பாகம் 2 யார் உன்னை கொன்றது

Vijay Navin

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரியா, அவளது காதலை விஜயிடம் சொல்லி இன்றுதான் முதல் நாள் என்பதால் விஜய் வரும்வரை, அவர்கள் பள்ளிக்கு எப்போதும் செல்லும் அந்த ஒத்தையடி பாதையில் அவனுக்காக காத்திருந்தாள்
ஐந்து நிமிடத்தில் அவனும் வந்துவிட, இருவரும் சேர்ந்தே அந்த ஒத்தையடி பதையின் வழியாக சென்றனர்.
பிரியாவிற்கு என்னவோ! அவள் காதலித்து ஒரு நாள் தான் ஆகிறது, ஆனால் விஜய்க்கு அவ்வாறு இல்லை........... அவளை அவன் காதலித்து இன்றோடு பதினாறு வருடம் ஆகிறது.......!
எதையும் பேசாமல் இருவரின் கைகள் உரசிய படி நடந்தவர்களுக்கு இடையேயான தூரம் குறைந்து கொண்டே சென்றதால் ஒருவரை ஒருவர் இடித்துக்கொண்டனர்,
தங்களுக்கு இடையேயான மோதலால் இருவரும், ஒருவர் முகத்தை ஒருவர் கண்டபடி சிறு புன்னகை உதிர்க்க........!
அதே கணத்தில் பின்னால் வந்த கார் அவர்களின் மேல் ஏறிநின்றது.....!
அடியின் வீரியம் அதிகம் என்பதால் பிரியா அந்த இடத்துலேயே இறந்து போனாள்.....!
விஜய்க்கும் மோதலின் வீரியம் சற்று அதிகம் தான், ஆனால் பிரியாவின் அளவிற்கு இல்லை
அவன் அசைக்கமுடியாமல் இருந்த தன் கைகளை அசைத்து தனது பாக்கேட்டில் பார்க்க, அதில் இருந்த கடிகாரத்தை கண்டான் 8:25 என காண்பித்தது.
அதை பயன்படுத்தி 45 நிமிடம் பின்னோக்கி வந்தான்.
............................
பின்னோக்கி வந்தவன், அவனது வீட்டில் குளித்துக் கொண்டிருக்க.....
அவனது மனதில் ஒரே குழப்பம்,
அவளை கொலை செய்வதாய் இருந்த அவளது தந்தையை நான் கொன்று விட்டேனே!
இப்போது யார்? என யோசித்தவனுக்கு ஒருவேளை அவளது தந்தை இறக்கவில்லையோ!!! என நினைத்தவனின் முகத்தில் சவரிலிருந்து நீரானது பீய்த்து அடிக்க, சற்றும் அசையவில்லை அவன்.....!
பிரியாவின் தந்தை அவனால் கொல்லப்பட்ட நிகழ்வை முழுவதுமாக மனதில் ஓடவிட்டான்.
அவர் கத்தியால் குத்து பட்டு இறக்கும் வரை விஜய் அங்குதான் இருந்தான் என்பதை உறுதி படுத்திய பிறகு தான்,
சாதரண பெருமூச்சு விட்டு ஏன்? இது எதர்ச்சையாக நடந்திருக்க கூடாது என தனக்கு தானே கணித்துகொண்டு
சீக்கிரம் பள்ளிக்கு புறப்பட்டு, பிரியா அந்த ஓத்தயடி பாதைக்கு வருவதற்குள் விஜய், அதற்கு முன்னமாகவே சென்று அவளுக்காக காத்திருந்தான்
அவளும் வந்துவிட, சரியாக 8:25 ஆகும் வரை சாலையின் ஓரத்தில் அவளின் கையை பிடித்தப்படி நின்றான்.
பிரியாவிற்கு அவன் தன் கையை அவ்விதம் பிடித்திருப்பது, ஏதோவிதமாக பிடித்திருக்க வேண்டும், அதனால்தான் எதுவுமே சொல்லாமல் நின்றாள்
அந்த நேரத்தை கடந்தபின் சற்று அமைதியாகி அவளை பார்த்து சிரித்தப்படி அந்த ஒத்தையடி பாதையின் வழியே அவளை கூட்டி வந்தான், பிரியாவிற்கு விஜயின் செய்கை சற்று வித்தியாசமாகவே பட்டது.
அவர்கள் நடந்து சென்றுக்கொண்டிருக்க,
இதற்கு முன்பு நடந்த மோதலில் காரானது அவர்களின் பின்னாலிருந்து மோதியது ஆனால் இந்த முறை அவர்களின் முன்னாலிருந்து வேகமாக மோதியது
பிரியாவின் உடலில் காரனது ஏறி இறங்க, விஜய் அதே நேரத்தில் தனது வாட்சை அழுத்தினான்.
சரியாக இருவது நிமிடம் பின்னால் வந்தான்.
அந்த பாதையின் ஓரத்தில் பிரியாவின் கையை பிடித்திருந்த விஜய், அவளின் கையை பிடித்து சாலையின் வழியாக செல்லாமல் அருகிலிருந்த தோட்டத்திற்குள் அழைத்து சென்றான்
ஏன் டா? இங்க கூட்டிட்டு போற என்றாள் பிரியா
அதே கணத்தில் அந்த சாலையின் முடிவு வரை தன் தலையை திருப்பியவன்
அந்த காரானது அதன் ஓரத்தில் நின்றிருந்ததை கவனித்தான்.
உடனே பதற்றத்தில் அவளை சற்று, இன்னும் தொலைவில் அந்த தோட்டத்திற்குள் அழைத்து சென்றவன்
இன்னைக்கு தான் நாம, லவ் பண்ணி முதல் நாள், So நீ என் கூட மட்டும் தனியா நடந்து வரனும்னு நினைக்குறேன் டி என்றான்
அதுவரை அவன் அருகில் புரியாமல் நடந்தவள், இந்த பதிலை கேட்டதும் காதல் பார்வையில் எப்பவும் என்னை விட்டு போக மாட்டல, என்றாள்,
விஜய் தனது இரு கைகளால் அவளது கன்னதை பிடித்து உன்னைவிட்டு எப்படி நான் போவேன் என்றான்.
சரி கன்னத்தை விடு Schoolக்கு Time ஆயிற்று என வேகமாக நடக்க....... விஜயும் பின்னாலே நடந்தான்.
இருவரும் பள்ளியை இன்னும் சிறிது நேரத்தில் அடைந்திடுவோம்
என்ற கணத்தில்........
பிரியா, விஜயிடம் டேய் Today நடக்குற Chemistry test ku எனக்கு காட்டுவியா? ஒன்னுமே புரியவில்லை என்றாள்
சரி டி, என மெதுவாக அவளைக் கண்டு புன்னகைத்த விஜய், அவளிடம்
உன் அம்மா, Chemistry teacher தான.....!
அவங்க கிட்ட நீ கேட்கலாமே, என்ற விஜய்யை பார்த்து ஒரு சோகமான புன்னகை உதிர்த்தாள் பிரியா
அதற்குமேல் அவன் அவளிடம் ஏதும் பேசவில்லை
இருவரும் ஒரே வகுப்பில் அவரவர் இருப்பிடத்தில் அமர்ந்து கொள்ள, கொஞ்ச நேரத்தில் வேதியியல் ஆசிரியரும் அந்த வகுப்பிற்கு வந்தார்
சிறிது நேரத்தில் தேர்வானது ஆரம்பிக்க, பிரியா தன்னை பார்த்து எழுதுவதற்கு ஏதுவாக.......!
பிரியா அமர்ந்த பெஞ்சின் அருகிலே அவன் தரையில் அமர்ந்திருந்தான்.
தேர்வானது ஆரம்பித்து இருபது நிமிடங்கள் கழிந்து சரியாக 9:25 ஆகியது
அதுவரை ஆசிரியர் கவனிக்காத நேரத்தில் விஜயை பார்த்து எழுதிய பிரியா! தனது கையிலிருந்த பேனாவால் அவளது கண்களை அவளே கொடுரமாக குத்தினாள்
மொத்த வகுப்புமே பதற்றத்தில் பயத்தில் அவளை பார்த்து அலரிட, விஜய் மட்டும்
இன்னொரு கண்ணை குத்திக்கொள்ள முயலும் பிரியாவின் கைகளை பற்றினான்
அவளின் ஒரு கண் அந்த பேனாவோடு வந்திட, இன்னொரு கண் வலி தாங்கிடாமல் அழுதது
கைகளை பற்றியவாரே அவளது முகத்தை கண்ட விஜய்க்கு, பிரியாவின் முகத்தில் தனக்கு என்ன நடக்கிறதென்ற குழப்பமும்
அதே நேரத்தில் அவளுக்கு பயமும் வலியும் ஒருசேர கலந்து இருந்தது, தெள்ள தெளிவாக தெரிந்தது.
பிரியாவின் ஒரு கையை பற்றிய விஜயின் இரு கைகளை, இன்னொரு கையால் தளர்த்தி
அந்த பேனாவால் தன் கழுத்தில் தன்னை தானே குத்திக்கொண்டு அவள் இறந்தாள்.
பயத்தில் மொத்த வகுப்புமே பதறி நின்றிட, தன் கண்களையே அவன் நம்பிடாமல் பதற்றத்தில் முழித்தான்.
திரும்பவும் 40 நிமிடம் பின்னால் வந்தான், அங்கே இதற்குமுன் நடந்ததை போன்றே!!!!!பிரியா, விஜயின் கைகளை அவள் கைகளால் பற்றி என்னை நீ விட்டு போகமாட்டல என்றாள்?
அவள் இத்தனை கொடுரமாக இறந்ததை கண்ட அவன் தன் கைகளால் அவளை, ஒரு கணம் இறுக்கி கட்டி அழுதான்.
புரியாமல் அவனை பார்த்த அவள், ஏன் டா அழுவுர என்றாள்.
உன்னை எப்புவும் சாக விட மாட்டேன் டி, என அவனே அவளது கைகளை பிடித்து அவர்களது வகுப்பிற்கு கூட்டி வந்தான்.
தேர்வானது ஆரம்பித்து 20 நிமிடங்கள் கழித்து சரியாக 9:25 ஆனது
ஆனால் இந்த முறை விஜய் அவளது அருகில் அமரவில்லை, அவளுக்கு நேர் எதிரில் இருந்த பெஞ்சில் அவளைக் கண்டப்படி அமர்ந்திருந்தான்
பிரியா, விஜயை திட்டியப்படி அவனை முறைத்துக்கொண்டும் புலம்பிக்கொண்டும் இருந்தாள்.
ஆனால் விஜய், அவளை ஒரு புறம் கவனித்தும் சன்னலின் ஓரத்தில் எவரேனும் நிற்கிறார்களா? எதேனும் சந்தேகம் படும் படி நடக்கிறதா?
எதனால் இவள் தன்னை தானே குத்தி கொள்கிறாள் என அவளை சுற்றி நடப்பதையே அசையாமல் விஜய் பார்த்திருந்தான்.
அவள் தனது பேனாவால் தன்னை தானே குத்திக்கொள்ள, மொத்த வகுப்புமே பதற்றமாய் அவளைக்காண........ அவன் மட்டும் வகுப்பின் வாசலின் வழியாக வெளியே வந்து எவரேனும் நிற்கிறார்களா? என கவனித்தான்.
எவரும் இல்லை....... மீண்டும் குழப்பத்தில் வகுப்பிற்குள் வந்தவனுக்கு ஏற்கனவே தெரிந்திருக்கும்
பிரியா இறந்திருப்பாள் என்பது...............!
மீண்டும் 40 நிமிடம் பின்னோக்கி சென்றவன், தன்னிடம் பிரியா ஏதோ சொல்ல வருவதற்குள் அவளது துப்பட்டாவை வேகமாக இழுத்து அவளது கையை அழுத்தி கட்டினான்.
பிரியா, என்ன நடக்கிறது என்பதை அவள் யூகிப்பதற்குள் அவளது வாயை தனது கைகளால் அடைத்து பின்பக்கமாக கட்டப்பட்ட அவளது கைகளை விஜய் தனது இன்னொரு கையால் அழுத்தி............ இப்போது இவர்கள் இருக்கும் தோட்டத்தின் பக்கத்து தோட்டத்தில் இருக்கும் மோட்டர் ரூமில் அவளை தள்ளி, அவனும் உள்ளே வந்தான்
பிரியா, ஒருவித பயத்தில் கத்த முயல அங்கிருந்த தென்னகீற்றினை மடித்து அவளது வாயினுள் இட்டு அவளது வாயை கட்டினான்.
பிரியா பயத்தில் திமிர, பளார் பளார் என இரண்டு அடி தன் முழு பலத்தால் அடித்தான்
அடியின் வீரியம் தாங்காமல் மயங்கினாள்.
நேரமானது 9:25யை கடக்க, அவளுக்கு எதுவுமே நிகழவில்லை.........
பிரியாவிற்கு சிறிதாக சுயநினைவு வந்தது,
இந்தமுறை பிரியா விஜயைக் கண்டு திமிரவில்லை,அடியின் வீரியத்தில் தெம்பில்லாமல் படுத்திருந்தாள்
ஆதீத சத்தமாக சிரித்தவன், அப்போ நம்ம School la யாரோ தான் உன்னை கொல்ல பார்க்குறாங்க.........
எதுக்காக இருக்கும் என சிறிது யோசித்தவன்......
நீ கவலைப்படாத உன்னை எப்பவும் சாகவிட மாட்டேன் சரியா டி என மீண்டும் சிரித்தான்,
ஏதோ பயத்தில் பிரியா அவனைக் கண்டாள்.
மீண்டும் 40 நிமிடம் பின்னால் வந்தவனின் கையை பிரியா பற்றி என்னை விட்டு எப்பவும் போக மாட்டல என்றாள்.
ஆனால் இந்தமுறை விஜய் அவளுக்கு பதிலேதும் சொல்லாமல் அவளது கையை பிடித்து வகுப்பிற்கு கூட்டி வந்தான்.
பிரியாவும் எதுவும் புரியாமல் அவன் இழுத்த இழுப்பிற்கே அவன் பின்னால் வந்தாள்.
விஜய் அவளை வகுப்பிற்கு கூட்டி வந்ததும், அவளது கருவிழியை இவனது விழிகளால் கண்டு பிரியா என்னை எப்பவும் நம்புவியா? என்றான்
அவளும் எதுவுமே புரியாமல் ம்ம்ம்ம்ம்ம் என்றாள்.
அதற்குமேல் எதுவுமே அவளிடம் அவன் சொல்லாமல், அவனது இருப்பிடத்தில் அவன் அமர்ந்தான்.
வேதியியல் ஆசிரியர் வகுப்பிற்குள் நுழைந்தார்,
தேர்வானது ஆரம்பிக்கப்பட்டது.
இந்த முறையும் அவளின் எதிர்புறத்திலேயே அவன் அமர்ந்திருந்தான். அவளின் உடலில் ஏற்ப்படும் மாற்றத்தை ஒன்றுவிடாமல் கவனிப்பதற்காக!
பிரியா, அந்த தேர்வில் தனக்கேதும் தெரியாததை போல் அமர்ந்திருக்க,
அந்த அறையில் மொத்தம் 16 பெஞ் போடப்பட்டிருந்தது.
வலது புறம் 8, இடது புறம் 8
ஒரு பெஞ்சின் இருபுறமும் இருவர் அமர்ந்திருந்தனர்.
ஒரு பெஞ் வாசலை நோக்கி போடப்பட்டிருந்தால் இன்னொன்று அதன் எதிர் புறத்தில் தேர்வு எழுதுபவர்கள் ஒருவரை ஒருவர் பார்க்கும் படி அமைக்கப்பட்டிருந்தது.
பிரியா அமர்ந்திருந்த பெஞ்சின் எதிர்முனையில் விஜய் அவளை கவனித்தப்படி அமர்ந்திருந்தான்
நேரமானது 9:25 ஆகியது, தேர்வில் எதுவுமே தெரியாமல் அதுவரை விழித்திருந்த பிரியா! தீடீரென தன் கண்களையும், இரு கை விரல்களையும் மூடி திறந்தாள்.
அதுவரை பேனாவை சாதரணமாக பிடித்திருந்தவள், அதிலிருந்து ஒரு கத்தியை பிடிப்பதை போன்று அழுத்தி பிடித்து தன்னை தானே குத்திக்கொள்ள முயல, விஜய் குறுக்கிட்டு அவளது கையை பிடித்தான்.
வகுப்பில் இருப்பவர்களுக்கு தேர்வு எழுதிக்கொண்டிருந்த பிரியாவின் கைகளை விஜய் அழுத்திப்பிடித்திருக்கிறான் என்பதை போன்றபிம்பமே தோன்றிருக்கும்.
அவளது ஒரு கையை தனது இருக்கைகளால் பற்றியிருந்த விஜயை, பிரியா தன் இன்னொரு கையால் தள்ளிவிட்டு தன்னைத்தானே குத்திக்கொள்ள முயல...........

டிக் டிக் டிக் டிக் தொடரும்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN