துயில் 1

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
இது ஓர் மருத்துவமனை... எப்பொழுதடா கதவைத் திறப்பார்கள் கூண்டிலிருந்து விடுபட்ட கோழிக்குஞ்சுகள் என நாலா திசையிலும் பாயலாம் என நோயாளிகளைப் காண காத்திருக்கும் மக்கள் கூட்டமோ, உயிரைக் காப்பாற்றச் சொல்லிக் கெஞ்சும் கெஞ்சலோ, என்னாகுமோ என்ற பதைபதைப்போ, வலியையும் ரணத்தையும் வெளிப்படுத்தும் ஓலமோ, உறவை இழந்த அன்பு கொண்ட மனங்களின் கதறலோ, அழுக்கு படிந்த கட்டிலோ இல்லை பாயோ அதில் படுத்திருக்கும் நோயாளிகளோ, மருந்தின் வாடையோ, விபத்தால் முகம் சுளிக்க வைக்கும் சீழ் மற்றும் ரத்தத்தின் அசுத்த தன்மையோ இல்லை அதனால் ஏற்படும் நாற்றமோ... இப்படி எல்லாம் கற்பனையில் நீங்கள் இந்த இடத்தை நினைத்திருந்தால் சத்தியமாக இதில் ஏதும் அற்ற மருத்துவமனை இது!


இப்படி எல்லாம் இருக்க இதென்ன அன்னாடங்காய்ச்சிகள் வந்து போகிற அரசாங்க மருத்துவமனையா?


மங்கையராய் பிறப்பதற்கே மாதவம் செய்திட வேண்டும் அம்மா என்று பாரதி பாடினான். அவன் மட்டும் இப்போது இருந்திருந்தால் விரல் விட்டு எண்ணக்கூடிய பணக்காரர்களில் ஒருவராகவும் கூடவே பதவி மற்றும் ஆள் பலம் படைத்த ஒருவனாகப் பிறக்க மாதவம் செய்திருக்க வேண்டும் என்று பாடியிருப்பான்!


அப்படிப்பட்ட பணக்கார்கள் பலரும் இங்கு வந்து கோல்ப் விளையாடி மன அழுத்தம் விலக மசாஜ் செய்து சகல வித சிரமப் பரிகாரங்களுடன் தங்கி விட்டுச் செல்லும் வசந்த மாளிகை தான் இந்த மருத்துவமனை! இந்தியாவில் இருக்கும் நம்பர் ஒன் மருத்துவமனையான டெல்லியில் இருக்கும் இந்த வசந்த மாளிகையின் வாசலில் தான் நாம் தற்போது நிற்கிறோம்.


நாம் மட்டுமா நிற்கிறோம்? இந்த மருத்துவமனையின் தலைமை மருத்துவரிலிருந்து கை தேர்ந்த திறமையான மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் வரை ஏன் இந்த மருத்துவமனை பார்ட்னர்ஸ் முதற்கொண்டு கலவரத்துடன் பதட்டத்துடன் தற்சமயம் வர இருக்கும் ஆம்புலன்ஸ் வண்டிக்காக வாசலையே பார்த்த படி காத்துக் கொண்டிருந்தார்கள்.


அவர்களுக்கு நிகராக இல்லை இல்லை நடிப்புடன், விஸ்வாசிகள் என்று தங்களைத் தாங்களே அழைத்துக் கொள்ளும் சில அரசியல் ஆண், பெண் தொண்டர்கள் அங்கிருந்த தோட்டத்திலும் அதன் நடுவிலிருக்கும் நீரூற்றைச் சுற்றியும் நின்று கொண்டு ஆங்கிலத்திலும், இந்தியிலும், தமிழிலும், பெங்காளியிலும் தங்கள் சோகங்களைப் பரிமாறிக் கொண்டிருந்தார்கள்.


அதே நேரம் அரசாங்க விளக்கு பொருந்திய கார்கள் இரண்டு பாதுகாவலர்களுடன் முன்னேயும் பின்னேயும் புடை சூழ கிரீச் என்ற சத்தத்துடன் அதிவேகத்துடன் வந்து வாசலில் நிற்க, அதில் டிரைவர் சீட் பக்கமிருந்து தன் இரட்டை நாடி உடம்பை தூக்கிக் கொண்டு சோகமான முகத்துடன் அவசரமாக இறங்கினார் இந்தியாவின் தற்போதைய நிதி அமைச்சராக இருக்கும் ஐம்பது வயது மதிக்கத்தக்க மனிதரான கோட்டை ராஜன்.

இறங்கியவர் அதே அவசரத்துடன் பின் சீட்டு கதவைத் திறந்து விட, முகத்திலும் மனதிலும் ஆயிரம் சோகம் கவலைகள் இருந்தாலும் அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி விட்டு ஒரு அரசாளும் ராணியின் கம்பீரத்துடன் இறங்கினார் முன்னாள் பிரதமராக இருந்து இப்போது fuse போன பல்பாய் இருக்கும் ருத்ரமகாதேவி. பல அரசியல் தலைகளுக்கு ருத்ரமாயி!


இதுவரை இந்தப் பெயரைச் சொல்லி இவரை யாரும் அழைத்தது இல்லை. மீறி அழைப்பவன் சங்கு அறுக்கப்பட்டு கங்கையில் மிதப்பான். மொத்தத்தில் எழுபது வயது பெண் சாணக்கியர்! தொண்டர்களுக்கு ஸ்ரீதேவி மக்களுக்கு மூதேவி. அவர் இறங்க, அடுத்த பக்க கதவைத் திறந்து கொண்டு கண்ணில் நீர் வழிய கவலை தோய்ந்த முகத்துடன் இறங்கினார் இந்த பெண் சிங்கம் பெற்றெடுத்த நாற்பத்தைந்து வயதிலும் சிறு முயலென இருக்கும் கயல்விழி!


“என்ன டா எனக்கே கட்டம் கட்டுறானுங்களா? என்ன நெருங்க முடியலன்னு என் பேரனுக்கு ஸ்கெட்ச் போட்டு தூக்கி இருக்கானுங்க. அது எந்த நாயா இருந்தாலும் சீக்கிரம் கண்டு பிடித்து என் கண்ணு முன்னாடியே உயிரோட கொதிக்கிற வட சட்டியில போட்டு பொரித்து எடுங்கடா. பிறகு துடிக்கிற அந்த உடம்பை நாய்க்கு போடுங்க. இந்த ருத்ரமாயி பேரன் மேலேயே கை வைத்துவிட்டான் இல்ல அவன்? என்ன டா புரிந்ததா?” இத்தனை டாவையும் தன் மருமகனான நிதி அமைச்சர் கோட்டை ராஜனைப் பார்த்து தான் அந்த பெண் சிங்கம் உருமியது.


இது என்னங்க பெரிய விஷயம்? சில நேரத்தில் தன் மருமகனை ரோட்டில் திரியும் நாயாகத் தான் நடத்துவார். என்ன செய்ய? சாக்கடைக்கு வாழ்க்கைப் பட்டால் அதில் புழுவாகத் தானே நெளிய வேண்டும்! பின்னே சிப்பியில் உள்ள முத்தாகவா ஜொலிக்க முடியும்? ஆனால் இதெல்லாம் அரசியலில் சாதாரணமப்பா என்பது போல் சுரணை அற்று அனைத்தையும் ஏற்றுக் கொள்வார் கோட்டை ராஜன்.


“சரிங்கமா...” என்ற அவர் பதிலை வாங்கிக் கொண்டு மருத்துவர்களிடம் வந்தவர்


“அங்க என் பேரன் அடி பட்டு ரோட்டுல உயிருக்கு போராடிட்டு இருக்கான்... அமைச்சர் வராருன்னு ரோட்டை எல்லாம் பிளாக் பண்ணிட்டு, அவனைப் போய் பார்த்து காப்பாத்தாம இங்க நின்னுட்டு என்ன கோழி முட்டைக்கு ம...ரு புடிங்கிட்டு இருந்தியா?” தலைமை டாக்டரை பார்த்து அந்த வீரத் தமிழச்சி கேட்க, அவரோ தலை குனிந்தார்.


ஆமாங்க! இந்த ருத்ரமாயி தமிழ்நாட்டில் எங்கோ கடைக்கோடியில் பிறந்து வளர்ந்து ஒருகாலத்தில் இந்தியாவையே ஆண்டவர் தாங்க. அவர் பேசின சுத்த தமிழ் மொழியிலேயே அவரைப் பற்றி உங்களுக்கு எல்லாம் தெரிந்து இருக்குமே…


அந்நேரம் ஒரு ஆம்புலன்ஸ் மருத்துவமனை வளாகத்தினுள் நுழைய, அந்த இடமே பரபரப்பானது. தேவியம்மை கயல்விழியை ஒரு பார்வை பார்த்தவர் கண்களாலேயே மகளை எச்சரிக்க, அதையெல்லாம் கண்டு கொள்ளும் நிலையில் அவர் மகளோ இல்லை.


கதவு திறந்து ஆம்புலன்சிலிருந்து இரண்டு மூன்று டாக்டர்கள் இறங்க, கூடவே ஒரு ஸ்ட்ரெச்சரில் குற்றுயிராய் ருத்ரமாதேவியின் வருங்கால அரசியல் வாரிசான கயல்விழி – கோட்டை ராஜனின் மூத்த வாரிசான இருபத்தி நான்கு வயது இளைஞனான நம் கதையின் நாயகனான ருத்ரதீரனை இருவர் இறக்கிக் கொண்டிருந்தனர்.


அதில் ஒருவன் தடுமாற, முதலுதவிக்காக தீரனின் தலைப் பகுதிலிருந்த பொருட்கள் விலக... அதில் அவன் தலை இரண்டாகப் பிளந்திருப்பதை அங்கு சுற்றி இருந்தவர்களுக்கு அப்பட்டமாய் காட்டியது. மிகவும் கோரமான விபத்து போல! உடல் முழுக்க ரத்தத்துடன் வந்திறங்கிய பேரனைப் பார்த்த தேவியம்மைக்கு அடியாளாய் இருந்தபோதும் சரி இப்போது அரசியலில் பெரும் பதவியில் இருந்தபோதும் சரி... தன் கையால் எத்தனையோ பேரைக் குத்திக் கிழித்து பலருடைய உதிரத்தை கையில் வாங்கிய போது எல்லாம் ஏற்படாத நடுக்கம் இப்பொழுது பேரனை இந்த நிலையில் பார்த்ததும் முதுகு தண்டு சில்லிட உடல் நடுங்கியது அந்த சிங்கத்திற்கு.


ஆனால் பெற்றவளுக்கு மகனை இந்த கோலத்தில் பார்த்துக் கொண்டு அமைதியாக இருக்க முடிவில்லை. “ஐயோ! தீரா... என் மகனே! உன்னை இந்த கோலத்தில் பார்க்கவா நான் உன்னைப் பெற்றெடுத்தேன்?” கயல்விழி பெருங்குரலெடுத்து கதறியபடி மகனிடம் நெருங்க


மகளைப் பிடித்துத் தள்ளி விட்டவர், “டேய்... இவளுக்கும் சேர்த்து ஒரு ரூம் தயார் செய்யச் சொல்லு டா...” என்று தேவியம்மை கட்டளையிட, உடனே அந்த இடமே முன்பை விட பரபரபப்பானது.


மிகவும் கொடூர விபத்து என்பதால் எட்டு மணிநேரம் அறுவை சிகிச்சை நடந்தது. அதுவரை அங்கே ஒரு தனி அறையில் சுழல் நாற்காலியில் அமர்ந்த படி வட்டம் அடித்துக் கொண்டிருந்தார் தேவியம்மை.


அவர் முகம் தீவிர சிந்தனையில் இருந்தது. இதற்குள் ருத்ரதீரனின் விபத்து காட்டுத் தீயாய் அந்த டெல்லி முழுக்க பரவி விட, பல முன்னாள் அமைச்சர்களும் தொழில் அதிபர்களும் தேவியம்மைக்கு ஆறுதல் சொல்ல நெருங்க, யாரையும் தன்னை நெருங்க விடவில்லை அவர்.


விசாரித்தவரை இது விபத்து தான் என்றார்கள். ஆனால் விபத்து போல் காட்டச் செய்த சூழ்ச்சியா என்பது இனி தான் தெரியவரும். அந்த அளவுக்கு கோட்டை ராஜனுக்கும் தேவியம்மைக்கும் நான்கு வழியிலும் எதிரிகள் இருந்தார்கள். அதனால் தான் சந்தேகம் அதிகமானது… நல்லதைச் செய்யவோ நினைக்கவோ வேண்டும். இப்போதெல்லாம் நல்லது செய்தவனுக்கே பல சோதனைகளும் கஷ்டங்களும் வருகிறது. பிறகு இப்படி அதிகம் பாவ மூட்டைகளைச் சுமப்பவர்களுக்கு வராமல் இருக்குமா என்ன?


அறுவை சிகிச்சை நல்லபடியாக முடிந்து மருத்துவர்கள் வெளியே வந்து, இனி உயிருக்கு ஆபத்து இல்லை. ஆனால் இரண்டு நாள் சென்று தான் மற்ற நிலவரங்களைச் சொல்ல முடியும் என்று அவர்கள் சொல்ல, அதுவரை தன் அதிகார தோரணையில் அந்த மருத்துவமனையையே ஒரு வழி செய்து கொண்டிருந்தார் தேவியம்மை!


ருத்ரதீரன் ஒரு டாட்டூ பிரியன். உடலில் சில இடங்களில் அவன் டாட்டூ வரைந்து கொண்டு வந்தாலே அன்று முழுக்க கயல்விழி மூக்கைச் சிந்துவார். இப்போதோ மகன் இந்த கோலத்தில் இருக்கும் போது அழாமல் இருப்பாரா என்ன? அன்ன ஆகாரம், தூக்கமின்றி மகன் அறை வாசலே கதி என்று இருந்தார் அந்த தாய்.


தாய்க்கு நிகரான துயரத்துடன் மனவேதனையுடன் உண்ணாமல் உறங்காமல் தீரனைப் பார்க்க முடியாத வேதனையில் இதே டெல்லியிலேயே வேறு ஒரு இடத்தில் வேறு ஒரு ஜீவன் அவனுக்காக கடவுளிடம் சண்டை போட்டுக் கொண்டும் துடித்துக் கொண்டு இருந்தது. இது படுக்கையில் இருக்கும் தீரனுக்கும் சரி அவனைச் சுற்றியிருக்கும் உறவுகளுக்கும் சரி தெரியாது. அந்த ஜீவனைத் தீரன் பார்க்க நேர்ந்தால் என்ன சொல்லுவான்? எப்படி நடந்து கொள்வான்?


இங்கு கயல்விழிக்கு ஆறுதலாக இருந்தது இரண்டு ஜீவன்கள் தான். ஒன்று அந்த வீட்டின் கடைக்குட்டிப் பெண்ணான தீரனின் பாசக்கார தங்கை பவிதா தன் தாயை விட்டு இம்மியும் விலகாமல் இருந்தாள்.


இன்னோர் ஜீவன் விபாகர். தீரனின் நண்பன், பெரிய தொழில் அதிபரின் மகன். தீரனை விட மூன்று வயது பெரியவன். நண்பனுக்காக அவருடைய தாய்க்குத் துணையாக தற்போது மருத்துவமனையில் இருக்கிறான்.


இத்தனை ஜீவன்களின் துணையும் வேண்டுதல்களும் இருக்க நம் கதையின் நாயகனை எமன் அழைத்துக் கொள்வாரா என்ன? கண்டம் விலக, தகுந்த பாதுகாப்புடன் இரண்டே நாளில் வேறு ஒரு அறைக்கு மாற்றப் பட்டான் தீரன். ஆனால் இன்னும் நினைவு தான் திரும்பவில்லை.



அப்பொழுது ஒரு நாள் அவனைக் காண ஒரு பெண் உருவம், டாக்டரைப் போல் வேடமிட்டு அங்கிருந்த பலத்த பாதுகாப்பையும் மீறி தீரன் அறைக்குள் நுழைந்தது!


படுக்கையில் இருக்கும் அவனைக் கண்ணில் நீர் வழிய ஆசை தீர நிரப்பிக் கொண்டு அன்பு, பாசம், காதலோடு அவன் மேனியில் கட்டு போட படாத இடங்களை விரல்கள் நடுங்க வருடிக் கொடுத்தது. பின் அவன் கால் பக்கம் வந்த அந்த பெண் உருவம், அவன் பாதத்தில் தன் இதழ் பதித்து, “எல்லாம் இந்த பாவியால் தான்! நான் உங்களுக்கு வேண்டாம். நீங்க எங்கே இருந்தாலும் நல்லா இருக்கணும். இனி எக்காரணத்தைக் கொண்டும் நான் உங்க முன்னாடி வர மாட்டேன். எனக்கு நீங்க நல்லா இருக்கணும் ருத்ரன்...” என்று அவன் பாத விரலில் நெற்றியை வைத்துக் கொண்டு கதற... இதை எதையும் அறியாத நிலையில் படுக்கையில் இருந்தான் அவளுடைய ருத்ரன்.


பாட்டியின் முன் பாதி பெயரான ருத்ரன் இவன் பெயரில் இருந்தாலும் யாரும் இவனை அந்தப் பெயரிட்டு அழைத்தது இல்லை. ஏன்… அவன் பாட்டியே இப்படி அழைத்தது இல்லை. இந்த உலகத்தில் இப் பெயரிட்டு அழைக்கும் ஒரே ஜீவன் இவள் மட்டும் தான்! சற்று நேரத்திற்கு எல்லாம் கண்ணைத் துடைத்துக் கொண்டு நிமிர்ந்தவள்


அங்கு அவன் கட்டில் அருகில் மேஜை மேலிருந்த பைலில் அவன் உடல்நிலை சம்பந்தப்பட்ட விஷயங்கள் இருக்க, அதைத் தன் கைப்பேசியில் வீடியோவாக பதிவு செய்தவள்



பின் அவன் முகத்தருகே நெருங்கி... தலை முழுக்க கட்டு போடப் பட்டிருந்தாலும் சிறிதே தெரிந்த தன்னவனின் நெற்றியில் தன் இதழ் பதித்தவள் “ஐ லவ் யூ ருத்ரன்! இந்த வார்த்தையை நான் உங்ககிட்ட சொல்றது இது தான் கடைசி. இனி உங்கள் முன்னால் நான் வர மாட்டேன். மீறி வர வேண்டிய சூழ்நிலை வந்தாலும் இந்த வார்த்தையை நான் சொல்ல மாட்டேன்...” தன் உயிரே இவன் தான் என்றாலும் அந்த வேதனையான வார்த்தையைச் சொன்னவள் கண்களை இறுக்க மூட, அவள் விழியிலிருந்து அவன் கண்களுக்கு இடம் பெயர்ந்தது அவளுடைய கண்ணீர். அது அவனின் கண்ணின் ஓரம் வழிய... சுய நினைவு இல்லாமலே தங்களுடைய காதலுக்காக அவனும் கண்ணீர் விட்டான்.



பிறந்ததிலிருந்து இதுவரை எந்த சுகத்தையும்.. இன்பத்தையும்... பாசத்தையும்... அனுபவிக்காதவள் இவள்... ஒரே ஒரு நாள் தன்னவன் இவை அனைத்தையும் இவளுக்கு கொடுக்க... அவைகளை தன்னுள் சுமந்த படி... இனி தனக்கு எதுவுமே வேண்டாம் என்ற நிலையில்... இன்று அவன் கொடுத்த அனைத்தையும் நினைவு இல்லாமல் படுக்கையில் இருக்கும் தன் உயிரானவனிடமே விட்டு விட்டு... உயிரை துறந்த பறவை என வெறும் கூடாக... பிரிய மனமே இல்லாமல், தன்னவனின் நிஜ உருவத்தை இன்று தான் பார்ப்பது கடைசி என்ற நினைவில் படுக்கையில் இருக்கும் அவனை திரும்பி திரும்பி பார்த்த படி வெளியேறினாள் அவள்.


அதிகார வர்க்கத்திற்கும் அடிமை வர்க்கத்திற்கும் விதி என்ற பெயரால் இவர்களுக்குள் நடக்கும் போராட்டத்தில் இவர்கள் இருவரின் காதல் வெல்லுமா? அந்த பெண்ணவள் சொன்ன மாதிரியே தன் காதலை இவனிடம் நேரில் சொல்லாமல் இருப்பாளா இல்லை இவனைக் காண முடியாமல் ஓடி ஒளிவாளா? இதே காதலை உணர்த்தும் விழிகளுடன் தன்னவனை இனி காண்பாளா? இவை எல்லாம் அதே விதியின் கையில் தான் இருக்கிறது! பொறுத்திருந்து பார்ப்போம்
 
Last edited:
Super Super Super maa... Semma semma starting..... பெரிய அரசியல் வாதி family ah namba hero odaithu.... அவன் பாட்டி பெரிய அரசியல் வாதி போல அவன் அப்பா மந்திரி.... Uthran எதிர்கால அரசியல் வாதி.... Eppadi accident aachi avanuku.... யாரு அந்த அவள் அவனுடைய காதலி ah avala தான் இப்படி aachi nu solraa eppadi.... ஏன் அவன vittutu pora.... இனிமேல் avana paakave kudaathunu ra mudivoda... Super Super Super maa... Eagerly waiting for next episode
 

GeethaSuresh

New member
ஆரம்பமே ரத்தகளரியால இருக்கு.. அந்த பாட்டி ரொம்பவே ஓவரா தான் பேசுறாங்க சீக்கிரமே அடுத்த எபிசோட் கொடுங்க யுவனிமேடம்
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
Super Super Super maa... Semma semma starting..... பெரிய அரசியல் வாதி family ah namba hero odaithu.... அவன் பாட்டி பெரிய அரசியல் வாதி போல அவன் அப்பா மந்திரி.... Uthran எதிர்கால அரசியல் வாதி.... Eppadi accident aachi avanuku.... யாரு அந்த அவள் அவனுடைய காதலி ah avala தான் இப்படி aachi nu solraa eppadi.... ஏன் அவன vittutu pora.... இனிமேல் avana paakave kudaathunu ra mudivoda... Super Super Super maa... Eagerly waiting for next episode

love you chiththu சிஸ் smilie 18 smilie 18 smilie 18 smilie 18
unga super super ku naan atimai smile 9smile 9smile 9smile 9
சீக்கிரம் யூடி யோட வரேன் சிஸ் heart beatheart beatheart beat
 
OP
yuvanika

yuvanika

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
ஆரம்பமே ரத்தகளரியால இருக்கு.. அந்த பாட்டி ரொம்பவே ஓவரா தான் பேசுறாங்க சீக்கிரமே அடுத்த எபிசோட் கொடுங்க யுவனிமேடம்

வந்துடுவோம் கீதுமா smile 10smile 10smile 10
love u kka gift:gift:gift:gift:
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN