ஆதித்யா,

உன் கதை முடிப்பேன்;

என் வஞ்சம் தீர்பேன்;

உன் அதர்மங்கள் இன்றோடு முடியட்டும்.

ககா ககா ககா என பேய் சிரிப்பில் ஐந்தாவது முறையாக ஆதித்தியனின் நெஞ்சில் கூரிய வாளால் குத்தினாள் அவள்.

இறந்து விழுந்த ஆதித்யனின் உடலை நொடி கூட தாமதிக்காமல் ஒரு சிறுத்தை வாயால் கவ்விக் கொண்டது.

ஐயோ!!!என்னை விட்டு விடு என்ற படி கத்திய தன் மகனின் அலறலை கேட்ட லட்சுமி என்ன டா, என்ன ஆச்சி என பதற்றத்துடன் கேட்க,

ஆதித்தியன் ஆதே கனவுதான் மா,

இந்த முறையும் என்ன கொல்லுற மாதிரி கனவு கண்டேன்,என்றான்.

டேய் இப்பவும் அதே பொண்ணா,

உன் வயசுல உள்ள பசங்களுக்கு கனவுல சமந்தா,தமண்னா,கீர்த்தி னு ஹீரோயின் தான் வருவாங்க, உனக்கு தான் பேய் வருது இந்த லட்சனத்தில் DSP ட்ரேனிங் வேர போர என்று முறைத்தாள்.

அவன் பதிலுக்கு பேச வாயெடுக்க; ஆதித்தியன் கனவில் வந்த அவள் உடுத்திய கருப்பு நிற சேலை மட்டும் அசைந்து செல்வது போல் தோன்றியது.

அங்க என்ன டா! பாக்குற என அவன் அம்மா சிடுசிடுத்தாள், ஒன்னுல்லம்மா என திரும்பவும் அங்கே பார்க்க, இந்தமுறை கருப்பு நிற சேலையுடன் ககா ககா ககா என சிரிப்பு சத்தமும் வந்தது.

அவன் சுதாகரித்து அவன் மொபைலின் ஹெட்செட்டை எடுத்து காதில் மாட்டிக்கொண்டு அம்மா இன்னைக்கு என்ன சாதம் என்றான்.

மகனின் செயலில் குழப்பமடைந்த லட்சுமி என்ன இருந்தால் என்ன!

நீ சாப்பிட்டுதான் ஆகனும் போய் பிரச் பண்ணிட்டு வா என்றாள்.

சரி சரி சரி, லட்சுமி போய் வேலை பாரு என்ற படி பாத் ரூம் போனான்.

காலை உணவு முடித்து விட்டு அவன் போலிஸ் ஸ்டேசன் கிளம்பினான்...

அங்கே சென்றதும்,

குட் மார்னிங் மச்சா,

என்று ரவி கண்ணடித்தான்.

டேய் நீ வேற,நானே மூட் அவுட் ல இருக்கேன்.

ஏன் டா,நீ வேற படுத்துற;என்றான்

ஏன்டா என்ன ஆச்சு,என அடுத்தடுத்து மூன்று குரல்; ஒன்னும் இல்லை டா, வழக்கம் போல கனவு தான் டா. எல்லாம் உண்மையா நடக்கற மாறி இருக்கு டா என்றான் ஆதித்தியன்.

மச்சா என்ன ப்ராபுலம் (problem) உனக்கு. டேய்லி இப்படிதான் சொல்ற;உன் கனவுல என்ன நடக்குது புரியுற மாதிரி சொல்லு டா,என்றான் ரவி.

நான் சொன்னதே இல்லையா? டா,

ஏன் டா? நீ வேற உயிரை எடுக்குற;என கடிந்து கொண்டான்.

வேண்டுமென்றால்! நாம எக்ஸ்டார்சன் மிசினில் உன் கனவை ரெக்கார்ட் பண்ணலாமா?என ரவியின் அருகில் இருந்த சுஜீன் கூறினான்

நான் என்ன தீவிரவாதியாடா! சரி அதை விடு, அதை பண்ணி என்ன பண்ண போறீங்க என்றான்,ஆதித்தியன்

அது இல்ல மச்சா, கனவுல என்ன நடக்குதுனு நங்களும் பார்போம். எங்களால் ஆன ஏதும் ஹெல்ப் பண்ண ட்ரை பண்ணுவோம்ல என்றான் அவன்

இது ஆதித்தியன்க்கு சரியாய் பட்டது, அவன் சரி என்று சொல்ல வாயெடுக்க, அந்த போலிஸ் ஸ்டேசன் போன் அலரியது.

ஆதித்யன் போன் எடுத்து யார் என வினாவினான்

சார் சார் கேட்க்குதா...ட்ர்ர்ர் ட்ர்ர்ர் ட்ர்ர்ர்

இல்லை சரியா கேக்கல!

நான் .....ந்தினி நாங்க ....ஆர் யு ஹியர்? சார்

எஸ் எஸ் சொல்லுங்க.

நாங்க ஆர்ஹியலாஜிஸ்ட் டிப்பார்ட்ஜமென்ட் ல இருந்து பேசுறேன்.

வருகிற புதன் நாங்க கன்னியாகுமரி வரோம் சோ (So) நாங்க தங்குறதுக்கு இடம் ரெடி பண்ண; கமிஷ்னர் உங்க கிட்ட பேச சொன்னாரு என்றாள்,

சரி சரி என பதில் கேளாமல் கட் செய்தான்.

யார் என அவர்களில் ஒருவன் கேட்க, ஏதோ ஒரு போறம்போக்கு என முடித்தான்.

திரும்பவும் ரவியின் அருகில் இருந்த ரெனிஸ் தொடரந்தான். மச்சா நாம உன் கனவை ரெக்கார்ட்

பண்ணலாம் டா.

இந்த ஒன் வீக் நமக்கு இந்த யாரும் வராத ஸ்டேசன்ல தான டா,

டே அன்ட் நைட் ,

ட்ரேனிங் போட்டு இருக்காங்க.

நாம எல்லாரும் சேர்ந்து உன் கனவை என்னனு பாக்கலாம்.

அட்லீஸ்ட் உன் பயமாவது குறையும் டா என்றான்.

சரி மச்சான் இன்னைக்கு நைட் பாத்துடலாம் நானா இல்லை அந்த கனவா என்று சொல்லி சிரித்தான் ஆதித்யன்

எதிர்பார்த்தப்படி இரவும் வந்தது,

அந்த மிசினில் உள்ள சிவப்பு ஒயரை அவன் நெற்றியிலும் நீல ஒயரை பின் தலையிலும் மாட்டினார்கள்.

ஆதித்தியன் தூங்கி 5மணி நேரம் ஆனது.இருந்தாலும் எதிர்பார்த்த எதுவும் நடக்கவில்லை. சலிப்போடு

மிசினை ஆப் பண்ண ரவி சென்றான்

மிசினில் கனவு ஓட ஆரம்பித்தது...

வெளிர் நிறம் பொருந்திய நிள தந்த்ம் கொண்ட ஒரு முழுதுயர்ந்த யாணையை ஓரே மிதியில் எறும்பைபோல் நசுக்கும் விட்டம் கொண்ட தூண்களை வரிசையாய் நட்டு வளர்க்கப்பட்ட நீளமான ஆனால் குறுகலான ஆஸ்தான மண்டபத்தின் மத்தியில்,

பாவப் பிணங்களால் அடுக்கப்பட்டு... சாபங்களின் ஓஓஓஓஓஓ என இசையினால் நிரம்பிய நரகத்தின் குகையில் வழி தவறி வந்த சிறு மின்மினி மின்னுவதை போல்,

பற்களெல்லாம் இரத்தம் சொட்ட சொட்டா நடந்த இரு சிறுத்தைகள் நடுவில் ஒருவள் கருநிற புடவையுடன் முகத்தில் புன்னகையுடன் நடந்து வந்தாள்...

அவள் முகத்தை பாதி மறைந்திருந்தது கூந்தல்.அவள் தலையில் ஒரு கீரிடம் சூடப்பட்டிருந்தது.

அவள் ஒரு தூணினின் அருகில் நின்றாள். அங்கேதான் ஆதித்தியன் கட்டப்பட்டிருந்தான்,சங்கிலியால்.

ஆதித்தியன் ஏதோ பேச,

கரு நிற பெண் உன் கதை முடிப்பேன்...

என் வஞ்சம் தீர்பேன்.

என சொல்லி பேய் சிரிப்பில் கத்தியால் குத்தி சிறுத்தைக்கு இரையாக்குகிறாள்.

வழக்கம்போல ஆத்தியன் கத்திகொண்டு எழுந்திருத்தான்.

அவனை ஒரே திகிலோடு பார்த்திருந்தார்கள் அவனது நண்பர்கள்.

மச்சா நிஜமா பயமா இருக்குடா எங்களுக்கே...

என விழிபிதுங்கி அவனை பார்த்தனர்,அப்போ எனக்கு எப்படி இருக்கும் என பதில் கூறினான்.

மச்சா என் கனவுல வரது யாருனு கண்டுபிடிக்கனும் என்றான். ஆதித்தியன்

பக்கத்தில் இருந்தவன் டேய் அந்த கனவு சும்மா கூட வந்து இருக்கலாம்ல என்றான்.

டேய் சும்மா ஒரு கனவு டேய்லி வருமா...

சொல்லு என்றான் ஆதித்தியன்...

ரவி நடுவில் குறுக்கிட்டு.

காரணம் இருக்கோ இல்லையோ,நமக்கு இந்த ஒன் வீக் எந்த வேலையும் இல்லை, வெறும் ட்ரேனிங் தான்; சோ நாம அவன் கனவை வெறும் கனவா, இல்லை பூர்வ ஜென்மமா என்று கண்டுபிடிக்கலாம் என சிரித்தான்.

சரி காலையில் பேசலாம் என படுத்தனர் அனைவரும்.

விடிந்ததும்!

ஆதித்தியனும் மற்ற அனைவரும் அந்த வீடியோவை பார்க்க ஆரம்பித்திருந்தனர்.

ரவி டேய், இது ஏதோ ராஜா காலத்துல வர்ர கெட்டப் மாரி இருக்கு டா!

ஒரு வேளை அவனுக்கு வர்ர கனவுக்கு ஏதும் ரீசன் இருந்த,

கண்டிப்பாக அந்த பொண்ணு ராணியோ இல்ல இளவரசியாகதான் இருக்கனும் என்றான் ரெனிஸ்

சரி அப்படியே முடிவுசெய்து தேடி பாக்கலாம், என்று அவர்கள் அவர்களுக்கு தெரிவதை வைத்து கணிக்கலாம் சரியா என்றான் ரவி...

சரி நானே ஆரம்பிக்குறேன்,

சிறுத்தையை வளர்த்த ராணி பத்தி படிச்சி இருக்கீங்களா.

ரோம் நாட்டு அரசி அவள் பேயரு கூட கிளியோ இல்ல எலியோ னு ஆரம்பிக்கும்,அவளும் இரண்டு சிறுத்தை வளர்பாள் டா! அவளுடைய பாதுகாப்பே அந்த சிறுத்தைகள்தான்... என ரவி சொல்லிக்கொண்டிருக்க,

இன்னொருவன் அந்த பொண்ணு கிளியோப்பட்ராவா இருக்காது,என்றான்.

ஏன் என அனைவரும் அவன் மூஞ்சை பார்த்தனர்

கிளியோபட்ரா கருப்பா இருக்குமாம் டா!இந்த பொண்ணு சிகப்பா இருக்கிறாள் டா, அதான் அவளா இருக்காது என்றேன்

அவ கருப்பா இருப்பானு உனக்கு எப்படி தெரியும் என சிரித்தனர்.

நான் சூலியஸ் சீசர் பற்றி படிக்கும் போது அவளையும் தேரிஞ்சிக்கிட்டேன் என்றான் அவன்

சரி அப்போ யாரா இருக்கும் என ஆதித்யன் வினாவினான்

மச்சா எகிப்துலயும் ஒரு இளவரசி சிறுத்தே வளர்ப்பாங்க டா!

என்றான் ரவி

அந்த இளவரசி இருக்காது டா,என்றான் ஆதித்யன்.நானும் படிச்சி இருக்கேன்,இர்பானா தான அந்த இளவரசி பெயர்.

அந்த இளவரசிக்கு தான் விசம் கொடுத்து 16 வயசுல கொன்னுருவாங்க டா!என்றான். கனவுல வந்த பொண்ணுக்கு 21 வயது இருக்கும் டா என்றான்.

சரி சரி குழம்பாதிங்க...

திரும்பவும் அந்த வீடியோ பார்கலாம்...

நல்லா கவனித்து பார்க்கலாம்...

ஏதும் குலு கிடைச்சா யூஸ் ஆக இருக்கு அல்லவா என்றான்...

ரவி

அனைவரும் திரும்பவும் வீடியோவை கவனமாக பார்க்த்தனர்...

கனவில் வரும் ஆதித்யனுக்கு பின்னால் புலி சின்னம் இருப்பதை பார்த்தனர்...

அதேபோல் அந்த பெண்ணுக்கு கழுத்தில் மீன் சின்னம் பச்சை குத்திருப்பது இருப்பது தெரிந்தது...

ரவி புலி சின்னம் ஸ்பார்டன் யோடது டா என ஆர்வ கோளாரில் கத்த,

டேய் கனவில் வந்தவள் தமிழில் பேசினாள்.

அவள் எப்படி ஸ்பார்டன் நாட்டோடவளாய் இருப்பாள் என்றான் ஆதித்தியன்.

அட ஆமால,என்று சிரித்தான்,ரவி.

முதல் நாள் முடிந்தது.........

அடுத்தநாள்,அனைவரும் ஒருசேர இருந்தனர்,மச்சா தமிழ் கிங்டம்யில் புலி சின்னம் யாரோடது என ரவி கூறியதும், அனைவரும் சொன்னது.

அட...சோழா கிங்டம்...

ஆமா டா...சரி அதுல வர்ர ராஜா இளவரசர் பேரை எல்லாம் கூகுளில் ஒவ்வொருவரின் பேராய் பார்க்கலாம் என்ற படி...பார்த்தனர்

சரி இதுல அவன் சோழ வம்சமா இல்லை அவள் சோழ வம்சமா என எப்படி நமக்கு தெரியும் என்றான் ரவி

ஆதித்தியன் குறுக்கிட்டு அந்த பொண்ணு கழுத்துல மீன் அடையாளம் இருக்கு,அது பாண்டியரோட சின்னம் என்று கேள்வி புட்டுருக்கேன். சோ மெக்சிமம் (maximum) அவள் சோழ வம்சம் ஆக இருக்காது என்றான். என் பெயரிலேயே தேடி பாரு என்றான்,

உன் பெயருலதான் அவன் இருப்பானு எப்படி நினைக்குற என்றான்.

மச்சா எனக்கு அப்படித்தான் தோனுது.அதான் சொல்றேன் என்றான் ஆதித்தியன்.

கூகுளில் வாசித்து விட்டு சுஜீன்,

ஆதித்தியனிடம் மச்சான் உன் பேருல இரண்டு பேரு இருக்காங்க...ஒருத்தர் ராஜா இன்னொருத்தர் இளவரசர்,

நீ யாரா இருக்கும் னு கெஸ் பண்ற என்றான் சுஜீன்,

டேய் வெறுப்பேத்தாம இரண்டு பேரோட லைவ் பத்தியும் படிக்கலாம் என்றபடி முறைத்தான்...

ரவி வாசிக்க தொடங்கினான்...

முதலில் நாம பாக்க போறது ஆதித்த கரிகலன்...இவன் முற்கால சோழர்களில் ஒருவன்...இவன் தான் இமயமலை வரை வென்றவன்...அநேகமாக இவனாக இருக்காது உன் கனவில் வருவது.

ஏன்னு சொல்றேன் கேளு...

இவன் 70 வயது வரை உயிரோடிருந்திருக்கிறான் டா...சோ இவனா இருக்க வாய்ப்பு இல்லை...

சரி இன்னொருத்தனையும் பார்கலாம் என்றபடி...மச்சா இவன் இராஜ இராஜ சோழனின் அண்ணன் டா

அமா டா இவன் பாதிலேயே செத்து பொய்ட்டான் டா என்ற படி ஆதித்தியனின் மூஞ்சை பார்த்தான். ரவி சற்று நிதானித்து,இது நீ ஆக இருக்க வாய்ப்பு இல்ல டா,

ஏன்னா உன் பெயர் வெரும் ஆதித்தியன் தான என்றான்.

டேய் என் முழு பெயர் ஆதித்த கரிகாலன் தான் டா என்றான்...

எல்லாரும் அப்படியே கழுத்தை யுடேன் அடித்து அவனை பார்த்துவிட்டு சரி யார் கொன்னானு பாரு என்றனர்...

அவன் சிறுது வாசித்து விட்டு இதுல தெளிவா போடல...டா...என்றான்

சரி வேற வெக்சைட்ல தேடி பாரு என்றனர்...கிட்ட தட்ட எல்லா வெப்சைட்லயும் தேடி பார்த்து குறிப்பிட்ட தகவல் கிடைக்கவில்லை...

இரண்டாம் நாளும் முடிந்தது...

மூன்றாம் நாள் நண்பர்களில் ஒருவன் ரெனிஸ்...

மச்சா எனக்கு தம்பி ஒருத்தன் இருக்கான்

அவன் சோழர்களை பற்றிதான் ஆரய்ச்சி செய்கிறான்...

அவனுக்கு தெரிந்தாலும் தெரியலாம்...

அவனை கூப்பிட்டு இருக்கேன் இன்னும் கொஞ்ச நேரத்துல வந்துடுவான் என் கூறி முடித்தான்...

ரெனிஸ் சொன்னவனும் வந்தான்...

ஏதோ கேக்கனும் என்று சொன்னீங்க!அண்ணா கேளு என்றான்...

சரி என்றபடி

டேய் தம்பி

ஆதித்த கரிகாலன் சோழன் எப்படி இறந்தான் தெரியுமா...என்றான்...

அவன் தம்பி

அவனை கொலை செஞ்சிட்டாங்களே...

ஏன் கேக்குற என்றான்...

நான் உன்கிட்ட கேள்வி கேட்டா

நீ என்கிட்ட கேக்குறியா என கண்டித்தான் ரெனிஸ்

சரி அண்ணா...அவனை கொலை செஞ்சிடுவாங்க அண்ணா...

பட்

யாருனு யாருக்குமே தெரியாதே என்றான்...அதை தான் இப்ப வரைக்கும் நான் தேடிட்டு இருக்கேன்...

சரி....என இழுத்து விட்டு அவனை பத்தி சொல்லு...என்றான் ரெனிஸ்

வந்தவன் பிளாஷ் மானிட்டரில்,வீடியோவை ஓடவிட்டு விளக்க ஆரம்பித்திருந்தான்.

பிற்கால சோழர்களின் மூன்றாவது அரசர் சுந்தர சோழர்,அவரோட ஆட்சி காலத்துலத்தான் சோழர் ஆட்சி செலுத்திய பெரும்பாலான இடங்கள் பல்லவர்கள் மற்றும் சாளுக்கிய மன்னர்களால் கைப்பற்றப்பட்டது... அண்ணா

ஒரு கட்டத்துல பண்டிய மன்னனால் சோழ வம்சமே அழியுர நிலைமைக்கு வந்தது,

அப்போதான் ஆதித்த கரிகாலன் தன் படையை தலைமை தாங்கி போருக்கு போனான்,

குதிரையின் மேல் கொள்ளை பிரியம் கொண்ட அவன் ஏழு நூறாயிரம் குதிரைபடைகளுடன் போருக்கு சென்றான்.

அப்போது அவனுக்கு 15 வயதுதான்,அவன் அவங்க அப்பா மாதிரி இரக்க குணம் கொண்டவனல்ல, அவன் முதல் போரில் சாளுக்கிய மன்னனை தோற்கடித்து, அதன் அனைத்து சாளுக்கிய வீரர்களையும் சாளுக்கிய மக்களையும் கொன்று அவர்களின் தலையையும் வெட்டி அவர்களின் நாட்டின் எல்லையில் மதில் எழுப்பினான்.

அதற்க்கான காரணம் இப்போது தேவையில்லை அண்ணா என்ற படி

அடுத்த வெற்றி பல்லவர்களுக்கு எதராக, இவன் போர்திறனை பார்த்து பல்லவ படைகள் இவன் பக்கம் வந்ததாகவும் அதிக வரலாற்று அறிஞர்கள் கருதுகிறார்கள்...என்ன இருந்தாலும் பல்லவர்களுக்கு எதிராக இவன் வென்றான்,

அடுத்த வெற்றி பண்டிய மன்னனுக்கு எதிராக,

ஆதித்த கரிகாலன்..,

பண்டியனுக்கு எதிராக போர் தொடுத்தான்,

ஆதித்தியாவை விட ஒன்பது மடங்கு படைதிறனும், தந்திரமும் பொருந்திய பாண்டிய மன்னனிடம் முதல் போரில் தோல்வி அடைந்தான், ஆத்திரத்தில் தன் பாட்டனார் பெரிய வேலாரை சேர்த்து திரும்பவும் போர் தொடுத்தான் இந்த முறையும் தோல்வி,

இதனால் கோபமான ஆதித்த கரிகாலன்,அன்றிரவே பாண்டியரின் அரண்மனைக்குள் யாரும் அறியாமல் நுழைந்து பாண்டிய மன்னன் மற்றும் அவனது சந்ததி அனைத்தையும் சதி செய்து வாளுக்கு இரையாக்கினான்,அவனுடைய ஒரு பெண்ணை தவிர,

அந்த பெண்ணை தன் வீரர்களுக்கு பரிசளித்தான் என்று சிலர் கூறுகின்றனர்,

சிலர் அவளை சித்திரவதை செய்து கொன்றிருக்க கூடும் என கருதுகின்றனர்,

ஆனால் எங்கள் ஆராய்ச்சிப்படி அவள் உயிரோடு எரிக்கப்பட்டிருக்கிறாள். அதுவும் தந்தை தாயின் முன்னில் என்று நினைக்கிறோம்.

பாண்டியமன்னனின் உடலை ஏழாய் கிழித்து எறிந்ததால் அவனுக்கு வீர பாண்டியன் தலைகொண்ட சோழன் என்ற பெயர் வந்தது...

இது நடந்து ஒரு வருடத்தில் அவனும் இறந்துவிட்டான்.அவன் உடல் ஐந்து முறை வாளினால் குத்துபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது...

இதை கேட்ட நிகழ்கால ஆதித்தியன்,

ஆமா டா ஐந்து முறை குத்தினாள் டா என்றான்.

ஆதித்தியன் இந்த முறை ரெனிஸ்க்கு எதிராக குறிக்கிட்டு அவள் பெயர் என்ன என்றான்

அவள் என்றால் யார் என்றான் எதிரே

கரிகாலன் எரித்த இளவரசி டா என்றான் பதிலுக்கு

அவளுக்கு பல பெயர் உண்டு...

அவள் பிறந்ததில் இருந்து யஸ்வந்தியினி என்று அழைக்கப்பட்டாள் எனவும்... ஆதித்தியன் அவளை சப்தலிக்கா என்று அழைப்பான் எனவும் அறிஞர்கள் கூறிகிறார்கள்

அவளுக்கு என்று அடையாளம் ஏதும் இருந்ததா? என்றான். அதுதான் ரொம்ப சூவாரசியமானது அண்ணா என எதிரே சொல்ல.

சரி என்ன அது என கேட்டான்...

எதிரே பதிலுக்கு

அவள் முகம் முக்கால் வாசி கூந்தலால் மறைக்கப் பட்டிருக்கும் என்றும்

அவள் கழுத்தில் மீன் சின்னம் பச்சை குத்தப்பட்டிருக்கும் என்றும்

கண்கள் நீல நிறத்தில் இருந்ததாகவும் அதனாலே அவள் பெயர் யஸ்வந்தியினி வைக்கப்பட்டது...என்றதும் சிலர் கூறினர்

மேலும் பயத்தில் பேச தோனாமல் ஏதோ போல் நின்றான் அடுத்து நண்பனிடம்

மச்சா அவன் சொன்னது கரெக்ட் டா...

அப்படியே அச்சு அசலா அப்படியே இருந்தாள் மச்சா கனவுல..வந்தவள்,

என்ன அவள் முகத்தை மட்டும் பாக்க முடியவில்லை என்றான்...

டேய் லூசு பயலே...அவன் சொன்னது கரெக்ட் ஆக இருந்தாலும்...அந்த பொண்ணு தான் அவனை கொலை பண்ணலல என்றான்...ரவி

மச்சா டேய்.....அவன் எப்படா சொன்னான்.....அவள் கொலை பண்ணலனு....,

அவன் தெரியாதுனு சொன்னான் டா.....

அவன் சொன்னது எல்லாமே கரெக்டா என் டீரிம் ஓட மேட்ச் ஆகும் போது.....

அவள் கொலை பண்ணுணதும் உண்மைதானே என்றான்.....

அப்போ என்னையும் பழி வாங்குவாளா.....என ஒருவித பயத்துடன் புலம்பிக்கொண்டே.......

அப்படி பழி வாங்குறதுக்கு என்ன ரீசன் இருக்கும் என உளறினான் ஆதித்தியன்.....

எஸ் கியூஸ் மீ என்ற பெண் குரல்...

ஆதித்தியன் எஸ் யாரு நீங்க என்றான்.....

சார் நான் சப்திகா.....கமிஸ்னர் தான் சொன்னாங்க.....நீங்க எங்களுக்கு தங்குறதுக்கு இடம் ரெடி பண்ணி இருக்கீங்க என்று.....

நீங்க யாரு தெரியாதே என ரவி கிண்டல் செய்தான்

போன் பண்ணனே சார் என்றதும்

ஆதித்தியன்

ஓ.....போன் பண்ணுது நீங்க தான...

ஆமா சார்...

உங்க அடையாள அட்டையை காமிங்க.....என்றான்

சப்தி ஆதித்தியனிடம் நீட்டினாள்

ஆதித்தியன் அதை பார்த்ததும் பெயர் ஏன்? யஸ்வந்தியினி போட்டு இருக்கு என மெல்லிய குரலில் கேட்டான்

வீட்டுல வச்ச நேம் யஸ்வந்தியினி என்றாள்.....

யஸ்வந்தியினி யா? என பயத்தில் அவன் கத்தினான்

எல்லாரும் சற்று பயத்தில் திகைத்து நின்றனர்.....

ரவி மட்டும் சுதாரித்து உங்க கழுத்துல என்ன.....அழகா இருக்கே என்றான்

அதுவா சார் நான் பொறக்கும் போதே இருக்கு என அந்த மீனை காண்பித்தாள்.....

இதை பார்பதும் ஆதித்தியன் மயங்கியதும் சரியாய் இருந்தது...

2.யஸ்வந்தினி பாகம் 2

Author: Vijay Navin
Article Title: 1.யஸ்வந்தினி முதல் பாகம்
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.