❤️உயிர் 14❤️

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கண்களை உறுத்தாத உதா மற்றும் க்ரீம் வண்ணத்தில் அவன் அறை அமைந்திருந்தது.அது அஞ்சலியின் விருப்ப வர்ணங்கள் கூட.மனதிற்குள் குதூகலித்தவள்,அறையின் கோடியில் ஜன்னலோரம் இருந்த வெள்ளை நிற பியானோவைக் கண்டாள்.வெளிக் காற்றுக்கு ஜன்னலைத் திறந்தாள்.

மலை வாசத்துடன் மெல்லிய ஈரக்காற்று அவள் நாசி தடவி சென்றது.ஜன்னலோரம் அழகாய் விரிந்திருந்த தானாராத்தா மலைக்காட்சி மனதை கொள்ளை செய்தது.ஆசையாய் அந்த பியானோவைத் தடவிப் பார்த்தாள்.

அவள் வெண்டை விரல் பட்டு அந்தக் கருவி நாதம் எழுப்பியது.இவனுக்குள் இவ்வளவு திறமையா?அஞ்சலி வியந்துதான் போனாள்.அவளை மேலும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியது,சின்ன சின்ன கண்ணாடிப்பேழைகளில் இருந்த பொருட்கள்.அஞ்சலி பொறுக்கி கொடுத்திருந்த கடல் சிற்பிகள், கிளிஞ்சல்கள் சின்ன கண்ணாடி பெட்டிக்குள் வைத்திருந்தான்.

அதன் மூடி மேல் அஞ்சலி மச்சி என்ற பெயரும் திகதியும் எழுதி வைத்திருந்தான்.
அதைப் பற்றி அஞ்சலிக்கு நினைவு கூட இல்லை.உடன் கையடக்க காமிராவும் இவளைப் பார்த்து சிரித்தது.அதன் பக்கத்தில் சட்டமிடாத கான்வாஸ் சுருள்களும் கிடைத்தன.அதில் ஒன்றை உருவிப் பார்த்தாள்.

அதில் மழைச்சாரலில் கண் மூடிய நிலையில் வெள்ளைச்சாரியில் ஒயிலாய் நின்றிருந்தது அஞ்சலியேதான்.அவள் கண்களை அவளாளே நம்ப முடியவில்லை.அவ்வளவு தத்ரூபமாய் அவளை வரைந்திருந்தான்.

படத்தின் கீழே காதலுடன் யுகேந்திரன் ராஜ் என்று அவன் முழுப்பெயரும் தமிழில் எழுதியிருந்தான்.மெல்ல தன் விரல்களை அந்த படத்தின் மேல் பரவ விட்டாள்.அன்று மழையில் அவன் அண்மையில் சுகித்திருந்தது நினைவில் எழுந்தது.அவன் காதலும் அவளுக்குப் புரிந்தது.

அன்று காதல் மேலிட அணைத்ததை காமத்தின் வெளிப்பாடு என்று தவறாய் நினைத்து தன்னையும் வறுத்தி அவனையும் வறுத்தியது நெஞ்சை வண்டைப் போல் குடைந்தது.
நேசத்தின் வெளிப்பாடுக்கு தான் பூசிய வண்ணம் காமம் மா? நினைக்கையில் நெஞ்சை ஏதோ பிசைவது போல இருந்தது.

தன் கல்யாணத்தின் நோக்கத்தையும் அவள் சிந்திக்கத் தொடங்கினாள்.திருமணம் என்ற பந்தத்தில் அவர்களிடையே தொடர்வது வெறும் நட்பாக மட்டுமே இருக்க முடியும்.
இனியும் ஒரு காதல் தன் மனதில் பூக்குமா?

ஷிவேந்திரனின் இறப்பு அதற்குள் மறந்து விட்டதா?அன்றி அவன் மேல் வந்தது வெறும் ஈர்ப்பாய் இருக்குமா?மனம் தாறுமாறாய் யோசிக்க ஆரம்பித்தது.
இல்லை அவன் அவள் மேல் உயிரையும் வைத்திருந்த உயிர் இல்லையா?பூப்போல் தன்னை தாங்கியவன் ,தன் நலன் மட்டுமே காணும் நல்லவன்.மனம் ஏனோ வாடலாயிற்று.

யுகேந்திரனுக்குத்தான் தன் மேல் வந்தது வெறும் ஈர்ப்பு மட்டுமே என அவளே உறுதி செய்து விட்டாள்.அதற்கு மேல் அங்கு இருக்க பிடிக்காமல் தன் அறைக்குள் சென்று விட்டாள்.
கே.ல் சென்றவனுக்கோ அஞ்சலியின் நினைவே பெரும் பாரமாய் உணர,பெரிதும் ஏங்கிப்போனான்.மணிக்கு ஒரு தரம் அவளுக்கு கால் செய்து கொண்டே இருந்தான்.
அஞ்சலிக்கு அவன் இல்லாதது வருத்தம் என்றாலும்,அவனுடன் போனில் பேசுகையில் இயல்பாய்பேசுவாள்.

தன்னால் அவன் வேலை கெடக்கூடாது என்பதில் மிகவும் கவனமாய் இருந்தாள்.இப்படியாக நான்கு நாட்களை எப்படியோ அஞ்சலி ஓட்டி விட்டாள்.அன்று எனோ மனம் யுகேனின் நினைவுகளில் பெரிதும் வெதும்பலாயிற்று.அவன் இருந்திருந்தால், இந்நேரம் இப்படி புலம்பிக் கொண்டிருப்பாளா? எதாவது பேசி பேசி அவளை வம்பு பண்ணிக் கொண்டிருப்பான்.

அஞ்சலிக்கு பிடித்த மாதிரி டீ கலந்து தருவான். மலையோரம் வளரும் அபூர்வ வகை மூலிகைகளை கண்டு பிடித்து சொல்லுவான். மௌனமாய் காதில் mp3 பிளேயர்ரில் அருவிக் கரையோரம் மெல்லிசை காதில் கசிய இயற்கையை இரசிக்க வைத்திருப்பான்.

இன்று எதுவும் இல்லாதது போல வெறுமையாய் இருந்தது அஞ்சலிக்கு.கொஞ்ச நேரம் அவன் அறையில் இருந்தால் தேவலாம் என்பது போல் தோன்றவே,கால்கள் தன்னிச்சையாகவே அவன் அறையை நோக்கி நடக்கலாயிற்று.இலகுவான உடையில் கொஞ்சம் நீண்டு வளர்ந்திருந்த முடியில் ,கண்களில் குறும்பு மின்ன அவளைப் பார்ப்பது போன்ற பாவனையில் சிரித்தபடி இருந்த அவன் புகைப்படம் கண்ணில் பட்டது.

காந்தம் போன்ற அந்த பெரிய கண்களைப் பார்த்தபடி சிறிது நேரம் நின்றிருந்தாள்.இன்று அவன் அழைப்பில் அவள் செல் போன் சிணுங்கவும் இல்லை,தானாக அவனை அழைக்கவும் மனம் தடுமாற்றமாயிற்று.இருள் கவ்வும் நேரம் தொடங்கியது.இடியுடன் கூடிய மழையும் பொழிய ஆரம்பித்தது.அருகில் அவனுடைய விரல் அசைவில் கீதம் எழுப்ப காத்திருக்கும் பியானோ.

பல அளவு வரிசைகளில் மெழுகுவர்த்திகள் பியானோவோடு இணைந்த மேசை மீது அடுக்கி வைத்திருந்தான்.மழைக்கு தனியே ஆடவும் மனமில்லாது,மின் விளக்கை எல்லாம் அணைத்து விட்டு மெழுகுவர்த்திகளை ஒன்றன் பின் ஒன்றாக ஏற்ற ஆரம்பித்தாள்.மெல்ல பரவிய மஞ்சள் ஒளி அந்த அறை முழுவதும் வியாபித்தது.பியானோவை மெல்ல விரல்களால் ஒன்றினாள்.
கலவையான நாதம் எழுந்தது.யுகேனிடம் இதை வாசிக்க கற்றுக் கொள்ள வேண்டும் என்ற எண்ணமும் அஞ்சலி மனதில் எழுந்தது.

சற்றே அந்த நூதன சூழ்நிலையில் அஞ்சலி ஐக்கியமானாள்.கண் மூடி மழையின் சத்தத்தை ரசிக்கவும் செய்தாள்.அப்பொழுது இரு வலிய கரங்கள் அவள் கரங்களின் மேல் படர்வதை உணர்ந்தாள்.ஆண்மை கலந்த அந்த செண்டின் வாசனை உணர்த்தியது யுகேனின் வருகையை.
எதும் பேசாமல் அவள் கைகளின் மேல் தன் கைகளை வைத்து 'முன்பே வா ' பாடலை வாசித்தான்.


அவன் கைகளோடு இணைந்த அவள் விரல்களும் இசை மீட்டி சிலிர்த்தன.சற்றே தலைத் திருப்பி அருகில் நின்றிருந்த கணவனை ஏறிட்டாள்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN