வெய்யோன் மேற்கில் மறைய காத்திருக்கும் அந்த மாலைப்பொழுதில் பூங்காவைச் சுற்றி நடந்து கொண்டிருந்த நந்தனாவோ மிகவும் மன வருத்தத்தில உலன்றுக் கொண்டிருந்தாள்....
இதுவரை பல பள்ளிகளில் முயற்சி செய்தும் ஆசிரியர் வேலை கிடைப்பதாக இல்லை....எங்கு சென்றாலும் எத்தனை வருட அனுபவம் என்றே கேட்க மனம் நொந்து போனாள்...இப்போது தான் படிப்பை முடித்து வெளியே வந்திருக்க அனுபவத்திற்கு எங்கே செல்வாள்??
அனுபவம் வாய்ந்தவர்கள் மட்டும் தான் சாதிக்க வேண்டும் என்றால் இல்லாதவர்கள் என்ன செய்வது? மனதில் கேட்ட கேள்விகளுக்கு பதில் தெரியாமல் நடந்து கொண்டிருந்தவள் தன் அன்னை புது ரோஜாச்செடி வாங்குவதைப் பார்த்து ஆசையாக ஓடிச் சென்று அருகில் நின்றாள்....
ரோஜாக்கள் என்றால் அவளுக்கு உயிர்...
அவளைப் பார்த்த அவள் அன்னை அழகிய மொட்டு ஒன்றைக் கொண்ட ரோஜாச் செடியை எடுக்க " அய்யோ அம்மா அழகா விரிந்து நிறைய மொட்டுகள் இருக்க செடி இவ்வளவு இருக்கப்போ நீ ஏன் இதை எடுக்கிற பாரு இது பூச்சி கடிச்ச பூ வேற " என்றவளைப் பார்த்து சிரித்த அவள் அன்னை அந்த பூச்சி கடித்த ரோஜாச்செடியை வாங்கிக் கொண்டு வீட்டிற்குள் சென்றார்....
" ம்ம்க்கும் " என்றவளோ வேறுவழியில்லாமல் உள்ளே செல்ல " இனிமேல் நீ தான் இதைப் பார்த்துக்கணும்.." என்ற பொறுப்பை அவளிடம் ஒப்படைத்து விட மனமே இல்லாமல் தலையாட்டியவளுக்கு போகப்போக அதுவும் பிடித்துவிட்டது...
ஒவ்வொரு நாளும் ஆவலாக மொட்டு விரியுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருப்பதே அவள் பணியாக இருக்க ஆசிரியர் பணிக்கு அனுபவம் வேண்டும் என்ற மன உலைச்சல் மறந்தே போயிருந்தது...
பூச்சி கடித்த அந்த ரோஜா இன்னும் நோய்வாய்ப்பட அவள் மிகவும் துவண்டு போனாள்...
அம்மா பாவம் மா அது...பூச்சி அரிச்சு அது பார்க்கவே பாவமாக இருக்கு என்றவளைப் பார்த்து புன்னகைத்தவர் நீ உன் வேலையை சரியாக செய் என்று மட்டும் சொல்லி சென்று விட அவளும் தன் வேலையைச் செய்தாள்...
அதுதாங்க தண்ணர் ஊற்றுவது...
"ஹலோ இது நந்தனாவா...நீங்க ஆசிரியர் பணிக்காக விண்ணப்பம் அனுப்பியிருக்கீங்க...நாளைக்கு நேர்காணலுக்கு வாங்க " என்ற அழைப்பைக் கண்டு மறுபடியும் அனுபவம் என்ற ஒன்றால் துவள ஆரம்பித்தவளைக் கண்டு அழகாக புன்னகைத்தது அந்த பூச்சி கடித்த ரோஜாப்பூ...
" அம்மா இங்கே வாயேன் " என்று கத்தியவளைக் கண்டு ஓடி வந்த அவள் அம்மா அவள் உறைந்த நிலையில் அந்த ரோஜாவையே பார்த்திருப்பதைக் கண்டு புன்னகைத்துக் கொண்டே அவள் தலையை வருட
" அழகா இருக்குள்ள" என்றவளிடம்
" எல்லாரும் ஒரே மாதிரி இல்லை நந்து...நீ கூட இந்த ரோஜாச்செடி வாங்குறப்போ நிறைய இருக்க ரோஜாவைத்தான் எடுக்க சொன்ன...புதுசா ஒரே ஒரு மொட்டு இருக்க இதை தேர்வு செய்யல...அந்த மாதிரி தானே அவர்களும் அனுபவம் இருக்கவங்களை தேர்வு செய்யுறாங்க...எல்லாரும் ஒரே மாதிரி இல்லை அனுபவத்தை எதிர்ப்பார்க்காமல் உன் திறமையை எதிர்ப்பார்க்கும் மனிதர்களும் இருக்காங்க..தான் சாகப்போகிறோம் என நினைத்தும் அதை பெரிது படுத்தாமல் உயிர் வாழ போராடுன அந்த ரோஜாப்பூ மாதிரி அனுபவமே இல்லைனாலும் உன்னால சாதிக்க முடியும்னு காட்டு நந்து " என்றவரைப் பார்த்து புன்னகைத்தவள்
கண்டிப்பா மா என்று கண்ணசைத்து என்றும் இல்லாத உற்சாகத்தோடு கிளம்பினாள் நேர்காணலுக்கு....
பல தடைகளுக்கு பிறகு மொட்டவிழ்ந்த பூ அவளுக்கு வாழ்க்கையின் மூன்றாம் கையான நம்பிக்கையாய் இருந்தது...
பார்த்து தேர்ந்தெடுத்து
உரங்கள் பல சேர்த்து
அறிவுரை பல கேட்டு
வளர்த்த ரோஜா செடியில்....
மொட்டொன்று வந்துவிட
அதை காணும் ஆவல் மேலோங்க
சென்று பார்த்த நொடி...
மனம் நொந்து போனேன்
புதிய மொட்டென்று பாராமல்
கயவர்களாய் சில விசபூச்சிகள்..
இனி இது மலராது என்ற
அவநம்பிக்கை என்னுள் பதிந்துவிட
தினம் காலை கண்விழிக்கையில்
ஏதோ ஒரு பாரம் ...
சில நாட்கள் இப்படியே சென்றுவிட
மலராத மொட்டை காண மனம் செல்ல
என் கண்களில் பட்டதோ அழகிய ரோஜா...
பல தடைகள் தாண்டி
பல இன்னல்கள் தாண்டி
சிறு பூவே
மொட்டவிழ்ந்து இதழ்விரிக்கையில்
நம்மால் சாதிக்க இயலாதா என்ன?
என்னுள்ளும் மொட்டவிழ்ந்தது புதுநம்பிக்கை...

Author: im_dhanuu
Article Title: மூன்றாம் கை
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.