மாயம் 3

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
நிதம் உன்னை
அறிய தவம் கிடக்கும்
என் கண்களுக்கு...
உன் வரவால்
என்று
தரிசனம் தருவாய்
ரதியே...???

தன் ஹோண்டாவை உரிய இடத்தில் நிறுத்திவிட்டு கே.டி சாப்ட்வேர் டெக்னாலேஜிஸ் என்ற பெயர் பலகையை தாங்கி நின்ற கட்டடத்தினுள் நுழைந்தாள் ஶ்ரீ.
அவளைக் கண்டவுடன் இன்முகத்துடன் வணக்கம் கூறிய காவலாளி முதல் வேலைக்கார ஆயா வரை அனைவருக்கும் காலை வணக்கத்தை கூறிக்கொண்டே தன் இருக்கையை அடைந்தாள் ஶ்ரீ.

அங்கு அவளது தோழி ஹேமா காலை வணக்கத்துடன் அவளை வரவேற்க ஶ்ரீயோ யாரையோ தேடிக்கொண்டிருந்தாள். அவள் தேடுவதைக்கண்ட ஹேமா
“ஹேய் ஶ்ரீ வந்ததும் வராததுமா யாரை தேடுற??ஆ... கண்டு புடிச்சிட்டேன்... உன் அடிமை பரத்தை தேடுறியா?? அவன் இன்னைக்கு ஆபிஸ் லீவு... நீ இப்படி அவனை தேடுறது அவனுக்கு தெரிஞ்சா பய எங்கயிருந்தாலும் வந்தேன் தேவினு ஓடி வந்திருவான்... சே நல்லா சான்ஸை மிஸ் பண்ணிட்டான்... டேய் பரத்து உனக்கு சுக்கிரன் ரிவஸ்ல போறாருடா...” என்று அங்கில்லாத பரத்திற்காக கவலைப்பட்டுக்கொண்டிருந்த ஹேமாவின் தலையில் கொட்டினாள் ஶ்ரீ.

“ஏன்டி ஏன்... உனக்கு இந்த கொலவெறி...?? அவன் வரமாட்டான்னு தெரிஞ்சு தான் இன்னைக்கு ஏர்லியா வந்தேன்.. நீ அவன் பேர சொல்லி பீதியை கிளப்புற??? நான் யாரை தேடுனாலும் அவனை தேடுறதா அர்த்தமா??? நா எத வேணும்னாலும் பொறுத்துக்குவேன்... ஆனா அந்த மாங்கா மடையனை என் தேடலோட சிங்க் பண்ண பாரு... உன்னை..” என்று மீண்டும் கைகளை முறுக்கிக்கொண்டு வர அவளை தடுத்தாள் ஹேமா..

“அம்மா தாயே தெரியாம சொல்லிட்டேன்... விட்டுரு... இருக்குறது ஒரு மண்டை.. அதை கொட்டி கொட்டியே ஓட்டையாக்கிறாத...”

“ம்.. அந்த பயம் இருக்கட்டும்...இருந்தாலும் உனக்கு வாய் கொழுப்பு ரொம்ப கூடிப்போச்சு... ராஜூ அண்ணாகிட்ட சொல்லி கம்மி பண்ண சொல்லுறேன்..”

“ஹாஹா.. அதையும் பார்ப்போம்.. சரி வந்ததும் வராததுமா யாரை தேடுற??”

“நம்ம பர்த்டே பேபியை தான்??”

“அவளை எதுக்கு நீ தேடுற??? சரியில்லையே....” என்று ஹேமா இழுக்க

“அடி என்னடி...நான் விஷ் பண்ணத்தான்டி அவளை தேடுறேன்.. நீ என்ன இப்படி சொல்லுற??”

“உன் வேகம் தான் ஏதோ உள்குத்து இருக்குனு சொல்லுது.. அதான் டவுட்டா இருக்கு...”

“இதுல என்னடி உள்குத்து இருக்கு??”

“ஏன் இல்லை.. ?? ட்ரீட் மிஸ் ஆகிரும்குற உள்குத்து தான்...”

“என்னை பார்த்தா ட்ரீட்டுக்கு அலையிறவ மாதிரியாடி இருக்கு??”

“உன்னை பார்த்தா அப்படி இல்லை... ஆனா உன்கூட பழகுனதுல அப்படி தான் தெரியிது..”

“பார்டா.. என் ப்ரெண்டு இவ்வளவு அறிவாளியாகிட்டா... எப்படி இந்த மாற்றம்??? யாரோட சேர்க்கையால இந்த மாற்றம்??” என்று ஶ்ரீ ஹேமாவை வார

“நிச்சயமா உன்னோட சேர்க்கையால இல்லை...” என்று பதிலுக்கு ஶ்ரீயை வாரினாள் ஹேமா..

“ஆஹா.. உன்னை பிறகு கவனிச்சுக்கிறேன்.. இப்போ பர்த்டே பேபி சஞ்சு எங்கனு சொல்லு..”

“அந்தா அவளே வந்துட்டா...”என்று அவர்களது இருக்கைக்கு அருகே வந்துக்கொண்டிருந்த சஞ்சுவை காட்டினாள் ஹேமா..

“ஹேப்பி பர்துடே பப்பிளிமாஸ். ஹேவ்வ வொன்டர்புள் டே ஸ்விட்டீ. எங்கடி கேக்? இன்னைக்கு ட்ரீட் தாரேன்னு சொன்னது மேடம்கு ஞாபகமிருக்குதில்ல? பிறகு பைசா இல்லனு மொக்கையாக்கிற மாட்டியே? ஏய் என்னடி நான் பாட்டுக்கு கேட்டுகிட்டே இருக்கேன் நீ பதிலே சொல்லாம என்னமோ காஞ்சனா படம் பார்க்குற மாதிரி என்னையே பார்த்துகிட்டு இருக்க?”

“என்னை எங்கடி பேசவிட்ட நீபாட்டுக்கு ஏதோ ப்ரஸ் மீட்ல ஜேனலிஸ்ட் நம்ம அரசியல்வாதிகளை பேசவிடாம கேள்வி கேக்குற ரேஞ்சில கேள்வி கேட்டது மட்டும் இல்லாம காஞ்சனா படத்த வேற சிங்க் பண்ணுறியா?” என்று சஞ்சனா எகிற

“விடு மச்சி... இதெல்லாம் அரசியல் வாழ்க்கையில ரொம்ம சகஜம்...” என்று ஶ்ரீ மார்தட்டிக்கொள்ள

“நீ எப்ப ஶ்ரீ பாலிடிக்ஸ்ல சேர்ந்த??” என்று சஞ்சு தொடங்க ஶ்ரீயோ..

“என்ன லந்தா?? யாருக்கு எனக்கேவா... சரி இந்த மேட்டரை பிறகு டீல் பண்ணிக்கிறேன்... இப்போ சொல்லு எங்க ட்ரீட்?? எப்போ ட்ரீட்?? என்ன ட்ரீட்..??”

“இடம் நம்ம கேன்டீன்... நேரம் லன்ச் ப்ரேக்... பொருள் பிரியாணி என்ற பெயரில் நம்ம கேண்டினில் உள்ள பிரியாணி..”

“என்னது கேன்டீனா?? இதுக்கு நீ எனக்கு ஒரு பாட்டில் வெசம் குடுத்துருக்கலாம்...”என்று ஶ்ரீ அலற

“இதை மொதல்லேயே சொல்லியிருந்தனா கையோட வாங்கிட்டே வந்திருப்பேனே...”என்ற சஞ்சுவை முறைத்தாள் ஶ்ரீ..

“கிராதகி எவ்வளவு நாளா இந்த பிளானோட இருக்க??? ட்ரீட் கேட்டதுக்கு இப்படி மர்டர் பண்ணுற அளவுக்கு போவியா நீ??? ட்ரீட் கேட்ட நண்பியை விஷம் கொடுத்து கொன்றாள் இளம் பெண் அப்பபடினு ஹெட்லைனில் வரணும்னு ஆசைப்படுறியா??”

“இது கூட நல்லா இருக்கே.... இப்படியாவது உன்னமாதிரி ட்ரீட்டு கேட்டு பர்சை காலி பண்ணுற கோஷ்டி வாலை சுருட்டிக்கிட்டு இருக்கட்டும்...”

“ஹாஹா... நீ என்ன நினைச்சிட்டிருக்க என் இனத்தை பற்றி??? உன் மாதிரி அஞ்சுக்கும் பத்துக்கும் கணக்கு பார்க்கிறவங்ககிட்டயெல்லாம் வெட்கம் மானம் சூடு சொரணை மறந்து திட்டு வாங்கி அதை தூசி மாதிரி தட்டிவிட்டுட்டு உங்ககாசுக்கு வேட்டு வைக்கிறது என்ன அவ்வளவு ஈசியான டாஸ்க்கா???? இந்த ட்ரீட்டுக்கா எங்க மானத்தையே அடகு வைக்கிறோம்டி... இதெல்லாம் உனக்கு புரியாது...”

“அம்மா தாயே உன்கிட்ட வாய் குடுத்தது தப்பு... மன்னிச்சுக்கோ...சத்தியமா சொல்லுறேன்டி... உன்னை சமாளிக்கவே நான் ஒரு நாளைக்கு ஒன்பது வேளை சாப்பிடனும் போல...” என்று சஞ்சு ஜகா வாங்க அவளை பார்த்து சிரித்தாள் ஶ்ரீ.

“இப்போ சரி மேடத்தோட டேலண்டை புரிஞ்சிக்கோ.. சரி எங்க ட்ரீட்??”

“இங்க பக்கத்துல இருக்க டைன்மோர் ரெஸ்டாரண்ட் போலாம்டி...”

“ஓகே பப்ளி... சுந்தர் ரவிக்கு சொல்லிட்டியா??”

“ஆமா பா... ரவி ஹெட் ஆபிஸ் போயிட்டு அப்படியே வர்றேனு சொல்லிட்டான்.. நான், நீ, ஹேமா சுந்தர் எல்லோரும் லஞ்ச் ப்ரேக்குக்கு ஒரேடியா கிளம்பலாம்..”

“பப்ளி பிளான்னா சும்மா?? சும்மா தெறிச்சி ஓடும்ல??”

“இப்போ நீ என்ன சொல்ல வர்ற??”

“நான் ஒன்னும் சொல்லலமா.. நீ வேலையை கவனி.. இல்லைனா அந்த டமார் தலையன் வந்து கத்துவான்..” என்று ஶ்ரீ தன் இருக்கையில் அமர்ந்து சிஸ்டத்தை ஆன் செய்தாள்..

“ஆபிஸ்ல ஒருத்தனக்கூட விட்டு வைக்கமாட்டியாடி...?? இப்போதைக்கு கம்பனி எம்டி மட்டும் தான் உன் செல்லப்பெயர்ல இருந்து தப்பிச்சிருக்காரு போல..”

“வேலையை கவனி பப்ளி...” என்று சஞ்சுவை மடக்கிவிட்டு தன் வேலையை தொடர்ந்தாள்...
(அந்த டமார் தலையன் நம்ம ஶ்ரீயோட டீம் லீடர்😂😂😂)

“ரிஷிராஜ் டெக்ஸ்டைல்ஸ” தலைமை அலுவகத்தின் ரிஷிராஜ் எம்.பி.எ மேனஜிங் டிரெக்டர் என்ற பெயர்பலகையை தாங்கி நின்ற அறையினுள் அமர்ந்து தன் நண்பனுடன் தொலைபேசியில் உரையாடிக்கொண்டிருந்தான் ரிஷி.

“டேய் என்னடா ஹரி... திடீர்னு ஐயாவுக்கு என்னோட நியாபகம்லா வந்திருக்கு... என்னடா விசேஷம்??”

“டேய் எப்படிடா விசேஷம்னு கண்டுபிடிச்ச???”

“இதென்னா பெரிய விடயமா?? எப்பவும் வாட்சப்ல மேசேஜ் மட்டும் பண்ணுறவன் அதிசயமா கால் பண்ணியிருக்கியே... அதான்”

“ஏன்டா இப்படி இன்டைரெக்டா இன்சல்ட் பண்ணுற?? நேரடியா சொல்லிற வேண்டியது தானே..”

“ஆஹா.. சொன்னதும் சார் டப்புனு ஒத்துக்குவீங்கல??”

“என்ன மச்சி இப்படி சொல்லிட்ட... ஆப்சைட போனதால காண்டக்ட் விட்டுப்போச்சு... அதுக்காக இப்படியா வச்சி செய்வ???”

“அமெரிக்கா என்ன வேற்று கிரகத்துலய இருக்கு?? சும்மா சமாளிக்கிறதுக்காக ஏதாவது சொல்லாத...”

“சரி தப்பு தான்... இனிமே நைட்டு விடிய விடிய பேசுறேன்... ஓகேவா??”

“அய்யே.... அவனா நீ??” என்று ரிஷி ஹரியை வார

“டேய்...” என்று ஹரி பல்லைக்கடிக்க

“பின்ன என்னடா லவ்வஸ்தான் விடிய விடிய பேசுவாங்க.... அப்போ...”என்று ரிஷி இழுக்க

“டேய் வேணாம்டா... இதெல்லாம் சரியில்லை சொல்லிட்டேன்... ஏதோ ப்ளோல வந்த ஒரு வார்த்தையை புடிச்சிகிட்டு இப்படி பண்ணக்கூடாது சொல்லிட்டேன்...”

“நீ தானேடா சொன்ன???”

“டேய் வேணாம்டா... இப்போது தான் அடுத்த ஸ்டேஜிற்கு ப்ரமோஷன் கிடைக்க போகுது... என் வாழ்க்கையில கும்மி அடிச்சிராத...”

“எனக்கு கதகளியே ஆட ஆசையாதான் இருக்கு... ஆனா...” என்று ரிஷி இழுக்க

“டேய் வேணாம்டா அழுதுருவேன்...”

“சரி... ஏதோ ப்ரமோஷன்னு சொன்னியே... என்னடா???” என்று ரிஷி கேட்க

“ஆமாடா... அதை பத்தி உன்கிட்ட நேரடியா சொல்ல தான் உனக்கு கால் பண்ணேன்... இன்னைக்கு லஞ்சிற்கு நீ எங்க போற?? ஏதும் வர்க்கில் கமிட்டாகிட்டியா???”

“இல்லைடா.. வர்க் ஏதும் இல்லை..... நான் எங்க வரணும்னு சொல்லு...”

“லஞ்சிற்கு டைன்மோர் வா.. அங்க மீட் பண்ணலாம்.... அப்போ ப்ரமோஷனை பற்றி சொல்றேன்...”

“சரிடா ஹரி லன்சிற்கு மீட் பண்ணலாம்...பாய்...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்த ரிஷி கிடப்பிலிருந்த தன் வேலைகளை கவனிக்க தொடங்கினான்.
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN