காதல்பனி 4

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதல்பனி 4

இவ்வூரு என்ன ஊரு.. நம்மூரு ரொம்ப மேலு
அட ஓடும் பல காரு.. வீண் ஆடம்பரம் பாரு
ஒரு தாகம் தீர்க்க ஏது மோரு

அவன் சொன்னபடியே மறுநாளே அவர்களுக்கான வேலை ஸ்டார்ட் ஆனது. அந்த இருபது பேரும் ஜந்து ஜந்து நபர்களாக பிரித்து நான்கு குழுக்களாக நான்கு இடத்தில் ஷூட்டிங் நடைபெற்றது.

அதில் சாரா இருந்த குழுவிற்குக் கொஞ்சம் ரிஸ்க்கான டாஸ்க்கைக் கொடுத்திருந்தான் கென்டிரிக்.

கடல் நீரில் சீறிப் பாயும் அலைகளுக்கு நடுவே விளையாடும் அலைச் சறுக்கு (surfing) என்னும் டாஸ்க்கை செய்யச் சொல்ல அங்கிருந்த மற்ற அழகிகளுக்கு அது சாதாரணம்.

ஆனால் சாராவுக்குக் கொஞ்சம் உதறல் எடுத்தது. எப்போதுமே ஷூட்டிங் நடக்கும் இடத்தில் கென்டிரிக் இருக்க மாட்டான். அங்கு நடப்பதை வீடியோவாகப் பதிவு செய்து அவனிடம் கொடுத்து விட்டால் பிறகு அதைப் பார்த்து அதிலிருந்து தேர்வு செய்வது அவன் பொறுப்பு.

ஆனால் இன்றோ சாரா குரூப்புக்கு நடக்கும் ஷூட்டிங் ஸ்பாட்டில் அவன் இருந்ததால் அவளுடைய பயத்தை அறிந்தவனோ

“சும்மா ஏதோ நானும் மாடல்னு பேரு வாங்க நினைத்து இங்கே யாராவது வந்திருந்தா, அவங்க என் அசைன்மெண்டில் இருக்க வேண்டாம். என் கீழே வேலை செய்தா எல்லா ரிஸ்க்கும் தான் எடுக்கணும்.

எங்கிருந்தோ தமிழ்நாட்டு கடைக்கோடி கிராமத்திலிருந்து வந்துட்டு பேர் எடுக்கணும்னு மட்டும் நினைத்தா பேரும் புகழும் தானா வந்திடுமா?!”

என்று அவன் புருவம் நெரிய குரலை உயர்த்தாமல் கண்களில் கூர்மையுடன் சகஜமாக அங்கு இருப்பவர்களுக்குச் சொல்வது போல் சொல்ல அது என்ன தான் அவன் பொதுப்படையாக சொல்லியிருந்தாலும்

அங்கிருந்தவர்களுக்கு அவன் சாராவைத் தான் சொல்கிறான் என்பது தெரிய வர, ஒரு ஏளனப் பார்வையுடன் மற்ற அழகிகள் தங்களுக்குள் கேலிப் பேசிச் சிரிக்க அவமானத்தில் கூனிக்குறுகிப் போனாள் சாரா.

இப்படி அவளைப் பேசினால் அவள் அசிங்கப்பட்டு நிற்பா என்றும் ரிஸ்க்கானதைக் கொடுத்தால் அவள் தடுமாறுவாள் என்றும் அவன் நினைக்க, ஆனால் அவனுக்கு எங்கே தெரியப் போகுது?... ஒரு பெண்ணை அசிங்கப் படுத்தினால் அவள் சிறு எலியென ஓடி ஒளியாமல் சிங்கமென சீறி எழுவாள் என்பது!

அதே மாதிரி எங்கோ கடைக்கோடி கிராமத்தில் பிறந்த எங்கள் தமிழ் நாட்டுப் பெண்களுக்குத் தான் எல்லா வகை நீச்சலும் தெரியும் என்பது!

அவர்கள் தான் சிறு வயதிலிருந்தே ஆறு, குளம், அருவிகளில் ஆட்டம் போட்டு பல கரைகளைக் கண்டவர்கள் ஆயிற்றே!

தன் முகத்திலுள்ள குன்றலை மறைக்க சாரா கடல் காற்றுக்காக சற்று ஒதுக்குப் புறமாக ஒதுங்க அப்போது தான் அவள் அங்கிருப்பது தெரியாமல் இரண்டு துணை போட்டோ கிராஃபர்கள் மெல்லியதாகப் பேசிக் கொண்டது அவள் காதில் விழுந்தது.

“சார் எப்போதும் இவ்வளவு பெரிய டாஸ்க்க கொடுக்க மாட்டார். அதே மாதிரி யாரையும் தட்டிக் கொடுத்து வேலை வாங்குவார். இப்போ ஏன் இவ்வளவு ஹார்ஷா நடந்துகிறார்னு தெரியல. இந்த அசைன்மெண்ட்ல சார் சைன் பண்ணதிலிருந்து அதிக அக்கறை டென்ஷனு இருக்கற மாதிரி இருக்கு”

அவர்கள் இன்னும் ஏதேதோ பேசிக் கொண்டு போக அது எதுவும் சாரா காதில் விழவில்லை. ‘அப்போ இது எனக்கான சோதனை! நான் தமிழ் நாட்டுப் பெண் என்பதால் இந்த மாடலிங்கில் இருந்து வெளியேற்ற நினைத்து இந்த ஏற்பாடு ஆனால் அது ஏன் தன்னை மட்டும் என்பது தான் அவளுக்கு புரியவில்லை!’

அவன் நோக்கம் அறிந்தவளோ உடனே டிரெஸ்ஸிங் ரூம் போய் தன் ஸ்விம் சூட்டைப் போட்டு அலைச்சறுக்குக்குத் தேவைப்படும் சர்ஃப்பிங் போர்ட் எனப்படும் பலகையுடன் வெளியே வந்தவள் கென்டிரிக்கை ஒரு நிமிர்வுடன் பார்த்த படி கடலை நோக்கிச் செல்ல அவனோ அவளை ஓர் அலட்சியப் பாவத்துடன் பார்த்திருந்தான்.

முதலில் அலைகளுக்கு சற்றே மிரண்டாலும் பின் அவள் சமாளித்து விட அதைத் தன்னை மீறிக் கண்ணில் ஒரு பெருமிதத்துடன் கண்டவனோ இறுதியில் அவள் சமாளிக்க முடியாமல் அலையால் தள்ளப் பட்டு இவர்கள் இருந்த இடத்தை விட்டு ஒரு பாறையின் மேல் விழ அதைப் பார்த்தவனோ நெஞ்சில் பய பந்துகள் எழ இருக்கையை விட்டு எழுந்தே விட்டான் கென்டிரிக்.
அனைவரும் அங்கு ஓடிச் சென்று அவளைப் பார்க்க நல்ல வேலை அது பெரிய பாறையாக இல்லாமல் போனது. அதே மாதிரி அவளும் விழும் போதே சற்று சுதாரித்துத் தன் கைகளை அந்த பாறையின் மேல் ஊன்றி அடி படாமல் பார்த்துக் கொண்டாள்.
அவளுக்கு ஒன்றும் இல்லை என்று நிம்மதி அடைந்தவன் அவள் உள்ளங்கையிலும் அவள் கால் முட்டியிலும் ஏற்பட்டிருந்த சிராய்ப்புகளைப் பார்த்தவனோ துடித்துத் தான் போனான். ஆனால் அதைக் காட்டி விட்டால் அவன் கென்டிரிக் இல்லையே?! உடனே அதை மறைத்தவனோ ‘இவளுக்காக நாம் ஏன் துடிக்கிறோம்?’ என்ற கோபத்தில்

“இதுக்குத் தான் எல்லாம் தெரிஞ்ச மேதாவி மாதிரி நடந்துக்க கூடாது” என்றவன் “ச்சை! முதல் நாளே இப்படி எல்லாம் நடந்துகிட்டா மூணு மாதத்தில் நான் முடித்துக் கொடுக்க வேண்டிய அசைன்மெண்ட ஆறு மாதம் கழிச்சித் தான் முடிப்பன் போல…” என்று அவன் பாட்டுக்கு சொல்லிக் கொண்டே போக
இத்தனை பேர் முன்னால் அவன்

இப்படி எல்லாம் சொல்லவே, தன் கையில் ஏற்பட்டிருந்த எரிச்சலை விட மனதில் எரிச்சல் ஏற்பட உடனே ரோஷத்துடன் சாரா தன் காலிலிருந்து மற்றவர்கள் கழட்டியிருந்த அந்தப் பலகையை மறுபடியும் எடுத்து அவள் காலில் மாட்டப் போக அதைப் பார்த்தவனோ இவ்வளவு நேரமிருந்த இலகுத் தன்மை மாறி முதல் முறையாக கோபத்துடன்

“இப்போ எதுக்கு அதை எடுக்கற?” என்று அவளை அதட்டினான் கென்டிரிக்.

சாரோவோ அவன் அதட்டியதில் அவனைப் பார்த்து மலங்க மலங்க முழிக்க சுற்றி இருந்தவர்கள் அனைவரும் அவனை விசித்திரமாகப் பார்க்கவே தன் தவறை உணர்ந்தவனோ உடனே குரல் இறுக

“இப்போ உடனே செய்யணும்னு அவசியம் இல்ல. ஒன் ஹவர் ரெஸ்ட் எடுத்த பிறகு ரிலாக்ஸ்டா செய்தா போதும். அப்போ தான் வேவ்ஸ்கு ஈக்குவலா மூவ் பண்ண முடியும். எனக்கு வேண்டியது பெர்பக்ஷன். சோ பி ரெடி போர் தட் டைம்” என்றவன்

திரும்பிப் பக்கத்தில் இருந்தவனைப் பார்த்து அதுக்குள்ள மற்றவங்களை பண்ணச் சொல்லுங்க என்று முடித்து விட வேறு வழி இல்லாமல் விலகிச் சென்றாள் சாரா.

சாராவுக்கு ஓ.கே வா என்று பல முறை கேட்டு ‘ஜ யம் ஆல் ரைட்’ என்று அவளும் சொன்ன பிறகே அவளைச் செய்யச் சொல்லியிருந்தவன் அவள் செய்வதற்கு முன்பே அங்கிருந்து சென்று விட்டுருந்தான் கென்டிரிக்.

அதன் பிறகு வந்த நாட்களில் எல்லாம் அவளுக்குப் பல டாஸ்குகளைக் கொடுத்து அதில் பயிற்சி கொடுத்தானே தவிர ஸ்பாட்டில் கூடயிருந்து அவைகளைப் பார்க்கவில்லை. ஆனால் அவுட்டோர் மற்றும் இன்டோர் என்று எந்த ஷூட்டிங் நடந்தாலும் அவளை லைவ் டெலிகாஸ்டில் தன் லேப்டாப்பில் பார்த்துக்கொண்டு தான் இருந்தான்.

ஒரு மாதம் கழித்து ஒரு முறை அவுட்டோர் ஷூட்டிங்கில் எந்த ஒரு முன் அறிவிப்பும் இல்லாமல் சாரா இருந்த குழுவைப் பார்க்க வந்திருக்க, அன்றைய தினம் அந்த அழகிகள் பாராசூட்டில் இருந்து ஒரு சிறு மலை குன்றின் மேல் இறங்குவது போல் காட்சி.

இவன் வந்த நேரம் சரியாக அப்போது சாரா பாராசூட்டில் இருந்து இறங்குவதைப் பார்த்தவனோ அவள் நிறத்தில் ஏற்பட்டிருந்த மாற்றம் மற்றும் முகத்திலிருந்த தேஜஸ்யுடன் இத்தனை நாள் கொடுத்த பயிற்சியில் அவளுக்குள் மறைந்திருந்த கம்பீரம் வெளிப்பட்டு ஒரு மிடுக்குடன் இறங்கியவளைப் பார்த்தவனோ உள்ளுக்குள் பிரமித்து தான் போனான்.

திரையில் அவளைப் பார்த்ததை விட நிஜத்தில் கருப்பு வைரமாக அவள் பிரகாசிக்க, ‘முதன்முதலில் பார்த்தவளுக்கும் இவளுக்கும் தான் எவ்வளவு வித்தியாசம்?!’ என்று நினைத்தவனுக்கு கோபத்திற்கும் ஏளனத்திற்கும் பதில் உள்ளுக்குள் சந்தோஷமே பீறிட்டது.

எப்போதும் அவளைப் பார்க்கும் போது அவள் விழிகளைத் தன்னுள் நிறைத்துக் கொள்பவனோ இப்போது முதல் முறையாக அவளையே முழுமையாகத் தன் மனதுள் நிறைத்துக் கொண்டான் கென்டிரிக்.

‘நானா இப்படி?’ என்று யோசித்ததற்கு அவனுக்குத் தெரிந்தது எல்லாம் அந்த விழிகள் தான்! அந்த விழிகள் யாரிடம் இருந்தாலும் அவர்கள் வாழ்க்கையில் ஜெயித்து நிற்பதைப் பார்க்கத் தான் இப்போதெல்லாம் அவன் ஆசைப் படுகிறான்.

அதே மாதிரி இப்பொழுதெல்லாம் அவள் விழிகளை மறைக்கும் படியான எந்த ஒரு போட்டோ ஷூட்டுக்கும் அவன் அவளை அனுமதிப்பதில்லை. அது மட்டுமில்லாமல் அவள் விழிகளுக்குப் பிரச்சனை கொடுக்கும் எந்த டாஸ்க்கையும் கொடுப்பதில்லை என்ற முடிவையும் செயல்படுத்தி இருந்தான்.

அதேபோல் அவள் விழிகளுக்கு ஒன்றும் ஆகக் கூடாது என்பதில் உறுதியாகவும் இருந்தான் கென்டிரிக். என்ன தான் தனக்குப்

பிடித்தவர்களுடைய விழிகளை அவள் வைத்திருந்தாலும் அதையும் மீறி அவளிடம் சாய்வதை அவனுமே அறியாமல் தான் இருந்தான்.

சில நாட்களுக்குப் பிறகு…

அவன் அலுவலகக் கட்டிடத்தில் அவனுடைய தளத்திற்குக் கீழே மாடலிங்கிற்கான ஆடிட்டோரியத்தில் சாரா குழுவிற்கு பேஷன் ஷோ நடந்து கொண்டிருக்க, இவனோ தன் வேலையில் மூழ்கியிருந்த நேரத்தில் திடீரென கட்டிடத்தினுள் தீப்பிடித்து இருப்பதற்கான அறிகுறியாக அபாய மணிச் சத்தம் அந்தக் கட்டிடமே நடுங்கும் படியாக ஒலித்தது.

உடனே அங்கிருந்தவர்களைப் பாதுகாப்பாக வெளியேறச் சொல்லி மைக்கில் சொன்னவன் பிறகு தன்னுடைய டாக்குமெண்ட்ஸ் அனைத்தையும் பென்டிரைவில் காப்பி பண்ணிக்கொண்டு தன் அறையில் இருந்த பால்கனிக்குச் சென்றவனோ ஒரு நொடித் தயங்கிப் பின் கண்களை மூடி நெற்றியிலே இரண்டு அடி அடித்துக் கொண்ட படி கீழே இறங்கி வந்து எல்லோரையும் பாதுகாப்பாக வெளியேர சொன்னான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN