளவரின் வெப்பம் சுமந்த மூச்சு காற்றும் இருவரையும் தொல்லை செய்தது.

எதற்கு என அவன் கேட்க "நீங்க கோச்சிக்கிட்டிங்கள அதுக்கு தான்" என கூறும்போதுதான் தெரிந்தது தான் கோபித்துக்கொண்டுள்ளதாக நினைத்துள்ளாள் என்று அவனுக்கு. 'சரி இதையே மைண்டைன் பண்ணுவோம்' என எண்ணி "இது சாரியெல்லாம் பத்தாது" என்றான் ஒரு கள்ள சிரிப்புடன் அவளோ, 'என்ன செய்ய' என முழிக்க, "நீ ஏன் நான் சொன்னவுடனே விட்டுட்டு தள்ளி போன? " என கேட்க வர்ஷிதோ, "இது என்னடி வம்பாக இருக்கு நீதான வேணானு சொன்ன" என அவன் மறு கேள்வி கேட்டான். "ஆமா நான் சொல்வதை அப்படியே கேட்பது போல் சொல்கிறாய். ஏற்கனவே என்கிட்ட கேக்காமதான டிவோர்ஸ்க்கு அப்ளை பண்ண இதுல மட்டும் என்ன நான் சொல்றத கேட்டேனு சொல்ற" என அவனையே குற்றம் சொல்லி பேசினாள். வர்ஷித் "இப்படி மாறி மாறி பேசும் உனக்கு தண்டனை கொடுக்கணும்" என வேற அர்த்தத்தில் சிரிப்புடன் கூற அவளோ "குடு குடு" என அதே அர்த்தத்தில் பதில் தந்தாள் அவனை பார்த்த படியே. காதல் காமத்தை தூண்டும் காமம் காதலுக்கு வழி வகுக்கும் என்பதை மனதில் வைத்து அவனுக்கு தன்னை கொடுக்க முடிவு செய்துவிட்டாள் வருவின் ஆதிமா.

என்ன தண்டனை கொடுக்கலாம் என யோசிப்பது போல பாவனை வர்ஷித் பாவனை செய்ய, அவள் சட்டென்று எம்பி உதட்டில் முத்தம் பதித்துவிட்டு அவனது மார்பில் அப்பிக்கொண்டாள். அவள் விட்ட குறையை அவன் தொடர்ந்தான்.

இதழை சிறையில் எடுத்து அவளின் உயிரை அவன் உயிரினும் விலங்கில் பூட்டி காதலே தீர்ப்பு சொல்லி காமத்தை தண்டனையாய் வழங்கியது.

அவன் வலிய கரம் கொண்டு மென்மையே உருவான பூவை பதம் பார்த்தான். அந்நேரத்தில் அவள் இவ்வுலகிலே இல்லை என்பதை புரிந்து கொண்டான். தென்றல் தீண்டுவது போலவும் காற்று மெல்ல அறைவதை போலவும் அவனின் சித்தம் பித்து புடிக்க காரணமானவளை தீண்டினான். ஈருடல் ஒர் உயிர் என்ற இலக்கிய வரிக்கு சான்றாக மாறினார் இருவரும். ஒவ்வொரு அசைவிலும் ஆதிமா என்ற பெயரையே வேதம் போல ஜெபித்து கொண்டிருந்தான். இருவரும் இருளில் அதிசயத்தை தேடி ஒருவர் தன் இணைக்குள் மாயமென மறைந்து தங்களை தொலைத்து இரவை இனிதாக்கினர்.

பிறகு அவளுக்கு தன்னால் வந்த சோர்வை எண்ணி உணர்வுகளையும் அவள் வேண்டுமென்ற அணுக்களின் கூச்சல்களையும் அடக்கி நெற்றியில் இதழ் பதித்து அவள் சிகையினை கோதி அதன் வழி வரும் நறுமணத்தை தன்னுள் பரப்பிகொண்டிருந்தான். கழுத்து வளைவில் முகம் புதைத்து முத்தங்களை வாரி இறைத்து, அவளை தன் மார்பு மேல போட்டுகொண்டு தூங்க வைத்தான். அவள் தூங்கவில்லை என்பதை அவளின் தளிர் விரல்கள் தன் மார்பில் சுரண்டிக்கொண்டிருப்பதை மூலம் அறிந்து கொண்டான்.

"ஆதிமா எனக்கு ஒரு கேள்வி" என சொல்ல அவளோ, "சொல்லுங்க மாமா" என கூறியவள் மறந்தும் அவனது முகத்தையும் கண்களையும் பார்க்கவில்லை வெட்கத்தால். "என்ன ஏன் வருமாமானு கூப்பிடுற? குறிப்பா மாமான்னு ஏன் கூப்பிடுற உங்க வீட்ல அத்தை அப்டி மாமாவை கூப்பிடுவாங்களா?"என கேட்டான். ஏனால் வசந்தாவின் பழக்கமும் இல்லை, 'இவளை யாராவுது மாமா எனதான் அழைக்க சொன்னார்களா?' என கேள்வி வரவே இதை கேட்டான். "உங்க ஊருக்கு போனபோது உங்க அக்கா அப்படித்தானே அண்ணாவை கூப்பிட்டாங்க எனக்கும் ஆசையா இருந்துச்சு சரி நீங்க ஆசைப்பட்டாலும் சொல்ல மாட்டீங்க அதான் நானே கூப்பிட்டேன் என்றாள்". அவனோ நெற்றியில் முத்தம் பதித்தான் தன் ஆசையை சொல்லாமலே செய்த அவனது ஆதிமாவிற்கு "இனிமேல் இப்படியே கூப்பிடு எனக்கும் புடிச்சிருக்கு" என கூறினான். "எப்போ மனசு மாறினீங்க மாமா? "என கேட்க அவளிடம் இன்று நடந்ததை கூறினான். "ஓஹ் அப்போ என்ன எவ்ளோ லவ் பண்றீங்க மாமா? " என சிறுபிள்ளை கணக்கில் கேட்க முழிப்பது அவன் செயலாகிப்போனது. 'எப்படி சொல்வது இதை அளக்க கருவியா உள்ளது? 'என யோசிக்கும் வேளையில் சொல்லுங்க என நச்சரித்தாள்.

முடிவுக்கு வந்தவனாய் 'உனக்கு படிக்கிறதுல தியரி புடிக்குமா இல்ல பிராக்டிக்கல் புடிக்குமா? "என கேட்க அவளோ, "என்ன மாமா நான் என்ன கேக்குறேன் நீங்க சம்மந்தமே இல்லாம இப்படி கேக்குறீங்க? " என பதில் வினாவை வைத்தவளிடம் "நீ சொல்லு நான் சம்பந்தம் இருக்கானு சொல்றேன்" என கள்ள சிரிப்புடன் கூற அவளிடமிருந்து பிராக்டிகல் என பதில் வந்தவுடன் "அப்போ என்னோட காதல ப்ராக்டிக்கலா உன்கிட்ட காட்டுறேன்டி" என மறுபடியும் அவளிடம் காதல் விளையாட்டை ஆரம்பித்தான். மீண்டும் மீண்டும் அவளை நாடி விடியும் தருவாயில் அவளை தூங்காவிட்டான். அவனின் காதல் செயல் முறையில் தன்னை முழுதும் தொலைத்திருந்தாள் பெண்ணவள்.

விடிந்து இருவரும் அப்பா அம்மாவிடம் ஆசி வாங்கிக்கொண்டு இருவரின் கூற்று படி கோவிலுக்கு சென்றனர் இந்த நாளை செலவழிக்க பல திட்டங்களை தீட்டிய படி. ஆனால் இவை யாவும் நடக்காமல் கோவிலுக்கு சென்று தரிசனம் முடித்தவுடன் ஆதிகாவை வீட்டில் விட்டு கோபமாக ஆதிகாவின் பெற்றோர் வீட்டிற்கு சென்றான்.
 

Author: Aarthi Murugesan
Article Title: என்னடி மாயாவி நீ: 24
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN