அவளை சாப்பிட வைத்து விட்டு அந்தரன் ருத்ரா மதுவோடு சாப்பிட்டு விட்டு கிளம்பினான். தவறு தன்னுடையது என்று ருத்ராவிற்கு தெரியும். ஆனால் அவ்வளவு சீக்கிரத்தில் மயூரா மனம் குளிர மாட்டாள் என்பதும் அவன் அறிந்ததே.

அவர்கள் பெற்றோர்கள் மறுநாள் தான் வீட்டிற்கு வருவார்கள். அதுவரை மயூரா மதனிகா ருத்ரன் பொறுப்பே. இரவு வரை கூட மயூரா அறையை விட்டு வரவில்லை. மதனிகாவும் அவளை தொந்தரவு செய்ய வில்லை.

இரவு வேலை உணவிற்கும் மகராசி வந்த பாடு இல்லை. எவ்வளவு நேரம்தான் மயூரா அறைக்குள்ளே அடைந்து கிடைப்பாள்? மெல்ல மெல்ல பசி வேறு வயிற்றை கிள்ளியது.

மயூரா மைண்ட் வாய்ஸ்

" யெக்கா பசிக்குது, எதையாச்சும் எனக்கு வயதுக்கு போடுகா, அதான் உன் மாமன் அம்பிட்டு ருசியா பிரியாணி பண்ணியிருகானே, வா போய் வெளுத்துக் கட்டலாம். இந்நேரம் அந்த நெட்ட கொக்கு, உன் தொங்கச்சி குள்ள வாத்து எல்லாம் தூங்கியிருப்பங்க. வெரசா கிளம்பு கிளம்பு '' னு மண்டைக்குள் மணியடிக்க, மயூராவிற்கு ருத்ரன் செய்து வைத்திருக்கும் பிரியாணியை எண்ணி எண்ணி.. எண்ணி எண்ணி வாயூறியது.

பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரி என்ற ரேஞ்சிற்கு மயூரா பொங்கி எழாமல் பம்மி பம்மியே சமையலறைக்குள் நுழைந்தாள். அவள் நினைத்தது போல் யாரும் அங்கு இல்லை. அரையிருட்டில் எஞ்சி இருந்த கோழி பிரியாணியை தட்டில் நிறைத்துக் கொண்டு சாப்பாட்டு மேஜையில் அமர்ந்து உண்டாள்.

ஒவ்வொரு கவளம் உள்ளே செல்லுகையில் அதன் ருசியில் மயங்கி போய் "என்ன சொல்லு மயிலு மாடசாமி பிரியாணி எப்பவும் தனி ருசிதான். ''தனக்குள்ளே கொஞ்சம் சத்தமாகவே சொல்லிக் கொண்டாள்.

பசிக்கு வேக வேகமாக உணவு இறங்க தொண்டை விக்கிக் கொண்டு மயூராவிற்கு புரை ஏறியது.

அப்பொழுது

"மெதுவாதான் சாப்பிட்டேன்டி, என்னமோ பஞ்சத்தில் அடிபட்ட மாதிரி ஏன் இப்படி அள்ளி அள்ளி விழுங்கற? '' அவள் தலையை தட்டிக் கொண்டே மறு கரம் நீட்டி தண்ணீர் கொடுத்ததே சாட்சாத் நம்ம ஹீரோ சார்தாங்க.

அவனை பார்த்ததும் பிரியாணி கவளம் தானாகவே தட்டில் விழுந்தது. திருட்டு பிள்ளை போல் மயூரா விழிக்க ருத்ராவிற்கு சிரிப்பு வந்துவிட்டது.

அவள் அருகே இன்னொரு நாற்காலியை இழுத்து போட்டு அமர்ந்தவன் அவளுக்கு எஞ்சியிருந்த பிரியாணியை ஊட்டத் தொடங்கினான். "சாரிடி.. உண்மை தெரியாம உன்னை திட்டிட்டேன். மாமாவை மன்னிச்சுடு. நீ பசிதாங்க மாட்டேனு தெரியும். அதுவும் பிரியாணி முன்னுக்கு உன் கோவம் தவிடு பொடி ஆயிடும். அதான் உனக்காக இங்கவே வைட் பண்ணேன். இப்படிதான் இருட்டில் உக்காந்து சாப்பிடறதா? அவன் குரலில் கடுமை இல்லை. மயூரா குறும்பாய் கண் சிமிட்டினாள்.

"நீதான் எப்போ பார்த்தாலும் என்னை திட்டற, மண்டையில் டொக்கு டொக்குனு கொட்டு வைக்கிற. அப்புறம் எனக்கு கோவம் வராதா? மதுகிட்ட மட்டும் நல்ல நடந்துக்குவே. என்னை மட்டும் எப்போ பார்த்தாலும் எல்லோரும் தப்பு சொல்லறீங்க '' மயூரா வராத கண்ணீரை சுண்டி விட்டு பேசினாள்.

அதற்கு அவள் தலையை அவன் பரிவாய் தடவினான்.

"அவள் சின்ன பொண்ணுடி, நீ அவளுக்கு அக்கா, நீதானே சமத்தா இருக்கணும். இங்க என்னான்னா அவள் உனக்கு அக்கா மாதிரி பொறுப்பா இருக்கா''

"உனக்கு தான் வாலு நீண்டுகிட்டே போகுது. உன் மனசை தொட்டு சொல்லு மாசா மாசம் உன் மென்சஸ் டைம் யாரு உன் கூட இருந்து உனக்கு கம்பெனி குடுக்கறது. கால் வலி வயிறு வலினு என்னை எங்கயாச்சும் நகர விட்டிருக்கியா? அவள் அப்படி எல்லாம் பண்றாளா? அப்புறம் எதுக்குடி அவள்கிட்ட பொறாமை படற? '' ருத்ரா சொல்ல மயூரா அழகு காட்டினாள்.

"வெவ்வே வேவ்வே ஐம் ஸ்ட்ராங் போடி மாமோய், என்ன அந்த 3 டேஸ் நீ கூட இருந்தாதான் சமாளிக்க முடியுது. நான் பெரிய மனுஷி ஆனா நாள்ள இருந்து நீதானே கூடவே இருந்தே. மத்தபடி வேற எதுக்காச்சும் நான் உன்னை தொந்தரவு பண்றேனா? இல்லைதானே. இதையாச்சும் எனக்காக பண்ணு மாமா. உனக்கு கல்யாணம் ஆயிட்டா இதெல்லாம் நான் எதிர்ப்பார்க்க முடியாது '' மயூரா சொல்ல அவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட்டது.

"லூசு மாதிரி பேசாத,அதெல்லாம் நடக்கறப்ப பார்த்துக்கலாம்.இப்ப ஒழுங்கா சாப்பிடு '' உணவை முழுவதும் ஊட்டி முடித்தான்.மயூரா கோவம் மறந்து சிரித்தாள்.

"சோ ஸ்வீட் மாமா, என்ன ருசியா சமைக்கிறே. இந்த பிரியாணிக்கே உனக்கு முழு சொத்தும் எழுதி வைக்கலாம் போ. அவ்வளவு ருசி''.மயூரா அவன் கன்னத்தை செல்லமாய் கிள்ளினாள்.

"அவ்வ் வலிக்குதுடி பாவி.சீக்கிரம் போய் படு. நாளைக்கு இன்பவனம் போகணும்.லேட்டா எழுந்தே மவள அவ்வளவு தான்.. உனக்கு கொட்டுதான் விழும். ஓடிப்போ'' மயூரா அவனுக்கு அழகு காட்டி விட்டு ஓடினாள். அவள் சென்ற பின், இரகசியமாய் அவள் கிள்ளிய கன்னத்தை தடவி தனக்குள்ளே ருத்ரன் சிரித்துக்கொண்டான்.

மயூரா பெரிய மனுஷியான நாள் அவனுக்கு நன்றாக நினைவிருக்கிறது. மருண்டு விழித்தவளை தனியாக ஓலை குடிசையிட்டு உக்கார வைக்க, சண்டை போட ஆள் இல்லாமல் அவள் பக்கத்திலே போய் உட்கார்ந்து கொண்டான். அவளுக்கும் அவன் அருகில் இருப்பது ஆறுதல் போல் இருந்து.வீட்டில் இருந்தவர்களும் ஒன்றும் சொல்லவில்லை.

இதுவே பின்னாளிலும் தொடர்ந்தது. அந்த மூன்று நாட்கள் அவளை கவனித்து கொள்வதே ருத்ரன்தான்.எதையும் தாங்குபவள் இந்த மூன்று நாட்கள் மட்டும் வலியால் துவண்டு விடுவாள்.

ருத்ரனை தவிர யாரும் அவள் அருகில் அண்டவே முடியாது. அவனும் அவளுடனே இருப்பான். மியூசிக் கேட்க வைப்பான். மடி மீது படுக்க வைத்து தலை பிடித்து விடுவான். கால் அமுக்கி விடுவான்.

ஏனோ அவளின் இந்த வலியின் வேதனை மட்டும் அவனால் தாங்கிக் கொள்ளவே இயலாது.மத்த நாட்களில் அவள் மண்டை யை உடைப்பதே அவன்தானே. அவளுக்கும் அவன் அருகாமை தொடுதல் மட்டுமே வலி நிவாரணிப் போல் செயல்படும். அது எதனால் என்பது அவர்கள் இருவருக்கும் தெரியாது. ஆனால் வீட்டில் உள்ளவர்களுக்குத் நன்றாக தெரியும். புரியும்..

அது எதனால் என்பது போக போக நமக்கும் புரியும். தொடரும்

This site uses cookies to help personalise content, tailor your experience and to keep you logged in if you register.
By continuing to use this site, you are consenting to our use of cookies.