பாகம் 3 யார் உன்னை கொன்றது

Vijay Navin

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
பிரியா, தன்னைதானே குத்தி கொள்வதை அறிந்திருந்த விஜய் அவளை தடுக்க, வகுப்பில் இருந்த மற்றவர்களின் கண்களுக்கு அவளது கையை விஜய், அவளது விருப்பமில்லாமல் பிடித்திருப்பதை போன்ற பிம்பமே தோன்றிருக்கும்



அந்த வகுப்பின் வேதியியல் ஆசிரியர் விஜயின் கைகளை பிரியாவின் கைகளிடமிருந்து தளர்த்திய மறுகணம், பிரியா தன் பேனாவினால் தன்னை தானே குத்திக்கொண்டாள்.



மொத்த வகுப்புமே பயத்தில் உறைந்து நிற்க, விஜய் தனது காலக்கடிகாரத்தில் அன்றைய தினத்தில் காலை 7 மணிக்கு செல்லும்படி அழுத்தியதின் விளைவாக!!!!!!! 7 மணிக்கு சென்றிருந்தான்.



விஜய் அங்கே குளித்துக் கொண்டிருந்தான், குளித்து வெளியே வந்தவன்



அம்மா!!!!



அம்மா!!! என்றான்



ம்ம்ம்ம்ம்ம்ம் சொல்லு டா?



இன்னைக்கு என்ன சிப்ட் வேலைக்கு போறீங்க என்றான்



ஒரு கணம் முறைத்த அவனது தாயார், அவனை கண்டு நேற்று என்ன சிப்ட் போனோம் என்றாள்



ஒரே தினத்தில் பல முறை, பல்வேறு நேரத்தில் அவன் பயணித்ததாலும்! எத்தனை முறை பயணித்தாலும் பிரியாவை அவனால் காப்பாற்றிட முடியாததால் என்னவோ, அவன் ஒரு விதமான குழப்பமும் மன சோர்வும் அடைந்திருந்தான்



தற்போது அவனது தாயார் அவனிடம் கேட்ட, கேள்விக்கூட அவனுக்கு புரிந்திருக்க வாய்பில்லை



ஏதோ போன்று தன் முன்னால் விழித்த,
தன் மகனை அன்போடு பார்த்த அவள், மார்னிங் சிப்ட் என்றாள்.



ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம்ம், என முனங்கியவன்
அம்மா!!!!!!! உன் போனை கொடு மா



ஏன் என்ற பார்வையில் போனை அவனிடம் கொடுத்தாள்



போனை வாங்கியவன், பிரியா அம்மா நம்பர் இருக்குல என்றான்



ஆமா, என்ன டா தெரியாத மாதிரியே கேட்குற என்றதும்



எதையும் கவனிக்காமல்
பிரியாவின் அம்மாவிற்கு கால் செய்தான்.



எதிர்முனையில் அவன் அம்மா எடுத்ததும்,
ஆண்டி நான் விஜய் பேசுறேன்
பிரியா Class mate



ம்ம்ம்ம்ம்ம் சொல்லுபா!
எப்படி இருக்க......



நான் நல்லா இருக்கே....
நீங்க?



ம்ம்ம்ம்ம் நல்லா இருக்கே பா.....,



ஆண்டி போனை பிரியா கிட்ட கொடுங்களேன் என்றதும்!



இருப்பா கொடுக்கிறேன்.



பிரியா குறுக்கிட்டு, சொல்லு டா என்றாள்



பிரியா, உனக்கு chemistry doubt என்று சொன்னல!!!!! School போகிறதுக்கு முன்னாடி எங்க வீட்டு வா என்றான்



அவன் உன்கிட்ட நான் எப்போ! உன்கிட்ட சொன்னேன் என்ற குழப்பத்தோடு வரேன் என்றாள்



8:30 முன்பாகவே அவனது தாயாரும் தந்தையும் வேலைக்கு சென்றிருந்தனர்.



அவன் தனது நோட்டில், இன்று ஒரு நாள் மட்டும் திரும்ப திரும்ப நடந்ததை நினைத்து எழுதிக்கொண்டிருந்தான்.



ஒருவேளை அவளது தந்தை செய்தது போலவே, அவளது உடலில் மைக்ரோ சிப் போன்ற எதையோ செலுத்தி அவளை தன்னை தானே குத்திக்கொள்ளும் படி செய்திருக்கலாமோ!!!!!! என நூலிழையில் அவனுக்கு பொறி தட்டிட, அப்படிதான் நடந்திருக்கும் என யூகித்தவனின் முன்னால் பிரியா நின்றிருந்தாள்



அவன் போனில் சொன்னது போலவே வீட்டிற்கு வந்திருந்தாள்.



டேய் எரும எரும.....
நான் எப்போ! உன்கிட்ட chemistry doubt என்று சொன்னேன் என்றாள்



உனக்கு doubt என்று எனக்கு தெரியும் அதான் கூப்பிட்டேன்



ஆமா doubt தான் என்று சினுங்கியவளை கண்டு, விஜய்



பிரியா......... உன் Dress லாம் கழற்றேன் என்றான்



அதுவரை சினுங்கிய முகபாவத்தில் அவனைக்கண்டவள், சற்று புரியாமல் என்ன சொல்கிறான் என கருவிழியை விரித்து அவனைக் கண்டாள்.



இல்லை, பிரியா..........
உன் Dress லாம் கழற்றேன்
என்றான்
திரும்பவும்.......



டேய்.........
இதுக்கு தான் என்னைய வீட்டிற்கு வர சொன்னியா! இதுதான் உன் லவ்வா? என முறைத்து அங்கிருந்து கிளம்ப எத்தனித்தவளை...... விஜய் வம்படியாக பிடித்து அவளது துப்பட்டாவை இழுத்தான்



அவள் தன் துப்பட்டாவை, அவள் சுடிதாரில் தனது ஊக்கால் அழுத்தமாக குத்தி இருந்ததால், அவன் அவளது துப்பட்டாவை இழுத்ததும் அந்த ஊக்கு அவளது மார்பில் குத்தி இரத்தம் சிறிது சிறிதாக கசிந்திருந்தது.



Sorry பிரியா! உன்னைய காப்பாற்ற வேற வழி தெரியவில்லை என அவன் உரைக்கவும், அவள் என்ன நடக்கிறதென்றே புரியாமல் அவனை பயத்தில் கண்டாள்.



அவன் அவளை தனது வீட்டின் பாத்ரூக்கு தூக்கி சென்று, அவளது ஆடைகள் அனைத்தையும் கழைந்து! ஒரு நாற்காலியில் அவளது கைகளையும் கால்களையும் கட்டி சவரின் கீழே அமர வைத்து தண்ணீர் திறந்து விட்டான்.



என்ன நடக்கிறதென்றே புரியாத பிரியா!
டேய் உன்னைய எவ்வளவு நம்புனேன் இதுக்குதான் லவ் பண்றேனு சொன்னியா என்று கண்ணீர் கலந்த குரலோடு அவனிடம் கேட்டிட.......



அவனது தலையை வேகமாக அருகில் இருந்த சுவற்றில் மோதினான், மோதியும் ஆத்திரம் அடங்காமல் தன் கைகளால் சுவற்றில் வேகவேகமாக குத்தினான்.



பயத்தோடு அவனை பார்த்த பிரியாவின் மேல் தொடர்ச்சியாக தண்ணீர் கொட்டியதால் குளிர தொடங்கி இருந்தது.



அவளின் ஓரத்திலேயே அமர்ந்தவன், அவள் குளிரால் வெளிர்த்து நடுங்குவதை ஒருவித கலக்கத்தோடு பார்த்திருந்தான்.



ஏழு மணி நேரம் அவளது உடலில் தண்ணீர் பாய்ந்திருக்கும், அவளது உடல் முக்கால் பங்கு வெளிர்த்து சதைகள் உறைந்து நரம்புகள் வெளியே தெரிய ஆரம்பித்திருந்தது.



இன்னும் ஒரு மணி நேரத்தில் அவனது பெற்றோர் இங்கே வந்திடுவார்கள் என்பதை உணர்ந்த அவன்



சமையலறையில் இருந்த உப்பை எடுத்து வந்து தண்ணீரை முதலில் நிப்பாட்டினான்.



அவளது உடலில் தொடர்ச்சியாக தண்ணீர் பாய்க்கப்பட்டதாலும், இரத்த ஓட்டத்தின் வேகம் குறைந்ததன் விளைவாகவும் அரை மயக்கநிலையில் இருந்தாள்.



அரை மயக்க நிலையில் இருந்த பிரியாவின் உடலில்
தற்போது அதிகமான இரத்த ஓட்டம் காணப்படும் இடமான, அவளது மார்பு பகுதியிலும் அவளின் பின் பகுதியிலும் அவளிற்கு வலிக்கும் படி உப்பை அழுத்தி தேய்த்தான்.



பேச தெம்பில்லாமல்
plz da என்னால முடியல............
என்னைய விட்றேன் என்றாள்



சற்று அவளது முகத்தை காதலோடு தடவியவன் தண்ணீரை மீண்டும் திறந்து விட்டான்.



பத்து நிமிடத்தில் மொத்த உடலிலும் இரத்தம் செல்வது முழுவதுமாக குறைந்து, சதைகள் உடலில் எலும்போடு ஒட்டி நரம்புகள் அப்பட்டமாக வெளியே தெரிந்தது.



இதே நிலையில் அவள் இன்னும் ஐந்து நிமிடம் இருந்தால் இறந்திடுவாள் அத்தகைய கணத்தில்
அவளின் கட்டுகளை விடுவித்து அவளின் கையின் நரம்புகளில் ஏதேனும் இரத்த திட்டுகள் இருக்கிறதா? என கொஞ்சம் கொஞ்சமாய் சோதித்து! அவளது தோள் பட்டை, அவளது மார்பு, முதுகு பகுதி, பின்புறம், கால்கள் என அனைத்து பகுதியிலும் பார்த்தவனுக்கு எவ்விடத்திலும் இரத்த திட்டுகள் தென்படவில்லை என்றதும் கோபத்திலும் ஆத்திரத்திலும் உரக்க சத்தமாக கத்தினான்.



மறுபுறம் அவள் அவனை கண்டவாறு, அவளின் இறுதி பார்வையை மூட சென்றிட, அவளை ஓங்கி அறைந்தான்.



சற்று சுய நினைவு வந்தவளை, அவனது படுக்கை அறைக்கு தூக்கி சென்று பெட்சீட்டில் சுழற்றி குளிருக்கு இதமாய் படுக்க வைத்தான்.



பிறகு அவளது அருகில் அமர்ந்து அந்த நோட்டில் இந்த முறை அவன் செய்ததையும், அவனால் அவள் எதற்காக தன்னை தானே குத்திக்கொள்கிறாள் என்பதை கண்டுபிடிக்க முடியாததையும் எழுதினான்.



எழுதிய கையோடு அவளின் நெற்றியை தொட்டு தடவியவனின் கண்கள், அவள் முடியாமல் கருவிழியை விரித்து தன்னை கண்டதை பார்த்ததும்



அவளின் பேனாவினாலேயே அவளை குத்தி கொள்வது! அவனின் மனதில் ஒரு கணம் வந்து சென்றது.



தீடீரென அவளது பேக்கை வேகமாக தூக்கி வந்தவன், அரை மயக்கத்தில் இருந்தவளின் கையில் அந்த பேனாவை கோடுத்து அவளின் இன்னொரு கையால் அந்த பேனாவில் மூடியை திறந்தான்.



திறந்ததும் அவள் கண்களை அசையாமல் காண, அதுவரை இளர் கருப்பு நிறத்தில் இருந்த அவளது கருவிழி
அடர் கருப்பாய் ஒரு நொடி மின்னிட, அவளே அவளது கண்ணை குத்திக்கொண்டாள்.



தன்னை தானே குத்திக்கொண்ட பிரியாவின் கைகளை விரித்து அவளின் இன்னொரு கையாலேயே, அந்த பேனாவை எடுத்தான்.



பிறகு அந்த பேனாவை பிடித்த கைகளை பார்த்தவனுக்கு, அந்த கையின் கட்டை விரலிலும் சுண்டு விரலிலும் மெல்லிய ஊசி குத்தியதை போன்ற தடம் ஏற்பட்டிருந்தது தெரிந்தது.



இருந்தாலும் அவனால் அவள் எதற்காக! தன்னை தானே குத்திக் கொள்கிறாள் என்பது புரிந்து கொள்ள இயலவில்லை...



சரி என அந்த பேனாவினை கவனித்தவனுக்கு அதை எழுதிடுவதை போன்று அழுத்தினால், சரியாக கட்டை விரல் பதியும் இடத்திலும்! சுண்டு விரல் பதியும் இடத்திலும்! சற்றே மெலிதான ஊசி வெளிவருவதை கண்டான்.



சற்று பேனாவின் உட்பக்கம் திறந்து பார்த்தவனுக்கு ;;மேலே கொடுக்கப்பட்ட பிளாஸ்டிக்கை எடுத்தால் சாதரண பென்ட்ரைவ் அல்லது ரிமோட்டின் உள்ளே இருக்கும் எலக்ட்ரிக் போர்ட் போன்ற ஏதோ ஒன்று அதில் இருந்ததை;; கண்டான்.



இத்தனை தெளிவாக யார் இவளை கொல்ல எத்தனித்திருப்பார் என தனக்கு தானே ஆச்சரியப்பட்டான்.



காலையில் மோதிய காரில் வந்தவனுக்கும், இந்த பேனாவை வடிவமைத்தவனுக்கும் சிறிதும் சம்பந்தம் இருந்திருக்காது,



இத்தனை தெளிவாக அவளை கொன்றிட எத்தனித்தவன், ஏன் காரில் திரும்புவும் அவளை கொன்றிட முயர்சிக்க வேண்டும் என நினைத்து



இதில் இருவர் சம்பந்த பட்டிருக்கிறார்கள் என்பதை யுகித்து கொண்டான்.



இப்போது நடந்ததை சிறிதும் வேறுபாடில்லாமல் அந்த நோட்டில் விஜய் எழுதிக்கொண்டிருக்க,
அதே நேரத்தில் அந்த வீட்டின் காலிங் பெல் அடிக்கப்பட்டது



நீங்கள் எப்போதாவது சிந்தித்தது உண்டா?
கருவில் முதலில் உருவாகும் உறுப்பு எது என்பதை?



இதயம் அதுவே முதன்முதலில் உருவாகிறது!
இந்த இதயத்தின் வேலை என்ன தெரியுமா?



இரத்தத்தை உடலில் மத்த பாகத்திற்கு கடத்துவது ஆகும்.



இந்த இரத்தம் அதிக வேகமாய் கடத்தப்பட்டால் High pressure என்கின்றோம்.
மெதுவாய் கடத்தப்பட்டால் low pressure என்கின்றோம்.



கடத்தப்படுவது இன்னும் தடைப்பட்டால் இரத்த திட்டுகள் ஏற்பட்டு முற்றிலும் இரத்தம் செல்வது தடுக்கப்படுகிறது.



இதையேதான் விஜய்
பிரியாவின் உடலிலும் முயர்சித்து பார்த்திருந்தான்.



அவன் பிரியா தன்னை தானே குத்தி கொள்வதற்கு, முதல் பாகத்தில் நாம் கண்ட நிகழ்வு போலவே, மெல்லிய மைக்ரோ சிப் அவளது நரம்பு மண்டலத்தில் செலுத்திருக்க வேண்டும்.



அது எப்போது அவளது தண்டு வடத்தை அடைகின்றதோ, அப்போது மொத்த உடலுக்கும்,
அந்த மைக்ரோ சிப் அவளை அவளே குத்திக் கொள்ளும் படி,
மூளை கட்டளை இடுவதை போன்றே செய்திருக்க வேண்டும்.



அதனாலேயே அவளை அவளே குத்தி கொண்டு இறந்திருப்பாள் என அவன் கணித்திருந்தான்.
அந்த மைக்ரோ சிப்பை கண்டு கொள்வதற்காகவே அவளை நீரிலே அமர வைத்தான்.



நாம் யவரேனும் பனி பிரதேசத்தில் முழுவதும் அகப்பட்டு கொண்டால் முழுமையாக நம் உடல் உறையும் முன்னரே இறந்திடுவோம்



காரணம்!



இரத்த ஓட்டம் தடைப்பட்டிருக்கும், அதே முறை தான் இங்கேயும் சுமார் ஏழு மணிநேரம் நீரிலே நனைந்தவளின் இரத்த ஓட்டத்தின் வேகம் முழுவதுமாக குறைந்திருக்கும்.



இதயத்தின் உந்தி தள்ளும் வலிமை முற்றிலும் குறைந்திருக்கும் நிலையில், இரத்தம் தன்னை தானே நகர்த்த இயலாத போது அதனுடன் பயணிக்கும் மைக்ரோ சிப்பை எப்படி சுமந்து செல்லும், இரத்த திட்டுகள் அந்த இடத்தில் ஏற்பட்டு நரம்புகள் வீங்க ஆரம்பித்திருக்கும், எந்த இடத்தில் நரம்புகள் வீங்குகிறதோ!!!!! அந்த இடத்தில் தான் மைக்ரோ சிப் இருக்கும்,
அந்த மைக்ரோ சிப்பை எளிதாக எடுத்திடலாம் என்று கணித்தே அவ்வாறு செய்திருந்தான்



இத்தனை ஆழமாய் யோசித்தவனுக்கு இன்னும் நினைவுக்கு வந்ததாய் தெரியவில்லை



தோட்டத்தில் வைத்து அவளை நாம் கட்டியபோது, அவள் தன்னை தானே குத்திக்கொள்ளவில்லையே என்பது



வருமா?




தொடரும் டிக் டிக் டிக் டிக் டிக்.............
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN