முன் ஜென்ம காதல் நீ

ழகரன் தமிழ்

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
முன் ஜென்ம காதல் நீ
kl.JPG

முன்னுரை


நிகரில்லா வானவிலில் ஒளிரும் வண்ணங்களான எனதருமை நண்பர்களே! அந்த வானவில் ஒளிக்கலவையில் ஒரு கதிராக அல்ல ஒரு புள்ளியாக இணைய விரும்பி வந்திருக்கும் புது நண்பன் நான். எனது பெயர் ழகரன் தமிழ். கனவில் அரசனாக நினைத்துக் கொண்ட மழலை, நினைவிலும் அரசனாக நினைத்துக் கொண்டு நடை பயிலும் விந்தையே போல், தன்னையும் ஒரு எழுத்தாளன் என எண்ணி மகிழும் மழலை நான். தமிழ் எனும் வெங்கதிரொன் முன் விளங்கின் ஒளி தேடும் குழந்தை.

எனது முதல் முயற்சியாய் மனதில் உதித்த கற்பனை. அதனை உங்களுடன் பகிர வந்துள்ளேன். ஆதரவு தாருங்கள். நிறை குறைகளை சொல்லுங்கள் முக்கியமாக குறைகளை சொல்லுங்கள். சரி செய்யலாம்.

நட்பு,காதல்,வீரம் அறிவு, மற்றும் தமிழர்களின் (இப்பொழுது தமிழர்கள் என கூறி வாழும் நாம் அல்ல ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்து வந்த தமிழர்கள்) வீரத்தையும், நாகரிகத்தையும்,கல்வியையும், விஞ்ஞான வளர்ச்சியையும், மாண்பையும் பற்றி கூற முயலுகிறேன்.

ஈடு இணையற்ற அறிவாற்றல் கொண்ட மாவீரன் ஒருவன் தன் காதலில் மட்டும் தோற்றது ஏன்? தோல்வி அறியா வீரன் காதலில் தோற்றது ஏன்? தோற்று போன காதல் மீண்டும் கிடைத்ததா? அவனுக்கு இழைக்கப்பட்ட துரோகம் என்ன? ஜென்ம ஜென்மமாக தொடரும் காதல் சேர்ந்ததா? என பல சுவாரசியங்களை கொண்டு வருகிறது முன் ஜென்ம காதல் நீ. அருள்வர்மன், மதியழகி, கஜேந்திரன், சந்திரவர்மன், ஆரங்கன், இந்திர ராணி, ஆதித்தன், ரோஸி, மைக்கேல்,.....என பல நபர்கள் பல குணங்களை கொண்டு வருகின்றன நம்மை மகிழ்விக்க....

தொடராக எழுதலாம் என நினைக்கிறேன் உங்கள் மேலான கருத்துகளை கூறுங்கள் என் நண்பர்களே
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN