❤️உயிர் 13❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அஞ்சலியை இன்னும் ஆழமாய் காதலிக்க தொடங்கியிருந்தான் யுகேன்.அவளுடைய பய உணர்வைப் போக்க சின்ன நாய்க்குட்டியை பரிசாக அளித்தான்.மொசு மொசுவென்ற அந்த குட்டி அழகாய் இவளிடம் தாவ,இவள் யுகேனிடம் தாவினாள்.அன்று முழுவதும் நாய்க்குட்டி இவளைச் சுற்றி வர,இவள் யுகேனின் கைகளை விடவே இல்லை.இப்படிதான் இவளுடன் ஒட்டிக் கொள்ளமுடியும்மென்று யுகேனும் அவளை விடவில்லை.

"ரிலாக்ஸ் அஞ்சும்மா,நான் ஆபிஸ்க்கு போயிட்டா உனக்கு போர் அடிக்குமில்ல,அதான் இந்த குட்டி உனக்காக வாங்கிட்டு வந்தேன்.அதோட பழக செய்,உனக்கு நாய் பயம் போயிடும்.ஆயா வேற இல்லை,இந்த குட்டி கூட நீ பழகிட்டாதான்,நான் கார்ட் டோக் வாங்கமுடியும்.இட்ஸ் பொர் யுர் சேப்டி டியர்" பொறுமையாய் தன் நலனைக் கருத்தில் கொண்டு பேசியவனின் பரிசை உதாசினப்படுத்த மனமில்லை.

சரி என்று தலையாட்டினாள்

"இந்த குட்டிக்கு என்ன பெயர் வைக்கலாம் சொல்லு"
"கேசி, நல்லாயிருக்கா யுகேன்? "
"கேசி ன்னா அழகான முடின்னு அர்த்தம்,இதோட முடி நல்ல நீட்டா கொச கொசன்னு இருக்கா,சோ இது பேரு கேசி"

"வாவ்,நல்லா இருக்கே,அழகான தமிழ் பெயர்''மனம் திறந்து பாராட்டினான்.ஆரம்பத்தில் பயந்து ஓடினாலும்,கேசியுடன் நாளடைவில் அஞ்சலி ஒட்டிக் கொண்டாள்.அந்த குட்டி நாயும் இவள் பின்னே அலைந்து கொண்டிருந்தது.

அதன் பின்னே அஞ்சலியின் பாதுகாப்பு கருதி ஜெர்மன் சியர்பட் இன காவல் நாய் ஒன்றையும் யுகேந்திரன் வாங்கினான்.பார்ப்பதற்கு குட்டிச்சிங்கம் போல் பயங்கரமாய் இருந்தாலும்,
விசுவாசத்திற்கு பெயர் போன இனமென்பதால் என்னவோ அந்த நாயும் அஞ்சலியுடன் ஒட்டிக் கொண்டது.

டைகர் என்று அதை அழைக்கவே அஞ்சலிக்கு பிடித்தது.வீட்டுத்தோட்டதில் அஞ்சலியுடன் இவை இரண்டும் விளையாடுவதை இரசிக்கவே,யுகேனும் சில சமயம் சீக்கிரம் வீட்டிற்கு வருவான்.

நாட்கள் இரசனையோடு கரைந்திருக்க,ஒரு நாள் அலுவல் காரணமாய் யுகேன் உதய்யைப் பார்க்க கே.ல் செல்ல வேண்டியிருந்தது.ஒரு வாரமேனும் அங்கே இருக்கும் நிலை.அஞ்சலியை தனிமையில் இங்கே விடவும் அவனுக்கு மனமில்லை.ஆனால்,அவள்தான் அவனுக்கு தைரியம் சொல்லி அனுப்பி வைத்தாள்.

''போயிட்டு வாங்க யுகேன்,என்னை டைகர் அண்ட் கேசி பார்த்துப்பாங்க,நான் சிங்கக்குட்டிடா, தவிர இங்கதான் அங்கிள் ஆண்டி இருக்காங்களே ".புஜங்களை தூக்கி காட்டுவதை போல் செய்தவளை பார்த்து சிரித்தான் .

"நீ காட்டு ராணிதான்.ஒத்துக்கிறேன் தாயே" கையெடுத்து கும்பிட்டவன் இடுப்பில் கிள்ளினாள்
"அடி விழும் மவனே,பார்த்து ட்ரைவ் பண்ணுங்க" புன்னகையுடன் அவனை வழி அனுப்பினாலும் மனம் அவன் இல்லாத வெறுமையை விரைவில் உணர ஆரம்பித்தது.

நீண்ட நாளைக்கு பின் தன்னை சூழ்ந்த தனிமை அவளுக்கு இரசிக்கவில்லை. எதையும் இரசிக்கும் இயல்பு கொண்டவள் அஞ்சலி. தனிமையை கூட தனக்கு சாதகமாய் மாற்றிக் கொள்வாள். ஆனால் இன்றோ அவன் இல்லாத தனிமை அவளை வாட்டியது எனலாம்.தன் அறைக்கு அயர்ச்சியுடன் சென்றவளை யுகேனின் கதவு திறந்த நிலையில் இருந்த அறை ஈர்த்தது.

எப்பவும் க்ளீன்னா இருக்கும் அவன் அறை இன்று கேல் செல்லும் அவசரத்தில் அலங்கோலமாய் இறைந்து இருந்தது.
சரி இதையாச்சும் ஒழுங்குப்படுத்தலாம் என்ற எண்ணத்தில் உள்ளே நுழைந்தாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN