நீயே என் இதய தேவதை 4

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
கையில் மது கோப்பையை ஏந்தியபடி சாதாரணமாக இப்போ என்ன அதுக்கு எனக் கேட்டவனை ஆச்சர்யமாக பார்த்துக் கொண்டிருந்தான் ஆனந்த். கொஞ்சம் நாட்களாக டீடோட்லரான நம் கதாநாயகன் மது பழகியிருந்தார்.

"என்னடா பன்னி வச்ச எரும,.... ?சந்தியா போன் பன்னி கத்துறாடா... உன் பிரண்ட்ஷிப்ப கட் பண்ண சொல்றா ..............." ஆனந்த் வெறியோடு கத்திக்கொண்டிருக்க

"நான் உனக்கு நல்லதுதாண்டா பண்ணேன்.
ஈஈ........ " ஏதுமறியா குழந்தை இளித்து வைத்தான் அன்பு.

டேய்.... நடிக்காத நாயே எங்க லவ் மேட்டர அத்தை கிட்ட போட்டு கொடுத்திருக்க. உனக்கே தெரியும்ல எங்கம்மாவுக்கும் அத்தைக்கும் ஆகாது. சரியான நேரம் வரும்போது அம்மாகிட்ட சொல்லி சந்தியாவ பொண்ணுக் கேக்கலாம்னு இருந்தேன்.இப்படி கெடுத்து விட்டுட்டியே... டா...
கிட்டத்தட்ட புலம்பினான் ஆனந்த்.

அன்பு சிரிக்கவும்
"டேய் சிரிக்காதடா..... முதல்ல என்ன நடந்ததுனு சொல்லு"

அன்பு கூறியது என்னவென்றால்,
போன வாரம் அவனது உறவுக்கார தாத்தா இறப்புக்கு சென்றிருந்தான். குடும்ப விழாக்களில் அவ்வளவாக கலந்துகொள்ளவதில்லை. ஆனால் உறவில் முக்கியமான பெரியவரின் இழப்பு. அவனுக்கும் தாத்தா என்றால் பாசம் தான். இறுதியாக ஒருமுறை முகத்தை பார்த்துவிட்டு வரலாமென்று தான் கிளம்பினான்.

யாரிமும் எதுவும் பேசாமல் தாத்தாவின் இறந்த உடலில் மாலை அணிவித்துவிட்டு அவருடன் இருந்த நினைவுகளை மனதில் அசை போட்டுக் கொண்டே வெளிவரும் போதுதான் அது நிகழ்ந்தது. சந்தியாவின் அம்மா விசாலி அன்புவிற்கு அத்தை முறை.

"என்னவோ போங்கடி..... நம்ம சிவகாமி(அன்பு அம்மா) இறந்த நேரம் ஏதோ கெட்ட நேரம் போல தொடர்ந்து சாவு விழுந்துட்டே இருக்கு.... " என்று நொடித்துக் கொண்டாள்.

கேட்டவுடன் அப்படி ஒரு ஆத்திரம். "இறந்து போனவர்களை தோண்டியெடுத்து வம்புபேசும் ஜென்மங்கள்" என வெறுப்புடன் முனுமுனுத்துவிட்டு அவ்விடம் விட்டு தனியே போய் நின்றான்.

"அவள ஏன் இழுக்கற..... அவளோட வலி அப்படி அந்த எடத்துல எந்த பொம்பளையாயிருந்தாலும் அப்படித்தான் ஆகியிருக்கும்" கண்டிப்பாக சொன்னாள் அங்கிருந்த முதியவள்.

"ம்ம்க்கும்...... அத்தை ப்ரோக்கர் சொன்னான்னு எவளோ ஒருத்திய கல்யாணம் பண்ணதால தான இதெல்லாம். என் பொண்ணக் கட்டியிருந்தா இதெல்லாம் நடந்திருக்குமா....?"

அடியே அவங்க பொண்ணு கேக்கலனு நீ பொலம்புற அளவுக்கு நம்ம சந்தியாவுக்கு என்ன குறை.....?ஏன் சிவகாமியோட பையனுக்குத்தான் பொண்ணுக் குடுப்பியா ஏன் பையனுக்காக உன் பொண்ணக் கேட்ட குடுக்க மாட்டியா என்ன..... ? உமா இவ்வாறு
கேட்டவுடன் விசாலி அத்தையின் முகம் ஒளிர்ந்தது. அன்புவுக்கு பிடிக்கவில்லை போலும்.சாவு வீட்ல வந்து சம்பந்தமா பேசுறீங்க இப்போ பாருங்க மனதில் நினைத்துக்கொண்டே இடையில் புகுந்தவன்பெண் கேட்டவளை நோக்கி கையெடுத்து கும்பிட்டு சித்தி சித்தி
வேணாம் சித்தி என் அண்ணன் வாழ்க்கைல விளையாடதே சித்தி. என் அம்மா பண்ண அதே தப்பை பண்ணிடாத சித்தி என்றான்.

என்னாடா.... சொல்ற நம்ம சந்தியா ஒன்னும் அப்படிப்பட்ட பொண்ணு இல்லை..?

என்ன சித்தி நீ, இவ்ளோ அப்பாவியா இருக்க உனக்கு ஒன்னுமே தெரில. நம்ம கோபால் சித்தப்பா பையன் இல்ல அவன்கூடத் தான் இவங்க பொண்ணு ம் ம் ம் எப்படி சொல்றது என இரு கை விரல்களால் இதயம் வடிவம் அமைத்து செய்கை காட்டினான்( லவ் என்பதை சிம்பிளாக்கா காட்டுறாராம்)

"ஏது இந்த தேங்காய் திருவியில தலைய விட்டது மாதிரி இருப்பானே ( ஆனந்தின் மாடர்ன் ஹேர் ஸ்டைல்) அவனா...?

ஆமா சித்தி அவனேதான். நானே ரெண்டு மூனு தடவை ஜோடியா அவங்களை பீச்சுல பாத்திருக்கேன். ஒருவேளை நீ சம்பந்தம் பேசி கல்யாணம் வரை போயி இந்த பொண்ணும் ஓடிப் போச்சுனு வை நம்ம அத்தை குத்துக்கல்லாட்டம் அப்படியே தான் இருக்கும். ஆனா உன் புருஷன், ஏற்கனவே உடம்பு சரியில்லாத மனுசன் அதிர்ச்சியில எங்கம்மா மாதிரி அவரும் மேல போய்ட்டா.முறைத்தபடி அருகில் நின்றிருந்த விசாலியை ஒருமுறை நக்கலாக பார்த்துவிட்டு.... " கண்டவங்க பேச்சைக் கேட்டு உன் பூவையும் பொட்டையும் இழந்திடாத சித்தி" என்று பாவமாக முகத்தை வைத்துக் கொண்டு கூறினான்.

"ஏய்.... ஏய்.... நில்லுடா என் பொண்ண பத்தி இல்லாததையும் பொல்லாததையும் பேசிறியே நல்லாருப்பியா.. நீ......"என விசாலி கத்துவதை பொருட்படுத்தாமல் விறு விறுவென பைக்கை கிளப்பிக் கொண்டு வந்தான்.

இதுதாண்டா நடந்தது எனப் பொங்கிய சிரிப்பை மறைத்துக் கொண்டே பாவமாக கூறினான்.

அடப்பாவி...... டேய் அதிர்ச்சியில் இரு கைகளையும் தலைமேல் வைத்துவிட்டான் ஆனந்த். இவ்வளவு நடந்திருக்கிறதென்றால் கண்டிப்பாக தனது தந்தைக்கு தெரியாமல் இருந்திருக்காது.இருந்தும் வீட்டில் யாரும் அவனிடம் இது குறித்து பேசவில்லை. அமைதியாக ஏதோ கலவரம் நடக்க போகிறது என உள்மனம் சொல்லியது. அவனுக்கு அவன் கவலை.

இப்போ சொல்லு பங்காளி.... உன் மாமியார் பண்ணது தப்புதான....? என்றவனின் மீது பாய்ந்தவன்

"செய்றதையும் செஞ்சிட்டு இப்போ அதுவாடா முக்கியம். உனக்கு என்னடா பாவம் பண்ணன்...? என் லவ்வ குழி தோண்டி பொதச்சிட்டியேடா.. " என்றபடி அவனை அடிக்க ஆரம்பித்தான்.

அவன் கொடுத்த அடிகளை சிரித்தபடி வாங்கிக் கொண்டே "டேய்.... தப்பு உன் மாமியார் மேலதான். அதுதான் ஓவரா பேசுச்சு. இப்போ கூட பாரேன்... நான் உனக்கு நல்லதுதான் பண்ணியிருக்கேன்" என்றான்.

அடிப்பதை நிறுத்திவிட்டு "என்னடா நல்லது பண்ண...?"

நான் மட்டும் அந்த இடத்துல உங்க லவ் மேட்டர ஓப்பன் பன்னலனா கூடிய சீக்கிரம் சித்தி பையனுக்கு சந்தியாவ நிச்சயம் பண்ணியிருப்பாங்க. அவளும் அவங்கம்மாக்கு பயந்துட்டு எதிர்த்து பேசாம ஏத்துகிட்டிருப்பா நீயும் உங்கப்பனுக்கு பயந்து எதிர்த்து எதுவும் பேச மாட்ட.அவ கல்யாணத்துக்கு போய் எங்கிருந்தாலும் வாழ்கனு..... பாடி வழியனுப்பி வைக்கப் போறியா....?சொல்லு பங்காளி சொல்லு... " என்றவுடன் அவனை விட்டு கீழிறங்கி யோசிக்கத் தொடங்கினான் ஆனந்த்.அவன் சொல்வது போலும் நடக்கலாம்.
எப்படியோ ஒருநாள் இந்த விஷயம் வீட்டுக்கு தெரியத்தான் போகுது. இன்னைக்கு தெரிந்ததனால் என்னவாகிடப் போகிறது. பார்த்துக் கொள்ளலாம் இப்போதைக்கு சந்தியாவை எப்படி சமாதானப்படுத்துவது என்று யோசிக்கையில்

"டேய்..... நீ நல்லா குடிச்சிருக்க பைக் எடுக்காத இன்னைக்கு இங்கேயே தங்கிட்டு காலையில கிளம்பு... " என்றபடி தரையில் ஒரு ஓரமாய் படுத்திருந்தான் அன்பு.

இதுக்கு ஒன்னும் குறைச்சல் இல்லை உள்ள போய் படு நாயே என்றவனை கண்டுகொள்ளவில்லை.

அன்புவின் மனதிலும் தான் செய்தது அதிகப்படியோ என்ற குற்ற உணர்ச்சி இருந்தது. இப்போதெல்லாம் உறவினர்களிடையே அவன் வம்புக்கு போகாத ஏடாகூடமா பேசுவான். வில்லங்கம் புடிச்சவன் இப்படிபட்ட நன்மதிப்புகளை பெற்றிருந்தான். இது அவனது இயல்பான குணம் இல்லை. ஆனாலும் அவனுக்கு வேறு வழியில்லை அவர்களின் பரிபாதப் பார்வைகளும் ஆறுதல் என்ற பெயரில் குத்தும் சொற்களிடமிருந்தும் தப்பிக்க.

இப்போது கூட ஒரு பெண்ணின் நடத்தையை பொதுவெளியில் கூறி அவமானப்படுத்தும் நோக்கம் எல்லாம் அவனிடம் இல்லை. ஆனந்திற்காக அத்தை பொறுத்துக் கொண்டிருக்கலாம்தான். ஆனாலும் அந்த நேரத்திலும் அம்மா ஞாபகம் வந்து தொலைத்தது. அம்மா இறந்ததிற்கு பாதி காரணம் அவள் என்றால் மிச்ச உயிரை எடுத்தது இவர்கள் பேசிய வார்த்தைகள் தானே. அந்த கோபத்தில் தான் அவ்வாறு நடந்து கொண்டான். தன்னை காயப்படுத்தியவர்களை திரும்ப காயப்படுத்திப் பார்க்கும் போது ஒரு ஆனந்தம். தவறுதான். ஆனால் அவனும் மனிதன் தானே.

@@@@@@@@@@@@@@

கவிதா தனது சித்தி வந்தவுடன் தான் வேலைப்பார்க்க சென்னை கிளம்ப போவதாய் உரைத்தாள். சித்தி மறுப்பாக எதுவும் கூறவில்லை. "பாப்பாவ... பத்திரமா பாத்துக்க உன் புருஷன் திருந்தி வந்து வீட்டுக்கு கூப்பிடும் போது..... எதுவும் சொல்லாம அவன் கூட போய்டு.. " என்ற அறிவுரைகளுடன் நிறுத்திக் கொண்டாள்.

அவர் திரும்பி வரமாட்டாரு சித்தி.. என மனதில் வெறுப்பாக நினைத்தபடியே "சரி சித்தி... "என தூங்கப்போனாள்.
 
Last edited by a moderator:
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN