படித்ததில் பிடித்தது...

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நம் வாழ்வில் அதிகம் உணர்ச்சி வசப்படாதவர்களாக இருக்க என்ன நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்?

#கரப்பான்_பூச்சி_கோட்பாடு

இது கூகுள் தலைவர் சுந்தர் பிச்சை அவர்களால் பகிரப்பட்ட கதை...

ஒரு உணவகத்தில் கரப்பான் பூச்சி ஒன்று எங்கிருந்தோ பறந்து வந்து ஒரு பெண் மீது அமர்ந்து கொண்டது. உடனே அந்த பெண் பயத்தால் கூச்சலிட ஆரம்பித்தார். மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை அவர் மீதிருந்து விலக்க முயற்சித்துக் கொண்டிருந்தார். அது வரை அமைதியாக இருந்த அவருடன் வந்தவர்களுக்கும் இப்பொழுது அந்த பதற்றம் பற்றிக்கொண்டது. மிகவும் கஷ்டப்பட்டு அவர் அந்த கரப்பானை தன் மீதிருந்து விளக்கி விட்டார்.

ஆனால் அந்த கரப்பான் இப்பொழுது வேறொரு பெண் மீது சென்று அமர்ந்து கொண்டது. இப்பொழுது இந்த பெண் அதே போல் கூச்சலிட ஆரம்பித்தார். அமைதியாக இருந்த மொத்த உணவகமும் இப்பொழுது அமைதியிழந்து காணப்பட்டது.

இதை பார்த்துக் கொண்டிருந்த பணியாளர் சூழ்நிலையை சரி செய்ய விரைந்தார். இந்த முறை கரப்பான் பறந்து சென்று அந்த பணியாளர் மீது அமர்ந்து கொண்டது. பணியாளர் தன்னை நிதானித்துக் கொண்டு தன் சட்டையின் மீது அமர்ந்திருக்கும் கரப்பானின் நடத்தையை கவனித்தார். அது தன் நகர்தலை நிறுத்தியதும், தன் விரல்களால் அதை பிடித்து உணவகத்திற்கு வெளியே வீசியெறிந்தார்.

நான் என் காபியை பருகி கொண்டே இதை பார்த்துக் கொண்டிருந்தேன். என் மனது இந்த நிகழ்ச்சியிலிருந்து சில கேள்விகளை கேட்டுக்கொண்டிருந்தது. அவர்களின் அந்த நடத்தைக்கு கரப்பான் பூச்சி தான் காரணமா? அப்படியெனில் அந்த பணியாளர் ஏன் அதன் மூலம் அமைதியிழக்கவில்லை? அவர் மட்டும் எந்த ஆரவாரமுமின்றி எப்படி அதை நேர்த்தியாக கையாண்டார்...???

எனவே அந்த பெண்களின் நடத்தைக்கு கரப்பான் பூச்சி காரணம் அல்ல. அந்த கரப்பான் ஏற்படுத்தும் தொந்தரவை கையாள முடியாத அவர்களின் #இயலாமை தான் அவர்களின் அந்த நடத்தைக்கு காரணம்.

இதன் மூலம் நான் உணர்ந்தது என்னவெனில், என் தந்தை அல்லது துணை அல்லது முதலாளியின் கடுமையான பேச்சு என்னை அமைதியிழக்க செய்யவில்லை, அந்த வாக்குவாதத்தை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது. என் அமைதியை குலைக்கிறது.

சாலையில் உள்ள போக்குவரத்து நெரிசல்கள் என்னை தொந்தரவு செய்யவில்லை, ஆனால் அந்த நெரிசல்களை கையாள முடியாத என் இயலாமை தான் என்னை தொந்தரவு செய்கிறது.

என் வாழ்வில் குழப்பத்தை சிக்கல்கள் உருவாக்குவதில்லை, அதற்கு நான் செய்யும் எதிர்வினை தான் உருவாக்குகிறது.

இதன் மூலம் நான் கற்றது

வாழ்வில் நான் எதிர்வினை ஆற்ற கூடாது, பதிலளிக்க வேண்டும்(I should not react in life, I should always respond).

நம் கட்டுப்பாட்டிற்கு அப்பாற்பட்டு நடக்கும் நிகழ்ச்சிகள் நம்மிடம் உள்ள அனைத்தையும் பறிக்கக்கூடும் ஒன்றை தவிர, அது தான் ஒரு சூழ்நிலைக்கு நாம் எவ்வாறு பதிலளி்க்கிறோம் என்பதை தேர்ந்தெடுக்கும் சுதந்திரம்.

வாழ்வில் நமக்கு நடக்கும் விடயங்களை நம்மால் கட்டுப்படுத்த முடியாது ஆனால் அதற்கு நாம் எப்படி பதிலளிக்கிறோம் என்பதை நம்மால் கட்டுப்படுத்த முடியும்...
 

Aarthi Murugesan

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Nice sis ellarukum thevai padura karuthai saatharanama alaga sollitinga ka
 

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
சந்தோஷமாக இருக்க ஒரு சிம்பிள் ஃபார்முலா ப்ளீஸ்?
( ப.தீர்த்தராமன், சென்னை)

எழுத்தாளர் ராஜேஷ்குமார் ஐயாவின் பதில்....


நான் என்றைக்கோ படித்ததை,இன்றளவும் கடைப்பிடித்து வருவதைத்தான்
இப்போது
உங்களுக்கு சொல்லப் போகிறேன்.

உங்களுக்குப் பிடிக்காத விஷயத்தைக்
கண்டு கொள்ளாதீர்கள்.

வேண்டாத விஷயங்களை எட்டிக்கூட
பார்க்காதீர்கள்.

நேரத்தை சாப்பிடும் மனிதர்களை
அறவே தவிர்த்து விடுங்கள்

தேவையற்ற கேள்விகளுக்கு பதில் சொல்லாமல்
மெளனமாக இருந்து விடுங்கள்.

சந்தோஷம் உங்களுக்கு

மிக அருகில்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN