என்னை தீண்டிவிட்டாய் 15

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னவென்று
சொல்வேன்...
உனக்காய்
என் இதயம்
குருதி வடிப்பதை....

இதோ ஷாகரரும் ஆதிராவும் சூப்பர் மார்க்கட் ஆரம்பித்து இரண்டு மாதங்களாகிவிட்டது.. நினைத்ததற்கு மாறாகவே விற்பனை தராளமாக நடந்தது.. அதற்கு முக்கிய காரணம் அவர்களது சூப்பர் மார்க்கெட்டில் அவர்கள் விற்பனை செய்த பொருளும் அவற்றின் தரமும் நிர்ணய விலையுமே வாடிக்கையாளர்களை அதிகப்படுத்தியிருந்தது.. ஷாகரும் ஆதிராவும் பொருட்களை விநியோகிக்கும் தரகர்கறை மிகுந்த கவனத்துடனேயே தெரிவு செய்தனர்..அவர்களிடமிருந்து கொள்வனவு செய்யப்படும் பொருட்களின் தரத்தை உறுதிபடுத்தவும் அவர்கள் தவறவில்லை....

சூப்பர் மார்க்கெட்டுக்களில் உள்ள வழமை போல் புகழ்பெற்ற அடையாளப்படுத்தப்பட்ட பெயரைக்கொண்ட பொருள் விநியோகஸ்தர்கள் வாடிக்கையாளர்களின் கவனத்தை அதிகம் கவரும் இடங்களை தமக்கென பதிவு செய்திருக்க மற்றைய பொருட்கள் அவற்றுக்கு தகுந்தாற் போல் இடங்களில் அடுக்கப்பட்டிருந்தது..
அதோடு சூப்பர் மார்க்கெட்டின் அமைப்பையும் வாடிக்கையாளரை கவரும் விதத்தில் மாற்றியிருந்தான் ஷாகர்..

ஆதிராவின் ஆலோசனைபடி சிறுவர்களுக்கென அங்கொரு ப்ளே ஏரியாவும் அமைக்க அந்த இடம் இரண்டு மாடிகள் கொண்ட சிறிய மால் போல் காட்சியளித்தது.. அதோடு வீட்டிற்கு தேவையான உணவு பொருட்கள் மற்றும் ஏனைய இதரபொருட்களும் அங்கு விற்பனைக்கு இருக்க, அனைத்து பொருட்களும் ஒரே இடத்தில் கிடைப்பதால் பெரும்பாலான வாடிக்கையாளர்கள் தேடி வரத்தொடங்கினர்...

மேலும் வாடிக்கையாளர்களுக்கு உரிய முறையில் சேவை வழங்க மோகனாவின் ஆலோசனைப்படி ஐந்து பணியாளர்களை அமரத்தியிருந்தாள் ஆதிரா.. அவர்களது உடை முதற்கொண்டு அனைத்தும் வாடிக்கையாளர்களை திருப்திபடுத்தவேண்டுமென்று அவர்களுக்கு பயிற்சி வழங்க ஏற்பாடு செய்தாள்.. அதோடு சிறப்பாக பணியாற்றும் ஊழியர்களை உரிய முறையில் தட்டிக்கொடுத்து அவர்கள் மேலும் சிறப்பாய் செயற்பட வழி செய்தாள்..

ஆதிரா சூப்பர் மார்க்கெட்டின் செயற்பாட்டுக்கான உள்வேலைகளை கவனிக்க ஷாகர் வெளிவேலைகளை கவனித்துக்கொண்டான்.. பொருள் விநியோகஸ்தர்களை தேடுதல், அவர்களின் தரம், விலை என்பவற்றை ஆராய்தல், ஒப்பந்தம் தொடர்பான வேலைகளில் ஈடுபடல், தொழில் விஸ்தரிப்புக்கான வேலைகள் என்று வெளி வேலைகளை கவனித்துக்கொள்ள இருவரின் அதீத ஈடுபாட்டால் வாடிக்கையாளர்களின் வரவு நாளுக்கு நாள் அதிகரிக்கத்தொடங்க வேலைப்பலுவும் அதிகரித்தது...
வேலை வேலையென்று ஓடியவர்கள் தம் வாழ்க்கை பற்றி எந்த எண்ணமும் இல்லாமல் இருந்தனர்....

தினமும் காலை ஏழு மணிக்கு கிளம்புபவர்கள் சூப்பர் மார்க்கட்டிற்கு சென்று வரவேண்டிய பொருட்களை சரிபார்த்து அதற்கான வரவு செலவுகளை பார்த்து முடிக்க மணி ஒன்பதாகிவிடும்.. இருவரும் வேலை முடித்துவிட்டு வீடு திரும்ப எப்படியும் மணி பதினொன்றை தொட்டுவிடும்.. வீட்டிற்கு செல்லும் வழியிலேயே உணவை முடித்துக்கொள்வர் இருவரும்... பின் வீட்டிற்கு சென்று தத்தமது படுக்கையில் விழுபவர்களுக்கு வேறு எந்த சிந்தனையும் இருக்காது...

இப்படியே மூன்று மாதங்கள் ஓடிவிட என்றும் போல் அன்றும் சூப்பர் மார்க்கெட்டினை சுற்றி பார்வையிட்டுக்கொண்டிருந்தாள் ஆதிரா... அப்போது அங்கு வந்தார் வசுமதி. அவரை கண்ட ஆதிரா அவரருகே சென்று

“ அத்தை..”

“ஆதிரா நல்லா இருக்கியா?? ஷாகர் எங்கமா??”

“அவ வெளிய போயிருக்காரு அத்தை... இப்போ வந்திருவாரு.. மாமா நல்லா இருக்காரா அத்தை??”

“நல்லா இருக்காருமா.. வியாபாரம் ல எப்படி போகுதுமா??”

“நினைச்சதை விட நல்லா போகுது அத்தை... அடுத்த பிரான்ச் ஓபன் பண்ணலாம்னு யோசிச்சிருக்கோம் அத்தை... பார்ப்போம்...”

“நல்லதுமா... உங்க இரண்டு பேருக்கும் எல்லாமே நல்லதா தான் நடக்கும்.. நீ எதுக்கும் கவலைப்படாத..”

“ம்ம்.. ஷாப்பிங் வந்தீங்க அத்தை...”

“ஷாப்பிங்கா..ஹாஹா.. உங்க மாமா கிட்ட சொன்னா கடையையே வீட்டுக்கு கொண்டு வந்திடுவாருமா.... நான் எதுக்காக வந்தேன்னா... இந்தா இதை பிடி..”

“என்ன அத்தை இது..???”

“கேரட் அல்வா செய்தேன்.. ஷாகருக்கு நான் செய்த கேரட் அல்வானா ரொம்ப பிடிக்கும்.. அதான் உனக்கும் அவனுக்கும் எடுத்துட்டு வந்தேன்.”

“சரி அத்தை வாங்க.. ஆபிஸ் ரூம் போகலாம்..”

“இல்லை... ஆதிரா.. நீ வேலையை கவனி.. நான் இங்க பக்கத்துல உள்ள கோவிலுக்கு வந்தேன்.. சரி கேரட் அல்வாவை கொடுத்துட்டு உங்க இரண்டு பேரையும் பார்த்துட்டு போகலாம்னு வந்தேன்... நீ வேலையை கவனி.. நான் இன்னொரு நாள் வர்றேன்..”

“சரி அத்தை..”

“சரிமா.. நான் வர்றேன்.. ஷாகர் வந்தா சொல்லு..” என்று வசுமதி கிளம்ப அவரை வழியனுப்ப வெளியே சென்றாள் ஆதிரா...

அவரை காரில் ஏற்றிவிட்டு திரும்பியவளது காலை கல்லொன்று இடறிவிட கீழே விழந்தவள் அம்மா என்றலற கடைக்குள் இருந்தவர்கள் அவள் சத்தத்தில் வெளியே வர வசுமதியும் அவள் சத்தம் கேட்டு டிரைவரிடம் காரை நிறுத்த சொன்னார்.. கீழ விழுந்த ஆதிராவிற்கு அடிவயிற்றில் வலியெடுக்க வயிற்றை பிடித்தபடி வலியில் அலறியவள் மயக்கமடைந்தாள்...

காரிலிருந்து கீழிறங்கிய வசுமதி ஆதிராவின் அலறலில் பயந்து அவளை எழுப்ப முயல அவளோ மயக்கத்தில் இருந்தாள்... தாமதியாது டிரைவரின் உதவியுடன் ஆதிராவை காரில் ஏற்றிய வசுமதியை ஆஸ்பிடலுக்கு கிளம்பினார்.. செல்லும் வழியில் ஷாகருக்கு அழைக்க அவனுக்கு அழைப்பு கிடைக்கவில்லை....
ஆதிராவை ஆஸ்பிடலில் அட்மிட் செய்த வசுமதி தன் கணவருக்கு அழைத்து அவரை உடனடியாக வரச்சொன்னார்..

வெளியில் சென்றிருந்த ஷாகர் அப்போது தான் உள்ளே வந்தவன் ஏதோ யோசனையில் நேரே ஆபிஸ் ரூமிற்கு செல்ல அவனை பின் தொடர்ந்து வந்த பெண் பணியாளர்

“சார்..”

“சொல்லுங்க...”

“ஆதிரா மேடம்..”

“அவங்க ஆபிஸ் ரூம்ல தானே இருக்காங்க..”

“இல்ல சார்.. மேடத்துக்கு அடிபட்டிருச்சு.. அவங்களை ஆஸ்பிடலை கூட்டிட்டு போயிருக்காங்க..”

“என்ன சொல்லுறீங்க?? ஆதிராவுக்கு என்னாச்சு??”

“சார் உங்க அம்மா வந்திருந்தாங்க.. அவங்களை வழியனுப்ப போனபோ கீழவிழுந்து அவங்களுக்கு அடிபட்டிருச்சு.. மேடம் அப்படியே மயங்கிட்டாங்க... உங்க அம்மா தான் காருல அவங்களை கூட்டிட்டு போனாங்க..”

“அம்மாவா.. சரி நீங்க கடையை பார்த்துக்கோங்க... நான் வர்றேன்...” என்றவன் தன் அன்னையில் மொபைலுக்கு முயற்சித்தபடி கடைக்கு வெளியே வந்தான்...
தன் அன்னையை அழைத்து என்னவென்று விசாரிக்க அவரோ தாமதிக்காது அவனை ஆஸ்பிடலுக்கு வருமாறு பணித்தார்..

உள்ளுக்கும் பயந்தபடி ஆதிராவுக்கு எதுவும் கெட்டதாக நடந்திருக்கக்கூடாது என்று ஆயிரம் முறை வேண்டியபடி ஆஸ்பிடலை அடைந்தான் ஷாகர். ரிசப்ஷனில் விசாரித்து எமர்ஜென்சி வார்ட் வாசலிற்கு ஷாகர் வர அங்கு தன் அன்னையும் தந்தையும் நிற்பதை கண்டான் ஷாகர்..

தன் அன்னையிடம் விரைந்தவன் என்னவென்று விசாரிக்க அவரோ அவனை பார்த்தபடி கண்கலங்க ஷாகருக்கோ பயம் தொற்றிக்கொண்டது.. தன்னை கட்டிக்கொண்டு அழுத அன்னையின் செயலில் உள்ளம் பதறியவன் தன் அன்னையிடம்

“அம்மா என்னாச்சுமா... ஏதாவது சொல்லுங்கமா.. ஆதிராவுக்கு ஒன்னுமில்லை தானே..??? சொல்லுங்கமா ப்ளீஸ்... எனக்கு பயமா இருக்கு.”

“கண்ணா..” என்று வசுபதி மீண்டும் அழ ஷாகர் தன் தந்தையை பார்த்து

“அப்பா... நீங்களாவது சொல்லுங்கப்பா... ஆதிராவுக்கு என்னாச்சு.... அம்மா ஏன் அழுறாங்க...சொல்லுங்கப்பா..”

“ஷாகர்....அது....”

“அப்பா ப்ளீஸ் சொல்லுங்கப்பா..”

“ஷாகர்... ஆ..திரா..வுக்கு அபார்ஷன் ஆகிடுச்சு..”

“அப்பா... நீங்க என்ன சொல்லுறீங்க?? அம்மா... அப்பா என்னமா சொல்றாரு...”

“ஆமாபா... அப்பா சொல்றது நிஜம்.. ஆதிரா கர்ப்பமா இருந்திருக்கா.. ஆதிரா கீழ விழுந்து அடிபட்டதுல அவளோட கர்ப்பம்..... க.லை..ஞ்சிருச்சி...னு டாக்டர் சொன்னாங்க..” என்று வசுமதி மீண்டும் அழ ஷாகருக்கோ உலகமே தலைகீழாய் சுற்றுவது போலிருந்தது....

அவனால் தன் அன்னைகளின் வார்த்தைகளை நம்பமுடியவில்லை.... அவனுள் பல உணர்வுகள் அலைபாய அவனால் அதன் வீரியத்தை தாங்கமுடியாது அங்கிருந்த இருக்கையில் சென்று தலையை பிடித்துக்கொண்டு அமர்ந்துகொண்டான் ஷாகர்..

எதிர்பாரா விதமாய் திருமணம்..... பின் எதிர்பாராவிதமாய் ஆதிராவுடன் ஒரு வாழ்க்கை.... மறுபடியும் எதிர்பாரா விதமாய் ஒரு கூடல்.... இப்போது எதிர்பாராவிதமாய் ஒரு குழந்தை உண்டாகி அதை தெரிவதற்கு முன்பே கலைந்துவிட்டது.... எதற்காக இத்தனை எதிர்பாராத சம்பவங்கள் தம் இருவரின் வாழ்வையும் ஆட்டிப்படைக்க வேண்டும்??? எதற்காக விதி இவ்வாறு எம் வாழ்வில் விளையாடுகிறது??? இப்போதா ஆதிராவிற்கு தான் என்ன பதில் சொல்வது??? இந்த விடயத்தை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள்??? தாம்பத்தியம் தான் இனிக்கவில்லை.... குழந்தையை கூட நிலைக்கவிடவில்லையே அந்த இறைவன்...... என்ன வாழ்க்கையிது...?? புயலில் சிக்கிய இளவம்பஞ்சை போல் இப்படி சுழட்டி அடிக்கின்றதே..... இதிலிருந்து ஆதிராவை எப்படி மீட்பேன்.... எதையுமே கடவுள் அவளுக்கு நிரந்தரமாக்கமாட்டானா???? அவள் வாழ்வு கூட அவள் இஷ்டப்படி அமையவில்லையே....... எதற்காய் அவளை இவ்வாறு சோதிக்கிறான் அந்த இறைவன்?? யாருக்கென்றாலும் குழந்தை என்பது வரம் தானே...அதை தெரியாமல் கொடுத்துவிட்டு எதற்காக தெரிந்தே எடுத்துக்கொண்டான்???? இந்த விடயத்தை ஆதிராவிற்கு எவ்வாறு கூறுவேன்????? அதை அவள் எவ்வாறு எடுத்துக்கொள்வாள்?? கடவுளே எதற்காக இவ்வாறு என்னை சோதிக்கிறாய்???? என்ன செய்வேன் நான்???

இவ்வாறு தன்னுள் உழன்றபடியிருந்தவனது தோள் தொட்டார் வசமதி... நிமிர்ந்து பார்த்தவனது கண்கள் கலங்கியிருக்க அதை பார்த்த தாயுள்ளம் கதறியது... ஆனாலும் மகனை தேற்றும் பொறுப்பு தனக்குள்ளதை உணர்ந்த வசுமதி

“கண்ணா.. நீயே இப்படி கலங்குனா ஆதிரா என்னபா பண்ணுவா...??? நீ தான் அவளோட தைரியம்... நீ பேசபோற வார்த்தைகள் தான் அவளை திடப்படுத்தும்... அதுக்கு நீ தைரியமா இருக்கனும்பா... ஏதோ கெட்ட நேரம் இப்படி நடந்திருச்சு... அதையே நினைச்சு வருத்தப்படுறதுல எந்தவித பிரயோஜனமும் இல்லைபா.. இது பெரிய இழப்பு தான்.. ஆனா நடந்த எதுவும் இல்லைனு ஆகிடாது... போ கண்ணா.. போயிட்டு ஆதிராகிட்ட பேசு.... நீ தான் அவளுக்கு தைரியம் சொல்லனும்... போபா...”என்று வசுமதி தன் மகனை திடப்படுத்தி ஆதிரா இருந்த அறைக்கு அனுப்பி வைத்தார்.

கதவை திறந்துக்கொண்டு உள்ளே சென்ற ஷாகர் கண்மூடி படுத்திருந்த ஆதிராவை கண்டான்...மனதின் துக்கத்தை அவன் நடையின் வேகம் வெளிக்காட்டிட மெதுவாக ஆதிரா படுத்திருந்த கட்டிலருகே வந்தான் ஷாகர்....அவளருகே இருந்த ஸ்டூலை எடுத்துப்போட்டு அமர்ந்தவன் அவள் கரத்தின் மீது கைவைத்தவனுக்கு அவளின் நிலையை எண்ணி மனம் வெதும்பியது...

ஷாகரின் ஸ்பரிசத்தில் மெதுவாக கண்விழித்த ஆதிரா ஷாகரை பார்க்க அவனோ கண்கலங்கி முகம் கசங்கியிருந்தான்....அவன் முகமே அவன் கலக்கத்தை சொல்ல, ஆதிராவோ தனக்கு அடிபட்டதால் பயந்துவிட்டான் என்றெண்ணி

“நீங்க பயப்படுற அளவுக்கு எனக்கொன்றுமில்லை ஷாகர்...ஐயம் ஆல்ரைட்... ப்ளீஸ் பீல் பண்ணாதீங்க ஷாகர்....” என்று ஆதிரா கூற ஷாகரோ உள்ளுக்குள் நொருங்கிப்போனான்...

அவள் உண்மை நிலையை அறிந்து நான் வருந்த அவளோ நான் அவளுக்காக வருந்துவதை விரும்பாது என்னை தேற்ற முயல்கிறாள்.... கடவுளே... எதற்காக இவளை இப்படி வதைக்கிறாய்... இல்லை நான் இனி இவளை வருந்தவிடப்போவதில்லை...... இந்த குழந்தை விடயம் எப்போதும் அவளுக்கு தெரியக்கூடாது..... போதும் இதுவரை அவள் அனுபவித்த இன்னல்கள் அனைத்தும் இதோடு முடியட்டும் என்று முடிவெடுத்த ஷாகர் கலங்கியிருந்த கண்களை அழுந்தி துடைத்தவன் முகத்தை சிரித்தபடி வைத்துக்கொண்டு

“இனி ஷாகர் அழமாட்டான்.... இப்போ என்னோட ஆது பேபி ஹேப்பியா??” என்று ஷாகர் சிரித்தபடி கேட்க ஆதிராவும் அவனோடு சேர்ந்து சிரித்தவள்

“ம்ம்.. தட்ஸ் மை ஹபி...”

“ம்ம்... நீ கொஞ்சம் ரெஸ்ட் எடு... நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்...”

“ஷாகர்... எதுக்கு என்னை ஆஸ்பிடல்ல அட்மிட் பண்ணாங்க... உடம்புக்கு ஏதோ மாதிரி இருக்கு..வயிறும் ஏதோ எம்டியா இருக்கமாதிரி இருக்கு... என்னாச்சு ஷாகர்..??”என்று கேட்க ஒரு நிமிடம் நிதானித்தவன்

“பீரியட்ஸ் ப்ராப்ளம்னு சொன்னாங்க... மேடம் வர்க் பிசியில உடம்பை சரியாக கவனிக்காமல் இப்படி அட்மிட் பண்ணுற நிலைமைக்கு வந்திடுச்சு... வேற எதுவும் இல்லை.. மெடிசின் கொடுத்திருக்காங்க.. அதான் வயிறு ஒரு மாதிரி இருக்குனு நினைக்கிறேன்.. நீ ரெஸ்ட் எடு.. எல்லாம் சரியாகிடும்...”

“ஓ .. வேற எந்த ப்ராப்ளமும் இல்லையே... ஏன்னா பிறகு ப்ரெக்னென்சியில ஏதாவது ப்ராளப்ளம் வந்திடக்கூடாதுல... அதான் கேட்குறேன்...” என்று ஆதிரா கேட்க ஷாகருக்கோ அவன் வேதனையை கட்டுப்படுத்தமுடியவில்லை..

சிரமப்பட்டு தன்னை கட்டுப்படுத்தியவன் எதுவும் கூறாது டாக்டரை பார்த்துவிட்டு வருவதாக கூறி அறையிலிருந்து வெளியேறினான்..வெளியே வந்த ஷாகர் அங்கிருந்த இருக்கையில் அமர்ந்து முகத்தை மூடிக்கொண்டவனுக்கு கண்ணீரை அடக்குவது கடினமாகியது.. கண்களிலிருந்து நீர் வடியும் முன்னே அதை துடைத்தவனுக்கு ஆதிராவின் வார்த்தைகள் மேலும் வதைத்தது...

அவன் வெளியே வருவதை கண்ட பிரகஸ்பதியும் வசுமதியும் அவனருகே வந்து

“கண்ணா...ஆதிரா..”

“அம்மா.. முடியலமா... என்னால அவளை நேரா பார்க்கவே முடியலை....”

“ஷாகர்..”

“ஆமாபா... அவகிட்ட இந்த விஷயத்தை சொல்லுற தைரியம் எனக்கு இல்லை. வேணாம்பா.. இந்த விஷயம் அவளுக்கு தெரிய வேணாம்... இது நமக்குள்ளேயே இருக்கட்டும்... ப்ளீஸ்பா... அவ தாங்கமாட்டாபா...”

“ஆனா ஷாகர்..”

“இல்லைங்க.. ஷாகர் சொல்றது சரி தான்... இந்த விஷயம் ஆதிராவுக்கு தெரியவேணாம்... ஆதிராக்கு மட்டும் இல்லை.. நம்ம மூன்று பேர் தவிர்ந்து வேறு யாருக்கும் தெரிய வேணாம்... அவ ஏற்கனவே மனசளவுல சந்தோஷமா இல்லை... இந்த விஷயமும் தெரிஞ்சா அவ வாழ்க்கையை வெறுத்திடுவா.. அதனால அவளுக்கு தெரிய வேணாங்க..ஷாகர் நீ டாக்டர்கிட்டயும் சொல்லிடு.... நீங்க இரண்டு பேரும் இனி தனியா இருக்க வேண்டாம்... நம்ம வீட்டுக்கு வந்திடுங்க...டிஸ்சார்ஜ் ஆனதும் ஆதிராவை நேரா நம்ம வீட்டுக்கு கூட்டிட்டு போவோம்... இனிமே நான் அவளை கவனிச்சிக்கிறேன்...... இப்போ அவளுக்கு நல்ல சாப்பாடும் ஓய்வும் தேவை... அதனால நான் சொல்றதை கேளுபா..”

“சரிமா... நாங்க அங்க வர்றோம்.. நான் டாக்டரை பார்த்துட்டு வர்றேன்...ஆதிராவை எப்போ டிஸ்சார்ஜ் பண்ணலாம்னு கேட்டுட்டு வர்றேன்..” என்று ஷாகர் டாக்டரிடம் சென்று ஆதிரா பற்றியும் அவளை எப்போது டிஸ்சார்ஜ் செய்யலாமென்றும் விசாரித்தவன் அவளுக்கு கரு கலைந்த விடயம் தெரியவேண்டாமென்றும் வேண்டிக்கொண்டான்...

மாலை ஐந்து மணியளவில் ஆதிராவை டிஸ்சார்ஜ் செய்து வசுமதி ஷாகர் மற்றும் பிரகஸ்பதியின் துணையோடு தங்கள் வீட்டிற்கு அழைத்து சென்றார்..
அவளை கைத்தாங்கலாக அழைத்து வந்த ஷாகர் அவள் மாடியேறக்கூடாது என்று டாக்டர் கூறியிருந்தபடியால் கீழ் தரையிலிருந்த விருந்தினர் அறையில் அவள் தங்குவதற்கு ஒழுங்கு செய்தான்...

ஓய்வாய் கட்டிலில் அமர்ந்தவளுக்கு வசுமதி ஜூஸ் கொண்டு வந்து கொடுக்க அதை வாங்கிக்கொடுத்த ஆதிரா

“அத்தை உடம்புக்கு ரொம்ப சோர்வா இருக்கு...நான் கொஞ்சம் படுத்துக்கவா..??”

“படுத்து நல்லா ரெஸ்ட் எடு.. சீக்கிரம் எல்லாம் சரியா போயிடும்..”

“அத்தை எனக்கு உங்க மடியில தலை வச்சி படுக்கனும் போல இருக்கு... படுக்கலாமா??”

“என்னமா இதெல்லாம் கேட்டுக்கிட்டு.. நீ என் மக மாதிரி படுத்துக்கோ...” என்று கூறிய வசுமதி அவள் தலையை தன் மடி மீது வைத்தவர் அவள் தலையை வருடிக்கொடுக்க கண்மூடியவள்

“அத்தை எனக்கு நிஜமாவே எதுவும் இல்லை தானே...?? நான் கஷ்டப்படுவேனு ஷாகர் எதையாவது மறைக்கிறாரா??” என்று ஆதிரா கேட்க சற்றா துணுக்குற்ற வசுமதி ஆதிராவிற்கு ஏதேனும் தெரிந்துவிட்டதோ என்று பயந்தவர் நாவை அடைத்த எச்சிலை விழுங்கியபடி

“ஏன்மா அப்படி கேட்குற?? டாக்டர் உனக்கு எதுவும் இல்லைனு சொல்லிட்டாரே... பீரியட்ஸ் ப்ராப்ளம் தான்.. அதுவும் டேப்ளட் எடுத்தா சரியா போயிடும்..”

“அத்தை நீங்க ஏதாவது என்கிட்ட மறைக்கிறீங்களா??

“ஆதிரா என்னாச்சு உனக்கு..எதுக்கு இப்படி கேட்குற??”

“ஏதோ தோனுச்சு அத்தை....அதான் கேட்டேன்... “

“கண்டதையும் நினைத்து மனசை குழப்பிக்காமல் நல்லா ரெஸ்ட் எடு....கொஞ்ச நாளைக்கு எல்லாத்தையும் ஷாகர் பார்த்துப்பான்... நீ வீட்டுல இரு... உடம்பு நல்லா தேறுனதும் நீயும் ஷாகர் கூட போ.. சரியா??”

“சரி அத்தை...”

“சரி... இப்போ தூங்குமா...” என்று வசுமதி தலையை வருட அது தந்த சுகத்தில் கண்ணயர்ந்தாள் ஆதிரா...

அவள் உறங்கிவியதும் அவளை படுக்கையில் கிடத்திய வசுமதி அவள் தலைக்கு தலையணையை கொடுத்துவிட்டு அறை கதவை சாற்றிக்கொண்டு வெளியேறிய வசுமதி ஹாலிற்கு வந்தார்..ஹாலில் பிரகஸ்பதியும் ஷாகரும் அமர்ந்திருக்க அவர்களுடன் வந்தமர்ந்த வசுமதியிடம்

“அம்மா ஆதிரா தூங்கிட்டாளா??”

“ஆமாபா.... ஆனா..”

“என்னம்மா..”

“ஆதிரா நாம ஏதோ அவகிட்ட மறைக்கிறோமோனு சந்தேகப்படுறா??”

“என்னம்மா சொல்லுறீங்க??”

“ஆமா கண்ணா.. என்கிட்ட கேட்டா.... நான் எதுவும் இல்லைனு சமாளிச்சிட்டேன்.. நாம ரொம்ப ஜாக்கிரதையா இருக்கனும்பா..”

“ம்.. நான் பார்த்துக்கிறேன்மா... அப்பா நான் வீட்டுக்கு போயிட்டு அங்கயிருக்க எங்களோட திங்க்ஸ் எல்லாத்தையும் எடுத்துட்டு வந்திடுறேன்.. நீங்க டிரைவர் அண்ணாவ அங்க வீட்டுல வெயிட் பண்ண சொல்லுங்க.. நான் அப்படியே போயிட்டு சூப்பர் மார்கெட்டையும் பார்த்துட்டு வர்றேன்....”

“நான் சொல்றேன்.. நீ கிளம்பு... லேட் பண்ணிடாத ஷாகர்... இந்த நேரத்துல தான் நீ ஆதிராக்கு துணையா இருக்கனும்..”

“சரிபா... நான் சீக்கிரம் வந்திடுறேன்...” என்று ஷாகர் கிளம்பிட வசுமதியிடம் பிரகஸ்பதி

“தப்பு பண்ணிட்டேன்.. வசு... நீ சொன்னதை கேட்டிருந்தா இப்படியொரு நிலைமை வந்திருக்காது..” என்று கவலையுடன் கூற வசுமதியோ

“இல்லைங்க.. இதுல உங்க தப்பு எதுவும் இல்லை... நம்ம பிள்ளை வாழ்க்கை சரிப்படனும்னு தான் நீங்க அப்படி நடந்துக்கிட்டீங்க.. இப்படியொரு விஷயம் மட்டும் நடந்திருக்காட்டி நிச்சயமா அவங்க இரண்டு பேரோட வாழ்க்கையும் சரியாகியிருக்கும்... என்ன பண்ணுறது.. அது தான் விதிபோல...”

“இல்லை வசு.. ஷாகரும் ஆதிராவும் நம்ம கூடவே இருந்திருந்தா ஆதிராவுக்கு இந்த நிலைமை வந்திருக்காது.. நிச்சயம் உனக்கு அவ கர்ப்பமா இருக்கிறது தெரிஞ்சிருக்கும்... நம்ம வாரிசை நாம காப்பாத்தியிருக்கலாம்.... நான் அவங்களுக்குள்ள இணக்கம் வரணும்னு தனிக்குடித்தனம் வைக்க ஏதோ செய்யப்போய் அது இப்போ இப்படி முடிஞ்சிடுச்சே..”

“அதெல்லாம் இல்லைங்க... ஷாகருக்கும் ஆதிராவுக்கும் நடந்த கல்யாணத்தை பத்தி ஏற்கனவே தெரிஞ்சும் கூட அவங்க விருப்பத்துக்கு தானே அவங்களை விட்டிருந்தீங்க.... பிரச்சனை கைமீறப்போன நேரத்துல யாரா இருந்தாலும் இப்படி தான் நடந்திருப்பாங்க... நீங்க செய்ததுல எந்த தப்புமே இல்லைங்க... தனியா இருக்கும் போது ஒருத்தரை ஒருத்தர் புரிஞ்சிக்கிறதுக்கான வாய்ப்புக்கள் அதிகம்.. வரும் போது கூட பார்த்தேன்.. ஷாகர் ஆதிர்வை குழந்தை மாதிரி பார்த்துக்கிட்டான்..... ஆதிராவும் அவனோட கவனிப்பையும் அன்பையும் விரும்புறது அவள் கண்ணுலயே விளங்கிச்சு.... நிச்சயம் நீங்க அந்த நேரத்துல அப்படி கோபமாக நடந்துக்காட்டி இவங்க இரண்டு பேருக்குள்ளயும் இப்போ இருக்கிற அன்னியோன்யம் இருந்திருக்காது...... நீங்க பண்ணது தப்பில்லைங்க.....” என்று வசுமதி தன் கணவரை தேற்றிக்கொண்டிருந்தார்....

ஆம் பிரகஸ்பதிக்கு ஷாகரும் ஆதிராவும் திருமணம் செய்துகொண்ட சம்பவம் ஏற்கனவே தெரியும்... ஷாகர் பிசினஸ் பொறுப்பை ஏற்கும் வரை அவன் சம்பந்தப்பட்ட அனைத்திலும் கவனமாக இருந்தார் பிரகஸ்பதி... அவனை அவனுக்கு தெரியாமல் கண்காணிபதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தவர் அது ஷாகருக்கு தெரியாதவாறு பார்த்துக்கொண்டார்..

ஆதிரா கழுத்தில் ஷாகர் தாலி கட்டியதை கேள்விபட்டவருக்கு சற்று அதிர்ச்சியாக இருந்தபோதிலும் அவர்கள் இருவரும் இருந்த சூழ்நிலை அவரை சற்று யோசிக்கவைத்தது... அந்த நிகழ்வுக்கு இருவருமே பொறுப்பு என்றெண்ணியவர் அவர்களது விருப்பப்படியே நடக்கட்டும் என்று விட்டுவிட்டார்.... ஆனால் நடந்த பிரச்சினையில் ஷாகர் ஆதிரா இருவருக்குமே காதல் உண்டு என்று உணர்ந்தவர் ஷாகரிடம் கோபமாக பேசி அவர்களிருவரும் சேர்ந்து வாழ வழி செய்தார்.... அதோடு ஆதிராவும் ஷாகரும் தொடங்கிய சூப்பர் மார்க்கெட்டிற்கு தேவையான சில உதவிகளை மறைமுகமாக செய்தார்... இவ்வாறு தன் மகன் நன்றாத வாழவேண்டுமென அவர் அனைத்தையும் செய்ய எதிர்பாரா விதமாக ஆதிராவிற்கு இப்படி நடந்தது அவருக்கு வேதனையை அளித்தது.... அதனையே வசுமதியிடம் பகிர்ந்துகொண்டிருந்தார்...

வசுமதியின் ஒருவார கவனிப்பில் ஆதிரா தேறிவிட ஷாகரோ ஆதிரா இல்லாததால் வேலையில் பிசியாகிப்போனான்.... காலையில் ஆதிரா எழும் முன் கிளம்புபவன் இரவு அவள் உறங்கிய பின் தான் வருவான்.. பகல் முழுவதும் வசுமதியோடும் சில நேரங்களில் ஷாகரின் அத்தை பெண்களோடும் நேரத்தை செலவளிப்பவள் இரவு மருந்தின் வீரியத்தால் உறங்குபவளுக்கு காலையில் தான் விழிப்பு தட்டும்...... இராத்திரி ஷாகர் வருவதோ அவளை அணைத்தபடி அவன் உறங்குவதோ எதுவும் அவளுக்கு தெரியாது...

இவ்வாறு நாட்கள் நகர்ந்தது....
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN