🌹மையலுடைத்தாய் மழை மேகமே - பாகம் 5🌹

KaNi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தை செய்து வைத்திருக்கும் பாதாம் அல்வா நினைவில் மாமா பரசுராம்மின் தண்டனையை மயூரா மறந்து விட்டிருந்தாள். அந்தோ பரிதாபம் அவர் அதை மறந்திருக்கவில்லையே.
பாகாய் வாயில் கரைந்த அல்வாவில் மனம் இலயித்திருந்தவளை பரசுராம்மின் குரல் பூமிக்கு மீட்டுவிட்டிருந்தது.

"ரெண்டு பேரும் வளர்ந்தவங்கள் மாதிரியா நடந்துகிட்டிங்க, எங்க மானமே போகுது. உங்கள நம்பி எப்படிதான் இந்த ஓட்டல் ல ஒப்படைக்கறதுனு கூட எனக்கு தெரியல.''

"மயூரா ஒரு வாரத்துக்கு ரூம் கிளீனிங் எல்லாமே உன்னோட வேலைதான். ருத்ரா ஒரு வாரத்துக்கு சமையல் உன்னோட பொறுப்பு. கல்தா கொடுக்கலாம்னு நெனைச்சிங்க தொலைச்சிப்புடுவேன் தொலைச்சு ''.

"அப்புறம் சனி ஞாயிறு 3 பேரும் இன்ப வனத்துக்கு போய் யோகி தாத்தாக்கு ஹெல்ப் பண்றீங்க. என்ன சொல்றது புரிஞ்சுதா? ''

மயூரா அப்பாவி போல் தலையாட்டினாள். சற்று முன்பு பாகாய் இனித்த அல்வா இப்பொழுது அவளுக்கு கசந்தது. அவளுக்காக வக்காலத்து வாங்கும் வக்கீல் வண்டு முருகன் அந்தரன் வர்மா இன்னிக்கு வீட்டு பக்கம் கூட எட்டி பார்க்கவில்லை இன்னும்.

"என்னடி மயிலு உனக்கு வந்த சோதனை? உன் பெட்டை கிளீன் பண்ணவே உனக்கு ஒரு நாள் எடுக்கும். இதுல வீட்ல உள்ள ஒட்டு மொத்த அறைகளை கிளீன் பண்ணா உன் கறி எல்லாம் கரைந்து போயிடுமே'' மயிலு மைண்ட் வாய்ஸ் பரிதாபப்பட, மயூரா தலையை சிலுப்பிக் கொண்டு நிமிர்ந்தாள்.

எதிரில் அந்த வளர்ந்து கெட்டவன். அவன் நிலையை நினைக்கையில் தன் நிலை எவ்ளோ பெட்டர்னு மயூராவின் செவ்விதழில் புன்னகை விரிந்தது. விஷமமாய் ஒரு பார்வை அவனை பார்த்தாள்.

"மாட்டுனியா மனோகரா, இருடி நீ சமைச்சு வைக்கறதுல உப்பை கொட்டி வைக்கிறேன். அதோட உன் ஜோலி காலி மாமோய் ''
(என்ன ஒரு வில்லத்தனம் இந்த பொண்ணுக்கு😈).

அவனுக்கு அவள் பார்வை ஏதோ உணர்துவதாய் பட்டது. இருந்தாலும் எதையும் அலட்டிக் கொள்ளாமல் அவளை கடந்து சென்றான். அறையில் உடை மாற்றிக் கொண்டிருந்த மயூராவை மதனிகா அழைத்தாள்.

"சாரிக்கா நான் பண்ண தப்புக்கு உங்க ரெண்டு பேருக்கும் மாமா தண்டனை குடுத்திட்டாரு. டெம்ப்ரேட்டர் சரியா வைக்க தெரியல. மாமா சட்டை பொசுங்கிடுச்சு. அது பவி பெரியாம்மா வாங்கிக் கொடுத்த சட்டையாம். மாமா கோவம் தான் உனக்கு தெரியுமே. மறுபடியும் மதுவை மன்னிச்சுகா'' மதுவின் பெரிய விழிகளில் கண்ணீர் திரண்டு நின்றது.

"ஆமாடி, நீ பண்ற சேட்டைக்கு எல்லாம் அந்த நெட்ட கொக்கு என்னதான் தப்பு சொல்லுவான். இது என்னமோ புதுசு மாதிரில வந்து பொலம்புற. உன் சாரி பூரிலாம் எனக்கு வேணாம். ஒழுங்கா ஒன் வீக்கு ஹவுஸ் கிளீன் பண்ண ஹெல்ப் பண்ணு. என்னால எல்லாம் இந்த பெரிய வீட்டை புரட்டி போட முடியாது '' அவள் பேசியதே மன்னித்து விட்டதாய் எண்ணி மது,
"மயிலு அக்கானா மயிலு அக்காதான். அவ் யூ சோ மச் அக்கா '' மயிலு கன்னத்தில் இச் ஒன்று வைத்து விட்டு மது சிட்டாக பறந்து விட்டாள்.

மறு நாள் இருவருக்கும் தண்டனை காலம் ஆரம்பமாகியது.ஓட்டல் மேனேஜ்மென்ட் கேட்டரிங் மூவருக்கும் முறையாக பயிற்றுவிக்கப்பட்டிருப்பதால் வேலைகள் இலகுவாயிற்று.
மயூராவிற்கு எந்த வேலை செய்தாலும் காதில் mp3 ல் ஏதாவது பாடல் கேட்டு கொண்டிருக்கவே வேண்டும். அப்போதான் செய்யற வேலையை திருத்தமாய் செய்வா. எழுந்தவுடன் காலை கடன்களை முடித்து விட்டு மயூரா கிச்சனுக்குள் நுழைந்தாள்.

அங்கே ருத்ரன் எதையோ போட்டு கிண்டி கொண்டடிருக்க, தனக்கு மட்டும் கம கம வாசனையோடு மசாலா டீ தயாரித்துக் கொண்டாள் . அவள் செய்கையை பார்த்துக் கொண்டே ருத்ரன் சமைக்க,

"என்ன பார்க்குற? நீ சமைச்சதுலாம் நா சாப்பிடுவேனா? புலி பசிச்சாலும் மசாலா டீ குடிக்குமே ஒழிய உன் சமையலை சாப்பிடாது டா'' டீ கப்போடு அவனை ஒரு முறை முறைத்து விட்டு மயூரா அவ்விடம் விட்டு அகன்றாள்.

வழித்து போட்ட கொண்டையும், ட்ஷிர்ட் லோங் பண்ட்ஸுமாய் ஒவ்வொரு அறைகளையும் அசுர வேகத்தில் கிளீன் பண்ணத் தொடங்கினாள். எல்லா அறைகளுக்கும் பொருத்தமாய் திரைசீலைகள், பெட் ஷீட் மாத்தி வாசனை திரவியங்களை தெளித்து ஓட்டல் அறைக்களைப் போல் அழகுபடுத்தினாள்.


கடைசியாக எஞ்சியிருந்தது அவனின் அறை மட்டுமே. அதற்குள் மசாலா டீயின் வீரியம் குறைய ஆரம்பித்து விட்டது.மயிலு பொண்ணு சோர்ந்து விட்டாள். இதுக்கு சமையல் எவ்ளோ பெட்டர்னு மைண்ட் வாய்ஸ் அவள் அழைக்காமல் ஆஜர் ஆகியது.
 

Author: KaNi
Article Title: 🌹மையலுடைத்தாய் மழை மேகமே - பாகம் 5🌹
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN