நீயே என் இதய தேவதை 6

Bharathi

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
வழக்கம் போல் காலை 5. 30 மணிக்கெல்லாம் விழிப்பு வந்துவிட்டது கவிதாவுக்கு. குழந்தை இன்னும் தூங்கி கொண்டிருந்தது நல்லது என்றபடி நிதானமாக குளித்து சுடிதார் ஒன்றினை அணிந்து கிளம்பி உறங்கும் குழந்தையின் அருகில் அமர்ந்திருந்தாள். 11 மாதங்களில் தன்னை ஒரு நிமிடம் கூட பிரிந்திடா குழந்தை மாலை வரை இனிமேல் சித்தியிடம் அமைதியாக இருக்குமா....?அழுது ஆர்ப்பாட்டம் செய்தால் சுகி சித்தியின் மாமியார் வாய் சும்மாயிருக்காதே. நல்லவேளை தனது சத்து குறைபாட்டால் 10 மாதங்களோடு தாய்ப்பால் மறக்கடித்திருந்தாள் மாயாவிற்கு.

8. 00 மணிக்கு சுகுணா காலை உணவோடும் பால் பாக்கெட்டோடும் வந்தாள். "நீ சாப்பிட்டுடி. பாப்பா எழுந்தா நான் பாத்துக்கிறேன்.. " என ஸ்டௌவில் பாலைக் காய்ச்சினாள்.
சுகுணாவின் மொபைல் அலறியது. எடு்த்து காதில் வைத்து "கிளம்பிட்டியா இங்கதான் இருக்கேன் மேன்சன் ரூம் நம்பர் 15 ல. ஹான்..... வந்திடு". என்றபடி போனை அணைத்தாள். எதிர்முனை என்ன பேசியது என்பது தெரியவில்லை.

5நிமிடங்களில் கவி வயதொத்த ஒரு பெண் அங்கு வந்திருந்தாள். கரெக்டா வந்துட்டேனா டைம் ஆச்சு கிளம்பாலாமாக்கா....? என்றாள்.

"ஹான் இதோடி"....."கவி இவளும் வேலைக்காக தான் வந்திருக்கா இவ கூட போ. ஹே.... கலா கொஞ்சம் பாத்துக்கோடி" என இருவரையும் ஒன்றாக அனுப்பிவைத்தாள்.

"உங்களோட பாப்பாவா .... ரொம்ப அழகாயிருக்கு உங்களை மாதிரியே"என்று பேசியபடியே வந்த கலாவிடம் ..ம்ம் கொட்டிக்கொண்டே வந்தவள் மனதில்
பாப்பா எழுந்திருக்குமோ ?என்னை நினைத்து அழுதிடுமோ...? என்ற நினைப்பிலே இணைந்து நடந்தாள். 10 நிமிட நடை பயணத்தில் அந்த கம்பெனியை அடைந்தார்கள்.

கலா அங்கிருந்த செக்யூரிட்டியிடம் அண்ணா பாபு அண்ணா காண்ட்ராக்ட்ல கூப்பிட்டிருக்காங்க.... எனவும் அவர் அவர்களை செக்யூரிட்டி ரூமிலேயே அமர வைத்துவி்ட்டு பாபு காண்ட்ரக்டின் சூப்பர்வைசர்க்கு அழைத்து விவரம் சொன்னார்.

"இதோ வந்திடுவான்ம்மா..... வையிட் பண்ணுங்க "
எனக்கூறி விட்டு அவர் வேலையைத் தொடர்ந்தார். காத்திருந்த நேரத்தில் சுற்றுப்புறத்தை உற்றுநோக்குகையில் ஓரளவு பெரிய கட்டிடம். முன்னால் லாரிகள் குவிந்த வண்ணம் இருந்தது. சிறு தோட்டம் ஒன்று அழகுச்செடிகளுடனும் பூச்செடிகளுடனும் பராமரிக்கப்பட்டிருந்து.

சூப்பர்வைசர் பாலா அங்கு வந்தவுடன் இருவரது விவரங்களையும் கேட்டறிந்து ரெஸ்யூம் தயார் செய்தான்.கவிதாவிடம் "பாப்பா உனக்கு குழந்தை இருக்குனு தெரிஞ்சா .... அந்த மேனேஜர் வேலை தர மாட்டான். அது வேற சின்ன பாப்பா வேற. அதனால சொல்லாத.... என்ன.. ?" என்றான்.

அவள் கொஞ்சம் தயங்கி பின் சரியென்றாள். அவர்கள் செய்யப்போகும் வேலை பற்றிய விளக்கத்தையும் வேலை வருவதற்கான ஆடை விதிமுறைகளையும் விளக்கியவன் இருவரையும் எச் ஆர் அறைக்கு கூட்டிச்சென்றான். 8மணி நேரம் நின்றபடியே தான் வேலை இருக்கும் என்றவுடன் கலாவுக்கு அதிர்ச்சி. எச் ஆர் அறையில் அங்கிருந்த இருக்கையில் அமரச்செய்தவன் எச் ஆர் வந்துதான் இன்டர்வியூ செய்வார் என காத்திருக்கச் சொன்னான்.

இந்த வேலைக்கு கூடவா இன்டர்வியூ.... எனும் எண்ணம் இருவர் மனதிலும் தோன்றாமல் இல்லை. ஆனால் இன்டர்வியூ எனும் பெயரில் அவர்களை பற்றிய விவரங்கள் தான் கேட்கப்பட்டது எச் ஆர் ஆல். அதை கூறியவுடன் கம்பெனியின் விதிமுறைகள் திரும்ப படிக்கப்பட்டது. ஒழுங்கா வேலை பாக்கணும். லீவு போடக் கூடாது. சரியா...? என அனுப்பி வைத்தார்.இருவருக்கும் வேறு வேறு இடத்தில் வேலை. முதலில் கலாவை இரண்டாவது தளத்தில் கொண்டுபோய் விட்டவன் அவளது பிரிவுக்கான தலைமையரிடம் சொல்லிவிட்டு பிறகு கவிதாவை முதல் தளத்திற்கு அழைத்து வந்தான்.

அந்த பிரிவின் மேனேஜர் அன்று விடுமுறை. யாரிடம் சொல்வது ...?என யோசித்தவன் கண்ணில் விடுமுறை எடுத்த மேனேஜரை மனதில் சபித்துக் கொண்டே
அவரின் வேலையையும் சேர்த்து பார்த்துக் கொண்டிருந்த அன்பு தெரிந்தான்.

அன்பண்ணா

"என்ன நாயே...? " எரிந்து விழுந்தான். (அவர்களுக்குள் இது போன்ற உரையாடல்கள் சகஜம்தான் ஆனால் கவிதா கொஞ்சம் பயம். )

இவங்க நியுஜாயினி. இங்கதான் வேலை. எச் ஆர் சொல்லிவிட்டு போக சொன்னாரு..

ஓ.... அப்படியா..? சரி நான் பாத்துக்கிறன் போ.... என்றவுடன் பாலா விடைபெற்றுக் கொண்டு சென்றான்.

நீ... உன் பேரு போன் நம்பர் சொல்லும்மா...

ஹான்...

உன்னத்தான் உன் பேரு போன் நம்பர் சொல்லுனு சொன்னேன். காது கேக்கலையா...? என நக்கலாக மொழிந்தான்

அவள் கூறிய விவரங்களை ஒரு ஏட்டில் எழுதியவன் கம்பெனி ரூல்ஸ் என்று எச் ஆர் கூறியதையும் பாலா கூறியதையுன் திரும்ப கூறினாள். கவிக்கு ஐயோவென்று இருந்தது. பின்பு அங்கு வேலை செய்யும் பெண்ணை அழைத்து இவங்க வேலைக்கு
புதுசா சேர்ந்திருக்காங்க கொஞ்சம்
சொல்லிக் கொடு என்றான்.

அவன் அழைத்த பெண் சுதா. மூன்று வருடம் அங்குதான் வேலை பார்க்கிறாள். தேனி வந்து இங்கு ரூம் எடுத்து தங்கி இருக்கிறாள்.

வா பாப்பா.... என்று ஒரு பெரிய இயந்திரத்தின் முன் நிற்கவைத்தாள். இது போன்ற தொழிற்சாலையில் கவிக்கு வேலை செய்த அனுபவம் இல்லை என்பதால் அந்த இயந்திரங்களை பார்த்தவுடன் மனம் கடினமான வேலையோ என்று அச்சம் கொண்டது.

சுதா ஒரு மெட்டிரியலை எடுத்து அதில் ரிவிட்டிங் செய்வது எப்படி என சொல்லிக் கொடுத்தாள். கவியின் பயத்தில் சுதாவின் பேசும் விதத்தை (உச்சரிப்பு slang) புரிந்து கொள்ள முடியவில்லை. தவறு செய்தாள்.

தப்பா செஞ்சா ரிஜக்ட். பீஸாகிடும் ஒழுங்கா கவனி பாப்பா... என அவள் நிதானமாக சொல்லி கொடுக்க ம்ம்ஹும் மறுபடியும் தவறு செய்தாள்.

இவளை கவனித்து சோர்ந்தவள் அன்பண்ணா....... இந்த பொண்ணுக்கு வேலையே வரமாட்டேங்குது இவகிட்டயே நின்னுட்டுருந்தா.... என் வேலையை யார் பாக்குறது...? "என சண்டையிட்டாள்.

கவிக்கு ஐயோ போட்டுக்கொடுத்துட்டாளே..... அவன் வேலையை விட்டு அனுப்பிடுவானோ...? என்று மீண்டும் பயம் சூழ்ந்தது மனதில்.

ஏற்கனவே கடுப்பிலிருந்தவன் நீ ஒழுங்கா சொல்லிக்கொடுத்திருக்க மாட்ட....? என சுதாவை திட்டுவிட்டு சரி.. நீ போய் உன் வேலையைப் பாரு என்றவுடன் அவள் அடுத்திருந்த இயந்திரத்தின் அருகில் நின்று வேலை பார்த்தாள்.

இங்க பாரும்மா. உன்னத்தான். என்ன பிரச்சனை உனக்கு....?ஏன் சொதப்புற புதுசா சேர்ந்திருக்கனு ஈசியா வேலை தான் கொடுத்தேன் அதையே செய்ய மாட்டேன்னா.. எப்படி...? என காட்டமாய் கேட்டான்.

கவி கண்களில் நீர் கோர்த்துக்கொண்டது அதை மறைக்க தலை குனிந்தாள். அவனுக்கே பாவமாய் இருந்தது இப்படி கத்தியிருக்க வேண்டாமா....? என்று.

சரி வா என்றவன் நிதானமாக அந்த இயந்திரத்தை பயன்படுத்த சொல்லிக் கொடுத்தான். இந்த முறை கவனித்து சரியாக செய்தாள். அசெம்பிள் பண்ணியாச்சினா கையை மஷின் ல இருந்து எடுத்துடுங்க என அவள் விரல்களை மஷினிலிருந்து எடுத்தான். உடனை கைகளை அவள் உருவிக் கொண்டது கோபத்தை வரவழைத்தது. பின்னே மஷினில் பட்டிருந்தால் கை நசுங்கிவிடும் என்பதால் தான் அனிச்சையாய் அவள் கைகளை தொட நேர்ந்தது. அதற்கு இந்த பெண் என்னவோ வேணடுமென்றே தொட்டது போல் எண்ணிக் கொண்டாளே என வெறுப்பு. அதன் பிறகு அவள் இடத்திற்கு அவன் வரவில்லை.

சரியாக 1. 50 க்கு இவளை பார்த்து இன்னைக்கு ட்ரைனிங் டே தான் உனக்கு. சம்பளம் போட மாட்டாங்க இன்னைக்கு. நாளைக்கு காலைல 6. 00 மணிக்கு கம்பெனியில இருக்கணும்.9. 00 மணிக்கு கேன்டீன்லயே சாப்பாடு லன்ச்பாக்ஸ் கொண்டுவர வேண்டாம். உங்க ரூட்டுக்கு வேனும் இருக்குனு நினக்கிறேன்.முடிஞ்சா அதுலயே வந்திடு. 2மணிக்கு ஷிப்ட் முடியுது. வாராவாரம் ஷிப்ட் மாறும் 2nd ஷிப்ட் 2. 00 - 10. 00. யுனிபார்ம் சீக்கிரம் தர சொல்லி உஙக கான்ட்ராக்ட்ல கேளு என வேகமாய் சொல்லி முடித்தவன் கணிணி முன் சென்று அமர்ந்தான்.

அலுங்காமல் இப்படி ஒரு அணுகுண்டை தூக்கிப்போட்டுச் செல்கிறானே என்றானது கவிக்கு. சாதாரணமாக கம்பெனியில் 9- 5. 30 தான் வேலை நேரமாக இருக்கும் என்று பார்த்தாள். முதல் ஷிப்ட் கூட பரவாயில்லை. 2nd ஷிப்ட் டில் 10 மணி வரை மாயாவை சித்தியால் பார்த்துக் கொள்ளமுடியாதே. சித்தியின் மாமியார் நான் கண்ட நேரங்களில் வீட்டுக்கு வருவதாக திட்டினால்
என்ன செய்வது என குழம்பினாள்.

இன்றைய 2 nd ஷிப்ட் தொழிலாளர்கள் வந்துவிட 1st ஷீப்ட் கிளம்புங்க மொத்தமாக சொன்னவன் சுதா என்றழைத்து பிரியா... 2 நாளா லீவு போல. நாளைக்கு வேலைக்கு வரலனா.. மொத்தமா வீட்லயே இருந்துக்க சொல்லு.

எல்லாரோடும் சேர்ந்து கவியும் கீழிறிங்கி கலாவை தேடினாள். அங்கு வந்த பாலா அங்கிருந்த வேன் ஒன்றை சுட்டிக்காட்டி ஏறிக்கோ பாப்பா.... உன் ரூட் தான் இதோ கலாவும் வந்திடுச்சி பாரு ஏறுங்க... என்று பத்திரமாய் அனுப்பினான்.
நாளையிலிருந்து வேலைக்கு செல்லமுடியாதென்று எண்ணி சோர்வாய் சித்தி வீடு சென்றிரங்கியவளின் பிரச்சனைக்கு ஒரு தீர்வு காத்திருந்தது.

@@@@@@@
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN