❤️உயிர் 4❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அவனுடன் ஒன்றிய இவளுடைய இரசனைகள் அவர்கள் உறவுக்கு வலு சேர்த்தது.அவளை கிண்டல் செய்வது யுகேனுக்கு மிகவும் பிடிக்கும்.செல்லமாய் ஏஞ்சல், மச்சி என்பான்.
"அஞ்சலி அஞ்சலினு உன்ன கூப்பிட்டா அஞ்சலி பாப்பா படம் ஞாபகம் வருதுப்பா..அது கியூட் பாப்பா,உனக்கு பொருந்தாதேம்மா" என அப்பாவியாய் ஜோக் அடிப்பான்.கோவத்தில் அவள் முகச்சிவப்பை கண்டு இன்னும் கலாய்ப்பான்.

பதிலுக்கு அஞ்சலியும் சண்டை கோழியாவாள்.விடுமுறையில் அஞ்சலி வீட்டிற்கு வருவது யுகேனுக்கு இயல்பாகிப் போனது.எளிதில் பெண்களிடம் வழியும் இரகம் இல்லை அவன்.
அவன் முதல் முதல் பார்த்து மயங்கிய அவன் முன்னால் காதலி ரீத்தாவைப் போலத்தான் மற்ற பெண்களும் இருக்கக்கூடும் என முழுதும் நம்பினான். அது பொய் என்பதை அஞ்சலியின் நட்பு அவனுக்கு உணர்த்தியது.

மற்ற பெண்களை போல் அல்லாது,அவளுடைய இயல்பு வாழ்க்கை அவனுக்கு வித்யாசமாய் தோன்றியது.ஷொப்பிங் என்றால் முகம் சுழிப்பவள் ஜங்கள் ட்ரெக்கிங் என்றால் முகம் மலர்வாள்.கடல் மணலில் கிளிஞ்சல் பொறுக்குவதும் ,அடை மழையில் குடை இன்றி நடப்பதும்,யுகேனுக்கு இவள் குழந்தை போல் தெரிவாள். தெளிவான பேச்சு,
வித்தியாசமான அவளுடைய இரசனைகள் மெல்ல மெல்ல இவனையும் தொற்றிக் கொண்டது.புதியது புராதனம் எது கேட்டாலும் அவளிடம் பதில்கள் இருக்கும்.
அன்று அப்படிதான்,மழையில் நனைகிறேன் பேர்வழி என்று யுகேந்திரன் காய்ச்சலை வரவழைத்துக் கொண்டான்.

'என்ன மச்சி நீ,மழைல ஆடலாமா?இப்ப காய்ச்சல் வந்து அவதிதானே",
செல்லமாய் கடிந்தவளை,

'வெல் நீயும் தான் மழைல ஆடுர உனக்கு மட்டும் சீக் வரலயே,அதான் ஐயாவும் ட்ரை பண்ணேன்,இப்படி ஆச்சு'அசடு வழிந்தான்.
மேலும் திட்ட மனம் இல்லாது,'எனக்கு மழைக்கும் கணக்கு வேறப்பா,நீங்க அப்படி இல்ல மச்சி, சிட்டில கண்ணாடி மாளிகைல இருக்கறவங்களுக்கு இந்த மழை ஒத்துக்காதாம், சோ ரிஸ்க் எடுக்காதே கண்ணா'.

அதன் பின் மழையை ஜன்னலோரம் நின்று இரசிப்பட்தோடு நின்றுவிட்டது அவனுடைய இரசனை.இயல்பாக நகர்ந்து கொண்டிருந்தது இவர்களின் வாழ்க்கை.அவ்வப்பொழுது வேலைககளில் உதவுவதும், உதவிப் பெறுவதும்னு அஞ்சலி யுகேந்திரனின் வாழ்க்கை போய்க் கொண்டிருந்தது.

அஞ்சலியின் மாற்றங்கள் அவளுடைய பெற்றோர்க்கு மகிழ்ச்சியைதந்தது.அதையுகேந்திரனிடமும் அவர்கள் பகிர தவறியது இல்லை.
'யுகேன் ,இப்பத்தான் அவளை திரும்ப அதே அஞ்சலியா பாக்குறேன்ம்பா.
அவ இருக்கிற எடம் கலகலனு இருக்கும்,ஷிவாவ கிண்டல் பண்ணிக்கிட்டே இருப்பா,ரொம்ம வெளையாட்டு பிள்ளையா இருந்தவப்பா.ஷிவா இறந்தது அவ வாழ்க்கையே அடியோட மாத்திருச்சு,யாரையும் பார்க்காமா,கலகல னு இருக்காம,நத்தை மாறி சுருண்டுகிட்டா.
இப்போ உன்னால சிரிக்கிறா.ரொம்ப நன்றிப்பா" கண்ணீர் மல்க பேசிய அஞ்சலியின் தாய் பூரணியை புன்னகையுடன் பார்த்தான்.

'அழாதிங்க ஆண்ட்டி,அஞ்சலி எனக்கு நல்ல தோழி ஆயிட்டா.அவளை மாதிரியே நானும் அடிப்பட்டவன்,அது எங்களுக்குள்ள ஒரு நல்ல நட்பை தந்திருக்கு ,அது எப்பவும் எங்களுக்குள்ள தொடரும்'என இதமாய் பேசியவனை கனிவாய் பார்த்தது அந்த தாயுள்ளம்.
இப்பொழுதெல்லாம் யுகேனின் நண்பர்கள் வட்டாரத்தில் அஞ்சலியும் ஒரு அங்கமாகிப் போனாள்.

விடுமுறை நாட்களில் காடு மேடு சுற்றுவதும்,காமிராவுக்கு போஸ் கொடுப்பதும் வாடிக்கையாகிப் போனது.கோலாலம்பூர் வாசிகளான யுகேந்திரனின் நண்பர்களுக்கும் கடற்கரை பட்டணமான போர்ட்டிக்சன் மிகவும் பிடித்த இடமாயிற்று.காலம் கவலையின்றி சுழல்வதில்லையே. மீண்டும் அஞ்சலியின் கல்யாணப் பேச்சு ஆரம்பமாகியது.
விடுமுறையில் ஒரு நாள்,அஞ்சலியின் அப்பா,
'அஞ்சுமா நானும் உன் அம்மாவும் இந்தியா டூர் போகலாம்னு இருக்கோம்,
இது என்னோட நீண்ட நாள் ஆசைனு உனக்கு தெரியும்தானே? ,
பீடிகையுடன் அப்பா ஆரம்பிக்கவும் அஞ்சலி அவர் முகத்தை ஏறிட்டாள்.

'நல்ல விஷயம் அப்பா,போயிட்டு வாங்க,நான் அது வரைக்கும் அத்தை வீட்டில தங்கிக்குவேன்'அஞ்சலி சொல்ல,

'அதுக்கு சொல்லல அஞ்சுமா,நாங்க டூர் போறது,ஆன்மீக சுற்றுலா மட்டும் அல்ல,ரொம்ப நாளா நம்ப ஊரு பக்கம் போகல,அதான் கொஞ்ச நாள் அங்க தங்கலாம்னு இருக்கோம்.
அதுக்குள்ள உன் கல்யாணத்தை முடிச்சிட்டா ,நாங்க நிம்மதியா போயிட்டு வருவோம்"
அங்க சுத்தி இங்க சுத்தி கதை நம்ம கல்யாணத்துல நிக்குதே.
இப்படி எண்ணுகையில் அஞ்சலி கொஞ்சம் தடுமாறித்தான் போனாள்.

'எனக்கு கொஞ்சம் யோசிக்கணும்ப்பா,ப்ளீஸ்'
அப்போதைக்கு முற்றுப்புள்ளி வைத்தாலும் அஞ்சலியின் மனம் நிம்மதியை தொலைத்திருந்தது.
வார இறுதியில் யுகேனை சந்தித்தபொழுது,
இதைப்பற்றி பேசவும் செய்தாள்.அவனுடைய ரியாக்சன் அவளுக்கு புதிதாய் இருந்தது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN