யாசிக்கிறேன் உன் காதலை - 7

Ramya Anamika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member

யாசிக்கிறேன் உன் காதலை -7

"டாலு!! நீ என்ன இந்த டைம்ல???", என்றான் துரு அதிர்ச்சியும் ஆச்சரியமுமாக.

"ரூம் குள்ள விட மாட்டியா?? இங்கயே நிக்க வச்சு பேசுவியா?? ஒருவேள ரூம்குள்ள ஏதாச்சும் பதுக்கி வைச்சு சாப்பிடுறியா?? அதனால தான் விடாம பேசிட்டு இருக்க போல", என்றாள் கிண்டலாக. துரு ஓர் கையை மார்பில் வைத்து மறுகையால் உள்ளே தலைகுனிந்து காட்டினான். "ம்ம்... அது", என்று உள்ளே நுழைந்தாள்.

"நா கேட்ட இரண்டு வார்த்தைக்கு பத்து வார்த்த பேசுற, இதுல நா பேசிட்டே இருக்கேன்னு வேற சொல்லுற", என்று வலிக்காமல் அவள் தலையில் கொட்டினான்.

"ம்ம்.. உன் ரூம் குட், என்ன? வொர்க் பண்ணிட்டு இருக்கியா??", என்றாள் பெட்டின் மேல் திறந்திருந்த லேப்டாப்பை பார்த்து.

"ம்ம்.... ஆமா நீ என்ன இன்னும் தூங்காம இருக்க?? உக்காரு", என்று சோபாவை காட்டினான். அதில் அவள் உட்கார்ந்தாள். அவள் பக்கத்தில் ஒரு சேரை இழுத்துப் போட்டு உட்கார்ந்தான்.

"ஒன்னும் இல்ல துரு, என் மெயில் செக் பண்ணனும், போன்ல நெட் கனெக்டாக மாட்டேங்குது, சரி மாடிக்கு போகலாம்னு வெளிய வந்தேன், உன் ரூம்ல லைட் எரிஞ்சது, அதான் இங்கயே பாக்கலாம்னு வந்தேன், நா வந்து உன்ன டிஸ்டர்ப் பண்ணிட்டேனா??".

"நோ.. நோ..", என்று லேப்டாப்பை எடுத்துக் கொடுத்தான். அதை டேபிள் மேல் வைத்து தனது மெயில்களை ஓபன் செய்தாள்.

"துரு!! மார்னிங் ஒர்க் பண்ணலாம்ல ஏன் நைட் பண்ற??", என்றாள் லேப்டாப்பை பார்த்தபடி.

"லேப்டாப்பை மூடி வைக்கப் போறப்ப தான் நீ வந்த".

"அப்பனா நா சில டீடைல் பாத்துக்கிட்டா??", என்றாள் அவனைப் பார்த்து.

"ஷ்யூர்.. என்ன பாக்க போற??".

"நா டீ.ஜி.ஓ (மகப்பேறு மருத்துவர்) படிக்கிறதுக்கு யூனிவர்சிட்டில அப்ளே பண்ணியிருக்கேன்", என்றாள் சிரிப்புடன்.

"சூப்பர்!!".

"அபிக்கு நா தான் டெலிவரி பார்ப்பேன்னு சொல்லி இருக்கேன், அதுக்காகத்தான் சீக்கிரம் படிச்சு முடிக்கணும், அத பத்தி தான் பாக்குறேன்", என்றாள் சிரிப்புடன்.

"நீயே ஒரு குழந்த, நீ டெலிவரி பாக்க போறியா??", என்றான் கிண்டலாக.

"ஆமா.. ஆமா..", என்றாள் வேகமாக.

"ஆமா! அபி எங்க???".

"அவள மீ முன்னாடியே தூங்க வச்சுட்டாங்க".

"அத்த தான் உங்க ரெண்டு பேரையும் தூங்க வைப்பாங்களா??".

"நோ.. நோ..!! எப்பயாச்சும் தான் இப்படி, இன்னைக்கு அபி அழுதால்ல, அதுக்காகத்தான் மீ அவ கூடவே தூங்க போயிட்டாங்க".

"அபி ரொம்ப சென்சிட்டிவா?? நீதான் ரொம்ப சென்சிட்டிவ்னு நினைச்சேன்".

"அவ சரியான அழு ஃபேஸ்", என்று சிரித்தாள்.

"என்னது அழு ஃபேஸா ஓ... அழு மூஞ்சா.. ஹா ஹா.. நீங்க மேடம்??", என்றான் கிண்டலாக.

"ஆமா! ஆமா!! அழு மூஞ்சு! நா அவள விட அழு மூஞ்சு, எல்லார் முன்னாடியும் அழ மாட்டேன், இன்னைக்கு கூட மாடிக்கு அழுகத் தான் போனேன், நீ வந்தனால அது கண்ட்ரோல் ஆயிருச்சு".

"அப்ப ரூம் தரலைன்னு ஏன் அழுத??", என்றான் யோசனையுடன்.

"அன்னைக்கு நா என் கண்ட்ரோல்ல இல்ல, எப்போதுமே என் கண்ட்ரோல்ல இருந்தா அழுக மாட்டேன், கண்ட்ரோல்ல இல்லனா அந்த விஷயம் என்னைய ரொம்பவே பாதிச்சுருக்குனு அர்த்தம்", என்று அவனைப் பார்த்து லேசாகச் சிரித்துவிட்டு லேப்டாப்பை பார்த்தாள்.

"டாலு!! நீயும் அபியும் ரொம்ப க்ளோஸ்ல", என்று சிரிப்புடன் பேச்சை மாற்றினான்.

"ஆமா! ரொம்ப ரொம்ப!! நாங்க ரெண்டு பேரும் பெஸ்ட் ஃப்ரெண்ட்ஸ், அபி,நா ,ஆதி, தியா நாலு பேருமே சேர்ந்தா அந்த இடமே வேற மாதிரி மாறிடும், டான்ஸ் சாங் கேம்ஸ்னு ஒரு இடத்துல இருக்க மாட்டோம்", என்றாள் சிரிப்புடன் அவன் பக்கம் திரும்பி உட்கார்ந்து.

"ரவீன் அங்கு வந்தப்ப எப்படி இருந்தது? புதுசா ஒருத்தன் வந்து ரிலேஷன்னு சொல்றப்ப".

"ரொம்ப!! ஷாக் ஆயிட்டோம், ரவீன் வந்ததும் டாடி மம்மி கிட்ட கேட்டோம், வீட்டுல ஏத்துக்கலன்னு மட்டும்தான் அப்ப சொன்னாங்க, எனக்கும் அபிக்கும் உங்க எல்லார் மேலயும் ரொம்ப கோவம்".

"ஏன்?? ஏன்?? நாங்க என்ன பண்ணுனோம்", என்றான் வேகமாக.

"அட்லீஸ்ட் நீங்களாச்சும் பேசியிருக்கலாமேனு தான் கோபம், இங்கே வந்து பார்த்ததும் தான் தெரிஞ்சது, தாத்தா சரியான கஞ்சி போட்ட சட்ட மாதிரி விரப்பா இருக்குறாரு".

"ஏய்!! கஞ்சி போட்ட சட்டையா?? இந்த வேர்டுல உனக்கு எப்படி தெரியும்??", என்றான் சிரிப்புடன் ஆச்சரியமாக.

"வேலைக்காரப் பாட்டி அவங்க புருஷன்னு யாரோ அவங்கள சொல்லி திட்டிட்டு இருந்தாங்க", என்றாள் சிரிப்புடன்.

"புருஷனா?? ஓ.. டாலு! ஹஸ்பெண்ட தான் புருஷன்னு சொல்லுவாங்க", என்றான் சிரிப்புடன்.

"ஓ.. காட்!! ஹஸ்பண்ட இப்படியா திட்டுவாங்க?! ஃபன்னி பாட்டி", என்றாள் சிரிப்புடன்.

"ஆமா! என்ன இது போய் பாத்துட்டு இருக்க??", என்றான் லேப்டாபை பார்த்து.

"இது cow dung (மாட்டு சாணம்) இதனால என்ன யூஸ்னு பார்த்தேன், இத நம்ம கையால எடுக்குறப்ப இம்முனுட்டி(immunity) பவர் கிடக்கிதாம், அதான் பார்த்தேன்", என்றாள் சிரிப்புடன்(கண்மணிஸ்... இது உண்மையானது சாணம்ல நிறைய சத்து இருக்கு).

"ரொம்ப நல்ல விஷயம் தான்", என்றான் சிரிப்புடன்.

"ஆமா! உன் ஃபுல் நேம் துரு மட்டும் தானா??".

"என் ஃபுல் நேம் தெரியாதா?? தேவ துருவன்! இது கூட தெரியாம இருக்க!?", என்றான் அவள் தலைமுடியை கலைத்து.

"ஹேர்ஸ்டைல கலைக்காத மேன்! நீ என்னைய டாலுன்னு கூப்பிடுற சோ.. நா உன்னைய??", என்றாள் யோசனையுடன்.

"நீ என்னைய??", என்றான் புருவம் உயர்த்தி.

"நா உன்ன தேவா.. தேவ்.. இப்படி கூப்பிடுறேன், உனக்கு பிடிச்சிருக்கா இந்த நேம்?".

"சூப்பர்!! என்னை யாரும் அப்படி கூப்பிட்டது இல்ல, கூப்பிடு", என்றான் சிரித்துக்கொண்டே.

"சரி..! அங்கிள் என்ன பண்றாங்க???".

"எந்த அங்கிள்??", என்றான் குழப்பமாக.

"அதா மேன்! உன் டாடி".

"ஓ.. அப்பாவா அப்பாவும் சித்தப்பாவும் சேர்ந்து லெதர் ஃபேக்டரி வச்சிருக்காங்க".

"நீ டெல்லி தானே, தியா கூட டெல்லி தான், அவ தாத்தா பாட்டி இருந்தப்ப டெல்லிக்கு அடிக்கடி வருவாங்க, அதுக்கப்புறம் அவங்க இறந்துட்டாங்க, வரதே இல்ல, ஆமா உன் தாத்தா பாட்டி எங்க இருக்காங்க??".

"அவங்க ரெண்டு பேரும் நா ஸ்கூல் படிக்கிறப்பவே இறந்துட்டாங்க".

"தியாவும் ஆதியும் நெக்ஸ்ட் வீக் வருவாங்கன்னு நினைக்கிறேன்".

"சூப்பர்! வரட்டும்.. வரட்டும்.. ஆதியும் அபியும் சேம் கம்பெனியா??".

"தியாவும் அங்கதான் ஓர்க் பண்றா, நீ ஆர்க்கிடெக்சர், ரிஷி, விரு, சந்தோஷ் என்ன படிச்சிருக்காங்க??".

"அவங்க மூணு பேரும் சிவில் இன்ஜினியர், நா டிசைன் போடுவேன், அவங்க எக்ஸிக்யூடிவ் பண்ணுவாங்க, நாங்க நாலு பேரும் சின்ன வயசுல இருந்தே கிளாஸ் ஃப்ரெண்ட்ஸ் தான், அவங்க மூணுபேரும் சேம் காலேஜ், மூணுபேரும் சேர்ந்து நிறைய ராகிங்லாம் பண்ணிருக்காங்க, இதனால வீட்ல கூட ஒன் டைம் மாட்டி மூணு பேருக்கும் அப்பா கிட்ட செம்ம அடி", என்றான் சிரித்துக்கொண்டே.

"சூப்பரு!! நீ இப்படில்லா பண்ணுனது இல்லையா??", என்றாள் ஆர்வமாக.

"நா நிறைய பண்ணி இருக்கேன், வீட்ல மாட்டாம பண்ணுவேன், ஒன் டைம் அப்பாவ அழச்சுட்டு வந்தா தான் காலேஜிக்கு வரணும்னு சொல்லி அனுப்பிட்டாங்க".

"அப்புறம் அங்கிள்ள கூட்டிட்டு போனியா??", என்றாள் ஆர்வமாக.

"ஏன் அடி வாங்கவா?? அதுலா இல்ல, டூப் அப்பாவ ரெடி பண்ணி அழைச்சிட்டு போயிட்டேன், பிரின்ஸ்பால என் பையன் ரொம்ப நல்லவன், நாலும் தெரிஞ்சவன் அவன் இப்படில்லா பண்ண மாட்டான் ஸ்டாப்ஸ் தான் சரியில்லன்னு திட்டுற மாதிரி டயலாக் கொடுத்துட்டேன், அவரும் பிரின்ஸ்பால வச்சு செஞ்சிட்டாரு, மனுஷன் அன்னையலிருந்து என்ன பண்ணுனாலும் அப்பாவ கூட்டிட்டு வான்னு மட்டும் சொல்ல மாட்டாரு", என்றான் சிரித்துக்கொண்டே.

"அட! ஃபிராடு!! நீ பண்ணுன மாதிரி இவங்க மூணு பேரையும் பண்ண சொல்ல வேண்டியது தானே!".

"நா அப்ப கனடால இருந்தேன், இவங்க கிட்ட இந்த ஐடியாவ சொன்னேன், ஆள செட் பண்ணிட்டு கூட்டிட்டு போய்ட்டானுங்க, டயலாக்ல பிரின்ஸ்பால வச்சு பேச சொன்னா அவரோட பொண்ண பத்தி பேசிட்டானுங்க, அவரு செம்ம கோவம் வந்து ஒரு மாசம் சஸ்பெண்ட் பண்ணி வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, லெட்டர் எல்லாம் வீட்டுக்கு அனுப்பிட்டாங்க, அப்பா கிட்ட லெட்டர் போயிருச்சு, அதுக்கு அப்புறம் என்ன வீட்டுலயே! நல்லா ரவுண்ட் கட்டி அடி வெழுத்துட்டாரு", என்றான் சிரித்துக்கொண்டே.

"அப்ப மூணு பேரோட ரியாக்சன் எப்படி இருந்திருக்கனும்னு நினைச்சாலே செம்ம சிரிப்பு வருது", என்றாள் சிரித்துக்கொண்டே.

"இப்படி பல சேட்ட பண்ணிருக்கோம், நீங்க ரெண்டு பேரும் இப்படி எல்லாம் எதுவும் பண்ணுனது இல்லையா??".

"இல்ல! டாடி நாங்க என்ன பண்ணுனாலும் சப்போர்ட் பண்ணுவாங்க, மீ திட்டுவாங்க, டாடியே மீய சமாளிச்சுடுவாங்க", என்றாள் சிரிப்புடன்.

"சரிடா! நீ போய் தூங்கு டைம் ஒன்னாச்சு".

"நீ தூங்கு, நா ஒரு மெயிலுக்காக வெயிட்டிங், அத பாத்துட்டு போறேன்", என்றாள்.

"சரி! நீ பாரு, நா புக் படிக்கிறேன்", என்று எழுந்து பெட்டில் உட்கார்ந்து நாவலை படிக்க ஆரம்பித்தான்.

பேபிடால் படிப்பு சம்பந்தமாக சிலவற்றை பார்த்துக்கொண்டு இருந்தாள். துரு சிறிது நேரம் கழித்து எதர்ச்சியாக திரும்பிப் பார்த்தான். பேபிடால் சோபாவில் உட்கார்ந்த நிலையிலே தூங்கிக் கொண்டிருந்தாள். "இதுக்குத்தான் தூங்கச் சொன்னேன், கேட்டாளா?!", என்று சிரிப்புடன் ஒரு தலையணையை சோபாவில் வைத்து அவளை நேராகப் படுக்க வைத்துவிட்டு போர்வையால் போர்த்தி விட்டான். முகச் சுளிப்புடன் போர்வையைக் கீழே தள்ளிவிட்டுத் தூங்கினாள். அவள் புருவத்தை வருடினான் அதில் அவள் முகம் நிர்மலமாக மாறியது. சிரிப்புடன் லேப்டாப்பை மூடி வைத்து கதவை தாழ்ப்பாள் போடாமல் சாத்திவிட்டு லைட்டை அணைத்து இரவு விளக்குப் போட்டு படுத்தான்.

"மீ!! ஏ.சி இன்க்ரீஸ் பண்ணு பிளீஸ்!", என்றாள் தூக்கக் கலக்கத்தில். துரு சிரிப்புடன் அதனை அதிகமாக வைத்து விட்டுத் தூங்க ஆரம்பித்தான்.

மறுநாள் காலையில் பார்வதி துருவின் ரூமை தட்டப் போகும் போது கதவு திறந்தது. "துரு! எழுதுட்டியா?? இன்னுமா தூங்குற? முன்னாடியே எழுந்திருப்பியே!!", என்று பேசிக் கொண்டே உள்ளே வந்தார்.

"இப்பதான் எழுந்தேன், நைட் கொஞ்சம் ஒர்க் மா", என்று பாத்ரூமில் இருந்து வெளியே வந்தான்.

"இந்தா காஃபி", என்று தந்துவிட்டு எதர்ச்சியாக சோபாவைப் பார்த்தார்.

"என்ன பேபிடால் இங்க தூங்குறா??", என்றார் ஆச்சரியமாக.

"நைட்டு மெயில் செக் பண்ண வந்தா மா.. அப்புறம் பேசிட்டு இருந்தோம், அப்படியே தூங்கிட்டா", என்றான் காஃபியைக் குடித்துக்கொண்டே.

"குழந்த மாதிரி இருக்கா, இவல எதுக்குத்தான் உன் தாத்தா இப்படி பண்றாரோ!!? என்ன பாரபட்சம் வேண்டிய கிடக்குது?", என்றார் லேசான எரிச்சலுடனே.

"அவரு அப்படித்தான் மா, என்கிட்ட இருக்குற மாதிரியா விரு ரிஷி கிட்ட இருக்காரு, நா முதல்ல பிறந்தனால இந்த கவனிப்பு, அபி முதல்ல பிறந்துட்டா, இதுல பாட்டியோட பேரு வேற, சொல்லவா வேணும் உங்க அப்பாக்கு", என்று கிண்டலாக முடித்தான்.

"நேத்து நைட்டு அபிக்கு ஊட்டி விட்டாரே, இவ மட்டும் என்ன ஒழுங்காவா சாப்பிட்டா?? இவளையும் உட்கார வச்சு ரெண்டு வாய் ஊட்டிவிடுறதுல்ல", என்றார் எரிச்சலுடன்.

"சரி! விடு! பாரு காலையிலே எதுக்கு டென்ஷன்??", என்றான் பார்வதியின் தோளில் கைப்போட்டு.

"இருந்தாலும் மனசு ஆர மாட்டிக்கிது டா, நீ இப்படில்லாம் இருக்கக் கூடாது, உன் பொண்டாட்டிய மட்டும் பார்க்கக் கூடாது சொல்லிட்டேன் ஆமா!!", என்றார் கட்டளையாக.

"ராஜமாதாவின் கட்டளையே! என் சாசனம்!", என்றான் ஓர் கையை இடது மார்பில் வைத்து தலை குனிந்து கிண்டலாக.

"போடா! அரட்ட!", என்று செல்லமாகக் கன்னத்தை கிள்ளினார்.

"அம்மா!! இந்த டாலுவ பாத்தியா?? நாம இவ்ளோ!! பேசுறோம், கும்பகர்ணன் பேத்தி மாதிரி தூங்குறத", என்றான் சிரிப்புடன்.

"விடு டா!! அவ தூங்கட்டும், அவ எழுந்ததும் சொல்லு! காஃபி கொண்டு வரேன்", என்று சென்றார்.

துரு அவளைத் திரும்பிப் பார்த்தான். அவள் குழந்தை போல் கையைத் தலையில் வைத்து தூங்கிக் கொண்டே இருந்தாள். "குட்டி!! ஏஞ்சல் தான் நீ", என்று சிரிப்புடன் குளித்துவிட்டு வந்தான். அப்பொழுதும் அவள் தூங்குவதை பார்த்ததும் எழுப்பாமல் கீழே வந்தான்.

"மாம்!! பேபிடால காணோம்", என்று வீட்டையே இரண்டாக்கிக் கொண்டிருந்தாள் அபி.

"என்ன சொல்ற??", என்றார் அகிலா லேசான பதற்றத்துடன்.

"ஆமா மாம்!! அவ காணோம், என் ரூம் அவ ரூம் உங்க ரூம்ல கூட தேடிட்டேன், அவ வேற எங்கேயும் போகமாட்டா", என்றாள் பதறியபடி.

"அபி..!!", என்று பார்வதியும் துருவும் கூப்பிடும் பொழுது தாத்தா வந்தார்.

"அபிமா!! என்னாச்சு??", என்றார் நேசமணி.

"தாத்தா!! பேபிடால காணோம்", என்றாள் பதறியபடி.

"அபி..!!" என்று துரு சொல்ல வரும்போது,

"துரு!! இங்க வா!", என்று பார்வதி தடுத்து பக்கத்தில் அழைத்தார்.

"என்னம்மா! எல்லா ரூமையும் பாத்தியா??", என்றார் தாத்தா.

"இல்ல தாத்தா! அவ வேற எங்கேயும் போகமாட்டா".

"இரு! ஒரு நிமிஷம்", என்று ஹாலில் இருந்த மரக்கதவு ரூமை பார்த்தார். அதன் முன் பூட்டு போட்டு இருந்தது. " சரி! இங்கதான் இருப்பா, போய் தேடுங்க எல்லாரும்", என்றார் கட்டளையாக.

"அம்மா!! அவ என் ரூம்ல தான் இருக்கா", என்றான் துரு மெதுவாக.

"அண்ணி!! பேபிடால் துரு ரூம்ல தூங்கிட்டு இருக்கா", என்றார் பார்வதி அகிலாவின் காதில் மெதுவாக.

அவர் முழித்துக்கொண்டே, "என்ன அண்ணி இப்படி சொல்லுறீங்க?? இன்னும் கொஞ்ச நேரத்துல மத்த எல்லாரும் வந்துருவாங்க அண்ணி, துரு ரூம்ல அவள பாத்தா என்ன ஆகுமோ!!?", என்றார் பயத்துடன்.

"பயப்படாதீங்க அண்ணி!! துரு இந்த பக்கம் மாடி வழியா உன் ரூமுக்குப் போயி நேகாவ அவ ரூமுக்குப் போக சொல்லு, அதுவரைக்கும் தாத்தா மேல வராம பாத்துக்குறேன்", என்றார் பார்வதி.

"ஏன் மா??", என்று குழப்பமாக.

"நீ போ துரு, அப்புறமா சொல்றேன், அவள உடனே அவ ரூமுக்கு அனுப்பு", என்றார் அகிலா கெஞ்சலாக.

"சரி!", என்று வேகமாக ரூமிற்குச் சென்றான். அசந்து தூங்கும் பேபிடாலை எழுப்ப மனமில்லாமல் அவளை அப்படியே தூக்கிக்கொண்டு அவள் அறைக்குச் சென்றான்.

நேகா தூக்கம் கலைந்து முழித்துப் பார்த்து,"குட் மார்னிங் தேவா!!", என்றாள் சிரிப்புடன்.

"அடியே!! எழுந்துட்டியா?? உன்னால இங்க ஒரு கலவரமே நடக்குது", என்று கீழே இறக்கி விட்டான்.

"ஆமா!! என்னைய எங்கிருந்து தூக்கிட்டு வர??", என்றாள் கொட்டாவி விட்டபடி.

"என் ரூம்ல இருந்து தான், சரி.. சரி.. நா கீழ போறேன், நீ சீக்கிரமா கீழ வா", என்று வேகமாகக் கீழே சென்றான்.

வீட்டில் ஒவ்வொரு அறையாய்த் தேடினர். பேபிடால் அறையைத் தவிர. பிரஸ்ஸாகிவிட்டு கீழே தாழ்வாரத்தில் இருந்த சோஃபாவில் உக்கார்ந்து, "மீ!! எனக்கு காபி வேணும்", என்றாள் சத்தமாக.

அவள் குரல் கேட்டதும் தாத்தா, பாட்டி மற்ற சிறுவர்கள் வேகமாக வந்தனர். அத்தையும் அம்மாக்களும் கிச்சன் வெளியே நின்று பார்த்தனர். "என்ன எல்லாரும் என்னை இப்படி பார்க்கிறீங்க?? ஏதாச்சும் ப்ராப்ளமா??", என்று எழுந்து தாழ்வாரத்திற்கு நடுவே வந்தாள்.

சிறியவர்கள் வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டனர். "எங்க போன??", என்றார் நேசமணி.

"உனக்கு ஏதாச்சும் வருத்தமா டா?? அதனால தான் வீட்ட விட்டுப் போக முடிவு பண்ணிட்டியா??", என்றார் அபிராமி சோகமாக.

"நா எங்க போனேன்??", என்றாள் குழப்பமாக.

"உனக்கு எது எதுல விளையாடானும்னு தெரியாது? இவ்ளோ நேரம் எங்க இருந்த??", என்றார் முறைப்புடன்.

"என் ரூம்ல தான்", என்றாள் குழப்பமாக.

"அபிமா!! நீதானே சொன்ன இவள காணோம்னு", என்றார் அபியிடம்.

'எனக்கு எப்படி தெரியும் இவ துரு ரூம்ல இருந்தானு', என்று மனதிலே புலம்பிக்கொண்டு, "ஆமா தாத்தா!! அது நா பார்த்தேன் இல்ல, இப்ப இருக்கா", என்று உளறி கொட்டினாள்.

"நீ காலையில உன் அறையில இல்லையே! எங்க போன??", என்றார் நேகாவிடம் திரும்பி.

"ஓ அதுவா!! நா தே...", என்று ஆரம்பிக்கும் போதே துருவா வேகமாக வந்து அவள் வாயைப் பொத்தி,

"தாத்தா!! இவ இன்னும் பல்லு கூட விளக்காம இருக்கா, நாத்தம் அடிக்குது பாருங்க, உங்களுக்குத் தெரியலையா?? முதல்ல போய் பல்லு விளக்கி, குளிச்சிட்டு வரச் சொல்லுங்க, நாத்தம் தாங்க முடியல, உங்கள வேற வெளியில யாரோ கூப்பிடுறாங்க பாருங்க", என்றான் அவசரமாக.

"ஆமா தாத்தா!! கூப்பிடுறாங்க", என்றான் சந்தோஷ் வேகமாக.

"சரி!! முதல்ல போயி பல்ல விளக்கு, என்ன புள்ள?? என்ன பழக்கம் பழக்கி வச்சிருக்காங்க??", என்று திட்டிவிட்டுச் சென்றார்.

அவர் போனதும் பெருமூச்சுடன் பேபிடால் வாயில் இருந்த கையை விலக்கினான். பெண்கள் அனைவரும் பெருமூச்சுடன் பக்கத்தில் வந்தனர்.

"என்ன பண்ற நீ? எதுக்கு என் வாய மூடுன??", என்றாள் கோபமாக.

"சாரிடா!! தாத்தா கிட்ட நீ சொல்லக் கூடாதுன்னு தான் அப்படி பண்ணுனேன்", என்றான் முழித்தபடி.

"ஏன்? அவர் கிட்ட சொன்னா என்ன??", என்றாள் குழப்பமாக.

"இது வில்லேஜ் டா, இங்க எல்லாம் இப்படித்தான், ஒரே ரூம்ல ஒன்னா தூங்குனேன்னு சொன்னா, தப்பா நினைப்பாங்க", என்றார் பார்வதி.

"என்னமோ போங்கத்த, மாம்!! காஃபி", என்றாள் சோர்வுடன்.

"சாரி பேபிடால்!! என்னால தான், உன் ரூம்ல பார்த்தேன், மத்த ரூம்ல நா பார்த்து இருக்கனும், பார்க்காம விட்டுட்டேன்", என்றாள் அபி வருத்தமாக.

"அப்ப சின்ன பாப்பா எங்க தூங்குனா???", என்றார் அபிராமி.

"என் ரூம்ல தான் பாட்டி", என்றான் துருவ்.

"நீ எதுக்கு அங்க தூங்குன பாப்பா?? இதெல்லாம் என்ன பழக்கம்?? பையன் கூட போய் படுத்துத் தூங்குறது", என்றார் கண்டிப்பான குரலில்.

"பாட்டி!! நா ஒரு இம்பார்ட்டன்ட் மெயில் செக் பண்றதுக்காக அங்க போனேன், அப்படியே சோபால தூங்கிட்டேன், இதுல ஒன்னும் தப்பு இருக்க மாதிரி எனக்குத் தெரியல, அம்மா!! காஃபி", என்றாள் எரிச்சலுடன்.

"பாட்டி!! என்ன நீங்க இப்படி எல்லாம் கேள்வி கேட்குறீங்க?? அவ குழந்த மாதிரி, அம்மா!! இதெல்லாம் உன்னால வந்தது, அத்த கிட்ட மட்டும் சொன்னியா அதோடு இருந்திருக்கணும், அதைவிட்டுட்டு இப்படி எல்லாம் கேள்வி கேட்க வெச்சுட்டியே!!!", என்றான் துரு கோவமாக.

"இல்ல! துருவ்!! அது.." என்றார் தயங்கியபடி.

"அம்மா!! துரு எங்க எல்லார்கிட்டயும் இந்த விஷயத்தச் சொல்லிட்டான், எங்களுக்குத் தப்பா தெரியல, உங்களுக்கும் தெரியாது, நீங்க சிட்டில இருக்கிங்க, பாட்டி இங்க இருக்காங்க, அவங்களால எங்க ரிலேஷன்ஷிப்பப் புரிஞ்சுக்க முடியாது", என்றான் விரு.

"துருவா!! இது கிராமம் பா! இப்படில்லா இருந்தா தப்பா தான் நினைப்பாங்க, அதனால தான் நானும் அப்படி பேசிட்டேன்", என்றார் பாட்டி சமாதானமாக.

"கிராமம் இல்லைன்னு சொல்லலியே பாட்டி, இவ என் ரூம்ல தான் இருந்தானு நா சொன்னதால தானே உங்களுக்கு தெரிஞ்சது, இல்லன்னா தெரிந்திருக்குமா பாட்டி?? அவ குழந்த! அவகிட்ட இப்படி இனிமே பேசாதீங்க", என்று அழுத்தமாக.

"அம்மா!! காஃபி", என்றாள் பேபிடால் கோவமாக.

"எவ்ளோ!! பெரிய பிரச்சன போகுது, உனக்கு காஃபி தான் முக்கியமா??", என்றான் நந்து கிண்டலாக.

"யூ கோ மேன்! மீ!! காஃபி", என்றாள் மீண்டும்.

"இந்தா டா", என்று கொண்டு வந்து கொடுத்தார் வனிதா (கடைசி சித்தி).

"தேங்க்யூ!! வனிமா", என்று கன்னத்தில் முத்தமிட்டு வாங்கிக் குடிக்க ஆரம்பித்தாள்.

"யாரோ என்னமோ பண்ணுங்க?? எனக்குக் காஃபி தான் முக்கியம், அதே தானே பேபிடால்?!", என்றாள் மித்ரா கிண்டலாக.

"ஆமா.. ஆமா..!!", என்றாள் குடித்துக் கொண்டே.

"சரி... சரி..! மெயில் பார்த்தியா?? இல்லையா??", என்றாள் அபி.

"அச்சோ!! மறந்துட்டேன் என் போன் தேவ் ரூம்லயே இருக்குன்னு நினைக்கிறேன், அபி!! போன் குடு".

"என் போன் மேல இருக்கு", என்றாள்.

"சரி!! யாராச்சும் போன் குடுங்க", என்றாள் வேகமாக. சந்தோஷ் கொடுத்தான். அதனை வாங்கி மெயிலை ஓப்பன் பண்ணிப் பார்த்தாள்."வாவ்!! தேங்க்யூ!! காட்!", என்று வானத்தைப் பார்த்து கும்பிட்டாள்.

"என்ன மெயில்??", என்றான் ரிஷி.

"அதுவா..", என்று ஆரம்பிக்கும் போதே,

"அபிராமி..! வேதா..! அரசி..!", என்று மூன்று தாத்தாக்களும் உள்ளே நுழைந்தனர். அவர்களுடன் அப்பாக்களும் வந்தனர்.

"எல்லாரும் இங்கதான் இருக்கீங்களா?? நல்லதா போச்சு ஒரு முக்கியமான விஷயம் சொல்லணும்", என்றார் நேசமணி.

முக்கியமான விஷயம் என்ன??? மெயிலில் அப்படி என்ன வந்தது??? பேபிடால் துருவின் அறையில் தங்கியது நேசமணிக்குத் தெரிய வந்தால் என்னாகும்??? பார்வதி சொன்ன பொண்டாட்டி யார்??? என்பதை அடுத்த அத்தியாயத்தில் பார்க்கலாம்........................................

யாசிப்பு தொடரும்.................................................

Author: Ramya Anamika
Article Title: யாசிக்கிறேன் உன் காதலை - 7
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN