💖யாசிக்கிறேன் உன் காதலை - 6 💖

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
💖யாசிக்கிறேன் உன் காதலை - 6 💖

மாமா அத்த நம்ம சொந்தம் தானே அப்புறம் ஏன் வீட்ட விட்டு போனீங்க??" என்றான் ரிஷி சந்தேகமாக.

பெரியவர்கள் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொண்டனர்."சொல்ல வேண்டாம்னா விடுங்க" என்றான் துருவ்.

"இல்ல நடந்தத நா சொல்றேன்" என்றார் தனா(முதல் சித்தப்பா). சிறியவர்கள் அவர் முகத்தை ஆவலாக பார்த்தனர்.

"வேணா தனா, குணா நீயே சொல்லுபா எல்லாரும் வளர்ந்துட்டாங்க இன்னும் என்ன சொல்லுபா" என்றார் அபிராமி.

"அப்பா என்கிட்ட கேட்காம பக்கத்து ஊருல நல்ல வசதியான வீட்டு பொண்ண எனக்கு கல்யாணம் பேசி முடிச்சுட்டாரு, நா லீவுக்கு வந்தப்ப தான் இந்த விஷயத்த சொன்னாங்க, நா அகிலாவ விரும்புறத சொன்னேன், அகிலா வீட்டுல வசதி இல்ல நா இந்த பொண்ணு வீடுல இந்த வாரம் பரிசம் போட வரேன்னு வாக்குக் கொடுத்துட்டேன்னு சொல்லிருந்தாரு" என்றார் பெருமூச்சுடன்.


"அச்சோ!" என்றனர் சிறியவர்கள்.

"வெரி பேட் டாடி" என்றனர் அபி மற்றும் பேபி டால்.


"ம்ம்.. ஆமாடா அப்பதான் முல்லைக்கு கல்யாணம் பண்ண பார்வதி வீட்டுக்காரரோட சித்தப்பா பையன பேசி முடிச்சு இருந்தோம், ரெண்டு கல்யாணத்தையும் ஒன்னா வைக்கலானு பிளான் பண்ணிருந்தாங்க, எவ்ளோ!! சொல்லியும் நானும் பிடிவாதமா முடியாதுன்னு சொல்லிட்டேன், தாத்தா உடனே கல்யாணம் பண்ணனும்னா இங்க இருக்கலாம் இல்லனா வீட்ட விட்டு போயிடு உன்ன தலைமுழுகிடுறோம்னு சொல்லிட்டாரு, அது மட்டும் இல்ல அகிலா வீட்டுக்கு போய் இவரே பேசி அவளுக்கும் வேற இடதுல கல்யாணம் பண்ண ஏற்பாடு பண்ணிட்டாரு".

"சரியான வில்லனா இருப்பாரு போல" என்றான் விரு கிண்டலாக.

"பக்காவா ப்ளான் பண்ணி இருக்காரு" என்றான் சந்தோஷ்.

"ம்ம்.. ஆமாடா நா வீட்ட விட்டு போறேன்னு சொல்லிட்டேன் நீ போ அதே முகூர்த்ததுல என் அடுத்த பையன் அந்த பொண்ண கல்யாணம் பண்ணிப்பான் இனிமே உனக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்ல வெளிய போன்னு சொல்லிடாரு உடனே நானும் கிளம்பி வெளியே வந்துட்டேன், என் ஃப்ரெண்ட் துரை மட்டும் தான் இருந்தான், நானும் அவனும் சின்ன வயசுல இருந்தே ஒன்னா தான் வளர்ந்தோம், ஒரே இடத்துல தான் வேலையும் பார்க்குறோம் அவன் தான் அகிலாவ யாருக்கும் தெரியாம அழச்சுட்டு வந்தான், நாங்க மூணு பேரும் சென்னை வந்தோம், அங்கேயே மேரேஜ் பண்ணிகிட்டோம்" என்றார் கசந்த சிரிப்புடன். அனைவரும் எதுவும் பேசாமல் ஓர் நிமிடம் அமைதியாக இருந்தனர்.


"அப்புறம் தான் எனக்கும் செல்விக்கும் கல்யாணம் பண்ணி வச்சாங்க" என்றார் தனா.

"அப்ப மாமாக்கு பார்த்த பொண்ணு நீங்கதானா அத்த?? ரொம்ப அழுதீங்களா??" என்றாள் மித்ரா பாவமாக.


"சாச்ச.. எனக்கு மாப்பிள்ளை யாருன்னு தெரியாது டா மாமா(நேசமணி) பொண்ணு பாக்க வரப்ப உங்க தனா மாமாவ தான் கூட அழைச்சிட்டு வந்தாங்க, மாப்பிள்ள இவரு தானு நினைச்சுட்டேன், என்கிட்ட யாரும் எதுவும் சொல்லல, கொஞ்ச நாள் கழிச்சு அம்மா அப்பா குணா மாமா இப்படி பண்ணிட்டாங்கனு சொன்னாங்க, அப்பதான் தெரியும் மாப்பிள தனா மாமா இல்லைன்னு, அப்புறம் பரிசம் போட்டதே தனா மாமாவுக்கு தான் நா சந்தோஷமா தான் இருந்தேன்" என்றார் செல்வி சிரிப்புடன். மற்றவர்களும் லேசாக சிரித்தனர்.


"ஏன் மாமா அப்புறம் நீங்க வீட்டுக்கு வரல???" என்றான் துருவ்.

"அபி பிறந்தப்ப எனக்கு துரைக்கும் அமெரிக்கா போற சான்ஸ் கிடைச்சது வீட்ல ஏத்துகிட்டா இங்க இருக்கலாம்னு அபிய தூக்கிட்டு வந்தோம், அபிக்கு பாட்டியோட பேர்தான் வச்சுருக்கோம்னு சொன்னோம், தாத்தா உள்ள கூட விடாம கேட்டுக்கு வெளிய நிக்க வச்சு, உங்க உறவு எப்பவோ முறிஞ்சிருச்சுன்னு சொல்லி துரத்திட்டாரு, அதுக்கப்புறம் நாங்களும் அமெரிக்கா கிளம்பிட்டோம், இங்க என்ன நடக்குதுன்னு எனக்கு எப்போதும் தெரியும்" என்றார் குணா சிரிப்புடன்.


"எப்படி??" என்றனர் சிறியவர்கள்.


"தனாவும் ராஜாவும் என்கூட காண்டாக்ட்ல தான் இருந்தாங்க, எல்லாரும் என்ன பண்றீங்கன்னு தெரியும் எனக்கு" என்றார் சிரிப்புடன்.

"வீட்டுக்குள்ளயே!! இரண்டு கருப்பு பூன இருந்து இருக்கு இது கூட தெரியாமல் இருந்திருக்கோம்" என்றான் நந்து கிண்டலாக. ராஜா செல்லமாக தன் மகனை சிரிப்புடன் முதுகில் தட்டினார்‌.


"ஹேய்!! அபி.. பேபி டால்.. நாங்க தான் இன்ன வரைக்கும் இந்த கதையை கேட்டதுல்ல அதனால ஆர்வமா கேட்டா நீங்க ரெண்டு பேரும் என்னடானா எங்கள விட ஆர்வமா கேட்குறீங்க" என்றான் சிரித்துக்கொண்டே.


"அவங்களுக்கு தெரியாது ரிஷி லவ் மேரேஜ் மட்டும் தான் தெரியும், ரவீன் வந்தப்ப தான் ரிலேஷன்ஸ் எல்லாம் இருக்காங்கன்னு தெரிஞ்சிகிட்டாங்க" என்றார் அகிலா. அனைவரும் ஆச்சரியமாக பார்த்தனர்.


"ஏன் அண்ணி சொல்லல??" என்றார் முல்லை (இரண்டாவது அத்தை).

"அபியும் சரி நேகாவும் சரி அங்க வளர்ந்த பொண்ணுங்க ரிலேஷன் இருக்குறது தெரிஞ்சது சும்மா இருக்க மாட்டாங்க எல்லாத்தையும் தோண்டி எடுத்துப்பாங்க, உங்கள பாக்குறதுக்கு முன்னாடி ஒரு பேட் இம்பிரஷன் கிரியேட் ஆயிடும் அதனாலதான் சொல்லல, அபிய கூட சம்டைம்ஸ் சமாதானம் பண்ணிடலாம் பேபி டால் கிட்ட முடியவே முடியாது எப்படியாச்சும் விஷயத்தை கரந்துருவா" என்றார் குணா சிரிப்புடன் அவள் கன்னத்தில் தட்டிவிட்டு.

"டாடி உங்க டாடி வெரி பேட் பனிஷ்மெண்ட் தரனு உங்களையும் மீயையும் ஹேர்ட் பண்ணிருகாங்க" என்றாள் தீவிரமாக.

"ஆமா டாடி கண்டிப்பா பனிஷ்மென்ட் தரனும்" என்றாள் அபியும் தீவிரமாக. அனைவரும் அதிர்ச்சியுடன் இருவரை பார்த்தனர்.


"அபி நேகாகு சப்போர்ட் பண்ணாத, நேகா முடிஞ்ச ப்ராப்ளம ரியோபன் பண்ணாத" என்றார் அகிலா கண்டிப்பான குரலில். இருவரும் தாயை முறைத்தனர்.

"ஆமாடா இப்பதான் ஒன்னா இருக்கோம்ல, தாத்தா அப்ப ஏதோ கோவத்துல அப்படி நடந்துகிட்டாங்க, மறப்போம் மன்னிப்போம்" என்றார் குணா சிரிப்புடன்.


"டாடி" என்று இரு பெண்களும் அவர் தோளில் சாய்ந்தனர்.

"அபி ஓகே தானடா??" என்றார் அவளை நிமிர்த்தி. பேபிடால் விலகினாள்.


"ஓகே! டாடி பட் எனக்கு ரொம்ப கஷ்டமா இருக்கு ப்பா அம்மாவும் நீங்களும் எவ்ளோ பீல் பண்ணி இருப்பீங்க" என்றாள் அழுகையுடன்.


"என்னடா இதுக்கு போய் அழுவாங்களா?? அழாத, அகிலா அபிய உள்ள அழைச்சுட்டு போய் குடிக்க தண்ணீர் குடு" என்றார் சமாதானமாக.

"ம்ம்...சரிங்க வாடா" என்று அழைத்து சென்றார். மற்ற பெண்களும் எழுந்து உள்ளே சென்றனர் பேபி டால், மித்ரா மற்றும் சந்தியாவை தவிர. பேபி டால் யோசனையுடன் இருந்தாள்.


குணா பேபி டாலை தன் தோளில் சாய்த்து அணைத்தபடி," இங்க பாரு கண்ணம்மா எல்லாத்துக்கும் பனிஷ்மென்ட் ஒன்னே தீர்வு கிடையாது, தாத்தாவோட வறட்டு கௌரவம் தான் இதுக்கு காரணம், இப்பதான் அவரும் நம்மள ஏத்துகிட்டாருல்ல அவர மன்னிச்சிடு" என்றார் விலகி அவள் முகத்தை பார்த்து. பேபி டால் அவர் கண்களை கூர்மையாக பார்த்தாள். "அப்பாவுக்காக வேணா டா" என்றார் கெஞ்சலாக.


"சரி.." என்று பெருமூச்சுடன் தலையை ஆட்டிவிட்டு கிச்சனுக்கு எழுந்து சென்றாள்.


குணா பெருமூச்சுவிட்டார். "என்னாச்சுணே?" என்றார் ராஜா.

"ஒன்னும் இல்லடா அபி அழுது அவள சமாதானம் பண்ணிப்பா பேபி டால் அழ மாட்டா, எப்படா பதிலடி கொடுக்கலாம்னு வெயிட் பண்ணுவா இல்ல அவளே அந்த டைம்ம உருவாக்கிப்பா".


"அண்ணே இது தப்பு இல்லையா??" என்றார் தனா வேகமாக.


"தப்பு பண்றவங்களுக்கு பதிலடி கொடுக்குறது தப்பானு கேட்பா?? இதெல்லாம் நா சொல்லிக் கொடுத்து தான், அப்பா மாதிரி இவளுக்கும் கோவம் வரும் ஆனா அந்த கோவத்துல ஒரு நியாயம் இருக்கும் அதனால எனக்கு அது தப்பா தெரியல டா".


"அப்ப இன்னிக்கு ஒரு கச்சேரி வீட்ல இருக்கு போலயே!!" என்றான் நந்து கிண்டலாக.


"என்ன கச்சேரி டா??" என்றாள் சந்தியா குழப்பமாக.


"நீ ஒரு டியூப் லைட் டி பேபி டால் தாத்தா கூட பைட் பண்ணுவல அத சொல்றான்" என்றான் ரிஷி தலையில் அடித்துக்கொண்டு.


"தாத்தா பதில் சொல்ல முடியாம முழிக்க போறாரு அதப் பார்க்க நா வெயிட்டிங்" என்றான் விரு சிரித்துக்கொண்டே.


"அப்படி எதுவும் நடக்காது" என்றார் குணா.


"ஏன்??" என்றனர்.


"பேபி டால் தான் நா வேணாம்னு சொன்னதும் சரினு தலைய ஆட்டுனாலே!! அதனால ஒன்னும் பண்ண மாட்டா அவ கேரக்டர் அது தான்" என்றார் சிரிப்புடன். அனைவருக்கும் பேபி டாலின் கேரக்டர் புரிந்தும் புரியாமலும் இருந்தது.


தாத்தா வந்ததும் ஆண்கள் மற்றும் சிறியவர்கள் சாப்பிட உட்கார்ந்தனர். நேகா மற்றும் அபியை தவிர, இருவரும் கிச்சனை விட்டு வெளியே வராமல் அங்கேயே இருந்தனர்."எங்க அபியும் சின்ன குட்டியும்??" என்றார் நேசமணி.


"அபி.. நேகா.. தாத்தா கூப்பிடுறாங்க வாங்க" என்றார் அகிலா. இருவரும் வெளியே வந்தனர்.


"அபிமா உட்காரு சாப்பிடலாம், சின்ன குட்டி நீயூம் வா" என்றார். நேகா எதுவும் கண்டுகொள்ளாமல் விருவின் பக்கத்தில் இருந்த சேரில் உக்கார்ந்தாள். பாட்டி பரிமாறினார். சாப்பிட ஆரம்பித்தாள்.


"அபி மா நீயூம் உட்காரு" என்றார் சாப்பிட்டுக்கொண்டே.


"நா அப்புறமா பாட்டி கூட சாப்பிடுறேன்" என்றாள் அவர் முகத்தைப் பார்க்காமல்.

"தாத்தா கூப்பிடுறாங்கல்ல வந்து உட்கார்ந்து சாப்பிடும் மா" என்றார் கந்தன்( இரண்டாவது தாத்தா).


"நா தான் அப்புறம் சாப்பிடுறேன் சொல்றேன்ல தாத்தா விடுங்க" என்று கிச்சனுக்கு சென்றாள்.

"இவளுக்கு என்னாச்சு ஏன் அபி இப்படி பேசிட்டு போறா??" என்றார் வரதன் (மூன்றாவது தாத்தா).


"யாராச்சும் திட்டுனீங்களா?? அதான் கோவமா இருக்காளா??" என்றார் நேசமணி அனைவரையும் முறைத்துக்கொண்டே.

"ஆமா.. ஆமா.. அவ உங்க மேல கோவமா இருக்கா நீங்களே சாட்டைய எடுத்து உங்கள அடிச்சுக்கோங்க" என்றான் நந்து மெதுவாக.

"டேய்! மாட்டிக்காதா" என்று சந்தோஷ் அவனை அடக்கினான்.


"ஒன்னும் இல்லப்பா அவளுக்கு லேசான தலைவலிதான் விடுங்க" என்றார் தனா சமாதானமாக.


"வீட்டிலயே ஒரு டாக்டர வச்சுகிட்டு தலைவலின்னு சொல்றா, சின்னகுட்டி அவளுக்கு தேவையானத பண்ணு" என்றார் கட்டளையாக. நேகா கோபமாக முறைத்தாள்.


"வேலில போறத எடுத்து தானே வெட்டிக்குள்ள விட்டுப் பாரு போல " என்றான் விரு மெதுவாக.

"டாலு நீ அவர பார்க்காம சாப்பிடு" என்றான் துரு அவளுக்கு கேட்கும்படி. பேபி டால் தோளை குலுக்கி விட்டு சாப்பிட ஆரம்பித்தாள்.


"குணா.. தனா.. ராஜா.. சாப்பிட்டு ரூமுக்கு வாங்க உங்க மூணு பேரு கிட்டயும் கொஞ்சம் பேசணும்" என்று எழுந்தார் நேசமணி. அபி வெளியே வந்தாள். "அபிமா முதல்ல சாப்பிடு" என்றார்.


"எதுக்கு என் அப்பாவையும் அம்மாவையும் கஷ்டப்படுத்துனீங்க தாத்தா, அவங்க காதலிச்சது தப்பா?? இப்படி அநியாயமா ரெண்டு பேரையும் வீட்ட விட்டு துரத்திட்டீங்களா" என்றாள் அழுகையும் ஆத்திரமுமாக. சாப்பிட்டவர்கள் அதிர்ச்சியாக எழுந்தனர்.


"அபி மா உன் அப்பாவுக்கும் செல்விக்கும் கல்யாணம் பண்றதா வாக்கு குடுத்தேன், குணா அதுக்கு ஒத்துக்கல அதனால தான் நிபந்தன போட்டேன் உன் அப்பா வீட்ட விட்டு வெளியே போயிட்டான்" என்றார் பொறுமையாக.


"நீங்க பண்ணுனது தப்பு தாத்தா நா பிறந்ததும் தூக்கிட்டு வந்தாங்கல்ல அப்ப எங்கள உள்ள விட்டுருக்கலாம்ல இவ்ளோ நாள் பிரிஞ்சு இருந்திருக்க தேவையில்லல" என்றாள் அழுதுகொண்டே.


"நீங்க வாக்குக் கொடுத்த மாதிரி தானே என் டாடியும் என் மம்மிக்கு உன்ன கல்யாணம் பண்ணிப்பேன்னு வாக்கு கொடுத்து இருப்பாரு" என்றாள் பேபி டால் கசந்த சிரிப்புடன்.


"எனக்கு குணா பண்ணுனது அவமானமாக இருந்தது என் கௌரவப் பிரச்சன அதனால தான் நா ஏத்துக்கல".


"இப்பவும் பாட்டிக்கு உடம்பு முடியாம இருந்தானால தானே ஏத்துக்கிட்டீங்க இல்லனா ஏத்துப்பீங்களா?? தாத்தா" என்றாள் அதே கசந்த சிரிப்புடன்.


"இங்க பாரு சின்னகுட்டி குடும்பம், அந்தஸ்து, கௌரவம், மானம், மரியாத இதெல்லாம் எனக்கு எப்போதுமே ரொம்ப முக்கியம் அத யாருக்காகவும் எதுக்காகவும் நா விட்டு தர மாட்டேன்" என்றார் அழுத்தமாக.


"தாத்தா உங்ககிட்ட நாங்க சண்டை போட கேட்கல இவ்ளோ!! பெரிய குடும்பம் இருந்தும் இது தெரியாம வளர்ந்திருக்கோம், எங்க அப்பாவும் அம்மாவும் எவ்ளோ! கஷ்டப்பட்டுருப்பாங்க, நீங்க மட்டும் இல்லாம மம்மி வீட்டு சைடும் ஏத்துக்காம பண்ணிட்டீங்களா?? ஆகமொத்தம் எல்லாரும் சேர்ந்து எங்கள அனாத மாதிரி இருக்க வச்சுடீங்க போங்க தாத்தா" என்றாள் அபி அழுகையுடன்.


"இல்ல அபிமா தாத்தா அப்படி எல்லாம் நினைப்பனா? உங்கள அந்த மாதிரி விட்டுருவனா, நீ முதல்ல சாப்பிடு அபிராமி சாப்பாடு கொண்டு வா நானே என் பேத்திக்கு ஊட்டி விடுறேன்" என்று அவளை உட்கார வைத்து ஊட்டி விட்டார். அனைவரும் சிரிப்புடன் பார்த்தனர். பேபி டால் கசந்த சிரிப்புடன் அந்த இடத்தை விட்டு வெளியே போனாள். அவள் போறதப் பார்த்ததும் துரு பின்னாலே!! சென்றான். பேபி டால் மொட்டை மாடிக்கு சென்று வானத்தை வெறித்தபடி நின்றாள்.

துரு எதுவும் பேசாமல் பக்கத்தில் வந்து சிறிது நேரம் நின்றான்.
"என்னாச்சு டாலு?? ஏன் இப்படி தனியா வந்து நிக்கிற??" என்றான்.


"சும்மாதான் துரு".


"உன் கஷ்டம் எனக்கு புரியுது டா தாத்தா அந்த காலம் டா அவர அப்படியே வளர்த்துட்டாங்க அவரோட கௌரவம் அந்தஸ்த யாருக்கும் விட்டு தர மாட்டாரு" என்றான் பொறுமையாக.


"அம்மா.. அப்பா.. இருந்தும் இல்லாத மாதிரி இருக்குறது எல்லாம் ரொம்ப கொடுமையான விஷயம் துரு இத்தன பேர் இருந்தும் எங்களுக்கு தெரியால எனக்கும் அபிக்கும் தெரியலனா கூட பரவால்ல, தெரிஞ்சும் தெரியாத மாதிரி இருக்குனதுல்ல ரொம்ப கஷ்டம் துரு அத என் மம்மியும் டாடியும் அனுபவிச்சிருக்காங்க எவ்ளோ! கஷ்டப்பட்டுருப்பாங்க" என்றாள் வருத்தமாக.


"புரியுது ஃபீல் பண்ணாதடா இப்ப தான் சரியாகிருச்சுல்ல".

"அந்த காயத்தோட தழும்பு அப்படியே தானே துரு இருக்கும், எங்க உன் தாத்தாவோட கௌரவம் அந்தஸ்து வச்சு நடந்துமுடிஞ்ச இத்தன வருஷத்த எங்கள திரும்ப கொண்டு போக சொல்லு பார்க்கலாம்" என்றாள். துரு அவளை கூர்மையாக பார்த்தான். "முடியாதுல்ல அப்புறம் எதுக்கு இதெல்லாம்" என்றாள் சலிப்புடன்.


"சரி விடுடா குட்டிமா தாத்தாவுக்கு இதுக்கு பனிஷ்மென்ட் தந்துருலாம்" என்றான் சமாதானமாக.


"இல்ல முடியாது துரு நா பண்ண மாட்டேன்னு டாடிகிட்ட சொல்லிட்டேன் எதுவும் பண்ண முடியாது" என்றாள் இயலாமையுடன்.


"சரி கீழ போலாம் வா அபிய சமாதானம் பண்ணனும்" என்று பேச்சை மாற்றினான்.


"ஆமா துரு அவ வேற அழுதா போய் பேசணும்" என்று கீழே இறங்கி வந்தனர். அபியை மாடியில் இருந்த ஹாலில் உட்கார வைத்து சிறியவர்கள் சமாதானம் செய்ய முயற்சி செய்தனர்."துரு எனக்கு இப்ப வைஃபையும் லேப்டாபும் வேணும்" என்றாள் வேகமாக."இரு கொண்டு வரேன்" என்று வேகமாக ரூமில் இருந்து எடுத்து வந்து கொடுத்தான். லேப்டாப் வாங்கி தியா மற்றும் ஆதிக்கு ஸ்கைபில் கால் செய்து லேப்டாப் அபி முன் இருந்த டேபிளில் வைத்தாள். அபி புரியாமல் பேபி டாலை பார்த்தாள்."ஹேய்!! வேது" என்றனர் இருவரும் சத்தமாக.

"ஹே! காய்ஸ்" என்றாள் சிரிப்புடன். இனி இவர்கள் ஃப்ரெஞ்சில் பேசுவார்கள்.

"எங்க என் செல்லத்த காணோம்??" என்றாள் ஆதி சிரிப்புடன்.

"அந்த லூசு வேதா கிட்ட லேப்டாப்ப கொடுத்துட்டு பக்கத்துல தான் நிப்பா" என்றாள் தியா கிண்டலாக.

"ஹேய்!! தியா எப்படி கண்டுபிடிச்ச??" என்றாள் பேபி டால் அபி உட்கார்ந்திருந்த ஒற்றை சோபாவின் கைப்பிடியில் உட்கார்ந்து.

"உன் இனம் தானே உன்ன பத்தி தெரியாதா??" என்றாள் தியா கிண்டலாக.

"ஹேய்!! செல்லக்குட்டி வந்துட்டியா?? ரெண்டு பேரும் எப்படி இருக்கீங்க??" என்றாள் ஆதி சிரிப்புடன்.


"யா குட் நீங்க ரெண்டு பேரும்" என்றனர் சிரிப்புடன்.

"குட்" என்றனர்.


"உங்க தாத்தா வீட்ல இடமே இல்லையா இப்படி ஒரே சோபால உக்காந்துருக்கீங்க" என்றாள் தியா கிண்டலாக.


"ஓ.. காட்" என்று இருவரும் சிரிப்புடன் லேப்டாப்பை திருப்பி வைத்தனர். அங்கு ரிஷி, நந்து ,சந்தோஷ், விரு பெரிய சோபாவில் உட்கார்ந்து இருந்தனர். பக்கத்தில் இருந்த இன்னொரு சோபாவில் மித்ரா மற்றும் சந்தியா உட்கார்ந்திருந்தனர்.


"என்ன ஒரே கும்பலா இருக்கு??" என்றாள் தியா ஆர்வமாக அனைவரையும் பார்த்து.


"டாங்கிஸ் எதுக்கு திருப்பி வைச்சீங்க??" என்றாள் ஆதி வேகமாக. துரு ரிஷியின் பக்கத்தில் வந்து உட்கார்ந்தான். பேபி டால் மற்றும் அபி அந்த சோபாவிற்கு கீழே உட்கார்ந்தனர்.
"இவங்க எல்லாரும் எங்க கசின்ஸ்" என்றனர்.


"கொய்யா மிய்யா கொய்யா மிய்யான்னு பேசாதீங்க ஏய்!! பேபி டால் உனக்கு போட்ட மாதிரி எனக்கும் சப்டைட்டில் வேணும்" என்றான் நந்து அவள் தலையில் வலிக்காமல் கொட்டி.

ஆதியும் தியாவும் அவனை முறைத்தனர்."ஏன் மேன் அடிக்கிற??" என்றாள் ஆதி வேகமாக.


"உங்க ஃப்ரெண்ட்ஸிக்கு தமிழ் தெரியாதா??" என்றான்.

"தெரியும் விரு தியா.. ஆதி.. தமிழ்ல பேசலாம்" என்றாள் அபி.


"சரி" என்றனர்.


"காய்ஸ் இவ ஆதி.. இவ தியா, இவன் துரு, ரிஷி, நந்து, சந்தோஷ், விரு இவ சந்தியா, மித்ரா" என்றாள் பேபி டால்.


"ஹாய்!! காய்ஸ்" என்றனர்.

"ஹாய்!!" என்றனர் மற்றவர்களும்.


"மீயும் டாடியும் எங்க?? என்றாள் தியா.


"கீழ இருக்காங்க" என்றனர்.

"அங்க எல்லாம் ஓகே தானே" என்றாள் ஆதி.


"நாட் பேட்" என்றனர்.


"டாடிய கூப்பிடு நா டாடிகிட்ட பேசணும்" என்றாள் தியா வேகமாக.


"தாத்தா ஏதோ பேசணும்னு டாடிய அழைச்சிட்டு போயிருக்காங்க" என்றாள் அபி.

"என்ன காய்ஸ் எல்லாரும் அமைதியா இருக்கீங்க நாங்க போரடிக்கிறோமா??" என்றாள் ஆதி சிரிப்புடன்.


"இல்லல்ல" என்றனர்.

"நந்து, சந்தியா, சந்தோஷ் சித்தப்பா பசங்க துரு, விரு, ரிஷி, மித்ரா நாலுபேரும் அத்த பசங்க" என்றாள் அபி.


"உங்க அத்த பையனுங்களும் சரி மாமா பையனும் சரி சூப்பரா இருக்காங்க" என்றாள் தியா ஃப்ரெஞ்சில். இருவரும் மூவரையும் திரும்பி பார்த்து சிரித்தனர்.


"சித்தப்பா பசங்களும் தான் சூப்பரா இருக்காங்க" என்றாள் ஆதி ஃப்ரெஞ்சில்.


"வேது நேகி துருனு சொன்னியே அவன் செம்மயா இருக்கான், பாரு சிரிக்கிறப்ப கன்னத்துல குழிக்கூட விழுது" என்றாள் தியா சிரிப்புடன்.

"அக்கா.. அக்கா.. சப்டைட்டில் ப்ளீஸ், நீங்க பேசறது புரியவே இல்ல" என்றான் நந்து வேகமாக.


"ஆமாக்கா தமிழ்லயே பேசுங்க" என்றாள் மித்ரா பாவமாக.


"தமிழ்ல இத சொன்னா மாட்டிப்போமே!!" என்றனர் இருவரும் கோரசாக ஃப்ரெஞ்சில்.


"தமிழ் வரலனா இங்கிலீஷ்ல பேசலாமே!!" என்றான் சந்தோஷ்.

"புரியாத மொழியில பேசுனா எப்படி மா??" என்றான் விரு சலிப்புடன்.

"எங்களுக்கு ஊமை நாடகம் பாக்குற மாதிரி இருக்கு" என்றான் ரிஷி.

"நீங்க ரெண்டு பேரும் எங்க எல்லாரையும் பத்தி பேசுனீங்களா அதானால தான் ஃப்ரெஞ்சில் பேசுறீங்களோ!!" என்றான் துரு சிரிப்புடன். அபி மற்றும் பேபி டால் சிரித்தனர்.


"நோ.. நோ.. இல்ல... இல்ல.." என்றனர் அவசரமாக. அவர்கள் மாட்டியதை நினைத்து அபி மற்றும் பேபி டால் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர்.


"ஆமா எப்படி உங்களுக்கு தமிழ் தெரியும்??" என்றாள் சந்தியா.


"மீ ரொம்ப ஸ்ட்ரிக்ட் வீட்ல தமிழ்ல தான் பேசணும் என் மதர் டாங்க் ஹிந்தி , நாங்க நாலு பேரும் இவங்க( பேபி டால், அபி) வீட்ல தான் மேக்ஸிமம் இருப்போம், மீ தமிழ் சொல்லித் தருவாங்க" என்றாள் தியா சிரிப்புடன்.


"எனக்கு தமிழ் தான் மதர் டாங்க் சோ எனக்கு தெரியும்" என்றான்ஆதி.


"உங்கள எங்களுக்கு தெரியும் நீங்க துரை மாமா பொண்ணு தானே!!" என்றான் சந்தோஷமா.


"ஆமா..." என்றாள் சிரிப்புடன். இப்படியே சிறிது நேரம் பேசிவிட்டு அவரவர் அறைக்கு சென்றனர்.

இரவு பன்னிரண்டு மணி போல் துருவின் ரூம் கதவு தட்டும் சத்தம் கேட்டது எழுந்து சென்று திறந்தான். பேபி டால் அங்கு நின்று கொண்டு இருந்தாள். "டாலு.." என்றான்.


எதற்கு பேபி டால் துருவின் அறைக்கு நேரத்தில் வந்தாள்??? நேசமணி மகன்களிடம் என்ன பேசுவதற்காக அழைத்து சென்றார்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்........💗யாசிப்பு தொடரும்💗.........

 

Author: Ramya Anamika
Article Title: 💖யாசிக்கிறேன் உன் காதலை - 6 💖
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN