காதல்பனி 2

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 2

ஏரிக்கரை காத்தும் ஏலேலேலோ பாட்டும்
இங்கே ஏதும் கேட்கவில்லையே
பாடும் குயில் சத்தம்.. ஆடும் மயில் நித்தம்
பார்க்க ஒரு சோலையில்லையே

ஹெலிகாப்டரிலிருந்து அடர் கருப்புக்கும் மாநிறத்திற்கும் இடைப்பட்ட நிறத்திலிருந்தவள் ஸ்லீவ்லெஸ்ஸில் இரண்டு பக்கத் தோள்களிலும் ரோப் கொண்டு மேலாடை பிணைத்திருக்க முட்டி வரை நீண்ட சிவப்பு நிற ஆடை அவள் இடுப்பையும் தொடையும் கவ்வியிருக்க அந்த நிறமே அவள் நிறத்தை இன்னும் பளீர் என்று காட்ட கண்களில் கூலிங்கிளாஸ் கழுத்தில் வைர டாலர் செயின் வலது கையில் பிரேஸ்லெட் காலில் ஹைஹீல்ஸ்யுடன் இறங்கிய அந்த மாடல் அழகியை ஒரு கேலிப்பார்வையுடன் எதிர் கொண்டான் கென்டிரிக்.

‘இவளை எல்லாம் எப்படி மாடலிங்ல சேர்த்தாங்க?!’ என்று சலித்தவன் தன் கேமராவில் அவளை ஷூட் செய்ய, முதலில் அவள் இறங்கும் வரை சரியாகத் தான் இருந்தது. அவள் இறங்கிய பிறகு அவனைப் பார்த்ததால் அவள் தடுமாறியதோ இல்லை தன்னைக் காக்க வைத்ததால் அவனுக்கு அவள் மேலுள்ள கோபமோ என்று அதன் பிறகு எடுத்த படங்கள் எதுவும் திருப்தி இல்லாமல் போனது.
திரும்பத் திரும்பப் பொறுமையாக வேலை வாங்கியவனோ பின் அவன் குரலை கொஞ்சம் உயர்த்த அந்த குரலிலும் அவன் நெருக்குதலிலும் முன்னை விட அவள் இன்னும் தடுமாற, அதை உணர்ந்தவனோ அந்த டீம் லீடரைக் கூப்பிட்டு அவள் செய்யவேண்டியதைச் சொல்லி அந்தக் குளிரில் அவளைப் பற்றி யோசிக்காமல் நன்றாகவே வேலை வாங்கினான் கென்டிரிக்.

தனக்குத் திருப்தியான பிறகே அவன் பேக்கப் சொல்ல, அப்போது அந்த அழகியோ தான் விரித்திருந்த முடியைத் தூக்கி கிளச்சில் அடக்கியவள் கூலிங்கிளாசைத் தலை மேல் ஏற்றி விட, அதே நேரம் கேமராவில் தான் எடுத்த புகைப்படங்களைப் பார்த்துக்கொண்டிருந்த கென்டிரிக் படங்களின் முடிவில் தன் எதிரிலிருந்த அவள் முகத்தை கேமரா லென்ஸ் மூலம் குளோசப்பில் பார்க்க நேர அதிலும் அவள் விழிகளைப் பார்த்தவனோ தன்னை மீறி உடல் அதிர,

‘இந்த விழிகள் தானே என்னிடம் கள்ள கபடம் இல்லாமல் பேசிய விழிகள்?!’ என்று நினைத்தவன் முகம் நிமிர்த்தி அவள் விழிகளைப் பார்க்க அதே நேரம் அவளும் அவனைப் பார்க்க அவள் விழிகளை நேருக்கு நேர் சந்தித்தவனோ உறைபனியாய் உறைந்து நின்றுவிட்டான் கென்டிரிக்.

எந்த விழிகள் அவன் வாழ்வில் ஒரு மாற்றத்தை உருவாக்கியதோ அந்த விழிகள்! எந்த விழிகளை அவன் வாழ்வில் இனி பார்க்கவே முடியாதோ என்று தவித்தானோ அந்த விழிகள்!

எந்த விழிகளுக்கு அன்று அநீதி செய்ததால் இன்று வரை தவ வாழ்வு வாழ்கிறானோ அந்த விழிகள்!
இன்று தான் அடைந்திருக்கும் பணம் பேர் புகழ் அனைத்துக்கும் இன்னும் சொல்லப் போனால் தன் மூச்சு பேச்சு சுவாசம் என்று அவன் வாழ எந்த விழிகள் காரணமாக இருந்ததோ அந்த விழிகள்!

இப்படியாக அவன் மனதைச் சுற்றி சுற்றி அந்தக் கரு விழிகள் இரண்டும் வண்டாக மாறி ரீங்காரமிட்டுக் கொண்டிருக்க…

ஆனால் அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியோ அவனை நிமிர்ந்து பார்த்து விட்டு எந்த ஒரு சலனமும் இல்லாமல் விலகிச் சென்று விட அப்படி அவள் விலகியதில் தன் நிலையிலிருந்து வெளி வந்தவனோ ஒரு நெடிய மூச்சை வெளியிட்டபடியே தன் நிலை மறந்து கால்கள் துவள தொப்பென அங்கிருந்த இருக்கையில் விழுந்தான்.

தன்னைச் சமன் செய்து கொள்ள நினைத்து பீர் டின்னை உடைத்து அதிக வேகத்துடன் வாயில் சரித்துக் கொள்ள, அந்த வேகத்துக்கு அவன் தொண்டைக் குழியோ ஈடு கொடுக்க முடியாமல் போக அந்தத் திரவமோ அவனின் தாடை கழுத்து என்று வழிந்தோடியது.

எப்போதும் அவன் தன் சுயமிழந்து பொது இடத்தில் குடிக்க மாட்டான். அதிலும் தொழில் செய்யும் இடத்தில் செய்யவே மாட்டான். ஆனால் இன்று இப்படி எல்லாம் செய்யவும்,
சுற்றியிருந்த அனைவரும் அவன் செயலை விசித்திரமாகப் பார்த்தது மட்டுமில்லாமல் கூடவே தங்களுக்குள் ரகசியத்துக் கொண்டவர்கள் அதைத் தவறாக யூகித்துக் கொண்டு பின் அவன் செயலை டீம் லீடர் வரை கொண்டு சென்றனர்.

என்னமோ ஏதோ என்று நினைத்து அவசரமாக ஓடி வந்து அவன் முன் நின்ற டீம் லீடர்

“என்ன சார், உங்களுக்கு இப்போ எடுத்த போட்டோ ஷூட்ல திருப்தி இல்லனா சொல்லுங்க சார். நீங்க சொல்ற மாதிரி சீனை மாத்தி வச்சிடலாம்” என்று பணிவாகக் கேட்க
அப்போதுதான் சுற்றுப்புறத்தை உணர்ந்தவனோ தன் சிந்தனையிலிருந்து வெளி வராமலே வெறுமனே இல்லை என்று தலையாட்ட
அதில் திருப்தியடையாத அந்த டீம் லீடரோ

“சார், அந்த பொண்ண வேணும்னா வரச் சொல்லி திரும்பவும் டேக் எடுக்கலாமா?” என்று மறுபடியும் தயங்கிய படி கேட்க
இவன் நான் வாயைத் திறந்து சொல்லாமல் விடமாட்டான் என்று நினைத்தவனோ

“இல்ல வேணாம். எல்லாம் பெர்ஃபெக்டா தான் இருக்கு” என்று அவன் முகம் பார்த்துச் சொல்லியவன் எங்கே திரும்ப அவளைப் பார்க்க நேரிட்டால் இன்னும் தன் வசம் இழந்து விடுவோமோ என்று நினைத்து ஒரு முடிவுடன்

“இன்னையோட ஸ்டீவோட அசைன்மெண்ட் முடிஞ்சிடுச்சு இல்ல?” என்று கேட்க

“எஸ் சார்! என் டீம் வைஸ் அசைன்மெண்ட் முடிஞ்சிடுச்சி சார். பட் வேற அசைன்மெண்ட் பத்தி அவரை தான் சார் கேட்கணும்”.

“ஓகே ஓகே” என்றவன் பின் அங்கிருந்து செல்வதற்குத் தன் காரை வரவழைத்துப் புறப்பட்டான்.
காரில் ஏறி அமர்ந்தவனுக்கோ மனதில் பல கேள்விகள் குழப்பங்கள் வருத்தங்கள். இதெல்லாம் விட அவன் வாழ்வில் எதை மறக்கவே கூடாது என்று நினைத்து அதை இன்று வரை தினம் தினம் நினைத்து அந்த வலிகளையும் வேதனைகளையும் மேலும் மேலும் கீறிக் கீறி ரணமாக்கி சாகும் வரை அந்த வலிகள் தன்னை விட்டுப் போகாமல் இருக்க வேண்டும் என்று நினைத்திருந்தான்.

அது மட்டுமில்லாமல் இந்த உயிர் இந்த உடலை விட்டுப் பிரியும் போது இதை விட பல மடங்கு உயிர் வலியை அனுபவிக்கவும் அவன் தயார் தான்! இதுவே அவன் வேண்டுதலும் கூட!
இப்படி பலவாறு யோசித்தவனின் மனதில் இன்றைய நிகழ்ச்சிகள் படமாக ஓடியது...

ஓர் கத்துக் குட்டியாக இத்தொழிலைக் கற்றுக் கொள்ள ஆரம்பித்ததிலிருந்து இப்போது வரை எந்த சூழ்நிலையிலும் அவன் ஸ்பாட்டில் மது அருந்த மாட்டான். இது என்ன விசித்திரமான பழக்கம் என்று அவன் ஆராய்ந்ததில் விடை தான் இல்லை. ஆனால் இன்று அந்த கட்டுப் பாட்டையும் மீறி அவன் நடந்து கொள்வதற்குக் காரணம் அந்த விழிகள்!

அந்த விழிகள் அவளுக்குச் சொந்தமில்லை என்பதில் மட்டும் அவன் உறுதியாக இருந்தான். ஆனால் அந்த விழிகள் அவளுக்கு எப்படி எந்த சூழ்நிலையில் எந்த நேரத்தில் கிடைத்தது என்பது தான் இப்போது அவன் கேள்வி. பல்வேறு சிந்தனையில் இருந்த படியே வீடு வந்து சேர்ந்தவன் பழைய நினைவுகளில் தன் நிலை மறந்து தூங்கியும் போனான் கென்டிரிக்.
அன்று மட்டுமில்லை அதன் பிறகு வந்த நாட்களிலும் அவன் ஆழ்மனதிலிருந்த பழைய விஷயங்கள் அனைத்தும் இப்போது பேரலையாக எழுந்து அவன் வேலைகளைக் கபளீகரம் பண்ண,

அதனால் குறித்த நேரத்தில் வேலைகளை முடித்துக் கொடுக்க முடியாமல் திணறினான்.

தான் இப்போது அடைந்திருக்கும் பேரையும் புகழையும் கேரியரையும் கெடுத்துக் கொள்ள விரும்பாமல் ஒரு நாள் மட்டும் தன் ஷூட்டிங்கை கேன்சல் செய்தவன் அந்த நொடியே தன்னுடைய சொந்த தீவுக்குச் சென்று ஊண் உறக்கம் வேலையால் என்று எந்த ஒரு இடைஞ்சலும் இல்லாமல் தன் சோகங்களைக் கழித்தான்.

அவன் வாழ்வில் நடந்த சந்தோஷம் துக்கம் புலம்பல் அழுகை என்று அனைத்தையும் அறிந்த இடம் ஒன்று உண்டு என்றால் அது அந்தத் தீவு தான்!

அதன் பின் தன் மனதை ஒரு நிலைப்படுத்தி தன் சோகங்களில் இருந்து வெளி வந்தவனோ மறுநாளே பழைய கென்டிரிக்காக மாறி, தான் உற்சாகமான மனநிலையில் இருக்கும் போது எப்போதும் பயன்படுத்தும் ஓப்பன் விண்டோ கன்வெர்டிபிள் காரை எடுத்துக் கொண்டு ஊர் சுற்றியவன் பின் தன் வேலையைப் பார்க்கச் சென்று விட்டான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN