தங்கள் லக்கேஜில் தன் உடைகளை அடுக்கிக்கொண்டிருந்த ஆதிராவை பின்னாலிருந்து அணைத்த ஷாகர் அவள் தோள் வளைவில் முகம் பதித்தபடி தன் தலையால் அவள் செல்லமாக முட்டியவன்
“ஹேய் ஹோட்டி என்ன பண்ணிட்டு இருக்க????”
“ட்ரெஸ் பாக் பண்ணிட்டு இருக்கேன் மினியன்...”
“ஹேய் அப்படி கூப்பிடாதனு உனக்கு எத்தனை தடவை சொல்லுறது??”
“நானும் உங்களை அப்படி கூப்பிடாதீங்கனு சொன்னது நியாபகம் இருக்கா??”
“அது நீ பக்கத்துல இருக்கும் போது எனக்கு அந்த பெயர் தான் நியாபகம் வருது.. நான் என்ன பண்ணட்டும்??”
“எனக்கும் நீங்க பக்கத்துல இருக்கும் போது அப்படி தான் கூப்பிடத்தோனுது... நான் என்ன பண்ணட்டும்??” என்று ஆதிராவும் அவன் போல் கூற அவளை தன்புறம் திருப்பியவன் அவள் இடையை தன் கைகளால் வளைத்து
“அந்த பெயரை சொல்லுற வாய்க்கு இப்போ பனிஷ்மண்ட் கொடுத்திடலாம்...” என்றபடி அவள் தடுக்கும் முன் அவள் இதழ்களை கவ்வியவன் அதை ரசித்து புசித்ததோடு நில்லாது அடுத்தகட்டத்துக்கு சென்று தனக்கு வேண்டியதை பெற்ற பின்னே அவளை விட்டான்..
கூடல் முடிந்ததும் குளித்து முடித்து வந்தவளை மீண்டும் ஷாகர் கைபிடித்து இழுக்க அவனை தள்ளிவிட்டு எழுந்து நின்றவள் அவனை முறைக்கத்தொடங்கினாள்..
“வாட் ஹேப்பட் ஹோட்டி..?? வய் என்கிரி??”
“இன்னும் எத்தனை தடவை நான் குளிக்கிறது??”
“உன்னை யாரு ஹோட்டி அவசரப்பட்டு குளிக்கச்சொன்னா..??”
“ஓ.. அப்போ சாருக்கு ஊருக்கு போற ஐடியாவே இல்லையா??”
“எனக்கு சுத்தமாவே இல்லை... நீ தான் போகனும்னு அடம்பிடிக்கிற... இப்ப நீ ம்னு ஒரு வார்த்தை சொல்லு நான் உடனே டிக்கெட்டை கேன்சல் பண்ணிர்றேன்..”
“ஏது.. டிக்கட்டை கேன்சல் பண்ண போறீங்களா?? நோ வே..ஏற்கனவே இரண்டு வாரம்னு பிளான் பண்ணதை மூன்று வாரமாக்கிட்டீங்க.. இதுக்கு மேல முடியாது.... கட்டாயம் கிளம்பியே ஆகனும்..”
“நீ ரொம்ப மோசம் பேபி.. நான் எவ்வளவு ஆசையாக இருந்தேன் தெரியுமா?? நீ என்னோட பீலிங்சை புரிஞ்சிக்கவே மாட்டேங்கிற??”
“என்னங்க இது.. சின்னபிள்ளை மாதிரி அடம்பிடிக்கிறீங்க...??”
“ஆமா நான் சின்னபிள்ளை தான்...
பழகும்பொழுது
குமாியாகி என்னை
வெல்வாய் பெண்ணே
படுக்கை அறையில்
குழந்தையாகி என்னைக்
கொல்வாய் கண்ணே...
காதல் சடுகுடு கண்ணே தொடு தொடு...”
“வரவர உங்க லொள்ளுக்கு அளவே இல்லாமல் போச்சு... மொதல்ல ஊருக்கு கிளம்புற வழியை பாருங்க..”
“முடியாது முடியாது முடியாது .” என்று ஷாகர் கூற இடுப்பில் கை வைத்து ஷாகரை முறைத்தபடி ஆதிரா
“ஏன்...”
“ஏன்னா மச்சான் மச்சான் உன் மேல ஆசை வச்சான்
வச்சு தச்சான் தச்சான் உசுரோடு உன்னை தச்சான்...”
“அதுக்கு...”
“அப்பாம்மா வெளையாட்டை வெளையாடிப் பாப்போமா
செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம் ஏய் செல்லம்
அச்சாரம் போட்டப்பின்னே அச்சம் எதுக்கு
பரிஷம் போட்டதுமே பெத்துக்கலாம்
தப்பே இல்லை ஏய் தப்பே இல்லை அய் அய் தப்பே இல்லை..”
“ஓ மை காட்... என்னதாங்க இப்போ உங்களுக்கு பிரச்சனை...?? இப்போ நீங்க கிளம்ப போறீங்களா இல்லையா??” என்று கேட்ட ஆதிராவை கைபிடித்து இழுத்து தன் மீது போட்டுக்கொண்டவன்
“மறுவார்த்தை பேசாதே... மடி மீது நீ தூங்கிடு... இமை போல நான் காக்க கனவாய் நீ மாறிடு... மயில்தோகை போலே இதழ் உன்னை வருடும்.. மனப்பாடமாய் உரையாடல் நிகழும்....”
“ப்பா.. பாட்டெல்லாம் தூள் பறக்குது?? இன்னும் சாருக்கு ரொமேன்ஸ் மூட் மாறலையா??”
“அது எப்படி ஹோட்டி மாறும்... பக்கத்துல இப்படியொரு அழகான ஹோட்டான ஸ்வீட்டான ஒரு பொண்டாட்டியை வச்சிக்கிட்டு ரொமென்ஸ் பண்ணாட்டி தான் தப்பு...”
“ஐயோடா.. மிஸ்டர். ஷாகர்... நமக்கு ப்ளைட்டுக்கு இன்னும் டு ஹவர்ஸ் தான் டைம் இருக்கு... இன்னும் பேக்கிங் முடியலை... ஒழுங்கு மரியாதையா வந்து பேக்கிங்கிற்கு ஹெல்ப் பண்ணுங்க??”
“முடியாது.... முடியாது...நான் சொன்னதை நீ கேட்காததால என்னால ஹெல்ப் பண்ண முடியாது...”
“அப்படியா அப்போ சரி... என்னோட திங்க்ஸ் எல்லாம் நான் பேக் பண்ணிட்டேன்.. நான் ஊருக்கு கிளம்புறேன்.. உங்களுக்கு எப்போ தோனுதோ அப்போ வாங்க.. அதுவரைக்கும் இங்கேயே தனியா இருங்க..” என்று கூறியவள் அவனை தள்ளிவிட்டு எழுந்தவள் மீண்டும் பேக்கிங் வேலையில் இறங்கிவிட ஷாகரோ
“உன்னை விட்டா யாரு எனக்கில்லை பாரு... பாரு... என்ன கண்டேன் நானும் உனக்குள்ள”
“அப்படினா போய் குளிச்சிட்டு வந்து பேக்கிங்கில் ஹெல்ப் பண்ணுங்க...” என்று ஆதிரா கூற அவளை முறைத்தபடி டவலை எடுத்துக்கொண்டவன் அதை கழுத்தை சுற்றி போட்டுக்கொண்டு
“உன்ன நினைச்ச பாவத்துக்கு இது தான் தண்டனையா???” என்று பாடியபடி அவன் குளியலறைக்கு செல்ல ஆதிராவோ அவன் செயலில் சிரித்தபடி தன் வேலையை தொடர்ந்தாள்...
ஷாகர் தங்கள் திருமணம் முடிந்ததும் ஆத்வியின் துணையோடு ஆதிராவை யாருக்கும் தெரியாமல் கடத்திக்கொண்டு சுவிஸ்ஸிற்கு பறந்துவிட்டான்.. வீட்டினரை சமாளிக்கும் பொறுப்பை தன் தந்தையிடம் விட்டிருக்க அவனுக்கு வேறெந்த பிரச்சினையும் இல்லை...
ஆதிராவிற்கோ அவனது செயல் சற்று அதிகபடியாக இருந்தாலும் அவளுக்கு இது பிடித்தே இருந்தது...
சுவிஸ் சென்று இறங்கிய பின்பு தான் தாங்கள் இரண்டு வாரங்கள் ஹனிமூன் கொண்டாடப்போவதாக கூறினான் ஷாகர்....
இரண்டு வாரமும் பாதி நேரம் ஊர் சுற்றியும் மீதிநேரம் தங்களுக்கான நேரமென்று கழித்தவர்களுக்கு அந்த இரு வாரங்களும் வாழ்வில் மறக்கமுடியாததொரு சம்பவமாய் மாறிப்போனது..
ஆதிராவும் ஷாகரின் அதீத காதலால் சற்று திக்கு முக்காடித்தான் போனாள்.. தூரமாயிருந்த போதிலேயே அவன் அன்பில் மயங்கியிருந்தவள் இப்போது முழுதாய் அவன் வசமாகிவிட்டாள்...
அதுவும் அவன் சந்தரப்பம் கிடைக்கும் போதெல்லாம் அவள் மனம் கவரும் விதத்தில் லவ் யூ பேபி என்று கூறும் போது அவளுள் இனம்புரியாதவொரு மகிழ்ச்சி...
அவள் இழந்த மொத்த மகிழ்ச்சியையும் இந்த இரண்டு வாரத்திலேயே அவன் மீட்டுக்கொடுத்திருந்தான்.. அந்த இரு வாரங்களும் அவர்களின் காதலும் கூடலும் மட்டுமே அரங்கேறியது...
இரண்டு வாரம் முடிந்ததும் புறப்படத்தயாரானவளை தாஜா பண்ணி மேலும் ஒரு வாரத்தை நீடித்தான்...
இப்போது மீண்டும் ஷாகர் அடம்பிடிக்கவும் தான் அவனை கிளப்பிக்கொண்டிருந்தாள் ஆதிரா..
குளித்து முடித்து வந்தவன்
“ஏன் பேபி.. இப்போ ஊருக்கு போக என்ன அவசரம்?? இன்னும் வன்வீக் நம்ம ஹனிமூன் ட்ரிப்பை எக்ஸ்டென்ட் பண்ணலாமே..”
“அங்க போட்டது போட்டபடி வா ஓடிப்போகலாம்னு சுவிஸ்ஸிற்கு இழுத்துட்டு வந்தது சாருக்கு நியாபகம் இருக்கு?? மாமாவும் ஆத்வியும் எத்தனை நாளைக்கு தான் சமாளிப்பாங்க... இப்படி பொறுப்பே இல்லாமல் பேசுறீங்க..?? நாளைக்கு நம்ம பசங்களுக்கும் இப்படி தான் சொல்லிக்கொடுப்பீங்களா??”
“மேடம் பசங்க வந்தா தான் சொல்லிக்கொடுக்க முடியும்... முதல்ல அவங்க வர்றதுக்கு வழி பண்ணுவோம்.. பிறகு அவங்களுக்கு சொல்லிக்கொடுக்குறதை பத்தி யோசிக்கலாம்.. என்ன சொல்லுறீங்க மேடம்..?? பாப்பா ரெடி பண்ணிரலாமா??” என்று கேட்டபடி ஷாகர் அருகே வர ஆதிராவோ மறுபுறம் திரும்பி நின்று கலங்கிய கண்களை துடைக்க ஷாகருக்கு அவள் மனநிலை புரிந்தது.. அவளை தன்புறம் திருப்பியவன்
“ஆதுமா.. ப்ளீஸ்.. நடந்து முடிந்த விஷயத்தை பத்தி யோசிச்சு உன்னை நீயே கஷ்டப்படுத்திக்காத.. அது ஒரு ஆக்சிடண்ட்.. அதனால நீ அதையே நினைச்சி வருத்தப்படாத...அந்த பாப்பாவுக்கு நம்ம கூட இருக்க இஷ்டமில்லை போல..அதான் நம்மை விட்டு போயிடுச்சு.. “
“அந்த பாப்பா நம்மை விட்டு போக நான் தானே காரணம்??”
“ஹேய் லூசு மாதிரி பேசாத..அது ஒரு ஆக்சிடன்ட்.. உன்னை அறியாமல் நடந்த விஷயத்துக்கு நீ எப்படி பொறுப்பாக முடியும்?? இப்படி நீ பீல் பண்ணுவனு தான் உனக்கு தெரியக்கூடாதுனு மறைச்சேன்....ஆனா மேடம் எனக்கே தெரியாமல் ரிப்போர்ட்டை வேறொரு டாக்டர்ட்ட காட்டி தெரிஞ்சிக்கிட்டீங்க..ஆனா என்னை பொறுத்தவரைக்கும் ஏதோவொரு நல்லதுக்கு தான் நம்ம பாப்பா நம்மை விட்டு போயிருக்கு.. அதனால நீ தேவையில்லாமல் யோசிச்சு உடம்பைக் கெடுத்துக்காத... சரி வா.. பேக்கிங்கை முடிக்கலாம்..” என்றவன் அவளோடு பேசியபடி பேக்கிங்கை முடித்துவிட்டு தயாராகி ஏர்போர்ட்டுற்கு கிளம்பினார்கள்...
இருவரும் தாயகம் திரும்பியதும் அவர்களை அழைத்து செல்ல வந்திருந்தனர் ஆதியும் ஆத்வியும்..
வீட்டிற்கு வந்த இருவரையும் வாசலிலேயே நிறுத்தி வைத்த வசுமதி இருவருக்கும் ஆலம் சுற்றியபின் உள்ளே வரச்சொல்ல ஷாகரோ
“ஹனிமூன் போய்ட்டு வந்தவங்களை ஆலம் சுற்றி வீட்டிற்கு வரவேற்கும் பழக்கம் எப்போ இருந்து ஆரம்பிச்சிது??” என்று அவன் கேலி செய்ய வசுமதியோ போலியாய் முறைத்தபடி
“கல்யாணம் முடிந்ததும் வீட்டுக்கு சொல்லாமல் ஹனிமூன் போனவங்களுக்காக இந்த வழக்கம் ஆரம்பிச்சாங்கடா..” என்று வசுமதி கூற அவரது பதிலில் அசடு வழிந்தபடி ஷாகர் ஆதிராவை பார்க்க அவளும் தன் பங்குக்கு முறைத்தாள்..
இருவரையும் உள்ளே சென்று ஓய்வெடுக்குமாறு கூற ஷாகரும் ஆதிராவை அழைத்துக்கொண்டு தங்களறைக்கு சென்றான்...
அறைக்கதவை திறந்து லைட்டை ஆன் செய்தவள் வாயடைத்து நிற்க ஷாகரோ அவள் தோள்களை கட்டியணைத்து அவள் காதருகே குனிந்து
“என்ன பேபி இதுக்கே இப்படி ஷாக் ஆகிட்டா..... வா.. இன்னும் நிறைய சப்ரைஸ் இருக்கு...” என்றவன் அவளை உள்ளே அழைத்து சென்றான்...
ஷாகர் லைட்டை ஒளிரச்செய்ததும் அறையின் அலங்காரம் கண்டு பிரமித்துநின்றாள் ஆதிரா..
அறையின் நிலப்பகுதி முழுவதையும் வெள்ளை மற்றும் ஊதா நிற பலூன்கள் முற்றுகையிட்டிருக்க அறையின் நடுப்பகுதி சுவற்றில் ஊதா நிற ரிப்பன்கள் தொங்கவிடப்பட்டு அதில் சில படங்கள் பொருத்தப்பட்டிருந்தது.. அந்த படங்கள் அனைத்தும் இதயவடிவில் பொருந்துமாறு ரிப்பன்கள் நீளமாகவும் நீளம் குறைவாகவும் கட்டப்பட்டிருந்தது...
அந்த இதயவடிவ படக்குவியலில் அவளது விதவிதமான படங்கள்.. அனைத்துமே அவளுக்கு தெரியாமல் எடுக்கப்பட்ட படங்கள்..
அதுமட்டுமின்றி சுவற்றில் அவர்களிரும் திருமணத்தின் போதும் ஹனிமூனின் போதும் சேர்ந்து எடுத்துக்கொண்ட விதவிதமான படங்கள்...
அனைத்துமே அவர்களது காதலை கூறும் வகையில் காதல் வாசகங்களுடன் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தது....
இவ்வாறு அறைமுழுதும் வெளிச்சமாயிருக்க ஒரு இடம் மட்டும் இருட்டாயிருந்தது...
ஆதிராவோ ஷாகரை பார்க்க அவள் பார்வையின் அர்த்தம் புரிந்தவன் அங்கு ஓரமாய் இருந்த சோபாவை எடுத்து அங்கு போட்டவன் அவளை அமரச்செய்துவிட்டு அறையின் விளக்குகளை அணைத்தவன் மொபைலின் ஒளியின் துணையோடு ஆதிரா அருகே வந்தவன் கையில் வைத்திருந்த ரிமோட்டை இயக்க ப்ரோஜெக்டர் மூலமாக அந்த கருப்பு திரையில் படமொன்று ஒளிபரப்பாகியது...
ஆதிரா அருகே அமர்ந்துக்கொண்ட ஷாகர் அவளை அணைத்துக கொண்டு திரையை கவனிக்கத்தொடங்கினான்..ஆதிராவும் எதுவும் கேட்காது அந்த திரையை கவனிக்கத்தொடங்கியவள் அதன் காட்சிகளை கண்டு வியந்துவிட்டாள்..
அது ஒரு திரைப்படம் போல் ஆரம்பமாகியது.. திரைப்படத்தின் பெயராய் “உன்னிடம் மயங்குகிறேன்” என்று திரையில் காட்டப்பட்டு பின் போட்டோ ரியலிஸ்டிக் மோஷன் கெப்சர் பில்ம் (photorealistic capture film) போல் அவர்களது கதை படமாக்கப்பட்டிருந்தது...
(கோச்சடையான் படம் எடுத்துங்களே..அதே மாதிரி எனிமேட்டா அவங்க லவ் ஸ்டோரியை படமாக்கியிருக்கான் ஷாகர்)
அதில் முதல் காட்சியில் ஷாகர் ஆதிராவை கோவில் குளத்தருகே பார்க்கும் காட்சி வரும் போது அதை இடைநிறுத்தியவனை என்னவென்று ஆதிரா பார்க்க எழுந்து சென்று லைட்டை போட்டவன் கையில் ஒரு பரிசுப்பொதியை எடுத்துவந்து ஆதிராவிடம் கொடுக்க அதை பிரித்து பார்த்தவள் மீண்டும் திரையை பார்க்க வியந்தபடி ஷாகர் பார்த்தாள்...
அவள் பார்வையை கண்டு வியந்தவன்
“என்ன ஹாட்டி.. ப்ரீஸ் ஆகி நிற்கிற?? நீ இதூனை எதிர்பார்க்கலைல??”
“எப்படிங்க ..... இது இது..”
“ம்.. அது அன்னைக்கு நீ குளத்துப் படியில உட்கார்ந்திருந்தது அவ்வளவு அழகாக இருந்தது.. அப்போது போட்டா எடுக்கலாம்னு நான் கேமாராவை ரெடி பண்ணப்போ அந்த பேர்டும் வந்து அந்த சீனை இன்னும் சூப்பராக்கிடுச்சு... அதுக்கு சாப்பாடு கொடுத்தபடியே நான் எதிர்பார்க்காதப்போ நீ திரும்ப அது அப்படியே கேமராவில கேப்சராகிடுச்சு... நானே நினைக்கல... அது இவ்வளவு அழகாக வரும்னு.. அந்த படம் அப்படியே ஒரு ஆர்ட் மாதிரி இருந்தது. அதான் அந்த போட்டோவோ கொடுத்து வரைந்து எடுத்தேன்.. உனக்கு பிடிச்சிருக்கா??” என்று ஷாகர் கேட்க தன் கையில் இருந்த கண்ணாடி ப்ரேமிடப்பட்ட அந்த ஓவியம் அவளை பெரிதும் கவர்ந்திருந்தது...
அதை ஒருமுறை தடவிப்பார்த்தவள் ஷாகர் எதிர்பாரா நேரத்தில் அவனை இழுத்து அவன் இதழ்களை சிறைசெய்தான்..
அவள் செயலில் முதலில் தடுமாறியவன் பின் தானும் அதில் ஒன்றிப்போனான்..
சற்று நேரத்தில் விலகியவர்கள் ஒருவரை பார்த்து மற்றவர் சிரித்துக்கொண்டார்..ஷாகர் மீண்டும் படத்தை ஓடவிட அது அவர்களிருவரும் அவன் வீட்டிலிருந்து வெளியேறுவதோடு முடிந்து மீண்டும் பாடலுடன் அதன் பின் நடந்தவைகள் காட்சிகளாக
தோன்றியது..
எனை தீண்டி விட்டாள் திரி தூண்டி விட்டாள்
எனை நானே தொலைத்து விட்டேன்
ஒரு மார்கழியின் முன் பனி இரவில் எனை நானே எரித்து விட்டேன்

இதழின் ஓரம் இழைந்து ஓடும் அவள் சிரிப்பில் விழுந்து விட்டேன்
அவள் கூந்தல் எனும் ஏணி அதை பிடித்தே எழுந்து விட்டேன்
கடந்து போகும் காற்றிலாடும் அவள் மூச்சில் கரைந்து விட்டேன்
இது போதும் இது போதும் என் வாழ்வை வாழ்ந்து விட்டேன்
என் ராத்திரியில் உன் சூரியனை எதற்காக எரிய விட்டாய்
என் கனவுகளில் உன் நிலவுகளை எதற்காக கருக விட்டாய்

எனது தோட்டம் உனது பூக்கள் எதற்காக உதிர விட்டாய்
மனதோடு மணல் மேடு எதற்காக செதுக்கி விட்டாய்
எனது காற்றில் உனது மூச்சை எதற்காக அனுப்பி வைத்தாய்
உயிரின்றி உடல் வாழ பின்பு ஏன் நீ தூக்கி விட்டாய்
பாடல் அவர்களது இரண்டாவது திருமண ஏற்பாடுகள் வரை தொடர அதன் பின்பு அவர்கள் திருமணம் ஹனிமூன் என்று தொடர்ந்து அவர்கள் வீட்டிற்கு வந்து இது போல் அமர்ந்திருப்பதோடு முடிவடைய ஆதிரோவோ ஷாகரை பார்த்து
“எப்படிங்க?? என்னை இவ்வளவு லவ் பண்ணீங்க??? சத்தியமா நீங்க சொல்லும் போதுகூட நான் முழுதாக நம்பலை.. ஆனா இப்போ இதை பார்க்கும் போது என்னால நம்பாமல் இருக்கமுடியலை.... நீங்க என்னோட லைப்ல வந்தது ஒரு ஆக்சிடன்ட்னு தான் நான் நினைச்சேன்... ஆனா இதை பார்க்கும் போது தான் புரிஞ்சிது நீங்க எனக்கு தெரியாமலேயே என்னை காதலிச்சதும் இல்லாமல் கல்யாணமும் பண்ணிக்கிட்டீங்க... நான் உங்களுக்கு கிப்ட் இல்லைங்க. நீங்க தான் எனக்கு கிடைச்ச பொக்கிஷம்.. லவ் யூ சோ சோ மச்..” என்றவள் ஷாகரை இறுக அணைத்து முகமெங்கம் முத்தமாரி பொழிந்ததுடன் அவனை இறுக்கமாய் கட்டுக்கொண்டு
“எப்பவும் இதுமாதிரி என்கூடவே என்னை காதலிச்சிட்டே இருப்பீங்க தானே...??” என்று குரலில் அத்தனை தாபத்துடன் கேட்க ஷாகரும் அவளை இறுக அணைத்து
“என்னோட ஹோட்டி கேட்டு நான் ஏதாவது இல்லைனு சொல்லுவேனா?? நீ இப்போ மாதிரி எப்பவும் சந்தோஷமாக இருக்கனும்.. அது தான் எனக்கு வேண்டும்.. அதுக்காக என்ன வேண்டுமானாலும் செய்வேன்..” என்று கூறியவன் தன் வாக்குறுதிக்கு முத்திரையாய் அவள் முன்னுச்சியில் இதழ் பதிக்க அதை பெற்றுக்கொண்டவள் அவன் நெஞ்சத்திலே தஞ்சமடைந்தாள்..
சற்று நேரம் அவ்வாறு இருந்தவர்கள் பின் தன்னிலை மீண்டு பிரிந்து அமர்ந்தனர்..
ஷாகர் எழுந்து சென்று கபோர்ட்டிலிருந்து ஒரு கோப்பினை எடுத்து வந்தான்...
அதை ஆதிராவிடம் கொடுத்த படிக்க சொல்ல அவளும் அதை வாங்கி படித்தாள்..
அதை படித்த ஆதிரா விழி விரித்து
“இதுல உள்ளது??”
“ஆமா பேபி... இன்னும் டூ வீக்ஸ்ல நம்ம சூப்பர் மார்க்கட்டோட மற்றைய இரண்டு ப்ரான்சும் ஓப்பன் பண்ண போறோம்.... இது தனியே நம்ம இரண்டு பேரோட மூலதனமும் உழைப்பும்... உன்னோட பர்சனல் லோனும் சேவிங்சும் என்னோட பிசினஸ் லோனும் தான் இந்த வெற்றிக்கான இன்வெஸ்ட்மண்ட்.. நம்மோட உழைப்புமா...”
“ரொம்ப சந்தோஷமா இருக்குங்க... எப்படியும் நீங்க நினைச்சதை அசீவ் பண்ணுவீங்கனு எனக்கு தெரியும்..”
“இந்த சக்ஸஸ் எல்லாத்துக்குமே நீ தான் காரணம்... உன்னோட அட்வைஸ் தான்.. இந்த தொழில்ல நாம இவ்வளவு சீக்கிரம் வெற்றியடைந்தோம்.. இது எல்லாம் என்னோட லக்கி சாம் ஆதுபேபியால தான்..” என்று ஷாகர் அவள் கன்னம் பிடித்து கொஞ்ச அதில் மகிழ்ந்தவள்
“ரொம்பத்தான்.. சரி அத்தை மாமாகிட்ட சொல்லிட்டீங்களா??”
“இல்லையே.. நீயே எல்லாருக்கும் உன்வாயால சொல்லிடு... உன்னால தான் என்னோட பலவருஷக்கனவு நிறைவேறியது..”
“இல்லைங்க.. உங்க டேலண்ட் தான் உங்களோட இந்த வெற்றிக்கு காரணம்???”
“பார்த்தியா நீ என்னை பிரிச்சு பேசுற?? நான் வார்த்தைக்கு வார்த்தை நம்ம வெற்றினு சொல்றேன்.. ஆனா நீ உங்க வெற்றினி பிரிச்சி பேசுற...” என்று அவன் சோகமாய் சொல்ல இப்போது அவன் கன்னத்தை பிடித்து ஆதிரா
“அச்சோ என்னோட மினியனுக்கு கோபம் வந்திடுச்சா?? அது லைட்டா டங்கு ஸ்லிப்பாகிடுச்சு.. அது நம்ம வெற்றி.. ஓகேயா..?? இப்போ சரியா சொல்லிட்டேனா??”என்று கேட்க செல்லமாய் அவள் தலையில் முட்டியவள்
“வரவர உனக்து லொள்ளு கூடிப்போச்சு.. “
“ஆமா.. இப்போ தான் என்னோட மினியன் கூட இருக்கேனே... அதான் கொஞ்சம் இல்லை ரொம்பவே கூடிப்போச்சு..” கூறி அவன் மார்பில் தஞ்சமடைய அவனும் அவளோடு ஒன்றிப்போனாள்.
சுப்பிரமணிக்கு என்னானதுனு என்று ஷாகர் ஆதிராவிடம் சொல்லவில்லை.... அவனை உரியமுறையில் சரிகட்டி அவன் திருந்த வாய்ப்பு கொடுத்திருக்கிறான் ஷாகர்.. அதிகப்படியான பணபலமும், ஊராருக்கு அவன் மீதிருந்த பயமுமே அவனை இத்தனை காலம் தலைகால் தெரியாமல் ஆடவைத்தது.. அதை ஷாகர் உரிய முறையில் முடக்கிவிட அப்போது தான் தன் தவறை உணர்ந்தான் சுப்பிரமணி.. தவறை உணர்ந்தவனை தண்டிப்பதில் பலனில்லை என்று உணர்ந்த ஷாகரும் அவன் திருந்தி வாழ வாய்ப்பு கொடுத்திருக்கிறான்... இனி திருந்தி நல்வாழ்வு அமைத்துக்கொள்வதும் இல்லை மறுபடியும் முதல் போல் கெட்டு சீரழிந்து போவதும் அவன் கைகளிலேயே உள்ளது... ஆதிராவின் மாமாவும் தன் தவறுணர்ந்து இனி இறைவனடியை சேரப்போவதாக கூறி தலயாத்திரை சென்றுவிட்டார்..
பல போராட்டங்களுக்கு பிறகு ஷாகருக்கும் ஆதிராவுக்குமிடையிலான திரை விலக ஒருவர் காதலை மற்றவர் முழுதாய் புரிந்துகொண்டனர்.... காதல் புரிதலும், காதலை புரிதலுமே ஆழமான காதலுக்கான உறுதியான அஸ்திவாரம்.. அதை புரிந்துகொள்பவர்களது வாழ்க்கை காதலால் செழிக்கும்... புரிந்துகொள்ள தவறுபவர்களது வாழ்வில் மகிழ்ச்சியும், மனநிம்மதியும் என்றுமே நிலைக்காது...
காதலை காதலிப்பவர்களிடம் கால அளவில்லாமல் காட்டாற்று போல் கொட்டி மகிழ்ந்து காதல் செய்யுங்க...
நாடோடி பாட்டு பாட
தந்தன தந்தன தாளம்
நாடெங்கும் காதலாலே
நெஞ்சினில் ஆயிரம் தாளம்
இருபது வயதில்
வருவது தானா காதல்
அறுபது வரையில்
தொடர்வது தானே காதல்
சிரிக்கிற போது
சிரிப்பது தானா காதல்
அழுகிற போது
ஆறுதல் தானே காதல் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
காதலை நான் பாடவா ஹேய்
பூவிலே தேன் தேடவா
கண்ணை மெல்ல மூடி
சாய்ந்துகொள்ளும் போது
மடியாக வேண்டுமே
தட்டுதடுமாறி
சோர்ந்து விழும் போது
பிடியாக வேண்டுமே
உன் உள்ளம் நான் கண்டு
என் உள்ளம் நீ கண்டு
உனக்காக நான் உண்டு
என்று வாழும்
காதல் தானே காதல்
மலர் விட்டு மலரை
தாவுவதான் அல்ல காதல்
ஒருத்திக்கு ஒருவன்
என்பது தானே காதல் ஹேய்…..
கங்கை நதி என்ன
காவேரி என்ன
எல்லாமே பெண்மையே
நம்மை இங்கு நாளும்
தங்குகிற பூமி
அது கூட பெண்மையே
நாடாளும் ஆணுக்கும்
வீடாள பெண் வேண்டும்
கடல் போன்ற வாழ்வினில்
கலங்கரை விளக்கம் தானே பெண்மை
பெண்ணிடம் மனதை
கொடுத்து விட்டாலே போதும்
பௌர்ணமிதானே
வாழ்வில் எந்த நாளும் ஹேய்
காதலை நான் பாடவா
பூவிலே தேன் தேடவா
*********************************************
ஹாய் நட்பூக்களே....
என்னை தீண்டிவிட்டாய் கதை இந்த பகுதியோட முடிவடைகிறது...
எப்பவும் போல இந்த கதையும் முழுக்க கற்பனையே... அதனால யாரும் எதையும் சீரியஸாக எடுத்துக்காதீங்க
என்னை ரொம்ப சோதித்த கதை இது.... ஆனாலும் நீங்க கொடுத்த ஆதரவால தான் கதையை நல்லபடியாக முடிக்க முடிந்தது... சோ கமென்ட் பண்ண நட்பூஸ் மற்றும் ரேட் பண்ண எல்லாரும் என்னோட சிரம் தாழ்ந்த நன்றிகள் அதோடு ப்ரைவட் மெசேஜில வந்து கருத்து சொன்ன நட்பூக்களுக்கும் என்னோட இதயப்பூர்வமான நன்றிகள்
இன்னொரு முக்கியமான விஷயம்...கொரோனோ வைரஸோட கோர விளையாட்டு உலகம் முழுதும் தலைவிரித்தாடுது... அதனால மக்களே கவனமாக இருங்க.. நம்ம ஒத்துழைப்பு அரசாங்கத்துக்கு ரொம்ப அவசியம்...அதனால எல்லாரும் கவனமாக இருங்க...
Stay safe people
இப்படிக்கு,
அனு சந்திரன்