கதை - அறிமுகம்

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உயிர் தீண்டும் இன்பம் வேண்டிக் கேட்குதடா!

இது தான் என் நாவலின் தலைப்பு.

நாயகன் : நவிலன்

நாயகி : புகழினி


எதிர்பாராம எல்லாம் இவங்க வாழ்க்கையில் சேர்ல. வீட்டில் பார்த்து நிச்சயம் செய்த திருமணம் தான். இருவருக்கும் வாழ்க்கை மேல விட தனக்கு வரும் துணைமேல அவ்வளவு நம்பிக்கை இல்லை.... அவங்க பட்ட காயங்கள் அப்படி..

இப்படி நம்பிக்கிட்டு இருக்கிற இருவரும் சேர்ந்து ஒரு பயணம் மேற்கொள்றாங்க..அந்த பயணம் அவங்க வாழ்க்கைத் தத்துவத்தையே மாத்துக்கிறது.....

கன்யாகுமரி முதல் கல்கத்தா வரை ( east coastal region ) சில்லுனு ஒரு பைக் பயணம் .... எப்படி இவங்க அவங்க காதலை டிஸ்கவர் பண்றாங்கனு பாப்போம்.....

பயணம் ! நம்மில பல பேர்க்கு ரொம்ப பிடிச்ச விஷ்யம். ஒரு மனிதனுடைய வாழ்க்கையின் கண்ணோட்டதை அப்படியே வேறமாறி மாற்றும் ஆளுமை இந்த பயணங்களுக்கு உண்டு. வெவ்வேறு மனிதர்கள் , அவர்கள் உணவு , பழக்கவழக்கங்கள், இயற்கை , இடம் என எல்லாம் நம்ம வாழ்க்கை புதுசா உணர வைக்கும்...

இங்க எப்படி நம்ம நவிலன் புகழினி சேர்ந்து மேற்கொள்ளுகின்ற பயணம் எந்த விதத்தத்துல அவங்க வாழ்க்கையை மாத்துகிறது என்று பார்ப்போம்....

Disclaimer:

East coastal region இல் கால்வாசி இடங்களுக்கு தான் நான் பயணம் செய்திருக்கேன். சோ நிறைய பேருடைய எக்ஸ்பீரியன்ஸ் நிறைய பிளாக் மற்றும் யு டியூப்ல படிச்சிட்டு அப்புறம் கொஞ்சமா என் கற்பனை கலந்து தான் எழுதுறேன். சோ எதாவது தப்பு இருந்தா , பர்ஸ்னல்லா நீங்க சொல்லலாம்.....

எப்படி இந்த கதை வரும் என்று தெரியவில்லை. பட் நம்பிக்கையிருக்கு நல்ல எழுதுவேன் என்று.....ஹோப். கவலை வேண்டாம் என் ஸ்டைல் ரொமென்ட்டிக் ஸ்டோரி தான் அழகான காதலுடன்...

நவிலனும் புகழினியும் தங்கள் முதல் பயணத்தை புதன் கிழமையில் இருந்து ஆரம்பிக்க போறாங்க!


அவங்களுக்கு உங்க ஆதரவ தாங்க மக்கா

நன்றி

சகி

உங்க கருத்துக்களை
கீழே நீங்க பதிவு செய்யலாம்
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN