என்னை தீண்டிவிட்டாய் 12

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் மௌனம்
உன் கண்ணீர்
உன் வலி
என் உயிர் வதைக்கும்
ஆயுதங்களடி...

ஆதிராவை தேடிக்கொண்டு வீதிக்கு வந்த ஷாகர் அவள் எங்காவது கண்ணில் தென்படுகிறாளா என்று பார்த்தபடி வந்தவன் சற்று தொலைவில் அவள் நடந்து செல்வது தெரிய அவளை அழைத்தபடி பின்னே சென்றான் ஷாகர்... அவளோ நடப்பதெதையும் கருத்தில் பதிக்காது கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்தபடி நடந்தவள் சட்டென்று வீதியை கடக்க முயன்றவேளையில் வேகமாய் வந்துகொண்டிருந்த வேனில் அடிப்பட்டு கீழே விழுந்தாள்...

வேன் வேகமாக வந்தபோதிலும் ஓட்டுனரின் திறனால் சரியாக யூகித்து பிரேக் பிடித்துவிட்டார்... ஆனாலும் அது ஆதிராவை சற்றாக மோதிவிட அடிப்பட்டு தலையிலும் கையிலும் காயங்களுடன் கீழே விழுந்தாள்...... இதை தூரத்தில் பார்த்திருந்த ஷாகருக்கு சர்வநாடியும் நடுங்கியது.... பதட்டத்தில் ஷாகரும் கண் மண் தெரியாமல் ஓட கல் கடுக்கி பக்கத்திலிருந்த கற்குவியலின் மேல் விழுந்தவனுக்கு கற்கள் தாறுமாறாய் கீறிவிட்டது... ஒருவாறு தன்னை சமாளித்துக்கொண்டு எழுந்து கூடியிருந்த கூட்டத்தை விலக்கிக்கொண்டு ஆதிராவருகே சென்று அவளை எடுத்து தன் மடிமீது போட்டுக்கொண்டு அவளை எழுப்ப முயற்சி செய்தான்...

கூட்டத்தில் நின்ற எவரோ ஒருவர் ஆம்புலன்ஸிற்கு கால் செய்ய சற்று நேரத்தில் ஆம்புலன்சும் அங்கு வந்து ஆஜராகியது... ஆதிராவை ஆம்புலன்ஸில் ஏற்ற ஷாகரும் அவளோடு அந்த ஆம்புலன்ஸில் ஏறிக்கொண்டான்..

ஆஸ்பிடல் செல்லும் வழி நெடுக அவளுக்கு ஆம்புலன்ஸில் இருந்த மருத்துவர் முதலுதவி செய்தபடியிருக்க ஷாகரோ ஆதிரா...ஆதிரா... என்று புலம்பியபடி வந்துகொண்டிருந்தான்.. ஆஸ்பிடல் வந்ததும் ஆதிராவினை ஆஸ்பிடலுக்குள்ள அழைத்து செல்ல ஷாகரோ ஆம்புலன்ஸில் மயங்கிக்கிடந்தான்..
கற்குவியலில் விழுந்தபோது அவனது கை நாடி கிழிப்பட்டு விட அதிலிருந்து அதிகமாக இரத்தம் வெளியேறியதன் காரணமாக மூர்ச்சையாகியிருந்தான் ஷாகர்...
இருவரும் அந்த ஆஸ்பிடலில் அட்மிட் செய்யப்பட்டனர்...

மூன்று மணித்தியாலங்களின் பின் மெதுவாக கண்விழித்த ஷாகர் சுற்றும் முற்றும் பார்க்க அந்த இடத்தின் வடிவமைப்பே அது ஆஸ்பிடல் என்று அவனுக்கு உணர்த்தியது... மெதுவாக எழுந்து அமர முயன்றவனை ஒரு குரல் தடுத்தது..

“சார் ஸ்டெயின் பண்ணிக்காதீங்க.. நான் டாக்டரை கூப்பிட்டு வரேன்..” என்று ஒரு நர்ஸ் கதவை திறந்துக கொண்டு வெளியே ஓடினார்..
ஷாகரும் எழாது தான் இருந்த நிலையிலேயே இருந்தவனுக்கு அப்போது தான் ஆதிராவின் நினைவு வந்தது.. கடைசியாக அவர் இருந்த நிலையும் நினைவில் வர அவனுக்கு இருப்பு கொள்ளவில்லை..மனமோ அவளுக்கு என்னமோ ஏதோ என்று பதறியபடி இருக்க உள்ளே வந்தார் டாக்டர்...

ஷாகரை பரிசோதித்தவர்

“எவ்ரி திங் பைன்.... ட்ரிப்ஸ் முடிந்ததும் நீங்க டிஸ்சார்ஜ் ஆகலாம்...” என்று கூற அவருக்கு நன்றி கூறியவன்

“டாக்டர்... என்கூட வந்த பொண்ணு...”

“அவங்களுக்கு ட்ரீட்மண்ட் நடந்துட்டு இருக்கு.. அவங்க உங்களோட...”

“என்னோட மிசஸ் ஆதிரா ஷாகர்... அவளுக்கு இப்போ எப்படி இருக்கு டாக்டர்..”

“அவங்களுக்கு தலையில அடிபட்டிருக்கு... கை ப்ராக்ஷர் ஆகியிருக்கு.... கால் எலும்பு முறிஞ்சிருக்கு.... ஒரு சின்ன சர்ஜரி பண்ணியிருக்கோம்... சோ ஒரு வன் மன்த்துக்கு அவங்களுக்கு கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் தேவை...

மத்தபடி சின்ன சின்ன காயங்கள் தான் ... வேற எந்த ப்ராப்ளமும் இல்லை... இன்னும் டூ டேஸ்ல அவங்களை நீங்க வீட்டுக்கு அழைச்சிட்டு போகலாம்...” என்று டாக்டர் கூற ஷாகரும் அவருக்கு நன்றி கூறியவன் ஆதிரா இருக்கும் அறையை கேட்டு தெரிந்துகொண்டான்....

ட்ரிப்ஸ் முடிந்ததும் அறையிலிருந்து வெளியேறிவன் ஆதிராவின் அறைக்கு சென்றான்...
அவள் தலை,கை மற்றும் காலில் கட்டுடன் கண்மூடி படுத்திருந்தாள்.... அறைக்கதவை திறந்து கொண்டு ஷாகர் உள்ளே செல்ல உள்ளே அவளுக்கு துணையாயிருந்த நர்ஸ் அவனை யாரென்று கேட்க தன்னை பற்றி ஷாகர் சொல்ல அவரும் ஆதிராவிற்கு பார்த்துக்கொள்ளுமாறு கூறியவர் எதுவும் தேவையென்றால் தன்னை அழைக்குமாறு கூறியவர் அறையிலிருந்து வெளியேற முயல

“எக்ஸ்கியூஸ்மி சிஸ்டர்... ஒரு சின்ன ஹெல்ப்...”

“சொல்லுங்க சார்..”

“உங்க போனை கொஞ்சம் தருவீங்களே...”

“இந்தாங்க சார்..” என்று ஷாகரிடன் தன் மொபைலை நீட்ட அதை வாங்கியவன் தன் நண்பனுக்கு அழைத்து விபரத்தை கூறியவன் அடுத்து ஆதவிக்கிற்கு அழைத்தான்..

“ஆத்வி..”

“சொல்லுங்க அத்தான்...”

“ஆத்வி எனக்கு ஒரு சின்ன ஹெல்ப்..”

“சொல்லுங்க அத்தான்..”

“என்னோட டெபிட் கார்ட் என்னோட ரூம்ல இருக்கு... அதை அம்மாகிட்ட கேட்டு கேடிஎப் ஹாஸ்பிடலுக்கு எடுத்துட்டு வர்றியா???”

“அத்தான்.. யாருக்கு என்னாச்சு... எதுக்கு ஹாஸ்பிடலுக்கு வர சொல்லுறீங்க..??”

“ப்ளீஸ்டா எதுவும் கேட்காத...அம்மா கேட்டா ஏதாவது சொல்லி சமாளி... ஹாஸ்பிடலுக்கு போறேன்னு மட்டும் சொல்லிடாத... அம்மா ரொம்ப பயந்திடுவாங்க...”

“சரி அத்தான்.. இன்னும் ஹாப் அன்ட் ஹவர்ல அங்க இருப்பேன்..” என்று ஆத்விக் அழைப்பை துண்டிக்க ஷாகரும் மொபைலை நன்றி கூற நர்ஸிடம் ஒப்படைத்தவன் ஆதிராவின் அருகே சென்று அமர்ந்துகொண்டான்....

இன்று காலையிலிருந்து நடந்தவற்றை நினைத்து பார்த்தவனுக்கு மலைப்பாய் இருந்தது.... எவ்வளவு அழகாய் தொடங்கிய நாள் ஏதேதோ நடந்து இப்போது இருவரும் அடிபட்டு இவ்வாறு ஆஸ்பிடலில் இருக்கின்றோம்.... எதற்காக இருவரின் வாழ்வையும் விதி இப்படி பந்தாடுகிறது??? மனதில் காதலை அடுக்கடுக்காய் அடுக்கியிருந்தபோதிலும் எதற்காக மறைக்க முயல்கின்றாள்??? அதுவும் இன்று அவள் நடந்து கொண்ட விதம் அதிகபட்சமே..... நான் கோபத்தில் ஏதோ சொன்னதுக்காக இத்தனை நாட்களாய் என் நினைவாய் அவள் சுமந்த தாலியை கூட தூக்கியெறிய முன்வந்துவிட்டாளே....... அதில் கூட எனக்காகவென்று யோசித்தவளுக்கு ஏன் அது காதல் என்று புரியவில்லை...?? என்னை பற்றி நன்றாக தெரிந்தும் கூட எதற்காக இப்படி யோசிக்கிறாளென்று புரியவில்லை..... பூவாய் தாங்கவேண்டுமென நான் எண்ணியிருக்க அவளோ இன்று என்னை கையோங்க வைத்துவிட்டாளே...

அப்பா வீட்டை விட்டு வெளியேறச்சொன்னபோது கூட எனக்கு எந்தவித கவலையும் இல்லை..... ஆனால் இவள் செய்ய துணிந்த காரியம் தான் என்னை வதைத்துவிட்டது..... இப்போது கூட இப்படி இவள் அடிபட்டிருப்பதை காண்கையில் எனக்கு தான் அதிகமாய் வலிக்கிறது.... எதற்காக என்னை தள்ளி வைக்க முனைகிறாள்??? இனியாவது என்னை புரிந்துகொள்வாளா?? இல்லை குற்றவுணர்ச்சி அது இதுவென்று தள்ளி நிறுத்துவாளா??

“இல்லை... இந்த முறை இவளை விடுவதாய் இல்லை... இவளை கரெக்ட் பண்ணுற விதத்துல கரெக்ட் பண்ணி ஷாகர் பார்ட் 2 ஐ ரிலீஸ் பண்ண ஏற்பாடு பண்ணிடவேண்டியது தான்..” என்று தன்னுள் எண்ணியவனுக்கு புன்னகை இதழ்களில் வந்து ஒட்டிக்கொண்டது....

அப்போது நர்ஸ் அங்கு வந்து ஆத்விக் அவனை தேடி வந்திருப்பதாக கூற ஆதிராவை பார்த்துக்கொள்ளுமாறு கூறியவன் ரிசப்ஷன் நோக்கி சென்றான்..
அங்கு நின்ற ஆத்விக்கோ ஷாகரை கண்டு

“அத்தான்... என்னாச்சு அத்தான்?? எதுக்கு கையில கட்டு போட்டுருக்கீங்க?? என்னாச்சு அத்தான்..”

“பெரிசா ஒன்னும் இல்லடா... கல் தடுக்கி கீழ விழுந்துட்டேன்.. அதான் அடிபட்டிருச்சு...நீ டெபிட் கார்ட்டை எடுத்துட்டு வந்தியா??” என்று கேட்க திருதிருவென முழித்த

ஆத்விக்
“அத்தான்... நான் என்னோட கார்ட்டை எடுத்துட்டு வந்தேன்.. இந்த நேரம் போனா நிச்சயம் அத்தை என்னவோ ஏதோனு பதறுவாங்க... நான் எதை சொன்னாலும் நம்ப மாட்டாங்க.. அதான் நான் என்னோடதை எடுத்துட்டு வந்தேன்.. நீங்க இதை யூஸ் பண்ணுங்க... நான் நாளைக்கு காலையில அத்தைகிட்ட கேட்டு வாங்கிட்டு வர்றேன்..”

“அதுவும் கரெக்ட் தான்டா..தாங்க்ஸ்டா ஆத்வி...”

“என்ன அத்தான்..தாங்க்ஸ்லா சொல்லுறீங்க..அத்தான் ஆதிரா அக்கா எங்க??” என்று ஆத்வி கேட்க ஷாகரோ அவனை அழைத்துக்கொண்டு ஆதிராவின் அறைக்கு சென்றான்..

ஆதிராவை பார்த்து பதறிய ஆத்வி

“அக்காவுக்கு என்னாச்சு அத்தான்... எப்படி அவங்களுக்கு இப்படி அடிபட்டுருக்கு??”

“சின்ன ஆக்சிடன்ட் ஆத்வி.. இப்போ மயக்கத்துல இருக்கா... டாக்டர் வன் மன்த் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட் வேணும்னு சொல்லியிருக்காரு... “

“அத்தான்.. நீங்க எப்படி தனியா மேனேஜ் பண்ணுவீங்க.. நான் இப்பவே அத்தைக்கு கால் பண்ணுறேன்..” என்றவனை தடுத்த ஷாகர்

“இல்லை ஆத்வி.... அம்மா ரொம்ப வருத்தப்படுவாங்க.. அதோடு இப்ப இருக்க நிலைமைக்கு இதை காரணம் காட்டி மறுபடியும் வீட்டுக்குள்ள போக எனக்கு இஷ்டமில்லை... உங்க அக்காவும் இதை விரும்பமாட்டா.. சோ நான் பார்த்துக்கிறேன்... நீ கவலை படாத...”

“அத்தான்.. புரிஞ்சிக்கோங்க.. உங்களால தனியா மேனேஜ் பண்ணமுடியாது.. நான் அத்தைக்கு சொல்றேன்..”

“ஆத்வி புரிஞ்சிக்கோ... இது எங்க லைப்பை சரிபண்ணிக்க எங்களுக்கு கிடைச்சிருக்க ஒரு வாய்ப்பு.. இதை தவறவிட நான் விரும்பலை..”

“அத்தான் கம்ப்ளீட் பெட் ரெஸ்ட்னா அவங்க பாத்ரூம் போக கூட அவங்களுக்கொரு துணைவேண்டும் அத்தான்..”

“டேய் நா அவளுக்கு தாலிகட்டுன புருஷன்டா.. நம்பு... நான் அவளை நல்லா பார்த்துக்குவேன்.. நீ ஏதாவது பண்ணனும்னு நினைச்சா ஒரு உதவியை மட்டும் பண்ணு... வீட்டுல இருந்தே வர்க் பண்ணுறமாதிரி ஏதாவது ஜாப் அரேன்ஜ் பண்ணி தா..”

“என்ன அத்தான்.. மாமா வீட்டை விட்டு தான் போக சொன்னாங்களே தவிர ஆபிஸ் பக்கம் வராதனு சொல்லலை...”

“ஹாஹா.. டேய் உங்க மாமாவை பத்தி உனக்கு தெரியாது... அவரு ஏதோ ஒரு பிளானோட தான் இப்படி சொல்லியிருக்காரு... சோ அதனால நீ எனக்கு ஜாப் மட்டும் அரேன்ஜ் பண்ணி தா... அதுவே பெரிய உதவி தான்..”

“ஏதோ சொல்லுறீங்க.. எனக்கு எதுவும் சரியாப்படலை... நான் ஜாப்புக்கு அரேன்ஜ் பண்ணுறேன்..... உங்களுக்கு வேற ஏதாவது வேணும்னா எனக்கு கால் பண்ணுங்க..ஓகேவா அத்தான்..??”

“சரிடா.. நீ நாளைக்கு மறக்காமல் என்னோட கார்ட்டை எடுத்துட்டா வந்திடு.. எப்படியும் இன்னும் இரண்டு நாள் கழிச்சி தான் ஆதிராவை டிஸ்சார்ஜ் பண்ணுவாங்க..”

“சரி அத்தான்..நான் கிளம்புறேன்....” என்ற ஆது கிளம்பி செல்ல மீண்டும் ஆதிராவின் அறைக்கு வந்த ஷாகர் அவளுக்கு துணையாய் அமர்ந்திருந்தான்..
அன்றைய நாள் தந்த அயர்ச்சியில் தன்னையறியாமலேயே ஷாகர் கண்ணசந்துவிட ஆதிராவும் கண்விழிக்கவில்லை....
இடையிடையே நர்ஸ் வந்து ஆதிராவை பரிசோதித்துவிட்டு செல்ல அதிகாலையில் கண்விழித்தாள் ஆதிரா..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN