👀4👀

meerajo

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
உன் மௌனத்தை, மொழிபெயர்க்கத் தெரியாமல்
மௌனமாகின்றேன்
...

🌹🌹🌹🌹🌹🌹

மேகன் விட்ட அடியில், ஓடி வந்தவன் மூர்ச்சையாக, மேகனால் பின்னால் இழுக்கப்பட்ட சிவகாம சுந்தரி,

"கடவுளே! என்ன காரியம் செய்தீர்கள்? இவன் என்னோட வகுப்புத் தோழன்!" என்று மேகனின் காதில் கிசுகிசுக்க, அதற்குள் ஓடிவந்த இன்னும் சில இளைஞர்கள் இளைஞிகள் சிவகாம சுந்தரி யிடம்,

Screenshot_2020-08-20-21-28-02-1.png
​
"நீ மயக்கம் வந்தது போல் விழு!" என்று கூறி விட்டு, மேகனை நோக்கி,
" மிஸ்டர் சிம்டாங்காரன்! நீங்க அவள மயக்கம் தெளிய வைத்து, அதோ அந்த காலேஜ் வேனில் ஏற்றிவிடுங்கள்." என்று கூற,

"ஹேய்! இங்க என்ன நடக்குது? நான் யார் தெரியுமா? என் பேர் சிம்டாங்காரன் இல்ல... ஓகே! " என்று மேகன் உரும. ..

"மிஸ்டர். சிம்டாங்காரன்! ப்ளீஸ் எது கேட்பதாக இருந்தாலும் எங்க காலேஜ் வேனுக்கு போங்க! அங்க உங்களுக்கு இவ விபரமா சொல்லுவா... என்று சிவகாம சுந்தரி யைப் பார்த்தவாறு எதிரில் இருந்த மேடைக்கு ஓடினர்.

அதற்குள் ஆன்மீக பெரியவர் கூட்டத்தினரிடம், " எல்லோரும் அவரவர் இடத்தில் அமருங்கள்... இப்பொழுது இங்கே நடந்த முற்பிறவி சம்பவங்களைப் பற்றிய கருத்துக்களை தெரியப்படுத்தலாம்." என்று கூற, ஒருவர் எழுந்தார். அதற்குள் வேன் வந்துவிட, தோழிகளால் கைத்தாங்களாக தூக்கி வரப்பட்ட சிவகாம சுந்தரி யை வேனிற்குள் ஏற்றினர். அங்கே என்னதான் நடக்கிறது என்பதை தெரிந்து கொள்ள, கோயில் அலுவலரை மேகன் அழைக்க,

அவர் வந்து மேகனின் காதுகளில், "இது காலேஜ் பசங்க, முற்பிறவி பற்றிய மக்களின் மன ஓட்டத்தைத் தெரிந்து கொள்ள, அரங்கேற்றிய நாடகம் சார். இப்ப மக்கள் கருத்து சொல்றாங்க பாருங்க... இதே வாய்மொழியாக கூறியிருந்தால், ஒருசிலரைத் தவிர யாரும் கருத்து பரிமாற்றம் செய்து இருக்க மாட்டார்கள். அதான் சார் ஒரு சின்ன நாடகம் நடத்தினர். இதில் உங்களை ஏன் அந்த பெண் தேர்வு செய்தாள் என்று தெரியவில்லை சார். மேலும் அவர்கள், அரசு அதிகாரிகளிடமும், உங்க தாத்தா விடமும் அனுமதி வாங்கிவிட்டார்கள். தவறாக நினைக்க வேண்டாம் சார்.

"ஓ! அப்போ நான் அடிச்ச பையனுக்கு நம்ம செலவிலேயே வைத்தியம் பார்த்து விடுங்கள்." என்றான் மேகன்.

சிறிது நேரம் கோயில் சம்மந்தப்பட்ட அலுவல்களைப் பார்வையிட்டான். பிறகு கோயிலை சுற்றி அனைத்தையும் பார்வையிட்டவனிடம் வந்தனர், கல்லூரி மாணவ மாணவியர்.

" சாரி சார் தெரியாமல் நடந்துவிட்டது." என்று மன்னிப்புக் கேட்டனர்.

"No! No! நீங்க அனுமதி பெற்று தானே நடத்தினீர்கள்! It's ok!" என்று கூறியவன் கூட்டத்தில் சிவகாம சுந்தரி யைத் தேடினான். அது தெரிந்து அவளை முன் நிறுத்தினர் மாணவர்கள்.

"என்னை ஏன் தேர்வு செய்தாய்?" என்று கேட்டால் என்ன சொல்வது என்று பதற்றமாகி சிவகாம சுந்தரி நின்ற கோலம் மீண்டும் சிரிப்பை வரவழைக்க,

"ஆமா அந்த வில்லன் எங்கே? அந்த பையனின் கேரக்டர் என்ன?" என்று இயல்பாக அவன் கேட்டதும்.

"சாரி மிஸ்டர்.சிம்டாங்காரன். நீங்க தான் கோயில் நிர்வாகி னு எனக்கு தெரியாது..." என்றாள் சிவகாம சுந்தரி.

"உனக்கு காது கேக்காதா? நான் என்ன கேட்டேன்? நீ என்ன பேசுற ம்ம்? ஆமா அது என்ன சிம்டாங்காரன்? என் பேர் அதில்லையே?" என்று அவன் குதூகலமாக கேட்கவும்.

" அவன்தான் என் முற்பிறவி காதலன் கேரக்டர் நான் தேடி வந்த போது அவன காணல. உங்க மேடை வரை தேடியும் அவன காணல. என்ன பண்றது னு தெரியல. உங்கள பார்த்ததும்... " என்று தயங்கி நிறுத்தினாள்.

" என்ன நீ ? கேட்ட கேள்விக்கு பதில் சொல்லாம, முந்தைய கேள்விக்கே பதில் சொல்ற? என்று அவள் தயக்கத்தின் காரணம் தெரிந்தும் விடாமல் கேட்டான்.

முரட்டு பிடிவாதக் காரனா இருப்பான் போலிருக்கே? என்று நினைத்தவள், "உங்க பேர் தெரியாது. அதான்."

" நீ கேக்கவே இல்லையே? என் பேரு..."

"ஸ்ரீ மேகன்." என்றாள் சிவகாம சுந்தரி.

" அப்போ உங்க பேர்?" என்று அவன் கேட்டதும், அவள் சுற்றி உள்ளவர்களைப் பார்த்து விட்டு, "நிறைமதி" என்றாள்.

" அப்போ சிவகாம சுந்தரி?... இது தான் நிஜ பேரா? ஆமா! இந்த பேர்ல தானே வில்லன் கூப்பிட்டான்!"

"அவன் வில்லன் இல்லை!"

"அப்போ ஹீரா வா?" என்று மேகன் கேட்டதும், அனைத்து மாணவ, மாணவிகளும் சேர்ந்து,

"நீங்க தான் சார் ஹீரோ! " என்றனர் கோரஸாக.

" ம்ம் பிழச்சுக்குவீங்க..." என்று கிண்டலடித்துவிட்டு, "அப்புறம் என் வில்லனை, உடம்ப பாத்துக்க சொல்லுங்க." என்று சிரித்தான்.

"உங்க வில்லனா?" என்று கோரஸாக கேட்டதும்.

"ஆமா! என் முற்பிறவி காதலிக்கு வில்லன்னா, எனக்கும் வில்லன்தானே ? என்று கூறிவிட்டு விறு விறுவென்று வாசலை நோக்கி நடந்தான்.

அனைவரும் "ஹேய்!" என்று கத்தியது கோயிலை யே கிடுகிடுக்க வைத்தது.

சிரித்துக் கொண்டே வீட்டிற்கு வந்தவனை பார்த்த முதிய தம்பதிகள். கோயில் நிர்வாகம் அவனுக்குப் பிடித்திருக்கிறது என்று நினைத்தனர்.

இன்று மனதிலிருப்பதைக் கோடிட்டுக் காட்டியாச்சு... நிச்சயம் நிறைமதி க்கு! இதாவது அவ பேர்தானா? என்று கிண்டலாக யோசித்தவன், அவளுக்கு புரியாமல் இருக்காது... அடுத்த சந்திப்பில் அவ நிச்சயமா இத பத்தி பேசுவா.... அவளுக்கும் என்மேல் அட்லீஸ்ட் ஈர்ப்பாவது இருக்க வேண்டும். இல்லைனா என்னை முற்பிறவி காதலன் னு சொல்வாளா? என்று ஏதேதோ நினைத்த வண்ணம் அமர்ந்திருந்தான்.

"இரண்டு முறை தான் பாத்ததா சொல்ற... ஆனா அவர் ஜாடையாக காதல சொல்லிட்டாரே? அப்படி என்னடி பண்ண? உண்மையிலேயே சிம்டாங்காரன் தாண்டி... என்று தோழிகள் கிண்டலடித்தனர். ..

அவள் ஒன்றும் பேசாமல் ஏதோ யோசனையில் இருக்க, "ஏய் உன்கிட்ட தான் கேக்கிறோம். " என்று அவளை உலுக்கினர்.

"என்னடி? " என்று அவள் கேட்க,

" ஆமா? அவர்கிட்ட ஏன்டி உன்னோட பேர மாத்தி சொல்ற?"

" முதல் தடவை ஒருத்தர சந்திக்கும் போது, அவர் யார்? எப்படி பட்டவர் னு நமக்குத் தெரியுமா? ம்ம்? அப்படி இருக்கும் போது நம்ம சொந்த விஷயங்களைச் சொல்வது ஆபத்து... அதான் சும்மா வாய்க்கு வந்த பேர சொல்றேன்."


"யாரு? என்ன னு தெரியாது... ஆனா மனச மட்டும் பறிகொடுக்கலாமா?" என்று மேலு‌ம் கிண்டலடித்தனர்.

வீட்டில் அவள் ரூம் ஜன்னல் வழியாக நிலவைப் பார்த்தவள், நிலாவிடம் பேசினாள். " நிஜமாகவே அவருக்கும் என்மேல் காதல் இருக்கிறதா? இல்லை கிண்டலடித்தாரா? அவர் கண்கள் எவ்வளவு கூர்மை பாத்தியா? நேருக்கு நேர் கண்ணைப் பார்த்து பெசமுடியவில்லை... தோழிகள் கேட்பது போல இரண்டே சந்திப்பில் காதல் வருமா? ஆனா எனக்கு வந்திருச்சே? அவர் என்னிடம் உரிமையாய் பேசுறார் அப்போ காதல் தானே? எனக்கு அவர ரொம்ப பிடிச்சிருக்கு... இன்னைக்கு நடந்த களேபரத்தில என்மேல், அவருக்குக் கோபம் வந்திருக்கும் னு எவ்வளவு பயந்தேன் தெரியுமா? அழுகையே வந்து விட்டது. ஆனா அவர் கோபப்படல தெரியுமா? எவ்வளவு அழகாக சிரிக்கிறார்.... இல்ல?! அவர் சிரிக்கும் போது எனக்கு எவ்வளவு பிடிச்சிருக்கு தெரியுமா? நாள் பூராவும் பாத்துகிட்டே இருக்கலாம்... என்னைய அவர் விரும்புறார் னு எப்படி தெரிஞ்சுக்கலாம்? ப்ளீஸ் ஒரு ஐடியா கொடேன். .. எனக்கு அவரிடம் கேட்க ரொம்ப பயமா இருக்கு. நீ எனக்காக தூது செல்வாயா? என்று கேட்டாள்.

Screenshot_2020-08-20-21-28-38-1.png
​
நிலா சற்று மேகத்தில் மறைந்து பின் வெளியே வந்தது...

" என்ன? எனக்காக தூது செல்வாயா என்று கேட்டால் நீ வெட்கப் படுகிறாய்?" என்று நிலாவிடம் கேட்டாள்.

நிலா பளிச்சென்று மாறியதைப் பார்க்கையில், அவளைப் பார்த்து சிரிப்பதைப் போலிருந்தது.

"சிரிச்சு மழுப்பாத. .."

"யார சொல்ற?" என்று கேட்ட வண்ணம் அவளின் அம்மா வந்தார்.

"வேற யார சொல்லப்போறேன்? என் உயிர்த்தோழி நிலா வ தான்!"

"உனக்கென்ன லூசு புடிச்சிருச்சா? வயசுக்கு வந்த பிள்ளை தனியா பேசுறத யாராவது பாத்தா என்ன சொல்வாங்க?" என்று அம்மா கேட்டதும்,

"நான் எங்கம்மா தனியா பேசினேன்? நிலா கூட தானே பேசினேன்?" என்றவளை முறைத்தவர்,

"இதெல்லாம் நல்லதுக்கில்ல. தனியா இங்க இருக்காத ஹாலுக்கு போ!... நானும் பாத்துகிட்டுதான் வாரேன்... உன் நடவடிக்கை கொஞ்ச நாளாவே சரியில்ல... பொம்பள பிள்ளை... பேர கெடுத்துட்டு போயிடாத. .. "

"என்னடி பொழுது போன பின்னாடி பிள்ளைய திட்டிக்கிட்டு இருக்க?" என்று அவளின் அப்பா தன் மனைவியை அதட்ட,

"கடைக்குட்டி னு செல்லம் கொடுத்து கெடுக்கிறீங்க... கொஞ்ச நாளாவே பாக்குறேன்... அவ போக்கே சரியில்ல... தனியா பேசுறதும், சிரிக்கிறதும்... என்ன ஏது னு கேட்டு கொஞ்சம் கண்டிச்சு வைங்க... "

"அவ இன்னும் விளையாட்டு பிள்ளைடி. அவள போயி... போ! போ!" என்று மனைவியை அனுப்பி வைத்து விட்டு, " நேரமாச்சு படுத்து தூங்கு டா... ரொம்ப நேரம் முழிச்சிருக்ககக் கூடாது, உடம்பு கெட்டுடும். " என்று மகளிடம் கூறியவர், வெளி முற்றத்தை நோக்கி நடந்தார்.

கணவன் தன் பேச்சைக் காது கொடுத்து கேட்காததால், மகன்களிடம் சென்றவர்,

"டேய்! உங்கப்பா தான் என் பேச்ச பொருட்டா எடுத்துக்க மாட்டேங்கறார். அவ போக்கே சரியில்ல டா... அவ நம்ம மானத்த வாங்கிடு வா. நீங்களாவது கொஞ்சம் கண்டிச்சு வைங்க!" என்று புலம்பினார்.

இங்கே இவ்வளவு களேபரம் நடந்து கொண்டிருந்தது... ஆனால் நிறைமதி என்று பொய் பெயர் சொன்னவள், 'ஸ்ரீமேகன் மனதில் தான் இருக்கிறோமா?' என்பதை அறிய 'என்ன செய்யலாம்?' என்று என்ன யோசித்தும் ஐடியா வரவில்லை! ஆனால் எப்போ தூங்கினாள் என்றே தெரியவில்லை... அசந்து தூங்கிவிட்டாள்...

ஏதாவது ஐடியா வந்ததா அவளுக்கு?

அடுத்த அத்யாயத்தில் பார்ப்போம்!

படித்து விட்டு comments எழுதுங்கள் friends! நன்றி!


--------- ********---------
 

Author: meerajo
Article Title: 👀4👀
Source URL: Nigarilaavanavil Tamil novels and story forum-https://forum.nigarilaavanavil.com
Quote & Share Rules: Short quotations can be made from the article provided that the source is included, but the entire article cannot be copied to another site or published elsewhere without permission of the author.
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN