தீராக் காதல் திமிரா-3

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் 3

சுகுமாரனின் குரலில் பபுள் கம்மை மென்று கொண்டே திரும்பிப் பார்த்த அதிதியின் முகம் எந்த உணர்வையும் வெளிக்காட்டவில்லை. இறுக்கத்துடன் தான் இருந்தது.


சுகுமாரன் மெதுவான குரலில்.... இன்ஸ்பெக்டரின் காதில்...
"சார் இந்த பொண்ணு எப்ப நம்மள பார்த்தாலும் உர்ருன்னு இருக்கே.... என்னவா இருக்கும்" என்று கேட்க..


"யோவ் இதாயா முக்கியம் இப்ப ... ஃபர்ஸ்ட் கிரவுட கிளியர் பண்ணி அனுப்பிவிடு.... வேற வேல இல்ல இவங்களுக்கு... ஆனா ஊனா கூட்டமா கூடி கும்மி அடிப்பாங்க..." என்று அதட்ட...


"அதுவும் சரிதான் சார் ....அடிதடி சண்டை போட்டாலும் கூட்டம் தான் போடுவாய்ங்க... ஒருத்தன் ஆக்சிடெண்ட்ல உயிருக்காக போராடிட்டு இருந்தாலும் கூட்டமா கூடி வேடிக்கை தான் பார்ப்பாங்க.... விதிவிலக்கா ஒன்னு ரெண்டு பேரு உதவி பண்ணா உண்டு... இப்ப கூட இந்த கூட்டத்துல எவனாவது இவங்க சண்டை போட்டத வீடியோ எடுத்து... யூட்யூப்... இன்ஸ்டாகிராம் ஃபேஸ்புக்... எல்லாத்துலயும் போட்டு ட்ரெண்டிங் ஆக்கிடுவாங்க" என்று அலுத்துக் கொள்ள....


"சரி சரி யாரும் இங்க கூட்டம் போட கூடாது ....எல்லாரையும் கிளியர் பண்ணுங்க யாராவது இவங்கள வீடியோ எடுத்து இருந்தா அவங்க மொபைல வாங்கி வீடியோவ டெலிட் பண்ணிடுங்கய்யா.... "என்று சுகுமாரையும் மற்ற கான்ஸ்டபிள்களையும் அனுப்பிவைத்த இன்ஸ்பெக்டரின் பார்வை இப்பொழுது சண்டை கோழிகளாக சிலிர்த்துக் கொண்டு நின்ற வம்சி மற்றும் அதிதியின் மீது பதிந்தது.


"என்ன பிரச்சனை?" என்று அவர் விசாரிக்க அதற்காகத்தான் காத்திருந்தது போல்..... இருவரும் மாற்றி மாற்றி ஒருவரை ஒருவர் குறை கூற ஆரம்பிக்க.... இடையில் மாட்டிக்கொண்டு மண்டை காய்ந்து போனது என்னவோ இன்ஸ்பெக்டர் ராஜ் தான்....


அதற்குள் குறிப்பிட்ட நேரத்திற்குள் அலுவலகத்திற்கு செல்லாததால் ....வம்சிக்கு அவனது தொழில் துறை நண்பன் அசோக் இடமிருந்து இருந்து தொடர்ந்து போன்கால்கள் குவிந்து கொண்டிருந்தது.


இன்ஸ்பெக்டர் வம்சியிடம் அழைப்பை ஏற்று பேசலாம் என்று அனுமதி கொடுக்க.... அவனும் அவருக்கு நன்றி சொல்லிவிட்டு அங்கிருந்து நகர்ந்து சென்றான்.


வம்சி சென்றதும் ...
அதிதியின் பக்கம் திரும்பிய இன்ஸ்பெக்டர்.... "ஐ அம்
ராஜ்கிரண்" என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்ள....
"அது எனக்கு ஏற்கனவே தெரியும் டா மாங்கா..." என்று நினைத்த அதிதியின் அழுத்தமான பார்வை அவரது போலீஸ் உடையில் இருந்த அவரது பெயரில் பதிந்தது.
அதை புரிந்து கொண்டவர்... "இதெல்லாம் பேசிக் இன்ட்ரோ தானே.." என்று அசடு வழிய.... அதிதி அவரை புரியாத பார்வை பார்த்தாள்.


"அன்னைக்கு ஸ்டேஷன்ல வச்சு ஒன்னும் சொல்ல முடியல... உங்கள ஃபர்ஸ்ட் டைம் பார்க்கும்போதே ஒரு ஸ்பார்க்... அப்புறம் போலீஸ் ஸ்டேஷனுக்கு வந்தும் பயப்படாம கெத்தான நின்ன உங்க தைரியம் எனக்கு ரொம்ப பிடிச்சிருந்தது அதிதி" என்று ஐஸ் வைத்து ஆரம்பித்தவர்... அதிதியின் பார்வை மாறுவதை கவனிக்காமல்...
"எனக்கு வீட்ல பொண்ணு பாக்குறாங்க.... நேத்து ஸ்டேஷன்ல உங்களை எங்கேயோ பார்த்த மாதிரியே ஃபீல் இருந்துச்சா .... அதனால அம்மா எனக்கு அனுப்பி வச்ச பொண்ணு போட்டோ எல்லாம் திரும்பி பார்த்தேன்... அதுல உங்க போட்டோவும் இருந்துச்சு ... பார்த்ததும் எனக்கு ரொம்ப ஹேப்பி... இன்னைக்கு உங்கள மீட் பண்ணனும்னு நெனச்சுட்டு இருந்தேன் ...அதுக்குள்ள கும்பிட போன தெய்வம் குறுக்க வந்தது மாதிரி நீங்களே இங்க நிக்குறீங்க... அப்புறம் எனக்கு உங்களை ரொம்ப பிடிச்சிருக்கு உங்களுக்கும் என்ன..." என்று அவர் வழிய ஆரம்பிக்கவும்.... வம்சி வரவும் சரியாக இருந்தது.


"இன்ஸ்பெக்டர் சார் நான் இப்பவே போய் ஆகணும்... கேஸ் எதுவும் பைல் பண்ண வேண்டாம் ...இந்தப் பொண்ணு கார் டேமேஜ்க்கு நானே பே பண்றேன் சார்.... பட் இப்போ எனக்கு டைம் இல்ல ...மீட்டிங்கு நேரம் ஆகிட்டு" என்று வம்சி மூச்சுவிடாமல் படபடவென்று பொறிய ....


இன்ஸ்பெக்டர் ராஜ் அதிதியை கேள்வியாக பார்க்க ... "உன்ன எப்படி நான் நம்புறது" என்று அழுத்தமாக கேள்வி வந்தது அதிதியிடம் இருந்து....


கோபமாக அவள் புறம் திரும்பிய வம்சி கிருஷ்ணன்....


தனது மும்பை கம்பெனியின் விசிட்டிங் கார்ட் மற்றும் அவன் தற்பொழுது தங்கி இருக்கும் கெஸ்ட் ஹவுசின் விலாசம் அனைத்தையும் அதிதியிடம் கொடுத்துவிட்டு.... "இன்னும் த்ரீ மந்த்ஸ் நா இந்த ஊர்ல தான் ஸ்டே பண்ண போறேன் ... எப்ப வேணாலும் இந்த அட்ரஸ்க்கு வந்து நீ பணத்த வாங்கிட்டு போகலாம்... முக்கியமான விஷயம் பணம் வாங்க வரும்போது உன்னோட கார் ரிப்பேர்க்கு உண்டான பில்ல என்கிட்ட காட்டணும்.... அப்பதான் பணம் தருவேன்.... இன் கேஸ் நா பணம் தரலானா கூட.... தாராளமா நீ இன்ஸ்பெக்டர் சார் கிட்ட கம்ப்ளைன்ட் கொடுக்கலாம்" என்றவன்.... "அப்படித்தானே சார்" என்று இன்ஸ்பெக்டர் புறம் திரும்பி கேட்க.... அவரும் 'விதியே என்று' சரிதான் என்பது போல் தலையாட்டினார்.


ஒரு நொடி அவனது முகத்தைக் கூர்ந்து பார்த்த அதிதி ....
"சரி நான் உன்ன நம்புறேன் அதுக்கு பதிலா பணம் வர வரைக்கும் உன்னோட வாட்ச் எங்கிட்ட இருக்கட்டும்..." என்று கைகளை நீட்ட ...


"ஹேய் இது மெக்சிகோல வாங்கின பிராண்டட் வாட்ச்.... உன்ன நம்பி எப்படி நான் தர முடியும்?" என்று முறைத்த வம்சி.... அதிதியின் நக்கலான பார்வையை உணர்ந்ததும்... வேறுவழியின்றி வெறுப்புடன் தனது வாட்ச்சை கழற்றி அவள் கைகளில் திணித்தான்.


அதன் பிறகு வம்சி அலுவலகத்திற்கு வந்து விட.... மீட்டிங் ஹாலிற்கு நுழைவதற்கு முன்பே ஒரு புது எண்ணிலிருந்து 'இட்ஸ் மி அதிதி என் நம்பர சேவ் பண்ணிக்கோ அப்பாடக்கர்' என்று மெசேஜ் வந்திருந்தது.


சனியனை தூக்கி பனியனில் போட்டுக்கொண்ட தன் நிலையை நினைத்து கடுப்பாக இருந்தாலும் அவளின் எண்ணை 'பஜாரி' என்று சேமித்து வைக்க மறக்கவில்லை அவன்.....


மீட்டிங் முடிந்ததும் பயங்கரமாக தலை வலிக்க... ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்த மதிய விருந்தில் பங்கு கொள்ளாமல் தான் தங்கியிருக்கும் இடத்தை நோக்கி காரை செலுத்தினான் வம்சி கிருஷ்ணா.


இங்கோ ஒர்க் ஷாப்பில் அமர்ந்து .... மொபைலை நோண்டி கொண்டிருந்த அதிதியிடம் என்ன நடந்தது? ஏது நடந்தது? என்று தோண்டித் துருவி கேட்டுக்கொண்டு இருந்தாள் அருணா....அதிதியின் நெருங்கிய தோழி......


பின்னே கேட்க மாட்டாளா என்ன?? பிரேக் சரியில்லை... என்று கஸ்டமர் கொண்டு வந்த காரை சரிப்படுத்தி ஓட்டிப் பார்க்க எடுத்து சென்றவள்... வரும்பொழுது முன்பக்க லைட்டை உடைத்துக்கொண்டு வந்தால்?


அருணா எவ்வளவு கேட்டும் வாயை திறவாமல் அதிதி இருக்க ..... அருணா கோபத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


மொபைலில் நோண்டிக்கொண்டே தோழியின் புலம்பலை கேட்டுக்கொண்டிருந்த அதிதி.... அவளின் அமைதி புரிந்தவுடன் அவள் பக்கம் திரும்ப..... அருணா உர்ரென்ற முகத்துடன் முகத்தை திருப்பிக் கொண்டாள்.


அதிதி அவளை சமாதானப்படுத்த முயற்சிக்காமல் திரும்பியிருந்த அவள் முகத்தையே பார்த்துக்கொண்டிருக்க....
சில பல நிமிடங்கள் கழித்து அதிதியின் புறம் திரும்பியவள் ....
"இப்ப எதுக்குடி என்ன ரொமான்டிக்கா பார்த்துக்கிட்டு இருக்க? கேட்டா பதில் சொல்ல மாட்ட... பார்வை மட்டும் நல்லா பாரு... போடி ....என்ன பாக்காத.... ஃப்ரெண்டுன்னு தான் பேரு... எதையுமே ஷேர் பண்ண மாட்டா... நம்ம மட்டும் ஓட்ட வாய் மாதிரி எல்லாத்தையும் இவ கிட்ட வந்து சொல்லணுமாம்..." என்று கடுப்பாக மொழிய.... அவள் சொன்ன விதத்தில் அதிதியின் இதழ்கள் லேசாக புன்னகையில் விரிந்தது.....


தோழியின் சிரிப்பில் தொலைந்துபோன கோபத்தை இழுத்துப்பிடித்து வைத்திருந்த அருணாவின் தோளின் மீது கை போட்டு கொண்ட அதிதி....
"டேய் அருணு.... போதும்.. போதும் அதான் சிரிப்பு வந்துட்டே சிரிச்சிடு" என்று தோள்பட்டையில் கிச்சு கிச்சு மூட்ட சிரித்துவிட்டாள் அவள்....


சிரித்துக்கொண்டே...
"இப்பவாது சொல்லு டி" என்று அதிதியின் முகவாயை பிடித்து அருணா கொஞ்ச.... அவளது தலையில் கொட்டி விட்டு... "காரியத்தில கண்ணாயிரு..." என்றவள் நடந்ததைச் சொன்னாள்.


அதிதி சொல்லி முடித்ததும்
"எனக்கு ஒரு டவுட் ... நீ பிரேக்க சரி பண்ணி தான் கார எடுத்துட்டு போன.... சோ நம்ம கார்ல நோ ப்ராப்ளம்.... அதுமட்டுமில்லாம எப்பவும் பெர்பெக்டா வண்டி ஓட்டுற நீ எப்படி அந்த கார் பின்னாடி மோதி இருப்ப? இதுல என்னமோ இருக்கு உண்மைய சொல்லு டி" என்று அருணா அதிதி முகத்தை ஆழ்ந்து பார்த்து கேட்க.....


"உனக்கு அருணானு பேர் வைக்கிறதுக்கு பதிலா அறிவுன்னு பேரு வச்சு இருக்கலாம்.... எம்புட்டு அறிவு" என்று அதிதி சிலாகித்துக் கூற.... "இந்த பிட்ட எல்லாம் அப்புறமா போடலாம் மொதல்ல உண்மையை சொல்லு டி பக்கி..." என்று முறைத்தாள் அருணா.


"மேலைப் பார் பிளாஷ்பேக் சொல்கிறேன்" என்று அதிதி தோழியைக் கடுப்படிக்க.... சொல்லித் தொலையேண்டி என்று அருணா பாவமாக பார்க்கவும் அதற்கு மேல் அவளை சோதிக்காமல் நடந்த அனைத்தையும் சொன்னாள் அதிதி...


காலையில் ரிப்பேர் செய்த காரை சரிபார்க்க ஓட்டிக்கொண்டு வந்துகொண்டிருந்தாள் அதிதி. அப்பொழுது சாலையின் ஓரத்தில் பெரியவர் ஒருவர் தலையில் அடிபட்டு மயங்கி இருக்க அவரை சுற்றி ஒரு கூட்டம் கூடியிருந்தது.


அதிதி காரை நிறுத்திவிட்டு என்னவென்று விசாரிக்க.... ஒரு சில நிமிடங்களுக்கு முன்பு சாலையின் ஓரத்தில் நடந்து கொண்டிருந்த பெரியவரை வெகு வேகமாக வந்த கார் ஒன்று உரசி விட்டு செல்ல காரினுள் இருந்த இளைஞர்கள் ஓவென்று கத்தி விட்டு சென்றிருக்கின்றனர்.... கார் உரசியதில் தடுமாறி பெரியவர் விழ சாலையின் ஓரத்தில் கிடந்த கல் ஒன்று அவரது தலையைப் பதம் பார்த்திருந்தது... சிறிய காயம் தான் என்றாலும் வயது அதிகம் என்பதால் மயங்கி இருந்தார். இளைஞன் ஒருவன் அவருக்கு கடையில் சோடா வாங்கிக் கொண்டு கொடுக்க... கூட்டத்தில் நின்ற பெண்மணி ஒருவர் பெரியவரின் கைபேசியில் இருந்து அவரின் வீட்டுக்கு தொடர்புகொண்டார்.


தலையில் ரத்தம் கசிய அமர்ந்திருந்த பெரியவரை பார்த்த அதிதிக்கு தன்னை வளர்த்த தாத்தா நினைவிற்கு வர.... அவர்களை சும்மா விடக்கூடாது என்று நினைத்தவள் கூட்டத்தில் நின்ற ஒருவரிடம் காரின் நிறம் அது எந்த பக்கம் சென்றது என்று விசாரித்துவிட்டு மின்னல் வேகத்தில் காரை செலுத்தினாள்.


ஆனால் அவள் அறியாதது என்னவென்றால் அது கருப்பு நிற கார்தான் என்றாலும் அது ஆடி கார் இல்லை என்பதை தான்...


வெகு வேகமாக காரை ஓட்டிக் கொண்டு வந்த அதிதி கருப்பு நிற காரை பார்த்துவிட.... அதை ஓவர்டேக் செய்ய நினைத்து வேகத்தை அதிகப்படுத்த.... அதுவோ வேகத்தை வெகுவாக குறைந்திருந்தது..... இதை சிறிதும் எதிர்பார்க்காத அதிதி வேகத்தை குறைக்க முடியாமல் தடுமாறி அந்த காரில் சென்று மோதி விட்டாள்.


நடந்ததை ஒன்று விடாமல் தோழியிடம் சொன்ன அதிதி அருணாவின் முகத்தை பார்க்க.... அவளோ வாயை பிளந்து கொண்டு அமர்ந்திருந்தாள்.


"என்னாச்சு டி?"என்று அதிதி கேட்க...
"ஏண்டி உன் மனசுல பெரிய கோவில்பட்டி வீரலெட்சுமினு நெனப்பா? எப்பா இவள வச்சுக்கிட்டு......" என்று தலையில் அடித்துக்கொண்டவள்...


"அது சரி அதுக்கப்புறம் அந்த தாத்தாவுக்குகாக நீ ஏன் சண்டை போடல???...." என்று கேட்க


"அது வந்து டி ... அந்த காருக்குள்ள அந்த அப்பாடக்கர தவிர யாருமே இல்ல.... ஆனா அந்த தாத்தாவை இடிச்சுட்டு போன கார்ல நாலஞ்சு பேர் இருந்திருக்காங்க அத வச்சு தான் கண்டுபிடிச்சேன்..... இந்த கார் அந்த கார் இல்லன்னு" என்று அசால்டாக தோளை குலுக்க....


'இவ திருந்தவே மாட்டா' என்று நினைத்த அருணா....
"அது சரி அந்த போலீஸ் ரோமியோ கிட்ட என்ன பதில் சொன்னேன்னு என்கிட்ட சொல்லவே இல்லையே...?" என்று ஆர்வமாக கேட்டாள்.


"நான் என்ன சொல்லி இருப்பேன்னு நீ நெனைக்கிற?" என்று ஒற்றை புருவத்தை தூக்கி ஸ்டைலாக அதிதி கேட்க....


"உன் பாழாப்போன பத்து கண்டிஷன்ஸ் சொல்லி இருப்ப.... அவரும் வாயடைச்சு போய் இருப்பார்" என்று அருணா சலித்துக்கொள்ள....
அதிதியோ, "கரெக்ட் கரெக்ட்" என்று அவள் தோளை தட்டிக் கொடுத்தாள்.


அவளது கையை தட்டிவிட்ட அருணா.... " காலம்பூரா கல்யாணம் பண்ணாம எஸ்கேப் ஆக முடியும்னு நினைக்கிறியா மச்சி" என்று கவலையுடன் கேட்க...


தோழியின் அக்கறையில் மெல்லியதாக புன்னகைத்த அதிதி....
"உனக்குத்தான் தெரியுமே அருணு இந்த தாய்க்கிழவி என்ன வீட்ல இருந்து துரத்த பிளான் பண்ணிட்டு இருக்கு.... அதுக்காக தான் எனக்கு வலைவீசி மாப்பிள தேடுது... கண்டிப்பா அதுல நான் சிக்கவே மாட்டேன்..... எனக்கு இந்த கல்யாணம் கமிட்மென்ட் எதுவுமே பிடிக்கல டி.... நான் நானா இருக்கணும்னு ஆசைப்படறேன் அருணு..... அடுத்தவங்களுக்காக என்னால நல்லவ மாதிரி வேஷம் போட முடியாது.... ஒருவேள நான் கல்யாணம் பண்ணினா கண்டிப்பா நான் நானாக இருக்க முடியாது.... வேஷம் போட்டு தான் ஆகணும்.... சோ அது எனக்கு தேவையில்லை .... நான் எந்தக் கமிட்மெண்ட்ஸும் இல்லாம ஃப்ரீயா வாழ ஆசைப்படுறேன் ....இப்போதைக்கு நான் ப்ரீ பேட் ...."என்ற அதிதி...


தன் கை கடிகாரத்தை பார்த்து விட்டு... "பேசினது போதும் அருணு... டைம் ஆகிட்டு... வா ஒர்க் ஸ்டார்ட் பண்ணலாம்.... மத்த ஒர்க்கர்ஸ் எல்லாம் லன்ச் முடிச்சிட்டு வந்து இருப்பாங்க "என்றவள் தனது டூல்ஸ் பாக்ஸை தூக்கிக்கொண்டு நடந்தாள்....


அவளின் பின்னையே கவலை தோய்ந்த முகத்துடன் நடந்தாள் அருணா....


**************
மாலை வேளையில்
வம்சி தலைவலியுடன் சோபாவில் சாய்ந்து அமர்ந்திருக்க....
அங்கு சமையல் வேலை செய்யும் தெய்வானை பாட்டி அவனுக்காக சுடச்சுட தேநீர் கொடுத்துவிட்டு சென்றார்.


அப்பொழுது விசிலடித்துக் கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான் சுஜித்.... வம்சி கிருஷ்ணாவின் ஒன்றுவிட்ட தம்பி.


வீட்டில் உள்ளவர்களிடம் அண்ணனுடன் வேலை செய்வதாக உதார் விட்டு விட்டு ப்ளே பாயாக சுற்றிக் கொண்டிருப்பவன்....
வம்சி வேலை விஷயமாக இங்கு வந்திருந்தால் அவனோ ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு செல்ல வந்திருந்தான்.


உள்ளே வந்ததும்.... சோபாவில் அமர்ந்திருந்த வம்சியை இடித்து தள்ளி விட்டு அருகில் அமர்ந்தவன்.... சமையல் அறையில் நின்ற தெய்வானை பாட்டியிடம் ...
"ஹலோ கிராணி வெயில்ல சுத்திட்டு வந்தது ரொம்ப டயர்டா இருக்கு.... எனக்கு நல்லா கூலிங்கா பாதாம் ட்ரிங்க் கொண்டு வாங்க ப்ளீஸ்" என்று கத்தி விட்டு.... அவர் கொண்டுவந்து கொடுத்ததும் டீப்பாயின் மீது நீட்டி இருந்த காலை ஆட்டி கொண்டே குடிக்க ஆரம்பித்தான்....


குடித்து முடித்ததும் ....


அவனது அலம்பல்களைக் கண்டுகொள்ளாமல் அமைதியாக தேநீர் அருந்திக் கொண்டிருந்த வம்சியின் புறம் திரும்பி..... "ப்ரோ ஏன் சீக்கிரம் வந்துட்ட ? இன்னைக்கு டே எப்படி போச்சு ??"
என்று சாதாரணமாக கேட்க...

அவன் அப்படி கேட்டதும் ...அதிதியின் முகம் காலையில் நடந்த சண்டை எல்லாம் நினைவிற்கு வந்து விட...


"அத எதுக்கு நீ கேக்குற?" என்று தம்பியிடம் சிடுசிடுத்தான் வம்சி ....


"ஒய் டென்ஷன் ?ஜஸ்ட் கூல் ப்ரோ எப்பவுமே பெரியம்மா போட்டோவ தான் மார்னிங் எழுந்ததும் ஃபர்ஸ்ட் பாப்ப... பட் இன்னைக்கு எழுந்ததும் ஆக்சிடென்டா என்னோட லக்கி ஃபேஸ(face) தான பாத்துட்டு போன... அதான் கேட்டேன்..." என்று வம்சியின் கடுப்பை கிளற....


சுஜித்தை நோக்கி நெருப்பு பார்வை பார்த்த வம்சி ...
"சும்மா இருடா ... நீ வேற ஏதாவது சொல்லி எரிச்சலை கெளப்பாத" என்று எச்சரிக்க...


அவனோ அடங்காமல்...
"ஐ நோ ப்ரோ ...ஐ நோ ... உன்னால நா லக்கி ஜாம்னு சொல்றத ஒத்துக்க முடியாது... மனுஷனா பொறாமை வர்றது சகஜம் தானே.... நா உன்ன விட கலர்... உன்ன விட அழகு... தனுஷ் மாதிரி அம்சமான ஸ்ட்ரக்சர்ல வேற இருக்கேன் ....நிறைய கேர்ள் ஃப்ரெண்ட்ஸ் வேற வச்சிருக்கேன்" என்று பீற்றிக் கொள்ள....


"டேய் கடைசியா சொல்றேன்... என்ன கொலைகாரன் ஆக்கிடாத" என்று வம்சி பல்லைக் கடிக்க.....


"உண்மைகள் கசக்கத்தான் செய்யும் ப்ரோ... "என்றவன்
"ப்ரோ நீ இன்னும் நான் கேட்ட கேள்விக்கு பதில் சொல்லவே இல்லையே.... இன்னைக்கு டே எப்படி போச்சு?"என்று விடாமல் அதையே கேட்க..... கடுப்பான வம்சி "இப்படித்தாண்டா போச்சு" என்று அவன் கழுத்தை நெறிக்க.... சுஜித் வம்சியின் தலைமுடியை பிடித்து இழுக்க ....சில நொடிகளில் அவ்விடம் போர்க்களமானது....


இருவரும் ஒருவரை மாற்றி ஒருவர் தாக்கிக் கொள்ள சுஜித்திற்கு தான் அடி அதிகம்....


சுஜித் அண்ணனின் அடி தாங்காமல் "கிராணி ப்ளீஸ் ஹெல்ப் மீ..." என்று சமையலறையை நோக்கி குரல் கொடுக்க


சமையலறையிலிருந்து எட்டிப்பார்த்த தெய்வானை பாட்டி இருவரும் ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்து.... "விளையாட்டு பிள்ளைங்க" என்று புன்னகைத்து விட்டு உள்ளே சென்று விட....


"ஹேய் கிராணி ...இது விளையாட்டு இல்ல விபரீதம் சேவ் மீ கிராணி" என்று கத்த.... அதைக் கேட்க அவர் அங்கில்லை....


"டேய் கிராணி உன்ன அப்புறம் கவனிச்சுக்கிறேன்..." என்று புலம்பிய சுஜித்... வம்சியின் கையைப் பிடித்து தடுக்க முயற்சிக்க அவனோ ஆத்திரம் அடங்காமல் அடித்துக்கொண்டே இருந்தான்....


சுஜித் முடிந்தளவு வம்சியை தனது நாலு நல்லி எலும்புகளால் பதிலுக்கு தாக்கினான்....


வம்சி கோபத்துடன் அவனது முகத்தில் குத்த வர
அதை கவனித்து விட்ட சுஜித்
"டேய் ப்ரோ ஸ்டாப் இட்ட்ட்.... "என்று ஆக்ரோஷத்துடன் கத்த.... வம்சியின் கவனம் ஒரு நொடி சிதறி விட்டது. அதை பயன்படுத்திக் கொண்டு... அவன் கைப்பிடியில் இருந்து நகர்ந்து நின்று கொண்ட சுஜித் ..."ப்ரோ எங்க வேணாலும் அடி என்னோட ப்யூட்டிஃபுல் ஃபேஸ்ல மட்டும் அடிக்காத..... "


"ஏண்டா..." என்று பல்லைக் கடித்துக் கொண்டு வம்சி கேட்டதும்....
"அது வந்து ப்ரோ இத வச்சி தான் இன்னைக்கு நிஷான்னு ஒரு பிகர உஷார் பண்ணேன்.... "
என்று வெட்கப்பட்டுக்கொண்டே சுஜித் சொல்ல....


"டேய் கண்டிப்பா இன்னைக்கு உன் மூஞ்சிய பேக்காம விட மாட்டேன் டா" என்ற வம்சி ஆக்ரோஷத்துடன் அவனை அடிக்க பாய்ந்ததும்....


"அச்சச்சோ ப்ரோ... நீ சாமியார் அதுக்காக நானும் சாமியாரா இருக்க முடியுமா? இது நியாயமா? தர்மமா?" என்று முகத்தை மூடிக் கொண்டே சுஜித் ஓட...


"டேய் யார்டா சாமியார்?.... ஓடாத நில்லு" என்று அவன் பின்னாடியே துரத்தினான் வம்சி கிருஷ்ணா.


***********


ஒரு வாரத்திற்குப் பிறகு....


அன்று வெள்ளிக்கிழமை....


அன்றுதான் கார் ரிப்பேர் செய்ததற்கான பணத்தை வாங்குவதற்காக அதிதி வம்சி வீட்டிற்க்குச் செல்வதாக இருந்தாள்.


அதனால் விரைவிலேயே ஒர்க்ஷாப் வேலைகளை முடித்துவிட்டு ...மாலை 4 மணிக்கு போல் வம்சி கொடுத்த விலாசத்திற்கு சென்றாள் அதிதி....


காலிங் பெல்லை அழுத்திவிட்டு அவள் காத்திருக்க.... தெய்வானை பாட்டி தான் கதவை திறந்தார்....
அவளை மேலிருந்து கீழ்வரை பார்த்தவர்....
"யாரு வேணும்??' என்று கேட்க


'அப்பாடக்கர்' என்று சொல்ல வந்தவள்...
பின் திருத்தி...
"வம்சி கிருஷ்ணா இருக்காங்களா..." என்று வராத மரியாதையை வரவழைத்துக்கொண்டு கேட்க ....


"உள்ள வாங்க பெரிய தம்பி இன்னும் வரல.... சின்ன தம்பி தான் இருக்காங்க ...."என்று அவர் வரவேற்க...


'நாளைக்கு வந்து பணத்தை வாங்கிக்கலாமோ?' என்று ஒரு நொடி யோசித்த அதிதி.... பின் 'வந்தது வந்துட்டோம் கழுத வாங்கிட்டு போயிடுவோம்' என்று நினைத்து .... அந்த ஆடம்பரமான வரவேற்பறையை வேடிக்கை பார்த்துக் கொண்டே உள்ளே வந்தாள் அதிதி.


அவள் உள்ளே வந்து அமர்ந்ததும்.....
தெய்வானை பாட்டி,
"தம்பி உனக்கு காபியா? டீயா? ஜூஸா?" என்று அதிதியிடம் கேட்டார்.


அதிதியும்"எனக்கு காபி போதும் பாட்டி..." என்றவள்... அப்பொழுதுதான் அவர் தம்பி என்று அழைத்ததை உணர்ந்து..."நா தம்பி இல்ல...." என்று சொல்ல வர... அதற்குள் சமையல் அறைக்குள் நுழைந்து இருந்தார் பாட்டி.


"கொடுமைடா... நம்மள பார்த்தா தம்பி மாதிரியா இருக்கு" என்று புலம்பியவள்.... தன்னைத்தானே ஒரு முறை பார்த்துக் கொண்டாள் ...



எப்பொழுதும் போடும் ஜீன்ஸ் டீசர்ட் தான் அணிந்திருந்தாள்... முகத்தில் துளி மேக்கப் இல்லை கண்ணுக்கே தெரியாதவாறு பொட்டு கம்மல் ஒன்று காதில் கிடந்தது.....
வேலை முடிந்த நேரடியாக இங்கு வந்திருந்ததால் ...கலைந்து போன தலை முடியை மறைக்க தொப்பி போட்டிருந்தாள்....


'இந்த தொப்பி தான் நம்மள தம்பியா காட்டுதோ...' என்று அதை கழற்ற தலையில் கைவைத்தவள் ... 'தொப்பியை கழட்டினா... கலஞ்சி போன தலையில... பஞ்ச பரதேசி மாதிரில இருப்ப' என்ற மனசாட்சியின் குரலில்... தொப்பியை தலையிலேயே மாட்டிக்கொண்டாள்....


அவளுக்கு அருணா ஒர்க்ஷாப்பில் வைத்து சொன்னது நினைவிற்கு வந்தது.


இங்கு வருவதற்கு முன் ...அருணா அதிதியின் கலைந்து போன தோற்றத்தைப் பார்த்து "தலையையாவது வாரிட்டு போடி" என்று சொல்ல... "அதெல்லாம் எனக்கு தேவையில்ல.... நான் நானா தான் இருப்பேன்" என்று கெத்தாக சொல்லிவிட்டு தொப்பியை அணிந்து வந்த தன் மடத்தனத்தை எண்ணி இப்பொழுது மானசீகமாக தலையில் அடித்துக் கொண்ட அதிதி ...."இந்த அப்பாடக்கரு எப்ப தான் வருவான்?" என்று கடுப்புடன் அமர்ந்திருக்க....


அப்பொழுது மாடியிலிருந்து துண்டை மட்டும் கட்டிக்கொண்டு ஒரு ஒல்லியான உருவம் பிரேக் டான்ஸ் ஆடிக் கொண்டே கீழே இறங்கி வந்தது.....


தொடரும்......


போன பதிவிற்கு லைக் கமெண்ட் தந்த அனைத்து நல்ல உள்ளங்களுக்கும் நன்றிகள்....:)
 
Last edited:

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுஜித் பய சிக்கினான்😂😂
நம்ம ரௌடி பேபிக்க செட்டான ஒரு ரௌடி பேபி தான் நம்ம வம்சி சார்😂😂😂😍😍😍
Waiting for next epi kolantha😂😂🙈🙈
 
OP
ஸ்ரீ வைஷு💫

ஸ்ரீ வைஷு💫

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சுஜித் பய சிக்கினான்😂😂
நம்ம ரௌடி பேபிக்க செட்டான ஒரு ரௌடி பேபி தான் நம்ம வம்சி சார்😂😂😂😍😍😍
Waiting for next epi kolantha😂😂🙈🙈
Thank you jiju....:love::love::love::love:vamsi hero illa villan entru solli kondu na poren.....:LOL::ROFLMAO::p:p:p
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN