காதல்பனி 3

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 3

வெத்தலைய மடிச்சு மாமன் அதைக் கடிச்சு
துப்ப ஒரு வழியில்லையே
ஓடி வந்து குதிச்சு முங்கி முங்கிக் குளிச்சு
ஆட ஒரு ஓடையில்லையே

கென்டிரிக்கின் தற்போதைய வேலையும் பெரிய இடத்தில் என்பதால் அவளைத் திரும்பவும் சந்திக்க வேண்டிய வாய்ப்பும் இல்லாமல் போனது. ஆனால் அதெல்லாம் கொஞ்ச நாள் தான்.

ஒரு முறை அவன் தன் நண்பர்களுடன் ரிசார்ட் சென்றிருந்த போது போனில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தவன் பேச்சு மும்முரத்தில் இவன் ஒரு திசையில் நடந்து கொண்டிருக்க, அதே ரிசார்ட்டில் அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியோ அவன் எதிர் திசையில் உள்ள வளைவில் வர அந்த வளைவின் முடிவில் இருவரும் நேருக்கு நேர் மோதிக் கொள்ள வேண்டியதாயிற்று.

அப்படி மோதியிருந்தால் என்ன நடந்து இருக்குமோ?! ஆனால் தன் நிலையிலிருந்து முதலில் சுதாரித்தவனோ அப்படி நேர இருந்த விபரீதத்தை நொடியில் உணர்ந்து சட்டென பேலன்ஸ் செய்து சடார் என பக்கவாட்டில் ஒதுங்கி நின்று விட்டான் கென்டிரிக்.

அவளுமே தான் மோதிக் கொள்வதைத் தடுக்க முதலில் யார் என்றே தெரியாமலே தன் நிலையில் நின்று நிதானித்தவளோ பின் எதிரில் இருந்தவனை நிமிர்ந்து பார்க்க அது கென்டிரிக் என்று உணர்ந்தவளோ அவனைத்தன் விழிகள் விரிய விதிர் விதிர்த்து பார்த்தவளோ இறுதியாக அவன்செயலைப்பார்த்து ஒரு ஏளனப் பார்வையுடன் விலகிச் சென்றாள்.

முதல் முறை போல் இல்லாமல் இன்று மிக மிக நெருக்கத்தில் அவள் விழிகளில் வந்து போன பாவங்களில் லயித்து இருந்தானே தவிர அதன் பின் அவளிடம் இறுதியாக வந்த ஏளனப் பார்வையை அவன் சந்திக்கவே இல்லை. அவன் சந்தித்து இருந்தால் ஒருவேளை இருவருடைய வாழ்விலும் மாற்றம் ஏற்பட்டு இருக்குமோ?!

என்ன தான் அவன் அந்த விழிகளை மறக்க வேண்டும் என்று நினைத்தாலும் அவள் கரு விழிகள் அவன் மனதை துளையிட்டுக் கொண்டே தான் இருந்தது.

இறுதியாக அவன் நிலைமைக்கும்முற்றுப் புள்ளி வைப்பது போல் வந்தது ஒரு ஃபிலிம் ஸ்டாரின் பிறந்த நாள் விழா. அதில் கலந்து கொண்ட கென்டிரிக்கைஅங்கு வந்திருந்த மற்றவர்கள்அனைவரும் அந்த ஸ்டாருக்கு நிகராக அவனுக்கும் பாராட்டும் மதிப்பும் மரியாதையும் வழங்க அதில் தான் அடைந்த பேரையும் புகழையும் நினைத்து மனதில் கர்வம் கொண்டான் கென்டிரிக்.

அதிலும் அங்கு வந்திருந்த அழகிகள் ஒரு வித ஏக்கத்துடனும் மயக்கத்துடனும் காதலுடனும் தன்னைப் பார்க்க, இந்தப் பார்வை எதுவும் என்னை சலனப்படுத்தாது என்ற இறுமாப்புடன் சுற்றி வந்தவனுடைய மனதில்முதல்முறையாக அந்த எண்ணம் எழ ஒருவித படபடப்புடனும் எதிர்பார்ப்புடனும் அவன் கண்களோ அந்த இடத்தையே அலசி ஆராய்ந்து தேட, அவன் தேடியது தான் கிடைக்கவில்லை!

இத்தனை நாள் எந்த விழிகளைப் பார்க்கக்கூடாதென்று ஓடி ஒளிந்தானோ இன்று அந்த விழிகள் தன்னைக் காதலோடு பார்க்காதோ என்ற ஏக்கத்தில் அந்த இடத்தையே சுற்றி வந்தவனோஓர் இடத்தின் வளைவில் திரும்ப

“ஏய் இன்னைக்கு அந்த ஸ்டாரை விட நம்ப ஹீரோ தான் செம்ம ஹேன்ட்சமா இருக்கார். கூடவே செம்ம கெத்து இல்ல?” என்று ஒரு மாடல் அழகிகாதலுடன் சொல்ல

“ஏய்! ஆமா ஆமா…” என்று பல குரல்கள் கோரசாக கத்த

“ஏய்யார்பா அந்த ஹீரோ?” என்று ஒருத்தி கேட்க
இதுவரை அங்கு நடந்த பேச்சுகளைக் கேட்டு ஒரு நமுட்டுச் சிரிப்புடன் விலக நினைத்தவன்
இறுதியாக அவள் கேட்ட கேள்வியில் அப்படியே நின்று விட்டான். அவனுக்குத் தெரியும் அந்த குரல் யாருடையது என்று.

“என்னப்பா இப்படி கேட்டுட்ட?! ஒ... நீ இந்த ஃபீல்டுக்குப் புதுசு இல்ல? அதான் கேட்டுட்ட! எங்களுக்கு மட்டும் இல்லப்பா எல்லோருக்குமே கென்டிரிக் தான் மாஸ் ஹீரோ!” என்று ஒருத்தி சொல்ல

அதற்கு அவள் என்ன பதில் சொல்லப் போகிறாள்என்று ஒரு வித ஆர்வத்துடன் கென்டிரிக் அங்கேயே காதைத் தீட்டி வைத்துக் காத்திருக்க, அவளோ

“ஓ... அவரா?” என்றுசுவாரசியமேஇல்லாமல் சொல்லி விட்டு அமைதியாகி விட

“என் கசின் இந்த ஃபீல்டுக்கு வந்து ரொம்ப நாள் ஆச்சு. ஆனாஇதுவரை கென்டிரிக் சார அவ பார்த்தது கூட இல்ல. ஆனா இன்று நான் பார்த்து பேசி இருக்கேன். எனக்கு எவ்வளவு சந்தோஷமா இருக்கு தெரியுமா?!” என்று இன்னொருத்தி துள்ளளோடு சொல்ல

“அட நீ பார்த்ததுக்கே இவ்வளவு சந்தோஷப் படர! இதுக்குமுன்னாடி அவர் சாதாரண போட்டோகிராஃபரா இருக்கும் போது ஆர்டிஸ்டுக்கு சில ஹேர் ஸ்டைல் சரி பண்ணி இப்படி அப்படினு நிற்கச் சொல்லுவாராம்.அவர் தொடணும் என்றதுக்காகவே என் பிரண்ட் வேணும்னே தப்பு தப்பா செய்வாளாம். முதல்ல சாதாரணமாஎடுத்துகிட்டு செய்தவரு இவ நோக்கம் புரிந்து வேற யாரையாவது செய்யச்சொல்லுவாராம்.

அப்போதிலிருந்து இப்போது வரைக்கும் எந்தப் பொண்ணுங்களைப் பார்த்தாலும் பல அடிகள் எட்ட தான் இருக்காராம். எங்கே சாதாரணமா பழகினாலும் மேல வந்து விழுந்திடுவாங்களோன்னுஎண்ணம் அவருக்கு” என்று இன்னொருத்தி சொல்ல

‘ஒ... அதனால் தான் அன்று நான் ஏதோ வேணும்னே இடிக்க வந்ததா நினைத்து அப்படி அரண்டு போய் ஒதுங்கினாரா?’ என்று இவை அனைத்தையும் கேட்டு மனதிற்குள் கருவிக் கொண்ட அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியோ

“அட... அவரோட துறையில் அவர் சிறந்த போட்டோகிராஃபர்தான்! நான் ஒத்துக்கிறேன். திறமையும் இருக்கு தான்... அதுக்காக எல்லாம் அவர மாஸ் ஹீரோனு சொல்ல முடியாது.

அதே நம்ம ஃபீல்டுல இருக்கற ஜாக் சார் சொன்னா கூட பரவாயில்ல. அவர் கூட எல்லாம் வொர்க் பண்ண மாட்டோமானு நான் தவம் இருக்கேன். என்ன எல்லாம் இவர் கிட்ட சும்மாவே வொர்க் பண்ண சொன்னா கூட நான் செய்ய மாட்டேன் பா” என்று அந்த விழிகளுக்குச் சொந்தக்காரியோ ஏற்ற இறக்கத்துடன் கூற...

இதற்கு மேல் அங்கு யார் பேசுவதையும் நின்று கேட்க கென்டிரிக் தயாராக இல்லை.அவனுக்கு கண்ணு மண்ணு தெரியாத கோபம் ஆத்திரம் எல்லாம் அவள் மேல் பரவ அந்த இடத்திலிருந்து தூர வந்து தன்னைச் சமன் செய்ய நினைத்தவனால் கன்ட்ரோலுக்குவரவேமுடியவில்லை.

‘பெரிய பெரிய உலக அழகிகளையும் ஸ்டார்களையும் என் கண்ணசைவிலும் விரல் அசைவிலும் நான் ஆட்டிப் படைக்கிறேன். அதற்காகவே அவர்களும் தவமிருக்க, இவ என்னடானா இப்படி பேசுறா! அதுவும் என் கிட்ட வொர்க் பண்ணிட்டு என்னமோ வேலையே செய்யாத மாதிரி பேசுறா!’என்று மனதுக்குள் கறுவியவன் அவளுக்குப் பதில் அடி கொடுத்தே ஆக வேண்டும் என்ற முடிவை எடுக்க அதற்காக அவளைப் பற்றிய தகவல்களையும் சேகரித்தான்.

அந்த விழி அழகியின் பெயர் சாரா. பூர்வீகமோ தமிழ் நாடு. தன் கேரியருக்காகப் பிரான்ஸ் வந்தவள் படித்து முடித்து இன்று மாடலிங் துறையிலும் கால்பதித்து விட்டாள்.

ஆம்… சாரா தமிழ் நாட்டுப் பெண் தான்! அழகான பிறை போல சிறிய நெற்றி. ரொம்பவே கூர்மை என்று சொல்ல முடியாத அளவுக்குத் தடித்த மூக்கு. செப்பு இதழ்கள் அதில் எப்போதும் சிரிப்பு தவழ்ந்து கொண்டே இருக்கும்.

தமிழ் நாட்டுப் பெண்களுக்கே உரிய கலையான பார்ப்போரைக் கவர்ந்திழுக்கும் முகம் கொண்டவள் இந்த கருத்தழகிக் கண்ணம்மா! அவள் கண் இமைகளோ மயில் தோகை என அடர்ந்து விரிந்து இருக்கும்!

பெரியகண் என்பதால் முட்டைக் கண் என்று சொல்லி ஒதுக்க முடியாத நிலையில் அந்த மீன்களுடனே போட்டியிடும் அளவுக்கு இருந்தாள் இந்த கயல்விழியாள்!
அதனால் தான் அந்த விழிகள் கென்டிரிக்கை இந்த பாடு படுத்துகிறதோ?!.

கென்டிரிக் தான் எடுத்த முடிவை செயல்படுத்த மறுநாளே தன் பி.ஏவை சாரா இப்போது பணிபுரியும் விளம்பர ஏஜென்சிக்கு அனுப்பி அவர்கள் நீண்ட நாட்களாக அவனுடன் இணைந்து பணிபுரிவதற்காகக் கேட்டுக் கொண்டிருந்த ஒப்பந்தத்திற்கு ஓ.கே சொல்லி அதற்கான சம்பிரதாயங்களை முடிக்கச் சொன்னவன் அன்றே அதற்கான தாள்களில் கையெழுத்திட்ட மறுநொடியே அங்கு பணிபுரியும் அனைவரையும் சந்திக்க மீட்டிங்கிற்கு ஏற்பாடு செய்யச் சொன்னான்.

கென்டிரிக் பணிபுரியும் ஹாலிவுட் ஸ்டார்களில் ஒருவர் மட்டும் தன்னுடன் நடிக்கும் மாடல் அழகி இளவயதும்புதுமுகமாகவும் இருக்க வேண்டும் என்று விரும்பி அப்படிப் பட்ட அழகிகளைத்தேர்ந்தெடுக்கும் முழுப் பொறுப்பையும் கென்டிரிக்கிடம் கொடுத்திருந்தார்.அப்படி அவன் தேர்வு செய்யும் அழகிக்காகப் பல நிறுவனங்கள் அவனுக்கு மனு கொடுத்திருக்க அதில் அந்த சாரா பணிபுரியும் ஏஜென்சிக்கு இப்போது ஓ.கே சொல்லியிருந்தான் கென்டிரிக்.

அவன் சொன்னபடியே அனைத்தும் முடிந்து மாலையில் ஏற்பாடு செய்திருந்த சந்திப்பிற்கும் வர,அவன் நுழைவதற்காகவே இரண்டு பக்கக் கதவையும் இரு பாதுகாவலர்கள் திறந்து வைக்க மிகக் கம்பீரமாக உள்ளே நுழைந்தான் கென்டிரிக்.

தான் நுழையும் போதே தன் கண்களைச் சாதாரணமாகச் சுழல விட்டவனோ அங்கிருந்த இருபது அழகிகளில் அவளை மட்டுமே கண்டு கொண்டவன் அதைத் தன் பார்வையில் காட்டாமல் தன் வேக நடையில் அவர்களை நெருங்கிஎப்போதும் உதடுகளைப் பிரிக்காமல் சிரிக்கும் தன் டிரேட் மார்க் சிரிப்பை அவர்கள் முன் சிந்தியவன்

“ஹாய் பியூட்டிஸ்! வெல்கம் டு மை அசைன்மெண்ட். பர்ஸ்ட் டேக் யுவர் சீட்” என்று ஒரு தலை அசைவுடன் அமரச் சொன்னான்.

அங்கிருந்த அழகிகள் அனைவரும் ‘இவர் தான் கென்டிரிக்கா?! அவரை வாழ்வில் ஒரு முறையாவது பார்க்க மாட்டோமா?!’ என்று நினைத்திருந்தவர்கள் இன்று அவனை நேரிலேயே பார்த்ததில் தங்களை மறந்துவாய் பிளந்து அமர்ந்திருக்க,சாரா மட்டும் எந்த ஆச்சரியமும் ஆர்வமும் காட்டாமல் இருப்பதைத் தன் மனதில் குறித்துக் கொண்டவனோ அங்கிருந்தவர்களின் கேள்விகளுக்குப்பதிலாக

“யா… ஐ யம் கென்டிரிக்!” என்றவன்

“என் அசைன்மெண்டுக்குத் தேவைப் படுபவரை உங்களில் ஒருவரைத் தான் என்னால் தேர்வு செய்ய முடியும். சோ என்னுடைய டெஸ்டுகள் மிகவும் கடினமாக இருக்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். அதற்கு நீங்களும் ஒத்துழைப்பீர்கள் என்று நம்புகிறேன்”என்று தன்மையாகச் சொன்னாலும் அவன் குரலில் மட்டும் ஒத்துழைத்துத் தான் ஆகவேண்டும் என்ற கட்டளை மறைந்திருந்ததை யார் அறிந்தார்களோ இல்லையோ சாரா நன்கு அறிந்ததின் பலனாக அவள் விழிகளில் கலக்கம் சூழ்வதைப் பார்த்தவனுக்கு வெற்றிக் களிப்பில் உள்ளம் மிதந்தது.

அதை மறைத்துத் தன் இருக்கையிலிருந்து எழுந்து நின்று முன்புறமிருந்த டேபிளில் ஸ்டைலாகத் தன் இரு கைகளையும் ஊன்றியவன் அங்கிருந்தவர்களை நிமிர்ந்து பார்த்து

“ஓ.கே பியூட்டிஸ்! இன்னைக்கு ஒரு நாள் நீங்க எல்லோரும் ப்ரீ. நாளையிலிருந்து உங்க வொர்க் லோட் ஸ்டார்ட் ஆகும். சோ பி ரெடி போர் தட்” என்று சொல்லி ஒரு சிறு தலை அசைப்புடன் அங்கிருந்து சென்று விட சாராவுக்குத் தான் உள்ளுக்குள் குளிர் பரவியது.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN