இங்கேயும் வலிகள் கொஞ்சம் நின்று பேசும்..

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நான் இல்லாத
உன் நாட்கள்
அழகாய் விடிந்திருக்கும்...

என் குரல் கேட்காத உன்
செல்போன் உனக்கு
பல முறை நன்றி உரைத்திருக்கும்...

என் விரல் படாத உன் கேசம் கலையாமல் நின்றிருக்கும்..

என் செல்ல திருகலில் தப்பித்துக் கொண்ட
உன் செவிகளும்,

தூக்கத்தை விற்று காதலை வாங்கிய
உன் விழிகளும் இனி கொண்டாடும்
இந்த சுதந்திர நாளை...

விடியலே இல்லாமல் போன அத்தனை இரவுகளும்
இனி உனக்கு அழகாய் விடிந்துவிடும்..

தொல்லையாய் இருந்த லூசு பெண்ணிடம்
இனி நேச வேசம் வேண்டாம்..

இம்சையாய் உன் இதயத்தில் இரவல் அன்பில்
ஒட்டிக்கொண்டவளிடம் இனி அன்பு பாராட்ட வேண்டாம்...

நான் இல்லாத உன் இரவுகள் அழகாய் விடிந்திருக்கும்..

ஆனால் நீ இல்லாத நான்?
புன்னகைக்கும் உதடுகளில்
பொத்தி பொத்தி
வைக்கிறேன் உன் முத்தங்களை..

உன் மடி சாய்ந்த தலைக்கு தலையணையோடு
இணை சேர்க்கிறேன்..

நீ வருடிய கன்னங்களில் உப்பு கண்ணீரில் கறை சேர்க்கிறேன்..

இல்லாது போன உன் காதலில் கரைந்து போவது இந்த உயிரும் சேர்ந்துதான்..
*கணி*
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN