❤️உயிர் 12❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஒரு நாள் யுகேனைப் பார்க்க அவன் வீட்டிற்கு வந்த குணா உடன் அவனுடைய செல்லப் பிராணி பொமேரியன் நாய்க்குட்டியை கூட்டி வந்திருந்தான்.அஞ்சலிக்கு சிறு வயது முதல் நாய் என்றால் பயம்.வீட்டிலுள்ளவர்களையும் களீபரம் செய்து விடுவாள்.

யுகேனுக்கும் இது தெரியவில்லை.மொசு மொசுவென்றிருந்த அந்த குட்டி வீட்டை சுற்றி ஓடி விளையாடிக்கொண்டிருந்தது. தோட்டத்திலிருந்த அஞ்சலியும் குணா வந்ததை கவனிக்கவும் இல்லை.அந்த நாய்க்குட்டி மெல்ல நழுவி தோட்டத்திற்கு ஓடி விட்டது.நேராக பூச்செடிகளில் மனம் இலயித்திருந்த அஞ்சலியின் பாதங்களை நக்கியது.அவ்வளவுதான்.

அஞ்சலிக்கு பயம் வந்துவிட்டது.யுகேன் யுகேன் என்று கத்திக்கொண்டே ஹாலுக்கு ஓடினாள்.அவள் தன்னோடு விளையாடுவதாய் எண்ணி அவள் பின்னே அந்த குட்டியும் ஓடியது.குணா இருந்ததையும் கவனியாது வாசலில் நின்றிருந்த யுகேனை கட்டிப்பிடித்துக் கொண்டாள்.

அப்படியே அவன் முதுகில் ஒண்டியவள் நாயை அவனுக்கு சுட்டிக் காட்டினாள். பயத்தில் அவள் உடல் நடுங்குவது அவனும் உணர்ந்தான்.பூக்குவியல் ஒன்று சட்டென மோதியது போன்று ஓர் உணர்வு யுகேனுள் தோன்றி மறைந்தது.

நிமிடத்தில் சுதாகரித்தவன்,அஞ்சலியின் பதட்ட நிலை உணர்ந்து அவளை அணைத்துக் கொண்டான்.அவளும் கோபம் மறந்து அவன் மேல் ஒட்டிக் கொண்டாள்.இடையில் குணா செமறவே, யுகேன் தன்னிலை உணர்ந்து,

"குணா,டாமிய தூக்கிக்க,அஞ்சலி பயப்படறா பாரு''கட்டளையாய் வெளிப்பட்டது யுகேனின் குரல்.அதற்குள் டாமீயை தூக்கிக்கொண்ட குணா,கத்தி சிரித்தான்.

"ஹாஹாஹ¡ஹா..நாய்க்குட்டிக்கு பயப்படலாமா அஞ்சு?அது உன்னை ஒண்ணும் செய்யாதே..கடிக்க கூட தெரியாதேம்மா.பாவம் உங்கூட வெளயாட வந்திருக்கும்,நீ என்னனா இப்படி பயப்படற"சிரிப்பிலே அஞ்சலியை கலாய்த்தான்.

கணவன் அணைப்பில் இருந்ததை உணர்ந்தவள்,அவனிடமிருந்து விலகிக் கொண்டாள்.
"குணா அண்ணா எனக்கு நாய்ன்னா ரொம்ப பயம்,·பொபியானு கூட வெச்சுக்கலாம்,சின்ன வயசில் நாய் துரத்தி,கடி வாங்கி நாலு நாள் காய்ச்சலில் வந்த பயம்.அது இப்பவும் மாறல.இது வீட்டில உள்ளவங்களுக்கு தெரியும்.அதனாலே என் வீட்டில் நாய் வளர்த்ததே இல்ல.குட்டி கடிச்சிடும்னு பயந்துட்டேன்.ஐயாம் சாரி யுகேன்" அவன் கண்களை காணவும் அவளுக்கு வெட்கமாக இருந்தது.

"டேய் மச்சான் ,உனக்கு இந்த மேட்டர் தெரியாதா?"குணா யுகேனைக் கேட்க,

"இல்லடா,அவளுக்கு தவளைய பார்த்தா பயம்,ஆனா இப்படி நாய்க்கு பயப்படுவானு எனக்கு இன்னிக்குத்தான் தெரியும்"அவன் பெரு விழிகள் இரண்டும் அஞ்சலி மேல் நிலைக்குத்தி நின்றன.

இன்னிக்கு இவர்கள் கலாய்க்க நாம அவல் பொரி ஆனோம்னு,அஞ்சலி நொந்துக் கொண்டாள்.
இருந்தாலும் சகஜ நிலைக்கு மீண்டவள் குணாவுடன் சம்பாசணையில் கலந்துக் கொண்டாள்.

"அப்புறம் அண்ணா,எங்க இங்க பக்கத்து காற்று வீசுது,இப்பத்தான் கேமரன் வர வழி தெரிஞ்சதோ உங்களுக்கு?"

வீட்டின் உள் அலங்காரத்தில் மனம் இலயித்திருந்தவனை அஞ்சலியின் குரல் அசைத்தது.
"உன் இரசனைகள் ரொம்பவும் அழகா இருக்கு அஞ்சு,யுகேனுக்கு இந்த வீட்டை இப்படி வெச்சிக்கணும் ரொம்ப ஆசைமா"
"வர போகிறவ அவன் கனவு மாளிகைக்கு உயிர் கொடுப்பானு அப்போ சொல்லிட்டு இருப்பான்.ஹீ இஸ் ரைட்!நீ உயிர் கொடுத்திட்ட''அஞ்சலியை மனதார குணா பாராட்டினான்.
யுகேனுமே ஒரு நாள் இப்படி சிலாகிச்சு பேசியது அவளுக்கு நினைவு வந்தது.

அவன் இரசனைகளோடு இயல்பாக ஒன்றும் தன் இரசனைகள்.இயல்பாக இவனுடன் இருப்பது கடினமே என உணர்ந்தாள்.கல்யாணத்தில் நட்பில் மட்டும் நகர்ந்து செல்வது நடக்க இயலாத ஒன்றுப் போல் அவளுக்கு தோன்றியது.புன்னகையித்தவள், குணாவிற்கு டீ கலந்து தந்தாள்.

"இந்த மலைப்பிரதேச குளிருக்கு சுட சுட உன் டீ ரொம்பவும் அருமைமா"
"உங்க ரெண்டு பேருக்கும் கே.ல் வர்ர எண்ணமே இல்லையா?''
''இவனும் இந்த மலை மேல் இப்படி மோகம் கொள்வான்னு நா எதிர்ப்பார்க்கல அஞ்சு,கொஞ்சம் வெயிட் வெச்சு,கலர் கூடி..இன்னும் ரோமியோ மாறி ஆயிட்டான்"
"எல்லாம் நீ வந்த வேளை,"அவளின் வருகை யுகேனுக்குள் எவ்வளவு மாற்றங்கள் தந்திருக்குனு குணா அஞ்சலிக்கு புரியவைத்துக் கொண்டிருந்தான்.

"அஞ்சு,யுகேன் நல்லா பியானோ வாசிப்பான்,பாடுவான்..
டிராயிங் நல்லா பண்ணுவான்,ஹொக்கி ப்ளேயர் வேற,யுனிவெர்சிட்டில ஐயா செம்ம பேமஸ்" குணா யுகேன் புராணம் பாட ஆரம்பித்து விட்டான்.

அஞ்சலிக்கு இது எதுவும் தெரியாது.யுகேன் அடிப்படையில் அமைதியானவன்.
எப்பொழுதும் அஞ்சலியின் சேட்டைகளையே அவனுக்கு இரசிக்க தோன்றும்.
ஆதலால் அவனுடைய சில விருப்பங்கள் அஞ்சலிக்கு தெரியவே இல்லை எனலாம்.

"டேய் குணா ,சும்மா இருக்கமாட்டே நீ,அதெல்லாம் இல்ல அஞ்சு,இவனுக்கே டைம் சரி இல்ல,அதான் காலை வாரி விடுது"

"இவன் இப்படித்தாம்மா,நீ கண்டுக்காதே, பியானோல கை வெச்சான்னா ,பிஸ்னஸ்
மேன்றத கூட மறந்திடுவான்,அதில் அவ்வளவு இலயிச்சு உயிரோட்டமா வாசிப்பான்."

"அதெல்லாம் இல்ல அஞ்சுமா,சும்மா பொழுதுபோக்கிற்கு செய்யறது..இவன் பில்டாப்ஸ்லாம் நம்பிடாதே!"சென்ற நாளைய விசயங்கள் மறந்து போய் இயல்பாய் அஞ்சலியும் அவர்களுடன் இணைந்து கொண்டாள்.

"யுகேன் உங்களுக்கு பியானோ வாசிக்க வருமா?எங்கிட்ட சொல்லவே இல்ல?"
"எனக்கு பியானோ இசை ரொம்ப பிடிக்கும்,எனக்காக ஒரு வாட்டி வாசிப்பிங்களா?" குழந்தையாய் கேட்டவளை காதலாய் பார்த்தான்.

''அண்ணா நான் கே.ல் வீட்டில் பியானோ பார்த்ததே இல்லையே,அதனாலதான் எனக்கு தெரியல" வருத்தமாய் ஒலித்தது அஞ்சலியின் குரல்.

"அஞ்சலி அது என் பெர்செனல் ரூம்ல இருக்கு,நீ என் அறைக்கு வந்ததே இல்ல போல," கேலியாய் ஒலித்தது யுகேனின் குரல்.

ஆமாம்,அவளும்தான் அங்கே அப்படி இருந்ததே இல்லையே,யுகேனின் அறைக்குள் நுழைந்தாய் நினைவு இல்லை.

இங்கு வந்தும் அதே நிலையே.பக்கத்து பக்கத்து அறை என்றாலும் அஞ்சலி யுகேன் அறைக்குள் நுழைந்ததே இல்லை.அவனுக்கு எல்லாம் செய்பவள்,அவன் அந்தரங்க அறைக்குள் மட்டும் அடி எடுத்து வைத்ததில்லை.

'ஹ்ம்ம் ,உங்க ரூம்ல எனக்கு என்ன வேலை இருக்க போகுது,அதான் ஆயா க்ளீன் பண்ணுவாங்களே"அஞ்சலி பதிலுரைத்தாள்.

"அஞ்சலிராணி என் அறைக்கு வர மாட்டிங்களோ?ஆயா ஒரு மாச லீவுக்கு மகன் வீட்டிற்கு போக சொல்லி யாரோ சொன்னதாய் நினைவு, அஞ்சும்மா மறந்திட்டிங்களா?'' இலவகமாய் மடக்கினான் யுகேந்திரன்.

"இனிமே ஐய்யா ரூம் இந்த அம்மாவோட பொறுப்பு,இந்தா கீ"
அவள் வசம் அறைச்சாவியை ஒப்படைத்தான்.ஆனால் அவன் அறையை பூட்டுவது கிடையாது.கேலியும் கிண்டலுமாய் அன்றைய பொழுது நகர்ந்தது.தன் குழந்தையின் பெயர் சூட்டு விழாவிற்கு அவர்களை அழைக்க வந்த குணாவும் கிளம்பி விட்டான்.

இரவின் தனிமையில் இருவரும் அந்த பங்களாவில் இருந்தனர்.சிரிப்பும் கேலியுமாய் சகஜ நிலைக்கு ஒரு வாரத்திற்கு பின் அவர்கள்திரும்பியிருந்தனர்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN