நினைவு 1

Zeeraf

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 1மனிதர்களின் கூட்டம் அதிகமாக காணப்படும் அந்த பெரிய ஷாப்பிங் மாலில் அன்று ஏனோ இருவர்கள் மட்டுமே காணப்பட்டனர், அவர்கள் ஒரு ஆறடி இளம் வயது ஆண்மகனும், ஒரு ஐந்துக்கும் சற்று குறைவான அளவுள்ள இளம்வயது பெண்ணும்,..

அந்த பெண்ணின் முகத்தில் பயம், கோவம், கண்ணீர் என மூன்றுமே காணப்பட்டது, அவளின் கைகளும் கயிறினால் கட்டுபோடப்பட்டிருந்தது,.. அந்த ஆண்மகனோ அவளை கண்டுகொள்ளாமல் எங்கோ வெறித்து பார்த்தபடி நின்று கொண்டிருந்தான்..

கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருந்த அந்த பெண், தன் கண்ணீரை முகத்தை குனிந்து தன் தோளில் துடைத்து விட்டு அந்த ஆண்மகனை நோக்கி எரிச்சல் கோவம் கலந்த பார்வையுடன் "யார் நீ, உனக்கு என்ன வேண்டும், எதற்காக என்னை இப்படி கடத்தி வைத்து கொண்டிருக்கிறாய்" என அவனை நோக்கி ஆவேசமாக கத்த,..

அவனோ அவள் எகிறியதில் கோபமடைந்து அவள் தோள்களை பற்றி "சத்தமாக பேசுற வேலையெல்லாம் என்கிட்ட வச்சிகாத, இப்போ நீ என் பொறுப்புல இருக்க, இதற்கு மேல் ஏதாவது பேசுன, நான் என்ன செய்வேன் என்று உன்னால் கணிக்க கூட முடியாத அளவுக்கு செய்து விடுவேன்.." என்றான் மிரட்டலுடன்

அவன் மிரட்டியதில் சிறிதும் பயம் கொள்ளாத அவள்"என்னடா மிரட்டுரியா, நான் ஒன்னும் பயந்த சுபாவமுள்ள பொண்ணு கிடையாது, நீ மிரட்டுறதுகுலாம் பயந்து அமைதியாக இருக்கிறதுக்கு, என்ன பண்ணிடுவ நீ, கொன்னுடுவியா, எங்கே கொல்லு பார்ப்போம்.." என அவனின் கோவத்தை பொருட்படுத்தாமல் மீண்டும் அவள் எகிற

அவன்"வேண்டாம்,.. என் கோவத்த அதிகப்படுத்தாத, அப்றம் உன்னை கொல்றதை பற்றி நான் யோசிக்க மாட்டேன், அதை தவிர்த்து வேறொன்று செய்றதை பற்றி யோசிக்கிற வேண்டியதா வரும், நான் சொல்றது உனக்கு புரியும் என நினைக்கிறேன்", என அவன் அவளின் கண்களை பார்த்து கூற, அவள் அவனை தன்னிடமிருந்து தள்ளிவிட்டு மௌனமாக இருந்தாள்..

அவன் கூறுனதில் பயமுற்றவள் 'இவன் எதற்காக என்னை கடத்தி வைத்திருக்கான், நான் என்ன செய்தேன், இவனுக்கும் எனக்கும் என்ன சம்மந்தம், இதுக்கு முன்னாடி வரைக்கும் இவனை நான் பார்த்தது போல நியாபாகமே இல்லையே, அப்படினா.. ப்ச்.. அவன் கிட்டயே கேட்போமா' என மனதில் போராட்டம் நடத்தி கொண்டிருக்க, அவனோ அவள் மனதில் நினைத்தது தனக்கு விலங்கியது போல்..

"என்ன.. ரொம்ப யோசிக்கிற, எதற்காக உன்னை கடத்தி வைத்திருக்கேன் என்று யோசிக்கிரியா.." என்றதும்

அவள்"ஆமா... எதற்காக என்னை கடத்தி வைத்திருக்க, நீ யாரு, உனக்கும் என்ன என்ன சம்மந்தம்.." என்றால் கோவதோடு

"நான் சொல்ரதை நீ கேட்பேன் என்று வாக்கு கொடு, நான் சொல்லுகிறேன்,.."

"நீ சொல்றதை நான் எதற்காக கேட்கனும்.."

"நான் சொல்றதை நீ கேட்டு தான் ஆகணும், அத விட்டா உனக்கு வேற வழி இல்ல,"

"என்ன ஒளருற, முதல்ல யாரு நீ, உனக்கு உதவி செய்ய நான் மட்டும் தான் பொண்ணா பிறந்திருகேனா, உலகத்தில் எத்தனை பொண்ணுங்க இருக்காங்க, அவங்களை போய் கடத்த வேண்டியதானே.."

"வாய மூடு டி, ஏதாவது ஏட்டுக்கு போட்டியா பேசுன,.."

"என்னடா பண்ணுவ,.."

"டா வா, அடிங்க" என்று அவள் கழுத்தை நெறிக்க ஆரம்பித்தான், அதில் திமிறியவளை விடுவித்து, "பார்த்து பேசு இல்ல"என்று விரலை நீட்டி எச்சரிக்க அவள் கழுத்தை நெறித்தத்தில் இருமிக்கொண்டு இருந்தாள்,...

அவளின் நிலையை கண்டவன், அவளின் கை கட்டை அவிழ்த்து விட்டு, வாட்டர் பாட்டிலை எடுத்து அவளிடம் நீட்ட, அவளோ அதை அவன் கையிலிருந்து தட்டி விட்டாள்...

"எவ்ளோ கொழுப்படி உனக்கு, நான் ரொம்ப நேரம் நல்லவனா இருக்க மாட்டேன் என்கிறதை புரிந்து கொள்.."

'இவனிடம் நான் குரலை உயர்த்தி பேசுறதை விட அமைதியாக என்ன என்று கேட்டால், எதற்காக என்னை கடத்தி வைத்திருக்கிறான் என்கிற விவரத்தயாவது தெரிந்து கொள்ளலாம்' என யோசித்தவளாய் அவனை நோக்கி "உங்களுக்கு என்ன வேண்டும், ப்ளீஸ் என்னை விற்றுங்களே, பணம் நகை எதுவும் வேண்டுமா சொல்லுங்க, என் அண்ணாவிடம் சென்றதும் நான் உங்களுக்கு வாங்கி தறேன்.." என்றதும்

அவன் கோவத்தில் "நிறுத்துடி, உன் பணம் நகையை நீயே வைத்துக்கொள், உன்னை விட அதிகமாமவே என் கிட்ட பணம் காசு இருக்கு.." என்றான்

"அப்படினா எதற்காக என்னை கடத்தி வைத்திருக்கீங்க.." என கேட்டதும் அவனோ சிறிது மௌனத்திற்கு பின் அதற்கான காரணத்தை கூற அதனை கேட்டவள் ஆடிப்போனாள்......

_________________வணக்கம் நண்பர்களே,...இது என்னுடைய ஒரு தொடர்கதை, படித்து விட்டு நிறை குறைகளை சொல்லுங்கள், அது எனக்கு உதவியாக இருக்கும்
 

Author: Zeeraf
Article Title: நினைவு 1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN