பேதை மனம்-2

Min mini

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம்-2



தாராவின் மனதை மாற்றும் முயற்சியில் இஷிதா அவளை கேன்டீன் அழைத்துச்சென்றாள். அங்கே ஆளில்லாத ஒரு மேஜையை பார்த்து அமர்ந்தவள் தாரா திரும்ப திரும்ப போன் உடைந்ததையே கூறி அங்கலாய்த்து கொண்டிருந்ததை கவனித்தாள்.



" பேப்ஸ்.. முகத்தை ஏன் இன்னும் ஊர்ருன்னு வச்சுக்கிட்டு இருக்கிற?? அதான் பஜ்ஜி வாங்கி தரேன்னு சொல்லிட்டேன்ல.."என்றாள் இஷிதா.



" நானே என் லவ் பெயிலியர் கவலையில இருக்கிறேன்.. உனக்கு பஜ்ஜி முக்கியமா போச்சா??" என மூக்கை உறிஞ்சினாள் தாரா.



" அச்சோ.. என் பேப்ஸ்க்கு லவ் ஃபெயிலியர் ஆயிடுச்சா.."என ஆறுதலாக அணைத்தாள் இஷிதா.



" நீ போ பேப்ஸ்.."என அவளிடமிருந்து விலகியவள், "அவன் என்கிட்ட இருந்து போனை புடுங்கிட்டு போகும்போது நீ வேடிக்கை தானே பாத்துட்டு இருந்தே.." என கோபப்பட்டாள் தாரா.



" பேப்ஸ் நீ இப்படியே ஏதாவது சொல்லிட்டு இருந்த.. கேன்டீன் சமையல் மாஸ்டர் இப்பதான் சுடசுட எண்ணெய சட்டில ஊத்தி கொதிகக வச்சு இருக்காரு.. பஜ்ஜில வாழக்காய்க்கு பதிலா உன் முகத்த வச்சு பஜ்ஜி செய்ய வச்சுருவேன்.. பார்த்துக்கோ..."என செல்லமாக மிரட்டினாள் தாரா.



" அப்படி செஞ்சா கூட நான் சந்தோசமா மேல சொர்க்கத்துக்கு போயிட்டு போயிருவேன்.. ஆனா என் மொபைல் இல்லாத உலகத்தை நான் வாழவே மாட்டேன்.. என் செல்லகுட்டி என்ன விட்டுட்டு எப்படித்தான் இருக்கோ.. என் போனை உடைச்சு அவனை எமன் அங்கிள் கிட்ட சொல்லி தந்தூரி பண்ண சொல்லிடுவேன்.." என விரல்களில் சொடுக்கிட்டு கொண்டாள் தாரா.



அவளை அதே புலம்பலிலும் சாபத்திலும் விட்டுவிட்டு இஷிதா கேன்டீனில் சென்று இரண்டு சூடான பஜ்ஜி வாங்கியவள் ஒன்றை பாதி வழியிலேயே சாப்பிட்டுக்கொண்டே வந்தாள். (தாரா புடுங்கி சாப்பிட்டுடுவாளாம்..) மற்றொன்றை கொண்டுவந்து மேஜையில் வைத்தாள்.



" பேப்ஸ் உனக்கு பஜ்ஜி வேணும்னா சொல்லு.. இல்லன்னா நானே சாப்பிடுவேன்.." என சிறு பிள்ளைக்கு சாதம் ஊட்டுவது போல தாராவினை பயமுறுத்தினாள். தாராவோ கோபமாக இஷிதாவை முறைத்து பார்த்தாள்.



" சரி பேப்ஸ்... உனக்கு இது பிடிக்கல போல.. நானே சாப்பிடுறேன்.." என எடுத்து வாயில் வைக்க, பாதி பஜ்ஜி இஷிதாவின் வாயினுள் சென்று இருந்தது. மீதியை தாரா வெளியிலிருந்து பிய்க்க, அவள் கையோடு வந்தது. அதை அருகே இருந்த கட்டி சட்னி வைத்து சாப்பிட்டாள்.



" எனக்கு லவ் ஃபெயிலியர்னு தான் சொன்னேன்.. அதுக்காக நான் சாப்பிட மாட்டேன்னு எல்லாம் இல்ல.. எவ்வளவு தைரியம்.. நான் என்னோட பர்ஸ்ட் லவ் போச்சுன்னு பீலிங்கல இருந்தா இரண்டாவது லவ்வ நீ தள்ளிக்கிட்டு கூட்டிட்டு போய்டுவியா??" என செல்லமாய் கோபித்துக் கொண்டாள் தாரா.



" பேப்ஸ்.. உனக்கு ஃபர்ஸ்ட் லவ் போனுன்னா.. ரெண்டாவது லவ் சாப்பாடு.. ஆனால் எனக்கு பர்ஸ்ட் லவ்வே சாப்பாடுதான்.. பாரு நானும் சாப்பிடுவேன்.." என கூறிவிட்டு மற்றொரு பஜ்ஜி வாங்கி வந்து தாராவிற்கு காட்டி காட்டி சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். இங்கே இந்த கலவரம் நடந்து கொண்டிருக்க, மெதுவாய் வந்து அமர்ந்தான் கிஷோர்.



" கிஷோர் நீங்களா??" என கேட்டாள் இஷிதா.



" நான் கிஷோர் தான்.. இதுல உனக்கு என்ன சந்தேகம்??" என கேட்டான். "எனக்கெல்லாம் சந்தேகம் இல்ல.. நீங்க தான் உங்க பேரு கிஷோரான்னு டவுட்ல திருதிருன்னு முழிக்கிறீங்க.." என கிண்டல் செய்தாள் இஷிதா.



"உன் பிரெண்டுக்கு போன் போயும் உனக்கு இந்த வாய் மட்டும் குறையவே மாட்டுது இல்ல.." என கிஷோர் கூற, அவளோ "இது என்னோட பால்ட் இல்லை.. என்ன பெத்தவங்களோட பால்ட்.. இந்த கொஸ்டின அவங்க கிட்ட தான் போய் கேட்கணும்.." எனக் கூறிவிட்டு மீதியிருந்த பஜ்ஜை அமுக்கி கொண்டு இருந்தாள்.



"ப்ரெண்ட் போன் போச்சேன்னு வருத்தமே இல்லையா??" என கிஷோர் கேட்க, வாய் முழுக்க பஜ்ஜியோடு "என் போன் என் கையில தானே இருக்கு.."என போனை தூக்கி காட்டினாள். அதை பட்டென இரண்டே நிமிடத்தில் பிடுங்கினான்.



"இப்ப நீ பீல் பண்ணி தானே ஆகணும்.."என கிஷோர் சிரிக்க, தாராவும் "அண்ணன்னா அண்ணன் தான்.."என ஹைபை அடித்துக் கொண்டாள். இருவரையும் முறைத்தபடி பஜ்ஜியில் கவனம் செலுத்தினாள் இஷிதா.



அப்போது கிஷோரின் நண்பன் ஓருவன் மூன்று பெப்சியை அங்கே வைத்துவிட்டு சென்றான்.



" அண்ணா இந்த பெப்ஸி எங்களுக்கா??" எனக்கேட்டாள் தாரா.



" இல்ல.. இங்க இருக்கிற ஈக்கும் கொசுக்கும் வாங்குனேன்..கேள்விய பாரு.. இங்க யாரு இருக்கிறா?? யாருக்கு பெப்சி வாங்கி கொடுப்பாங்க??" என கேட்டான் கிஷோர்.



" நானும் நீங்க இந்த அழகிய தமிழ் மகன் படத்துல வர்ற ஹீரோயின் ஸ்ரேயா எறும்புக்கு சக்கரை பொங்கல் வைக்கிற மாதிரி.. உங்களுக்கு ஈக்கும் கொசுவுக்கும் பெப்சி வாங்கி கொடுக்கிற கொள்கை இருக்கும் நினைச்சுட்டேன்.." என்றாள் தாரா. "இருந்தாலும் உனக்கு குசும்பு ஜாஸ்தி தான் பேப்ஸ்.." அருகிலிருந்த தாராவை இஷிதா இடித்தாள்.



" சும்மா இரு நம்ம அண்ணன் தானே.. அதெல்லாம் தாங்கிக்குவாரு.." என்றவள், "இல்லையாண்ணா??" என கோரஸ் இழுத்தாள்.



"பேப்ஸ்.. நீ கலாய்க்கிறதுல என போன் ஆம்ப்ளேட் ஆகாம இருந்தா சரிதான்.." என கிசுகிசுத்தாள் இஷிதா.



"ஓ.. பேப்ஸ்.. அதான் புலி இவ்வளோ பம்முதா.." என யோசித்தவள்,



"அண்ணா.. எனக்கு சமோசா வாங்கி தரீங்களா??" என கேட்க, "இருந்த காசில்தான இப்போ பெப்சி குடிச்ச?? இப்போ சமோசாக்கு எங்க போறது??" என தனது பாக்கெட்டை தட்டினான்.



"அதான் கையிலே இருக்கே.."என தாரா கண்ணைக்காட்ட, கிஷோர் கையில் கிடந்த பிரேஸ்லெட்டை என தவறாக நினைத்துக்கொண்டு "ம்ஹூம்.. இது என் பாட்டி செண்டிமென்ட்ல போட்ருக்கேன்.. "என கையை உள்ளிழுத்தான்.



"அய்யோ அண்ணா.. உங்கள எல்லாம் ஒரு கிளாஸ்க்கு எப்படிதான் ரெப்பா போட்டாங்களோ??" என தலையிலடித்தவள், அவன் கையில் இருந்த போனை வாங்கி கொண்டு நேரே கவுண்டருக்கு சென்றாள். பின்னாலேயே இஷிதாவும் ஓடினாள்.



"அங்கிள்.. ரெண்டு சமோசா குடுங்க.. பில்லை அக்கௌன்ட்ல எழுதிக்கோங்க.."என்றாள் தாரா.



"இங்க கடன் கொடுக்கிறதில்லமா.."என்றார் கேண்டீன் உரிமையாளர்.



"என்ன அங்கிள்..நாங்க இங்க தானே மூணு வருஷம் படிக்க போறோம்... நீங்க போட்டு தர்ற இத்துபோன பஜ்ஜிய நம்பி சாப்பிடுறோம்ல.. எங்க மேல நம்பிக்கை வச்சு அக்கௌன்ட் கூட ஸ்டார்ட் பண்ண மாட்றீங்க.. காலேஜ்ஜ பெரிய சைஸ்ல கட்டி வச்சா மட்டும் போதாது.. அக்கௌன்ட் பெசிலிட்டீஸ் கூட இல்லை.."என வம்பளந்து கொண்டிருந்தாள்.



"அக்கௌன்ட் தானே.. ஓபன் பண்ணிடுவோம்.. உங்க ஐடி கார்ட வச்சு ஸ்டார்ட் பண்ணலாம்.. உங்க ஐடி கார்டை தாங்க.."என அவளை ஒரே பதிவில் மடக்க, மாட்டிக்கொண்ட திருடன் போல திருதிருவென கண்ணை உருட்டி முழித்தாள்.



"ஐடி கார்ட்டை விடுங்க அங்கிள்..இதோ இருக்கு போன்.. இதை இப்போ வச்சிக்கோங்க.. நாளைக்கு காச தந்திட்டு வாங்கிட்டு போறேன்.. எப்படி டீல்??" என கண்ணை சிமிட்டி கேட்க, உரிமையாளர் யோசித்துக் கொண்டிருந்தார்.



அப்போது, "பேப்ஸ்.. நோ..."என இஷிதா ஓடி வரவும் அவளது போனை வாங்கி கல்லாவில் போடவும் சரியாய் இருந்தது. "அய்யோ.."என இஷிதா தலையில் கைவைத்தாள். தாராவோ டோக்கனை எடுத்து இரண்டு சமோசாவை வாங்கினாள். மேஜையில் வந்து அமர்ந்தவள், ஒரு சமோசாவை கிஷோரிடம் நீட்டினாள்.



"பேப்ஸ்.. அப்ப எனக்கு வாங்கலியா??" என ஏமாற்றமாய் கேட்டாள்.



"நான் பீல் பண்ணும்போது நீ இப்படி தானே பஜ்ஜி சாப்பிட்ட..இது என் டர்ன்.. நான் சமோசா சாப்பிடுவேன்..இப்போ உனக்கு எப்படி இருக்கு.. போன் இல்லாம.. யான் பெற்ற இன்பம் யாவரும் பெறுக.."என கையை உயர்த்தி ஆசிர்வாதம் செய்தாள் தாரா.



"ச்சே.."என ஒற்றை காலை தரையில் உதைத்து விட்டு அருகில் அமர்ந்தாள் இஷிதா.



"அந்த சீனியர் கிளாஸ் ரூம் எது?? நானே வாங்கி தர்றேன்.."என கடுப்பாய் கேட்டாள் இஷிதா. தாரா கிஷோரின் முகத்தை பார்க்க, அவனோ "அவன் ஒரு சைக்கோ.. பண்ணாதேன்னு சொல்றதை பண்ற நல்ல உள்ளம்.. நீ கேட்டதும் தர்ற ஆள் அவன் இல்லை.. அவன்கிட்ட இருந்து வாங்க முடியாது.. திருடத்தான் முடியும்.."என்றான்.



"சரி.. போன் எங்கே இருக்கு??" என கேட்டாள் இஷிதா.



"திருடக்கூட முடியாது.. எப்பவும் அவன் கூடவே தான் வச்சிருப்பான்..அவனை தாண்டி நீ போனை நெருங்கவே முடியாது.."என்றான் கிஷோர்.



"ஆமா.. இவரு பெரிய கர்ணமகாராஜா.. என் பேப்ஸ் போனை கவசகுண்டலம் மாதிரி வச்சிட்டு சுத்துறதுக்கு.."என அலுத்துக் கொண்டாள் இஷிதா.



"தாரா அவனை மூட் அவுட் பண்ணுனதுக்கு அவன் கண்டிப்பா பேர்வெல்லுக்கு தான் தருவான் போல.."என்றான் கிஷோர்.



"வீட்லக்கூட.. தூங்கும் போது குளிக்கும் போது எப்பயாவது கீழ வச்சுத்தானே ஆகணும்..அப்ப எடுப்பேன்... அட்ரெஸ் குடுங்க.."என்றாள் இஷிதா.



"&&&&&&" என முகவரியை கூறினான் கிஷோர்.



"நாளைக்கு பேப்ஸ்.. உன்னோட போனோட வர்றேன்.. என் போனை அடகுல இருந்து மீட்க ரெடியா இரு.. இப்போ கிளாஸூக்கு ரெடியா இரு.."என கூறிவிட்டு தாராவை சமோசா முழுதாக சாப்பிட விடாமல் இழுத்து சென்றாள். அவள் சென்ற திசையையே புன்னகைத்துக் கொண்டே கிஷோர் பார்த்திருந்தான். அவனருகே வந்த நண்பன் ஒருவன்,



"டேய் மச்சான்.. உங்கிட்ட தான் காசு இருந்திச்சுல்ல.. அப்ப ஏன் காசில்லன்னு பொய் சொன்ன??" என கேட்டார்.



"மாப்ள.. காச குடுத்திருந்தா.. இந்த மீட்டிங் இதோட என்ட்கார்டுக்கு வந்திடும்.. இப்போ இன்னொரு சான்ஸா அமைஞ்சிருக்கு..பார்த்தியா??" என கேட்டான்.



"என்ன மச்சான்.. லவ்வா??" என கேட்க, கிஷோரோ புன்னகையை மட்டுமே சிந்தினான்.



அன்று இரவு..


ந்த பால்நிலா வானத்தில் இருந்தப்படியே பூமியில் இருந்த நட்சத்திரங்களை (பெண் தேவதைகளை) ரசித்துக்கொண்டிருந்தது. பௌர்ணமி வெளிச்சத்தில் அந்த கோட்டை இன்னும் பிரகாசமாய் இருட்டிலும் ஒளிர்ந்தது.

பங்களாவின் ஓரமாக உருண்டையாக நீண்டு இருந்த தண்ணீர் பைப்பினை பிடித்து ஒரு கருப்பு உருவம் மேலே ஏறியது.. கோட்டையோ உயரமாய் இருக்க அந்த உருவத்திற்கோ மூச்சிறைத்தது. இருந்தும் விடாமல் முயற்சி செய்தபடி எம்பி எம்பி ஏறியது. ஒருவழியாய் நினைத்த ஜன்னலின் அருகே வந்து சேர்ந்திருந்தது. பின் மெல்லமாக ஜன்னலின் சுவற்றை பிடித்து தாவ, அந்த கோட்டைக்கு சொந்தக்காரனோ இருளின் குளிர்ந்த இதமான காற்றிற்காக ஏசியை கூட பொருட்படுத்தாமல் ஜன்னலை திறந்து வைத்திருந்தான்.


ஜன்னலின் வழியே உள்ளே நுழைந்த உருவம் அவனை பார்த்து. அவனோ டபுள் காட் பெட்டை ஒருவனாய் நிறைத்து சுகமான தூக்கத்தை மேற்க்கொண்டிருந்தான். உடற்பயிற்சியின் காரணமாக அவனது உடல் மட்டுமின்றி அவனது கன்னங்களும் இறுகி போயிருந்தது. அவனது கண்களை மூடியிருந்தான் இல்லையெனில் அவனது கண்களின் ஒளியில் எதிரில் இருப்பவர்கள் பொசுக்கி விடுவர். அடிக்கடி வரும் கோபத்தால் மூக்கு சிவந்து சிவந்து "அடப்போடா.. நான் சிவப்பாவே இருந்துட்டு போறேன்.." என அவனிடம் கோபித்துக்கொண்டு எப்போதுமே சிவந்து இருந்தது. தூக்கத்தில் கூட சிரிக்கக் கூடாது என அவனது உதடுகள் உறுதிமொழி எடுத்தது போல அழுத்தமாக இருந்தது.


சட்டையில் மேல் பட்டன்கள் இரண்டு கழற்றி விட்டிருந்தவன் ஆழ்நித்திரையில் இருந்தான்.
உள்ளே சென்ற உருவம், அருகில் இருந்த பூந்தொட்டியை தூக்கி அவனது தலையிலே போடப்போக, ஏதோ நினைவு வந்ததாக பூந்தொட்டியை இருந்த இடத்திலேயே வைத்துவிட்டது. அந்த இருட்டில் அருகில் இருந்த டேபிள் மற்றும் ஷோபாவில் துழாவி துழாவி தேடிக்கொண்டிருந்தது.


"அட அங்க என்ன தேடுற??" என வாயை கேட்க அசைத்தான்.. ஆனால் அவன் விழித்துவிடுவானே என்ற பயத்தில் வாயை ஒரு கையால் பொத்தியவாறே தேடியது.. அப்போது அந்த இருட்டறையில் வெளிச்சம் தெரிய, பார்வை அதை நோக்கி சென்றது. அவனின் அருகே போன் பாடாய் படுத்தப்பட்டு கிடந்தது. அருகே சென்று எடுக்க முயல், பரந்து விரிந்திருந்த அவனின் உடலை தாண்டி எடுக்க முடியவில்லை..


எம்பி எம்பி ஒருவாறாக எடுத்துமுடிக்க, அதன் கெட்ட நேரமாய் நெற்றியில் இருந்து வழிந்தது ஒரு துளி வியர்வை. சட்டென அதை கேட்ச் பிடித்தது அந்த உருவம்.. ஆனால் கெட்ட நேரம் கெட்ட நேரம் தான்.. மற்றொரு துளி அவனின் கன்னத்திலே விழுந்திருந்தது. ஈரத்தை உணர்ந்த அவன் விழிகளை விரிக்க முயற்சிக்க, அந்த உருவமோ சடாரென அவனது கட்டிலின் அருகே படுத்துவிட்டது..


அவன் வேறு யாருமல்ல நமது திலீப் தான். அந்த உருவம் இஷிதாவே தான்.. தாராவின் போனை களவாட வந்திருந்தாள். கட்டிலின் அருகே படுத்தவள், எந்நேரத்திலும் எழலாம் என்ற பயத்தில் கண்ணை இறுக மூடியவள், அப்படியே உறங்கியும் போனாள்.
காலை நான்கு மணி,
செங்கதிரவன் தனது ஒளியை திலீப்பின் அறைக்குள் பரப்ப, அவனோ கண்ணை கசக்கி கொண்டிருந்தான். கீழே படுத்திருந்த இஷிதாவோ எழுந்து அமர்ந்து கொண்டு சுற்றிலும் கண்களை சுழல விட்டாள். வலது புறத்தில் கண்களை கசக்கி கொண்டிருந்த திலீப்பை பார்த்தவள், சட்டென மீண்டும் படுத்துக்கொண்டாள். அவனிடம் இருந்து மாட்டாமல் இருக்க எண்ணி கட்டிலின் அடிக்கும் புகுந்து கொண்டாள். வாயில் தனது ஒரு விரலை வைத்து கடித்துக்கொண்டவள், அசையாமல் அவனது நடவடிக்கைகளை கவனித்தாள்.
அவனோ ஷார்ட்ஸை தேடிக்கொண்டிருந்தான். அவள் ஒவ்வொன்றாய் எடுத்து வீசிக்கொண்டிருக்க ஒன்று கட்டிலின் அடியில் வந்து விழுந்தது. "அம்மாடியோவ்.. பொண நாத்தம் நாறுது.. துவைக்கவே மாட்டான் போல.." என அதை கட்டிலிற்கு வெளியே தள்ளினாள். பின் எப்போது போல கண்ணாடியை விட்டு விட்டு எங்கோ பார்த்து பனியனை போட, "பரதேசி பக்கி பய.. கண்ணாடிய இங்க விட்டு போட்டு எங்கேயோ பாத்து ட்ரெஸ்ஸ மாத்துது.. ஒருவேளை வியாதி கீதி இருக்குமோ??" என யோசித்துக் கொண்டிருந்தவள், தலையில் அடித்து "இப்பிடியே யோசிச்சிட்டே அவன் ட்ரெஸ்ஸ மாத்துறதை பாரு.."என அவளது மூளை தந்தியடித்தது. அவளது பார்வையோ "பரவாயில்ல பயபுள்ள.. டைகர் ஷெராப் மாதிரி பாடிய பிட்டா தான் வச்சிருக்கு.. பாரேன் பேக் பேக்கா பதினாரு வச்சிருக்கு.."என கன்னத்தில் கைவைத்தவாறு தலையில் முகத்தை வைத்தாள்.
"அடச்சீ.. இஷி.. நீ சைட் அடிக்கவா வந்த.. வந்த வேலைய பாரு.."என மூளை செருப்பாலேயே அடிக்க, சிறிது நேரத்திற்கு கண்களை பொத்திக்கொண்டாள். சில நிமிடங்களில் அவன் சென்றதை உறுதி செய்து கொண்டவள், மெல்ல வெளியே எழுந்தாள். "ஆப்பரேஷன் சக்ஸஸ்.."என மூச்சை விட்டாள்.
அப்போது திடீரென கதவு திறக்கப்படும் சத்தம் கேட்க, அருகில் இருந்த கபோர்டில் சென்று மறைந்து கொண்டாள். வந்தவன் சுற்றும் முற்றும் தேடியவன், அவளிருந்த அதே கபோர்டை திறந்தான். அவனது ஆடைகளிக்கு பின்னே ஒளிந்திருந்த அவளோ, மனதிற்குள் தனக்கு தெரிந்த அத்தனை கடவுளையும் துணைக்கு அழைத்துககொண்டிருந்தாள். வேண்டுதல் கேட்டதோ என்னவோ அவன் ஓரமாய் இருந்த ஒரு பனியனை எடுத்தான். தான் போட்டிருந்த பனியனை கழற்றி அதை மாட்டினான். கட்டிலின் அடியிலாவது அவனது பின்பக்க உடலை தான் பார்த்தாள். தற்போது ஃப்ரீ ஷோ காட்டிக் கொண்டிருந்தான். இஷிதாவோ கபோர்டிற்குள் கருமாதி அடையாதது தான் பாக்கி..


கள்வன்..கட்டுமஸ்தான கட்டழகை காட்டி கன்னியவளை கவர்ந்திடுவானோ?? இல்லை காதலில் வீழ்த்திடுவானோ??

அவன் சென்றதை உறுதி செய்தவள் இம்முறை மூச்சை இழுத்து பிடித்துக்கொண்டு வந்த வழியே பைப் வழியே இறங்கி, அவனது தோட்டத்தில் கால் வைத்த பின்னே அடக்கி வைத்திருந்த மொத்த மூச்சையும் வெளியிடடாள்.
பேதை மனம் அறிவானோ??
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN