மாயம் 12

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
என்னவள்
துக்கம்
என்
மனதை
காயப்படுத்த
அதை
தேற்றுவர் யாரோ???

மறுநாள் ஆபிஸ் வந்த ஶ்ரீ வழமைக்கு மாறான ஒரு அமைதியுடன் இருக்க அவள் அருகில் இருந்த ஹேமா அவளது அமைதியில் குழம்பிப்போனாள்...
வந்ததும் முதல்வேலையாக தன்னுடன் வம்பிழுப்பதையே கடமையென தவறாது செய்பவள் இன்று ஒரு காலை வணக்கத்தை கூட சொல்லாது தன் பாட்டில் வேலையில் இறங்க ஏதோ சரியில்லை என்று உணர்ந்து கொண்டாள் ஹேமா... ஆனால் பிற நபர்களின் முன் என்னவென்று விசாரிக்க விரும்பாத ஹேமா சஞ்சனாவிற்கு ஒரு குறுஞ்செய்தியை தட்டிவிட்டாள்...

குறுச்செய்தி பார்த்த அடுத்த நொடி ஹேமா மற்றும் ஶ்ரீ இருந்த இடத்தில் ஆஜரானாள் சஞ்சனா... வந்ததும் ஹேமாவிடம் கண்களாலே என்னவென்று வினவ ஶ்ரீயை காட்டியவள் தன் உதடுகளை பிதுக்கினாள்...

ஶ்ரீயின் நிலையினை அறியும் பொருட்டு சஞ்சனா
“ஓய் ரேடியோ என்ன இன்னைக்கு ஆப் மோடில் இருக்க??? வா காபி சாப்பிட்டு வரலாம்...ஹேமா நீயும் வா... வாய் நம்ம நாயர் கடை டீயிற்கு ஏங்கிட்டு இருக்கு.....”

“எனக்கு நாயர் கடை டீ வேணாம் சஞ்சு.... எனக்கு மூடில்லை...” என்று ஹேமா மறுக்க

“ஏன்டி டீ குடுக்கவும் உனக்கு மூடு கேக்குதா???”

“ஆமா சஞ்சு..ரொம்ப சோம்பலா இருந்தா நாயர் கடை டீ... டைம்பாசிற்கு காப்பிஷோப்.. இப்போ எனக்கு டைம் பாசாகனும் அதுக்காக காபி ஷாப் தான் போகனும்...”

“இவ கூத்து தாங்கலடா... நீ சொன்ன மாதிரி செய்யலாம் ஆனா நீ தான் ஸ்பான்சர் பண்ணனும்.... இந்த டீலுக்கு ஓகேனா சொல்லு காபி ஷாப் போகலாம்... இல்லைனா நாயர் கடை டீ தான்..” என்று சந்தர்ப்பம் அறிந்து ஹேமாவின் பர்சிற்கு வேட்டுவைக்க முயல ஹேமாவோ வெளியே சிரித்துக்கொண்டு உள்ளே

“பாவி சந்தர்ப்பம் பார்த்து பழிவாங்குறா.. எப்படா இப்படி ஒரு சந்தர்ப்பம் வரும்னு காத்திட்டு இருந்திருப்பா போல..... இருடி... ஒருநாள் என்கிட்ட சிக்காமலா போவ அன்றைக்கு இருக்கு...” என்று புலம்பிவிட்டு

“நம்ம ஶ்ரீக்கு தான் அந்த காபி ஷாப்பில் ஏகப்பட்ட டிஸ்கௌன்ட் கிடைக்குமே.... அவளே அதுக்கு வழி செய்வா... வா நாம கிளம்பலாம்... ஶ்ரீ வா கிளம்பலாம்..” என்று அவளை கிளப்ப முயல அவளோ எதுவும் காதில் விழாதது போல் அமர்ந்திருந்தாள்.. அப்போது ஹேமா

“ஶ்ரீ என்னடி நாங்க கூப்பிட்டு இருக்கோம்... நீ பதில் ஏதும் பேசாம இருக்க???” என்று அவளை மீண்டும் அழைக்க அதில் சிந்தனை கலைந்தவள்

“என்ன சொன்ன?? நான் கவனிக்கலை...”

“ஆ... இன்னைக்கு மழை வரும்னு சொன்னேன்.... வேலை செய்றேன் பேர்வழினு தூங்குறியா?? எழும்பி வா காபி ஷாப் போயிட்டு வரலாம்....”

“இல்லை நான் வரலை.. நீங்க ரெண்டு பேரும் போயிட்டு வாங்க... எனக்கு கொஞ்சம் வேலை இருக்குடி.. நீங்க கிளம்புங்க..”

“அம்மாடி சின்சியர் சிகாமணி ஒரு ஹாப் என் ஹவர் பர்மிஷன் கேட்டுட்டு வருவதில் உங்கள் வேலை ஒன்றும் கெட்டுவிடாது..... அப்படி ஏதாவது நடந்தால் நம்ம சஞ்சு சுந்தரிடம் பேசி சரி செய்து கொடுத்திடுவா.... அதுனால இப்போ நீ நடையை கட்டு” என்றுவிட்டு ஶ்ரீயை அழைத்து சென்றனர் ஹேமாவும் சஞ்சுவும்..
காபி ஷாபிற்கு வந்தவர்கள் தமக்கு தேவையானதை ஆடர் செய்துவிட்டு காத்திருந்தனர்.. அவ்வேளையில் ஹேமா

“ஶ்ரீ இப்போ சொல்லு என்ன நடந்தது?? ஏன் டல்லா இருக்க??”

“அதெல்லாம் ஒன்றும் இல்லை ஹேமா...நான் எப்பவும் போல தான் இருக்கேன்...”என்று சமாளிக்க முயல சஞ்சுவோ

“ஶ்ரீ எங்களிடம் எதுவும் மறைக்க முயலாதே.. நீ யாரு எப்படினு எங்களுக்கு தெரியும்... சோ மறைக்க நினைக்காம என்ன நடந்தது என்று சொல்லு..??” என்று கேட்க அதுவரை நேரம் அவள் மனதை அழுத்திய பாரத்தை இறக்கி வைத்தாள் ஶ்ரீ...

யாரிடம் பகிர்வது என்று தவித்து நின்றவளை அரவணைத்தது அவளது நட்புக்கள்... துன்பத்தில் தோள் கொடுக்கும் நட்பு அன்னையின் தாய் மடிக்கு சமம்... அதே போல் துன்பத்தை உணர்ந்து அதை தாங்கி ஆறுதலளிக்கும் நட்பு வரம்.. அவ்வாறான நட்பையே ஶ்ரீ பெற்றிருந்தாள்... அவளது சிறு மாற்றம் கூட அவர்களுக்கு பிரச்சனையை உணர்த்தியது மட்டுமல்லாமல் அவளுக்கு ஆறுதலுக்க உந்தியதும் அந்த எதிர்ப்பார்ப்புக்கள் இல்லாத நட்பே...

ஒரே மூச்சாக முதல் நாள் தனக்கு நிகழ இருந்த ஆபத்தை கூறி முடித்தாள் ஶ்ரீ... அதனை கேட்ட இருவருக்கும் ஒரு வித நடுக்கம் அவர்களது மேனியை ஆக்கிரமித்தது... இவ்வளவு நடந்தும் திடமாக இருக்கும் ஶ்ரீயை நினைத்து வியக்காமல் இருக்க முடியவில்லை.... இதே தமக்கு நடந்திருந்தால் நிச்சயம் ஏதேனும் ஒரு தவறான முடிவை எடுத்திருப்பர் என்பது அவர்களது மனம் வெளியிட்ட உண்மை.. .எப்போதும் போல் அன்றும் ஶ்ரீயின் தைரியத்தை இருவரும் வியந்து நின்றனர்...

“ஶ்ரீ... என்னால் நம்ப கூட முடியலை... எப்படி இவ்வளவு தைரியமாக இருக்க..?? இதுவே நானாக இருந்திருந்தால் எப்படி நடந்திருப்பேனு என்னால நினைத்துக்கூட பார்க்க முடியலை...” என்று ஹேமா கூற

“ஆமா ஶ்ரீ... நானாக இருந்திருந்த இன்னேரம் அழுது ஆர்பாட்டம் பண்ணி வீட்டையே ரணகளப்படுத்தியிருப்பேன்.. நீயாக இருக்கப்போய் இவ்வளவு தைரியமாக இருக்க...”

“இதுக்கு நான் ரிஷி சாருக்கு தான் நன்றி சொல்லனும்... அவரு தான் சரியான நேரத்திற்கு ஆஜராகி என்னை இந்த இக்கட்டான சூழ்நிலையில் இருந்து காப்பாற்றினார்.... அவரு மட்டும் இல்லைனா எனக்கு என்ன நடந்திருக்கும் என்று யோசித்து கூட பார்க்க முடியவில்லை...”

“ராஜினுடைய அண்ணா ரிஷியையா சொல்லுற??”

“ஆமா ஹேமா... ராஜூ அண்ணாவோட பிரதர் ரிஷி சார் தான் என்னை காப்பாற்றினார்.... அதுமட்டுமல்ல பயந்து போயிருந்த எனக்கு தைரியம் சொல்லி என்னை சகஜ நிலைக்கு கொண்டு வந்ததும் அவர் தான்.... ஆனா நான் அவருக்கு முறைப்படி ஒரு நன்றி கூட சொல்லவில்லை...”

“நீ அவருக்கு சரியான முறையில் நன்றி சொல்லனும் ஶ்ரீ.. அவரு உனக்கு ரொம்ப பெரிய உதவி பண்ணியிருக்காரு.... நாம் அவரை லன்சிற்கு இன்வைட் பண்ணலாம்... நம்ம முறைப்படி அவருக்கு ஒரு பெரிய தாங்ஸ் சொல்லிடலாம்.... ஆன்டிக்கும் அங்கிளிற்கும் இந்த விஷயம் தெரியுமா..??” என்று சஞ்சு வினவ

“ இல்லை சஞ்சு...வீட்டில் யாருக்கும் இந்த விஷயம் தெரியாது... தெரிந்திருந்தா அப்பாவும் அம்மாவும் ரொம்பவே..கலங்கி போயிருப்பாங்க...”

“நீ சொல்லாமல் விட்டதும் நல்லது தான்... இனிமேல் அங்கிள் வரமாட்டாங்கனா எங்களுடனேயே நீயும் கிளம்பிரு... ஓவர் டைம் எல்லாம் வர்க் பண்ணத் தேவையில்லை.. உன் டீம் லீடர் ஏதாவது சொன்னான்னா அவனை நாங்க பார்த்துக்கிறோம்... நான் சொல்லுறது புரியிதா...??” என்று சஞ்சனா கேட்க தலையாட்டினாள் ஶ்ரீ....

“ தட்ஸ் மை கேள்... சரி வா காபி சாப்பிடலாம்... ஆறிவிடப்போகுது..” என்றுவிட்டு தன் தேநீர் கோப்பையை கையில் எடுத்தாள் சஞ்சனா... மற்றவர்கள் அவளைத் தொடர்ந்தனர்... இடையில் ஶ்ரீ

“ஹேமா.. ராஜூ அண்ணாவிடம் கேட்டு ரிஷி சாருடைய மொபைல் நம்பரை வாங்கித்தாவேன்....”

“உன்கிட்ட தான் ராஜோட நம்பர் இருக்கே.... நீயே கேளு....”

“இல்லை ஹேமா அது வந்து....” என்று ஶ்ரீ இழுக்க அவளது மனநிலை புரிந்தவள்

“இரு நானே கேட்டு வாங்கித் தருகிறேன்” என்றுவிட்டு ரித்வியிடம் இருந்து அவனது தொலைபேசி இலக்கத்தை பெற்றுக்கொண்டவள் அதனை ஶ்ரீயிற்கு வாட்சப் செய்தாள்....

உடனே அழைக்க முயன்றவளை தடுத்த ஹேமா
“ஶ்ரீ இப்போ வேணாம்... அவங்க பி.சியாக இருப்பாங்க.... நீயும் இன்னும் டிஸ்டர்ப்டா தான் இருக்க....அதனால நைட் அவங்களுக்கு கூப்பிடு... அவங்களும் ப்ரீயா இருப்பாங்க... உன்னாலும் ப்ரீயா பேச முடியும்... மறக்காமல் இந்த வீக் எண்ட் அவங்களை லஞ்சிற்கு இன்வைட் பண்ணு... ஓகேயா???” என்ற அவளது யோசனை ஏற்றுக்கொண்டாள் ஶ்ரீ.. மூவரூம் காபி அருந்திவிட்டு ஆபிசிற்கு சென்றனர்...

மாலை வேலை முடிந்து வந்ததும் ஶ்ரீ அன்றைய நாள் தந்த கலைப்பில் தூங்கிவிட்டாள்.....
இரவு ஒன்பது மணியளவில் கண்முழித்தவளுக்கு அப்போது தான் ரிஷியுடன் பேச வேண்டும் என்ற நியாபகம் வந்தது...
விரைந்து ரிஷியின் இலக்கத்திற்கு அழைத்தவள் அவன் அழைப்பை எடுக்கும் வரை காத்திருக்க மூன்றாவது ரிங்கில் போனை அட்டென்ட் செய்து விட்டான்..

“ஹலோ சொல்லு ஶ்ரீ.... என்ன இந்த நேரத்துல..??” என்று அவன் கேட்க அவனது கேள்வியில் குழம்பியவள் மீண்டும் இலக்கத்தை சரி பார்க்க அது சரியாகவே இருந்தது.. அதற்குள் நான்கைந்து ஹலோக்களை அவன் சொல்லிவிட அதற்கு பதிலளிக்கும் முகமாக

“ஹலோ சார்... நான் ஶ்ரீதான்யா பேசுறேன்..”

“தெரிகிறது ஶ்ரீ... சொல்லு....”

“உங்களுக்கு எப்படி சார் என்னோட நம்பர் தெரியும்??” என்று தன் குழப்பம் பற்றி அவனிடம் தெளிவு பெற முயல அப்போது தான் தன்னுடைய மடத்தனத்தை உணர்ந்தான் ரிஷி..

முதல் நாள் ஶ்ரீயை அவளது வீட்டில் இறக்கிவிட்டு வந்ததும் அவனால் இருப்புகொள்ள முடியவில்லை.... அவளது நலம் பற்றி அறிய முயன்றது அவனது உள்ளம்... அப்போது தான் அவளின் தொலைபேசி இலக்கம் தன்னிடம் இல்லை என்பதை உணர்ந்தான் ரிஷி..... அவளது இலக்கத்தை எவ்வாறு பெறுவது என்று யோசிக்கையில் அவனுக்கு பளிச்சென்று யோசனை தோன்றியது... உடனே ரித்வியின் அறைக்கு சென்றவன் அவனிடம் ஏதேதோ காரணம் சொல்லி அவனின் போனைப் பெற்றவன் அவனது போனில் இருந்து ஶ்ரீயின் நம்பரை வாட்சப் செய்தான்.. பின் சென்ட் ஹிஸ்டரையை அழித்தவன் திரும்பி ரித்வியின் போனை அவனிடமே கொடுத்துவிட்டான்... இவ்வாறு நம்பரை பெற்றுக்கொண்டவன் அவளுக்கு அழைக்க அவள் ஹலோ என்று சொன்னதும் அழைப்பினை துண்டித்துவிட்டான்.... அவளது பதில் அவனுக்கு தேவையான பதிலை கூறிவிட அமைதியடைந்தான் ரிஷி...
இந்த காரணத்தை கூற முடியாத காரணத்தால் அவள் நம்பும்படியாக ஒரு காரணத்தை கூறினான் ரிஷி...

“ட்ரூ காலரில் உன்னோட பெயர் விழுந்தது... அப்படி தான் தெரியும்...” என்று சமாளிக்க அன்று இருந்த மனநிலையில் அவள் வேறேதும் கேள்விகள் கேட்கவில்லை.. இதே வேறு நாட்களாய் இருந்திருந்தால் அவனை கேள்விகளாலேயே திணறடித்திருப்பாள்..

“சொல்லு ஶ்ரீ.. என்ன விஷயம்...??”

“சார்... நீங்க கம்மிங் சண்டே ப்ரீயா??”

“ஏன் ஶ்ரீ..??”

“சொல்லுங்க சார்..”

“ஆமா... எதுக்கு கேட்கிறாய்???”

“அப்போ சண்டே எங்ககூட லன்சுக்கு ஜாயின் ஆகுறீங்களா சேர்...??”

“உங்க கூடனா யாரு யாரெல்லாம் ஶ்ரீ..??”

“ராஜூ அண்ணா, நீங்க, பிறகு என்னோட ப்ரெண்ட்ஸ்..”

“யா...ஸுவர்...எங்க லன்சுக்கு போறீங்க..??”

“இன்னும் டிசைட் பண்ணலை சார்... பண்ணிட்டு சொல்லுறேன்..”

“ஓகோ...”

“சார் தாங்கியூ சார்...நீங்க பண்ணது ரொம்ப பெரிய உதவி... அந்த நேரத்தில் நீங்க மட்டும் அங்கே வரவில்லையென்றால் என்னோட நிலையை நினைத்துப்பார்க்கக்கூட முடியவில்லை..”

“ஶ்ரீ.. நீ இன்னும் அதை விடவில்லையா...?? அந்த சம்பவத்தை உன்னை நேற்றே மறக்கச்சொன்னேன்... நீ ஏன் மறுபடியும் அந்த சம்பவத்தை நியாபகப்படுத்தி உன்னை நீயே வருத்திக்கற??? பாஸ்ட் இஸ் பாஸ்ட்... ஜஸ்ட் லீவ் தட் அன்ட கோ அ ஹெட்.. புரிகிறதா??”

“ஓகோ சார்... ஐ ட்ரை டூ இரேஷ் தோஸ் மெமரீஸ்.. “

“தாட்ஸ் குட் மை கேள்...”

“சரி சார் நான் வெனியூ கன்போர்ம் பண்ணிட்டு உங்களுக்கு இன்பார்ம் பண்ணுறேன்... பாய் சார்....டேக் கேர்...” என்றுவிட்டு அழைப்பை துண்டித்தாள் ஶ்ரீ..
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN