மாற்றம் ஒன்றே மாறாதது . அத்தியாயம் -1

Do u like the story

 • Do u like to read next episode

  Votes: 0 0.0%
 • Is this episode interesting

  Votes: 0 0.0%
 • No, i don't like to read next

  Votes: 0 0.0%
 • Let me read full story and tell the suggestions

  Votes: 0 0.0%

 • Total voters
  0

Bhagya sivakumar

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வணக்கம் வாசகர்களே !

மாற்றம் ஒன்றே மாறாதது .

இந்த கதை முற்றிலும் சுவாரசியமான கதை. ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் கதையில்முக்கியத்துவம் இருக்கும். காதலோடு கலந்த சுவாரஸ்யம். வாழ்க்கையில் ஏற்படும் மாற்றங்கள் பற்றி சொல்லியிருக்கிறேன்.

வாருங்கள் கதை உள்ளே செல்வோம்.

அத்தியாயம் 1

புயல்காற்றுடன் வீசியது மழை ஆங்காங்கே மின்கம்பங்களும் வீட்டின் கூரைகளும் பிய்த்து தொங்கிக்கொண்டிருந்தன,ஆம் 1964 ஆண்டு அது,தனுஷ்கோடியில் நிகழ்ந்த கோரசம்பவம் அது,புயல் எப்போது கரையைக் கடக்கும் என யாரும் அறிந்திருக்கவில்லை அந்த புயலில் தான் தன் கணவனையும் மகனையும் பறிக்கொடுத்துவிட்டு நெற்கதியாக நிற்கிறாள் அந்த பேதை பெண்மணி.
அந்த சுவடு அவளை விட்டு மறைந்து போனாலும் அவ்வப்போது நினைவில் வந்து விட்டு தானே போகும்.

சென்னையில் உள்ள என்னூரில் தன் தங்கை, தங்கையின் கணவர்,அவர்களின் பிள்ளைகளுடனும் வசிக்கிறாள் பார்வதி. அந்த கோரசம்பவத்திற்கு பிறகு அவளுக்கு அடைக்கலம் தந்தனர் பெற்றோர் ,பிறகு பெற்றோரின் இறப்பிற்கு பிறகு தங்கையின் குடும்பம். தங்கை பரிமளம் மீன் கடை நடத்தி வர அதில் ஒத்தாசை புரிகிறார் பார்வதி...

வழக்கம் போல அன்று கூட்டம் கூரையை பிய்த்து கொண்டு நிற்பது போல் நின்றது அந்த மீன்கடை வாசலில்.. ஆம் மீன்கள் எல்லாம் கூறுபோட்டபடி விற்க ஒருபுறம் மீனின் கழிவுகளின் துர்நாற்றமும் மறுபுறம் மக்கள் கூட்டமும் சூழ்ந்திருக்க அப்போது தான் நீண்ட நாட்கள் கழித்து உதவிக்கு பரிமளத்தின் மகன் ஆர்யா வந்தான்.
"மா நான் கடையை பாத்துக்குறேன். நீ போய் ரெஸ்ட் எடு " எனக்கூற மகனை ஆச்சரியத்துடன் பார்த்தவள்.

"ஏண்டா உனக்கு எக்ஸாம் னு சொன்னியே இப்ப என்னடா கடைக்கு வந்திருக்க போய் படியேன்டா..நாளைக்கு எக்ஸாம்க்கு படி போ" என்று தாய்க்குரிய அந்த அதிகாரத்தோரணையில் கூற

"மா எல்லாம் நான் பாத்துக்கிடுறன் நீங்க வீட்டுக்கு போங்களேன் மா" என்றான் சற்று பணிவுடன்.

பார்வதியோ தன் தங்கையிடம் "நீ கவலை படாமல் போ பரிமளம். அதான் நான் இருக்கேன்ல பாத்துக்குறேன்" என்று கூறி அனுப்பி வைக்க ஆர்யா தன் கடையின் உள்ளே நுழைந்தபடி வியாபாரத்தை கவனிக்கலானான். அவன் கவனிப்பு வியாபாரத்தில் மட்டுமா? இல்லை இல்லை அவனுடைய கவனம் வேறு இடத்திலும் தான் இருந்தது. அது என்ன? வேறு என்ன இன்னும் சற்று நேரத்தில் ரோஜா அந்த பக்கம் ஹோம்டியூஷன் எடுக்க செல்வாளே.

ரோஜா பெயருக்கு ஏற்றாற்போல் நன்கு அழகுடன் பொலிவுடன் இருப்பவள். வீட்டில் இவள் தான் மூத்தவள்,தங்கை மற்றும் ஒரு தம்பி. அப்பாவும் அம்மாவும் ஒரு விபத்தில் இறந்துவிட்ட நிலையில் பன்னிரெண்டாம் வகுப்போடு தனது படிப்பை முடித்துக்கொண்டு வேலைக்கு செல்ல ஆயுத்தமானாள். மதியம் மூன்று மணியளவில் ஒரு பணக்கார வீட்டு குழந்தைகள் இருவருக்கும் பாடம் கற்பித்து வருகிறாள். அந்த குழந்தைகள் ஒன்றாம் வகுப்பு படிக்கும் இரட்டை குழந்தைகள். தான் பணிபுரியும் துணிகடையின் முதலாளியின் குழந்தைகள் தான் அவை.

மணி மூன்றாக கால்மணி நேரமே உள்ளது ஆர்யாவோ தனது கண்களில் விளக்கெண்ணெய் ஊற்றி பார்ப்பது போல் தெளிவாக பார்த்து கொண்டிருந்த நிலையில்...

"தம்பி ஒரு அரை கிலோ வவ்வால் மீன் போடு" என்று ஒருவர் விலை பேச பார்வதி அவனை தட்டியவாறு "கவனம் வியாபாரத்தில் இருக்கட்டும்" என்று கூற சிரித்தவாறே வியாபாரத்தில் கவனம் செலுத்தினான்.அந்த நேரம் ஏதோ திடிரென மழைத்தூரல்...

"புதிய காற்றெழுத்த தாழ்வு நிலை உருவாகியுள்ளது" என்று அருகிலுள்ள ஒரு வீட்டின் டி.வி நியூஸ் கேட்க அதை காதில் வாங்கிய பார்வதி.
"டேய் கன்னு வாடா சீக்கிரம் கிளம்பலாம். இன்னைக்கு பலத்த மழை வரும் போலருக்கு" என்று ஆர்யாவிடம் கூற..

"அட என்ன பெரியம்மா நீ புயல்னாலே அப்படி பயப்படுற ஏன் இவ்வளவு பயம்"என்று கேட்க அவள் கண்களில் அந்த 1964 ஆண்டின் தாக்கம் காட்சியாக உருவெடுத்தது.

"ஆர்யா கன்னு உன் பெரியப்பாவையும் ,அண்ணணையும் என் கண்கள் முன்னாடியே பரிகொடுத்துட்டு நிக்கிறவ..அந்த பயம் என்னை விட்டு போகாது. நீ வா கன்னு வீட்டுக்கு போவோம்" என்று அழைக்க ..

"சரிவா போவோம். அச்சச்சோ ரோஜாவை வேற பார்க்கவே முடியாதே"என்ற ஏக்கத்துடன் தன் பெரியம்மா வை பைக்கில் அமர்த்திக்கொண்டு வீட்டை நோக்கி பயணித்தான் ஆர்யா.
76 வயதிலும் அந்த திடக்காத்தமான ஆரோக்கியமான உடலைக்கொண்டாலும் மனதளவில் பலவீனத்தை சந்தித்து கொண்டிருந்தாள் வயதான பெண்மணி பார்வதி. இருக்காத என்ன தன் குடும்பத்தை புயல் சீற்றத்தால் வாரிக்கொடுத்துவிட்டு தவிக்கும் அந்த தவிப்பு மறையுமா என்ன? ஆனால் தனுஷ்கோடியில் வசிக்கும் காலத்தில் தன்னுடன் நட்பாக பழகிய தோழியும் தோழியின் கணவரும் உயிர் தப்பித்து தற்போது அவர்கள் குடும்பமும் சென்னையில் ஏதோ ஓர் மூலையில் வசிக்கிறார்கள் என்பதை அறிந்து கொண்டாள் பார்வதி. என்றாவது ஒருநாள் அந்த தோழியை கண்டுவிட வேண்டும் என்பதே பார்வதியின் மிகப்பெரிய ஆசை...

அந்த பிரதான சாலையில் ஆர்யா தனது இருசக்கர வாகனத்தை செலுத்தி கொண்டு வந்தான். சிக்னலில் வந்து நின்றது.

"வை டி போனை எப்பபாரு நை நைனு" என்று முனுமுனுத்தான் தயாளன்,சொந்தமான கட்டிடத்தொழில் செய்யும் பில்டர். சென்னையில் உயர்ந்து நின்று காட்சியளிக்கும் பல கட்டிடங்கள் இவன் கட்டியதே! அதன் பெருமையை எப்போதும் உணர்வது உண்டு ஆனால் இல்லர வாழ்வோ சிறக்கவில்லை...

சிக்னல் பச்சை விளக்கு காட்டியது வண்டிகளும் நகர்ந்தது. இந்த வேளையில் வானம் தன் வேலையை கவனிக்க துவங்கியது விட்டு விட்டு மழைச்சாரலை தூவியபடி. இந்த தூரலில் ஒரு காதல்ஜோடி ஒரே குடைக்குள் நனைந்தவாறு பயணித்தது.

"ஏய் ஜானு இந்த மொமண்டுல உனக்கு என்ன தோனுது"என்றான் பிரகாஷ்.

"ம்ம்ம் சூடா"...என்றிழுக்க. அவனோ என்ன என்பது போல் பார்க்க..

"சூடா பஜ்ஜி சாப்பிடனும் போல இருக்கு" என்றவளை ஏறிட்டு பார்த்து செல்லமாக கோபித்து கொண்டான் பிரகாஷ். இவர்களை நோட்டமிட்டபடி சென்றான் ஆர்யா.
'நம்ப எப்ப ரோஜாவோட இப்படி நடந்து போவோம்' என்றது ஆர்யாவின் மனம்.ஆனால் அவனுடைய மூலையோ
அவனுக்கு முன்னால் இரண்டு அக்காவும் ஒரு அண்ணணும் இருப்பதை உணர்த்தியது.

'சை இவங்களுக்கெல்லாம் ஒரு நல்ல வாழ்க்கை அமைந்த அப்றம் தான் நமக்குல' என்று சலித்து கொண்டது மனம். எப்படியோ வீடு வந்து சேர்ந்தான் ஆர்யா...

"என்ன அக்கா புயல் பயமா உடனே இழுத்து சாத்திட்டு புள்ளைய அழைச்சிட்டு வந்துட்டியோ" என்று சிரித்தவாறே கேட்டார் அந்த 65 வயது பரிமளம். அக்காவும் தங்கையும் இந்த வயதிலும் சுருசுருப்பா இருப்பதற்கு காரணம் அவர்களின் ஆரோக்கியமான உணவு பழக்கமுறை தான். தினமும் கேழ்வரகு கஞ்சியும்,மதியம் அளவு சாப்பாடும் இரவில் டிபனும் தான்.

ஆர்யா தலையை துவட்டியவாறு தன் மூத்த அக்காவிடம் "என்னக்கா இன்னைக்கு வீடே மணக்குது என்ன சமையல் " என்று வினவ...

"உனக்கு எனக்கு பிடிச்ச வெந்தயக்குழம்பு டா" என்றாள் சப்புக்கொட்டியபடி ஆராதனா.

ஆராதானா..பட்டப்படிப்பு முடித்துவிட்டு வீட்டில் இருந்தபடியே டெய்லரிங் தொழில் செய்பவள். வயது 32, ஆனபின்பும் திருமணம் கூடியவாறு தெரியவில்லை. அடுத்து பிறந்தவள் அன்பரசி, இவள் ஷார்ட் பிலிம்ஸில் நடிப்பவள்,படிப்பு இவளுக்கு பாகற்காய் போல..வயது 28..இவளுக்கு அடுத்தவன் ராஜேஷ் படிப்பு என்றாலே ஒருவித துடிப்பு அடுத்து என்ன படிக்கலாம் என்று ஆராய்ந்து படிப்பதில் வள்ளவன். தற்போது டிப்ளமோ இன் பிலிம் டெக்னாலஜி படித்து வருகிறான். எடிட்டிங் துறையிலும் ஆர்வம் அதிகம். அதனால் தான் பல நேரங்களில் அன்பரசிக்கும் ராஜேஷ்க்கும் ஒத்துப்போகும். இருவரும் அவர்களது உரையாடலில் சினிமா துறையை பற்றி அலசாமல் இருந்ததில்லை....

ஆர்யா ,இவன் இன்ஜினியரிங் படிக்கும் மாணவன் அழகானவனும் கூட எப்படியோ மூன்று வருடம் தள்ளி விட்டான் இன்னும் ஒரே வருடம் தான்.. ஐயா சம்பாதிக்க ஆரம்பிச்சிடுவாரு. பார்வதியின் மகன் தற்போது இருந்திருந்தால் இவர்களுக்கு எல்லாம் மூத்த அண்ணணாக இருந்திருப்பான். ஆனால் விதியோ அவனை வாழ எங்கே விட்டது. மூன்று வயதிலேயே இறந்து விட நேரிட்டது.

விதி யார் யார் வாழ்க்கையை எவ்வாறு தீர்மானிக்க போகிறது பார்ப்போம்.

மாற்றம் ஒன்றே மாறாதது அத்தியாயம் -2
 

Author: Bhagya sivakumar
Article Title: மாற்றம் ஒன்றே மாறாதது . அத்தியாயம் -1
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN