ஒருவன் உருகும் ஓசை.. ஒருத்தி அறிய மட்டும்

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன்னை தேடுகிறேன் என் உயிரின் ஓசையிலே..
கண்ணே கலையாதே இரவின் கனவினிலே..
பளிங்கு அழகு முகத்தில், கலை பழிக்கும் நெற்றி சுழிப்பில்,
சரிந்து விழுகிறேன் கனியே..
உன் கார் கூந்தலில் என் இதயம் வசமாக,
மருளும் மான் விழியின் மயக்கம் எனைத் தாக்க..
மரணம் எய்துகிறேன் உன் வில் வளை புருவத்தினிலே..
மறுபடியும் ஜனனம்
காணுகிறேன்
உன் தாமரை இதழ்களிலே..

எனை மிரட்டும் கூர் நாசியில் ஒட்டிக் கொண்ட வைர மூக்குத்தி நான் ஆக.. வரமொன்று தருவாயா?
என் வன மோகினி நீயே..
வெண் சங்கினை கழுத்தில் கண்டேன்.. அதில் வியர்வை துளிகளாய் நானும் கரைந்தேன்..
சொக்கி போகுது சுந்தரன் மனசு..
உன் மூங்கில் தோள்களில் அலையுது வயசு..
காதில் சிணுங்குவது கன்னி என் பரிசு..
பற்றி கொள்வாயா?
எனை பற்றி கொள்வாயா?
இரு மலை நடுவினில் இயற்கையின் துடிப்பு..
அறிந்தட வந்த ஆண் மகன் தவிப்பு..
அறிந்திட முயல்வாயா ? அன்பே நீ அறிந்திட முயல்வாயா?
செதுக்கிய இடையினில் சிதறிடும் எம் அறிவும் ..
மலர்ந்த நாபியில் குளறும்
எம் மொழியும் ..
சகியே உன்னை கண்டேன்..
காதல் சொல்ல வந்தேன்..
வாழை தண்டு கால்களில்
ஜதிக்கும் உன்தன் கொலுசினில்
குண்டு மணிகள் குலுங்கும் ஓசையில் ஒரு நூதன தாளம் கேட்டேன்.. நீ நடப்பதே கீதம் என்பேன்..
அணைப்பினில் என்னை அலற செய்திடு..
அடங்க மறுத்தால் மிரட்டி கொன்றிடு ..
உணர்ந்திடுவேன் எந்தன் ஆண்மையை..
எந்தன் அணுக்களில் உலவுது உந்தன் பெண்மையே..
சகலமும் உன்னில் அடங்க கண்டேன்..
என் சலன பூக்களை கொய்திடு..
என் மயக்கம் தெளிய வந்திடு..
அத்தனை மொழிகளில் உன்னை ஆராதிக்க நினைக்கிறேன் பெண்ணே ..
ஆதி மொழியை இரவல் வாங்கி என் ஆசையில் உன்னை இணைக்கிறேன்..
மையலுடைத்து வருவாயா என் பௌர்ணமியே?

கனி
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN