மாயம் 2

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன்
கண்கள்
சொல்லும்
வார்த்தைகள்
கவிதையா...??
காவியமா...?

“ஹே விக்கலு விக்கலு விக்கலு வந்தா தண்ணிய குட்சிக்கமா...” என்று ஹோம் தியேட்டரில் பாடிக்கொண்டிருந்த அதாவது அலறிக்கொண்டிருந்த பாடலுக்கு ஏற்றாற் போல் பாடிக்கொண்டும் ஆடிக்கொண்டும் தன் காலைக்கடமைகளில் ஈடுபட்டிருந்தாள் ஶ்ரீதான்யா.

“தான்யா ஏன்டி காலங்காத்தாலேயே இப்படி அராஜகம் பண்ணுற?? கொஞ்சமாவது பெண்பிள்ளைங்கிற நினைப்பு மனசுல இருக்கா??? எப்ப பார்த்தாலும் இதே சேட்டை தான்.. நிம்மதியா சாமி கும்பிட முடியிதா இந்த வீட்டில்??... இவ்வளவு கத்துறேன் சவுண்டை குறைக்கிறாளா பாரு... ஏங்க இதெல்லாம் நீங்க என்னானு கேட்க மாட்டீங்களா???” என்று கிட்டத்தட்ட அலறினார் ராதா.

“ராதா சொல்ற பேச்சை கேட்கனும்னு தான் பசங்களுக்கு சொல்லிகுடுத்திருக்கோம். கத்துற பேச்சையில்லை... நீ சொல்லிப்பாரு.. அவள் கேட்பாள்..” என்று தன் மனையாளை மேலும் கடுப்பேற்றிக்கொண்டிருந்தார் ராஜேஷ்குமார்.

ராஜேஷ்குமார் பல்கலைகழகத்தில் பேராசிரியராக கடமையாற்றுகின்றார். இளம்வயதில் விரிவுரையாளராய் பணிபுரிந்தவர் குறுகியகாலத்திலேயே பேராசிரியராக பதவி உயர்வு பெற்றார். ராஜேஷ்குமார் தனது கல்லூரித்தோழியான ராதாவின் அறிவிலும் அழகிலும் மயங்கி காதல்கொண்டு பெற்றோர் சம்மதத்துடன் ராதாவை கரம்பிடித்தார். இவர்களது பரஸ்பர அன்பிற்கும் மனமொத்த இல்வாழ்விற்கும் சான்றாக பிறந்தவர்களே ஶ்ரீதான்யாவும், அனன்யாவும்.
மூத்தவள் ஶ்ரீ தான்யா. எம்.எஸ்சி சாப்ட்வெயார் எஞ்சினியரிங் பட்டதாரி... பிரபல சாப்ட்வேயார் கம்பனியொன்றில் பணிபுரிகின்றாள்.
குறும்புகள், சுட்டித்தனம், அறிவு, விவேகம், அன்பு, அழகு என்று அனைத்திலும் அவளுக்கு நிகர் அவளே...இவளது கலகலப்பான சம்பாஷனைகளுக்கு மயங்காதோர் எவருமில்லை...
இளையவள் அனன்யா. எம்.பி.பி.எஸ் மூன்றாம் வருடம் கற்கின்றாள். தமக்கைக்கு குறையாத அழகும் அறிவும் இவளிடமும் கொட்டிக்கிடந்தது. தமக்கைகள் இருவரின் சேட்டைகளும் உறவாடலுமே இவர்களது மகிழ்ச்சிக்கு அத்திவாரம்.

“கசோலினா...” என்ற வேற்றுமொழிபாடல் ஒன்று இன்னொரு அறையிலிருந்து ஒலித்துக்கொண்டிருந்தது...

“அனு நீயும் ஏன்டி காலையிலேயே இந்த அட்டகாசம் பண்ணுற?? காலையிலேயே காலேஜ் கிளம்புற வழியை பார்க்காம இப்படி புரியாத மொழியில பாட்டுங்கிற பேருல ஏதோ பூமியதிரிச்சில கட்டிடம் எல்லாம் இடிஞ்சி விழுற மாதிரி ஒரு சத்தத்தை போட்டுட்டு வீட்டைய அதிரவச்சிட்டு இருக்கியே??? அக்காவும் தங்கச்சியும் எந்த விஷயத்துல அடிச்சிக்கிட்டாலும் இந்த விஷயத்துல எல்லாம் ரொம்ப ஒற்றுமை தான்டி..”

“ஏன் ராதா பசங்கள இப்படி காய்ச்சி எடுக்குற??? பாவம்மா அவங்க.. அவங்களை திட்டுறத தவிர உனக்கு வேற எதுவுமே தெரியாதா??”

“ஆமா எனக்கு இதுங்களை திட்டுறத தவிர வேற வேலையில்ல பாருங்க... ஏங்க ஒரு நியாயம் வேணாமாங்க??? அது சரி உங்ககிட்ட உங்க பசங்களுக்கு எதிரா பஞ்சாயத்து வைக்கிறதும் நானே போய் சுவத்துல முட்டிக்கிறதும் ஒன்னு... என்ன செய்றது எல்லாம் நான் வாங்கிட்டு வந்த வரம்”

“ராதா எனக்கு ஒரு டவுட்.. உனக்கு யாரு என்ன வரம் குடுத்தாங்க??? அதுவும் எனக்கு தெரியாம?? நானும் பார்க்கிறேன்... அடிக்கடி நான் வாங்கிட்டு வந்த வரம்னு சொல்லிட்டே இருக்க..”

“இங்க பாருங்க நேரம் காலம் தெரியாமல் கடுப்பேத்தாதீங்க... என்னை இப்படி கடுப்பேத்தி பார்க்கிறதுல உங்களுக்கும் உங்க புள்ளைங்களுக்கும் அப்படி என்ன சந்தோஷம்??”

“என்னம்மா ராதா இப்படி சொல்லிட்ட??” நீ என்ன வரம் வாங்கிட்டு வந்தனு தெரிஞ்சிக்கலாம்னு கேட்டா நீ இப்படி கோவிச்சிக்கிற??”

“இங்க பாருங்க... உங்களுக்கு ஒரு கும்பிடு.. உங்க பிள்ளைகளுக்கு ஒரு கும்பிடு.. உங்களுக்கு வேணும்னா வேலைக்கு லீவு போடலாம்... நான் என்னோட வேலைக்கு லீவு எடுத்துக்கிட்டா உங்க எல்லாரோட பாடும் திண்டாட்டம் தான்..”

“தங்கள் ஆணைகளை பின்பற்றாமைக்கு இந்த அடியேனை மன்னிக்க வேண்டும் மகாராணி... இன்று முதற்கொண்டு தாங்கள் கோபம் கொள்ளும் விதத்தில் நடந்துகொள்ளமாட்டான் இந்த எளியவன்..” என்று நாடகப்பாணியில் பேசினார் ராஜேஷ்குமார்.

“ஐயோ போதுங்க.. நடிப்பு தாங்கலைங்க..”

“எனக்கு புகழ்ச்சி புடிக்காது ராதுமா.. இருந்தாலும் நீ என்னை இப்படி புகழக்கூடாது.. மாமாக்கு ரொம்ப கூச்சமா இருக்குல்ல..”

“கடவுளே என்ன இவர்ட்ட இருந்து காப்பாற்று.. என்னால் இவரை சமாளிக்க முடில...நீங்க முதலில் கிளம்புற வழியை பாருங்க..நீங்க பேசுனது அந்த இரண்டு அறுந்த வாலுக்கும் கேட்டிருந்துச்சுனா இந்நேரம் அத வச்சே ஒரு படம் ஓட்டிருக்குங்க...

“என்ன இருந்தாலும் நீ உன் பிள்ளைகளுக்கு இவ்வளவு பயப்படக்கூடாது..”

“நீங்க ஏங்க சொல்லமாட்டீங்க.. நீங்களும் உங்க பிள்ளைகளுடன் சேர்ந்துக்கிட்டு அவங்களுக்கு ஜால்ரா தட்டுவீங்க.. நான் தனிக்கட்சியா இருந்து மல்லுகட்டனும்... எல்லா வீட்டுலயும் அம்மாவுக்கு பசங்க பயப்படுவாங்க... ஆனா இந்த வீட்டுல எல்லாம் தலைகீழா தானே இருக்கு” என்று புலம்பினார் ராதா...

“ராதா பீல் பண்ணாதமா... என்ன பண்ணுறது??? எல்லாம் நீ வாங்கிட்டு வந்த வரம்..” என்று தன் மனையாளை சீண்டினார் ராஜேஷ்குமார்..

“என்னப்பா வன் மேன் ஸ்ரைக்கா??” என்று தன் தாயை வாருவதற்கு தன் தந்தையுடன் கூட்டணி அமைத்தாள் ஶ்ரீதான்யா..

“இல்லகா...அம்மா அப்பாவை செல்லமா கொஞ்சிட்டு இருந்தாங்க.. சோ இது டூ இன் ஸ்ரைக்.. கரெக்ட் தானேபா??” என்று அக்கூட்டணியில் இணைந்து கொண்டாள் அனு...

“இப்போ சந்தோஷமா உங்களுக்கு?? இதை தானே எதிர்பார்த்தீங்க??” என்று ராதா எகிற ராஜேஷ்குமாரோ

“ நான் என்னம்மா செய்தேன்?? ஒரு கேள்வி கேட்டது தப்பா??”

“கேள்வி கேட்டது தப்பில்லைபா.. ஆனால் கேட்ட டைமிங் தான்பா தப்பு..” என்று கூறிக்கொண்டு ஹைபை அடித்துக்கொண்டனர் தமக்கைகள் இருவரும்...

“ஓ... அதுதான் விஷயமா?? மன்னிச்சுக்கோ ராதா.. இனிமே சரியான டைமிங்கில் பேசுறேன்..”

“அதான் பேசவேண்டியதெல்லாம் சரியான நேரத்தில் பேசிட்டீங்களே??? இன்னும் என்ன மிச்சமீதி இருக்கு??”

“அப்படியா ராதா?? சரியான டைமிங்ல பேசுனேனா??அதான் எனக்கு இப்படி ஒரு புகழ்ச்சி மழையா??” என்று கள்ளச்சிரிப்பு சிரித்தார் ராஜேஷ்.

“ஏங்க நீங்க திருந்தவே மாட்டீங்களா??”

“25 வருஷமா என்னை திருத்தாதது உன்னோட தப்பு ராதா..தப்பெல்லாம் உன்னோடது தான்.. இதுல என்ன நீ கோவிக்கிறதுல நியாயமே இல்லை...”

“செய்றதெல்லாம் சிறப்பா செய்திட்டு இப்போ நியாய அநியாயத்தை பத்தி பேசுறீங்களா??” என்று ராதாவும் ராஜேஷ்குமாரும் செல்லமாய் தர்க்கம் புரிந்துகொண்டிருக்க

“கொஞ்சம் இரண்டு பேரும் உங்க பஞ்சாயத்தை நிறுத்துறீங்களா??” திடீரென உரையாடலில் உட்புகுந்தாள் ஶ்ரீதான்யா..

“எப்போ பார்த்தாலும் கின்டர்கார்டன் பசங்க மாதிரி சண்டைபிடிச்சுகிட்டு... கொஞ்சமாவது பொறுப்பு இருக்கா?? காலங்காத்தலேயே நீங்க ஆசையா பெத்தெடுத்த இரண்டு ஜீவனையும் கவனிக்காம இரண்டு பேரும் பஞ்சாயத்து பண்ணிட்டு இருக்கீங்க... சேசே எல்லா வேலையையும் நாமளே கவனிச்சுக்கிற வேண்டியிருக்கு...” என்று போலியாக அலுத்துக்கொண்டாள் ஶ்ரீ.

“அடியேய் அனு... உன்னை நானும் என்னை நீயும் தான் கவனிச்சிக்கனும். இவங்களை நம்பி பயனில்லை...” என்று தன் தாயை வம்பிழுக்கும் எண்ணத்தோடு தன் தங்கைக்கும் மறைமுகமாக அழைப்பு விடுத்தாள் ஶ்ரீ. அவள் முழங்கிய மேளத்திற்கு ஏற்ப ஜால்ரா தட்டத்தொடங்கினாள் அனு.

“இந்த அப்பாகூட இப்பெல்லாம் ஒழுங்கா பாக்கெட்மணி தர்றது இல்லை... இவங்க சண்டையில அவருக்கு இதெல்லாம் நியாபகமே இருக்கமாட்டேன்குது..” என்று இல்லாத கண்ணீரை துடைத்துவிட்டாள் அனு. தன் புத்திரிகளின் தந்திரம் அறிந்த தந்தையானவர் அமைதிகாக்க தாயாரோ அவர்கள் வலையில் லாவகமாக சிக்கிக்கொண்டார்.

“அனு நேத்து பாக்கெட் மணி தாங்கனு நச்சரிச்சி வாங்கிட்டுபோன அந்த 100 ரூபா எந்த கணக்குல சேர்த்தி??”
சமயம் பார்த்து தன்னை க்ளீன் போல்டாக்க நினைத்த தாயை சமாளிக்கும் முகமாக

“பார்த்தீங்களா?? நீங்களே சொல்லுறீங்க நான் தான் கேட்டு வாங்குனேனு.. அப்பகூட வயசு பொண்ணுக்கு செலவு இருக்குமேனு நீங்களா கேட்டு குடுத்தீங்களா??”என்று தன் தாய் வீசிய அம்பை சாமர்த்தியமாக அவர் புறமே திருப்பினாள் அனு.

“அது கூட பரவாயில்லை அனு... அன்னைக்கு ஏதோ புது டிஸ் ட்ரை பண்ணியிருக்கேன்னு சொல்லி ஆபிசுக்கு குடுத்து அனுப்புனாங்க. . நானும் அம்மா ஏதோ ருசியா சமைச்சிருப்பாங்கனு ஆபிஸ்ல உள்ள எல்லாருக்கும் குடுத்தேன். அதை சாப்பிட்ட பாதிபேர் அடுத்த நாள் ஆபிஸ் வரலை.. ஏன்டா வரலைனு கேட்டதுக்கு ஏன்டி உனக்கு இப்படி ஒரு கொலைவெறி??அந்த சாப்பாட்டை குடுத்து எங்களை கொல்ல பாக்குறியானு கேட்குறாங்க..”

“அடிப்பாவி அன்னைக்கு அம்மா நீங்க செஞ்ச டிஸ் சூப்பரா இருந்துச்சு... அப்படினு ஆஹா ஓஹோனு பாராட்டுனது மட்டுமில்லாமல் ஆபிஸ் முடிஞ்சி வந்ததும் கேட்டு வாங்கி வக்கணையா சாப்பிட்டுட்டு இப்போ இப்படி சொல்லுறியா??”

“அது உன்னோட பிஞ்சு மனசு கஷ்டப்படக்கூடாதுனு அப்படி சொன்னேன். அதுக்காக உண்மையை மறைக்கமுடியுமா??”

“சரிடி அம்மா.. இனிமே உங்களுக்கு அந்த கஷ்டம் வேணாம்.. இனி நீங்களே உங்க சமையல பார்த்துக்கோங்க.. நா எனக்கு மட்டும் தனியா சமைச்சி சாப்பிட்டுக்கிறேன்...” என்று ஜகா வாங்கிய அன்னையிடம் அந்தர்பல்டி அடித்து சரணடைந்தனர் தந்தையும் புத்திரிகளும்..

“ஏன்மா ராதா என்னையேன் டீல்ல விடுற?? நான் உன்னை ஏதும் சொல்லலையேமா??” என்று ராஜேஷ்குமார் குட்டிக்கரணம் அடிக்க அவரது துணைக்கு சென்றாள் அனு.

“ஆமாமா.. அக்கா தானே உங்க சமையலை குறை சொன்னா .. அவளை மட்டும் தண்டிக்கிறதுதானே நியாயம்??”

“ஹேய் நான் எப்போ அம்மா சமையலை குறை சொன்னேன்..?? அந்த கிறுக்குப்பய சுந்தர் சொன்னதை தான் சொன்னேன்.. அவனுக்கு ரசம் எது சூப் எதுனே சரியா கண்டுபிடிக்கத்தெரியாது... அவனுக்கு எப்படி நம்ம அம்மா கைப்பக்குவம் தெரியும்..?? அவன் சொன்னதெல்லாம் நீங்க பெரிசா எடுத்துக்காதீங்கமா..” என்று முழுதாய் சரணடைந்தவளை பார்த்து வாய்பிளந்து நின்றார் ராதா..

“போதும் கதையளந்தது... சீக்கிரம் கிளம்புற வழியை பாருங்க எல்லாரும்..” என்று ராதா கூறியதும் அனைவரும் உணவு உண்ணத்தொடங்கினர்..
காலை உணவை முடித்துக்கொண்டு அனைவரும் கிளம்பினர்.

கிளம்பும்போது ஶ்ரீ
“ அம்மா நான் நைட் டின்னர் முடிச்சிட்டு தான் வருவேன்.. நேத்தே சொன்னேனே சஞ்சுவோட பர்த்டே ட்ரீட்னு.. நைட் ஹேமா ட்ராப் பண்றேன்னு சொன்னா... சரி நான் கிளம்புறேன்.. பாய் அம்மா.. பாய் அப்பா..” என்று கிளம்பினாள் ஶ்ரீதான்யா.

“சரி ராதா... நானும் கிளம்புறேன்.. அனு ரெடியா கிளம்பலாமா??” என்று ராஜேஷ்குமாரும் கிளம்பத்தயாராக அவருடனே கிளம்பினாள் அனு...
அனைவரையும் கிளப்பிவிட்டு தன் வேலைகளை கவனிக்க தொடங்கினார் ராதா...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN