நாம்-3

sagimoli

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
அத்தியாயம் -3.


சில மனஸ்தாபங்கள் இருந்தாலும் பானுமதிக்கு எப்போதும் இளா பனியை விட ஒருப்படி மேல் தான். பின்ன தன்னுடைய கார்பன் காப்பியாயிற்றே.

பானுமதியும் மனதில் பட்டதைப்
பட்டென்று பேசுபவர். கொஞ்சம் கோபக்காரி. ஆனால் குடும்பம் தான் பஸ்ட் பின்ன தான் தன் விருப்பங்கள் எல்லாம்......

அக்கா, எல்லாரும் முதல பட்டு புடவைப் பார்க்கப் போலாம் என்றார், சகாதேவன்.

நீங்க போங்க தேவா நான் ஒரு பத்து நிமிஷத்துல வந்துவிடுறேன் என்று போன் பேசிக்கொண்டே போய்விட்டார்.

எல்லாரும் புடவை எடுப்பதில் ஆர்வமாய் இருந்தனர். நல்ல நேரம் முடியறத்துக்குள்ள வாங்க முகூர்த்தப் புடவை எடுத்துடலாம்,வாங்க என எல்லோரும் அழைக்க எல்லாம் அங்கு சென்றனர்.

அக்கா நல்ல டார்க் கலரா எடுத்துப் போடச்சொல்லுங்க என்றார் ,பங்காளிப் பெண் ஒருவர். பனி நல்ல கலர் ல என்றார் .

இளாக்கு புடவை எடுப்பதில் எல்லாம் அவ்வளவு ஆர்வம் இல்லை , முதலில் எந்தப் புடவை அவளுக்கு பிடிக்கிறதோ அவ்வளவு தான் , பின் வேறு எந்த அழகானப் புடவை காண்பித்தாலும் நோ தான் என்பாள்.

எல்லாப் பெண்களும் அவர்களுக்குப் பிடித்ததை சாரதாவிடமும் சரண்யாவிடமும் திணித்துக் கொண்டிருக்க, வாகினி அமுதனிடம் மேல் படிப்பைப்பற்றி பேசிக்கொண்டிருந்தாள்.

' அத்த எங்க போனாங்க, வீட்ல முதல் கல்யாணம் பனிக்கு
ஸாரி சேலக்ட் பண்ணாம எங்க போனாங்க'.

இளா தன் அம்மாவிடம் அத்தைப்பற்றி கேட்டதிற்கு சாரதா கண்ணிலே அவங்க வர கூடாது என்றார்.

இளாக்கு சுர் என்று கோபம் வந்தது. தன் அத்தையை தேடிச்சென்றவள், அவர் கடையின் வரவேற்பறையில் அமைதியாக அமர்ந்துக்கொண்டிருந்தார்.

அத்த இங்க என்னப் பண்ணிட்டு இருக்கீங்க.

சும்மா தான் இளா இருக்கேன்.

அத்த அங்க உங்க மருமகளுக்கு புடவை எடுங்குறாங்க வந்து செலக்ட் பண்ணாம என்ன பண்ணிட்டு இருக்கீங்க இங்க.....

நா வரக்கூடாது இளா. நீ போய் உனக்கு பிடிச்சதா வாங்குப் போ என்றார்.

இப்ப நீங்க வரப்போறீங்களா இல்லையா இல்ல நா இப்ப கத்தி ஆர்பாட்டம் போடவா என்றாள்

சொன்னப் புரிஞ்சுக்க ,இளா சும்மா சின்னப் பிள்ள மாறி , என்றார்.

இப்ப நீங்க அங்க வரல நான் கல்யாணத்துக்கு வர மாட்டேன் , என்னப் பத்தி தெரியும்ல என்றாள்.

போன் பேசுவதற்காக அங்கு வந்த அமுதன் இரண்டுப் பேரின் சத்தம் கேட்டு, அம்மா!!! என்ன ஆச்சு எதனா பிரச்சனையா....... என்றான் அமுதன்.

"அம்மா அம்மா னு கொஞ்சினால் மட்டும் போதாது , நம்மள சுத்தி என்ன நடக்கிறது நமக்கு யாரு முக்கியமோ அவங்க நம்மளோட ஒவ்வொரு முக்கியமான நிகழ்வுகள் எல்லாத்துலயும் சமமாய் மதிக்கப்படுறாங்களானு அப்ப அப்ப பாக்கணும்", என்று அமுதன் கேட்கும்படியாகத் தன் அத்தையைப் பார்த்துக்கூறியவள் வெடுக்கென்று சென்றுவிட்டாள்.

அம்மா, இப்ப எதுக்கு அந்த ராங்கி என்ன திட்டிட்டுப் போறா... என்றான்.

பானுமதிக்கு தான் ஒருமாதிரி ஆகிப் போனார்.

ஆமா... நீங்க எதுக்கு இங்க உக்காந்து இருக்கீங்க, அங்க வராம... என்றான்.

பானுமதி சின்ன களக்கத்துடன் அமுதனைப் பார்தார்.

அமுதனுக்குப் புரிந்துப்போனது....

அம்மா வாங்க என் கூட.. என்றான் கோபமாக...

அமுதனின் கோபம் அறிந்தவர் எதுவும் பேசாமல் பின் சென்றார்.

பானுவை அங்கு பார்த்தவர்கள் தங்களுக்குள் கிசுகிசுப்பாய் பேசிக்கொண்டிருந்தனர்.

எதனையும் காதில் கேட்காதவன் , எங்க அம்மா எது எடுக்குறாங்களோ அது தான் பனி கட்டனும் கட்டுவா, என்று கோபமாகக் கூறினான்.

அமுதனைப் பற்றி அங்கு இருந்தவர்களுக்கு நன்கு தெரியும் ஆதலால் எதுவும் கூறாமல் அமைதி ஆகினார்.

சூழலை இயல்பாய் ஆக்கியது என்னவோ இளா தான். அத்த அங்க பாருங்களேன் அந்த எல்லோ ஸாரி நல்லா இருக்குள என்று ஆரம்பித்தவள், அனைவரின் பார்வையும் அங்கு சென்றதில் சூழல் இலகுவானது.

முடிவில் அடர் சிவப்பு
நிற புடைவை முகூர்த்ததிற்கு எடுக்கப்பட்டது.பின்பு இளா சரண் வாகினி மூவருக்கும் ஒரே மாறியான புடவையை இளா பானுமதியை வைத்தே சேலக்ட் பண்ண வைத்தாள்

பின்பு மறுவீடு, பத்திய விருந்து, ரிஷப்சன், சாந்திமுகூர்த்தம் , என சுமார் பத்து பட்டு புடவைகள் எடுக்கப் பட்டன.

அமுதனுக்கு வேறும் 15 நிமிடத்தில் பட்டு வேட்டியும் சந்தன நிற சட்டையும் முகூர்த்தற்கு எடுக்கப்பட்டது.

பின்பு reception ku அமுதன் கோர்ட் வேண்டாம் என்று சொன்னதால் வேட்டியும் குர்தா டைப் டிரஸ் எடுக்கப்பட்டது.

பின்பு அருகிலிருக்கும் நகைக்கடைக்கு தாலி எடுக்கச் சென்றனர். அவர்கள் வழக்கப்படி அணியும் தாலியைச் சரிப்பார்த்தவர்கள் கொடி என்ன டிசைன் வேணும் என்று பனிக்கு கால் பண்ணினார் சாரதா.

அம்மா உங்க இஷ்டம் , இளாட்ட கேளுங்க அவதான இந்த நகையெல்லாம் நல்ல செலக்ட் பண்ணுவா என்றாள்.

சாரதா அதுவும் சரி தான் . இல்லனா வீட்டுக்கு வந்து இது ஓல்டு மாடல் அக்காக்கு இது நல்லா இருக்காது என்று ஒரு இரகளையைக் கிளப்பி விட்டுவிடுவாள்.

இளா இங்க வா , பனி உன்ன செலக்ட் பண்ணச் சொல்லுற கொடிய....

இளா திருதிரு வென முழித்தாள்.
வேற நகை என்றால் தயங்காமல் முன்னே சென்று செலக்ட் பண்ணுவாள்.

என்னடி முழிக்கிற போய் செலக்ட் பண்ணு என்றார் பானுமதி.

இளா அமுதனைப் பார்த்தாள் , என்ன சொல்வான் என்று ., அமுதன் எதுவும் சொல்லாமல் பானுமதியைப் பார்த்துக்கொண்டு இருந்தான்.

அத்த., எனக்கா கல்யாணம் எங்க அக்காக்கு தான இது அக்கா மட்டும் சம்மந்தப்பட்ட விஷியமில்ல அக்காவோட வீட்டுக்காரருக்கும் இருக்குல சோ அவங்களே அவங்க மனைவிக்கு செலக்ட் பண்ணடும். நமக்கு எதுக்குப்பா வம்பு என்றாள் வாயாடி.

அமுதன் இளாவை பார்த்து , வர வர இந்த கழுதைக்கு வாய் கூடிப் போச்சு. ஆன கொஞ்சம் பொறுப்பு வந்து இருக்கோ.. என்றான் மனதில்....

பானுமதி அமுதனைப் பாத்தார். மெல்லியப் புன்னகையுடன் சரிம்மா நான் செலக்ட் பண்றேன் என்றான்.

அனைவருக்கும் மிகுந்த சந்தோஷம், இளாவைப் பார்த்துச் சிரித்தார் பானுமதி.

அமுதன் தனக்குத் தெரிந்த வகையில் செலக்ட் பண்ணிக்கொடுத்தான்.

சிம்பிளாகவும் அழகாகவும் இருந்தது. அனைவருக்கும் திருப்தி
எல்லாம் எடுத்துக் கொண்டு இரவு உணவை உண்டப்பின்பு எல்லோரும் வீடு திரும்பியிருந்தனர்.

சாரதாவிற்கு ஒரே பெருமிதமாக இருந்தது , வந்தவர்கள் எல்லாரும் பரவாலை சாரதா பனிமலர் எந்த ஒரு மறுப்பும் காட்டாம நீங்கப் பாத்த பையனே கட்டிக்கிற. பரவால எந்த பொண்ணுச்சொல்லும் நீங்க எடுத்தா போதும் எந்த புடவைனாலும் ஓகே னு. நல்ல வளர்த்திருக்கீங்க, சாரதா என்றனர்

ஆமா அக்கா..... பனி நாங்க செல்லறதா தான் கேப்பா . ஆனா இந்த சின்னக்குட்டித்தான் சரியான வாயாடி என்னப் பண்ணப்போறாலோ தெரியல என்றுப் புலம்பினார்.

ஒரு வாரம் எப்படி சென்றது என்று வாகினிக்கு ஒன்றும் புரியவில்லை.
இளா நீ ஏன் அம்மா அப்பாக்கு உதவி பண்றது இல்ல பாவம் இல்ல அவங்க என்றாள் வாகினி.

ம்ம்ம்ம் எனக்கு புடிக்காது டி . என்னனு எல்லாம் எனக்கு தெரியல. தூரத்துல இருந்து மாடு ஆடு எல்லாம் இரசிக்கறதோட சரி, என்ன பண்ணுவாங்கனுத் தெரியும் பட் பண்ணமாட்டேன்.

யப்பா இவ்வளவு பிடிவாதம் கூடாது இளா என்று சாரதா கூறினார்.

இளா எதுவும் பேசவில்லை.

பனிமலர் திருமணத்திற்கு முதல் நாள் தான் வந்திருந்தாள். யாரும் எதுவும் கேட்கவில்லை. பனிமலர் மீது,இளாவிற்கு கோபம் தான் மற்ற பெண்கள் எல்லாம் எவ்வளவு சந்தோசமாக இருக்குறாங்க... ஏன் இவ மட்டும் இப்படி இருக்கா. இவளுக்கு ஒருவேள கல்யாணத்துல இஷ்டமில்லையோ.

பிடிக்கலைனா சொல்லிடலாம் ல அம்மா அப்பா எப்பவும் இவ பேச்சுக்கு மதிப்புக்கொடுப்பாங்க. நாம தான் வேண்டாப்பிள்ளை.

ச்சசசச என்ன என்னமோ ஒருநிமிசத்துல நினச்சிடோம். ஆமா பயணக்களைப்புல இருப்பா.

இரவு பட்டனி விருந்து முடிந்து இளா வீட்டினர் மண்டபம் வந்தனர். பனிமலர் வந்ததிலிருந்து இளா மாமா எப்ப வருவாங்க கொஞ்சம் பேசனும்.
அஅஅ அந்த மாடு எப்ப வரும்னு எனக்கு எப்படித் தெரியும் என்று மனதில் நினைத்தவள். என்னடி அவசரம் நாளையில இருந்து நீ அங்க தானா இருக்கப் போற என்றாள்.

விளையாடாத இளா ரொம்ப முக்கியம் டி அவர் போன் வேறு சுச் ஆப் என்று வருகிறது. பிளிஸ் அவரு வந்த உடன் அக்கா உங்கிட்ட பேசனும்னு என்று சொன்னனு மாடிக்கு வர சொல்லுடி யாரும் பாக்காதப்பா என்றாள்.
சரி சொல்லித்தொலைக்கிறேன் என்று தலையில் அடித்துக்கொண்டாள் இளா.

திருச்சியில் அமுதனுக்கு நலங்கு முடிந்து தாலியும் முகூர்த்தப்புடவையும் வைத்து பூஜை செய்யப்பட்டது. பூஜை முடிந்து கிளம்பும் போது பானுமதிக்கு தலைச்சுற்றுவதுப் போலிருந்தது. அவர் விழுவதற்குள் அமுதன் வந்து அவரைப்பிடித்துக்கொண்டான்.

அம்மா அம்மா என்ன ஆச்சு ..... சரண்யா வந்து நாடியை பார்த்தாள்.
அண்ணா ஒன்னுமில்ல சாதாரண மயக்கம் தான். பானுமதி விழித்தப்பின் அவருக்கு மோர் கொடுத்தனர்.

அம்மா இப்ப ஓகே வா இருக்கீங்களா என்றாள் சரண்யா.
அவர் தலையசைப்புடன் என்னனுத் தெரியல சின்ன மயக்கம். சரி வாங்க கிளம்பலாம் எல்லாரும் வெய்ட் பண்ணுவாங்க.... என்றார்.பானுமதிக்கு மனதில் ஒருமாதிரி தான் இருந்தது. எதுவும் காட்டிக்கொள்ளாமல் சிங்காரவேலனின் படத்தைப்பார்த்து எதுவும் கெட்டது நடக்காம நீங்க தாங்க காப்பாத்தனும் என்று மனதார வேண்டிக்கொண்டாள்

சிங்காரவேலன் தன் சிங்காரச்சிரிப்பை வீசிக்கொண்டிருந்தார்.

நாமக்கலில் தான் திருமண ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. மூன்று மணி நேரம் எப்படா முடியும் என்றிருந்தது அமுதனுக்கு. பின்ன திட்ட திட்ட முப்பது நாட்கள் ஆகிறது தன்னவளைப் பார்த்து அந்த ஏக்கம் தான் இவனுக்கு.

அனைவரும் திருமணமண்டபம் வந்தப்பிறகு இளா தான் மாப்பிள்ளைக்கு ஆர்த்தி எடுக்க வேண்டும் . ஆமா இந்த சிடுமூஞ்சிக்கு எங்க அக்காவே ஓவர் இதுல ஆர்த்தி ஒன்னுதான் கொறச்சல் எரும மாடு என்று நினைத்துக் கொண்டு கடமைக்குச் சுற்றினாள்.

ஆர்த்தி எடுத்தப் பின்பு அவள் நகர , அங்கிருந்தவர்களோ வேனி காசு கேளூ அப்ப தான் உள்ள விடுவேனு சொல்லுடா என்று கூற, இவள் இல்ல வேண்டாம் என்றாள். சாரதா அவள் காதில் வந்து இது ஒரு கிண்டல் கலந்த சடங்குடி கேளு என்றார். அவனோ இவள் வாய் திறந்து கேட்டு விடுவாளா என்று பார்ப்போம் என்ற தோரணையில் நிற்க , அவளோ தட்டி மட்டும் அவன் முன்னே கடமைக்கு என்று நீட்டினாள். பின் அவனும் சிரித்துக்கொண்டே இரண்டாயிரம் ரூபாயை இளாவைப் பார்த்துக்கொண்டே போட்டான்.

கடவுளே இவன்ட இப்ப நான் காசுக்கேட்டேனா .ஏன் திரும்ப திரும்ப இவன் கிட்டயே என்ன வந்து நிறுத்தறீங்க. இந்த அம்மா வேற சடங்கு சம்பிர்தாயம் என்று உயிரை வாங்குறாங்க.

இளா தன் அத்தையிடம் அத்த காசு எல்லாம் வேண்டாம் என்று கிசுகிசுத்தாள். எனக்கு தெரியாதுப்பா நீயாவது அவனாவது என்று சென்றுவிட்டார்.

மாப்பிள்ளை வீட்டார் வந்தவுடன் எல்லாரும் நாளை திருமணத்திற்கான ஏற்பாடுகளில் இறங்கினர். எல்லாம் முடிந்து அனைவரும் தூங்கச் செல்ல இரவு ஒன்றானது.

இளா போய் அக்காகிட்ட படுத்துக்கோ. எப்படியும் தூங்க மாட்டிங்க.இன்னும் இரண்டு மணி நேரம் தான் மேக்கப் போட ஆளுங்க வந்துருவாங்க... சும்மாவது போய் படுங்க என்றார் சாரதா...

அய்யோ அந்த மாடுகிட்ட பேசுனும்னு சொன்னாலே. சரி மா என்று சொன்னவள். சாரதா மறைந்தப்பின்பு அமுதன் அறையை நோக்கிச் சென்றாள்.

கதவு தட்டும் ஒலிக்கேட்டு ,யாரு இப்ப என்று எண்ணி கதவைத்திறந்தவன் அங்கே இளா நிற்கவும்..
என்ன என்பது போல பார்த்தான், அவன் கையைப்பிடித்தவள் அதில் அவன் கொடுத்த ரூபாயைத்திணித்தவள்.யாருடைய காசும் எனக்கு தேவையில்லை. அப்புறம் அக்கா உங்கிட்ட அவசரமா பேசனும் என்று சொன்ன பால்கனிக்கு வரச்சொன்ன என்று சுவரைப்பார்த்துக்கூறியவள்.
அவன் பதில் தரும் முன் ஓடிவிட்டாள்.
அமுதனுக்கு இளா மீது அவ்வளவு கோபம் ,எதுவும் கூறாமல் மேலே சென்றான்.

மறுநாள் அதிகாலை எல்லா வேலையும் சிறப்பாகச் சென்றது இளா வாகினி சரண்யா என அனைவரும் ஓரே மாறியாக புடவை அணிந்திருக்க, பனிமலர் சிகப்பு நிறப்புடவையில் தேவதைப் போல இருந்தாள்.

அமுதன் பட்டுவேட்டியில் ராஜத்தோரனையில் இருந்தான். ஆனால் இருவர் முகமும் கல்யாணச்சந்தோஷத்தில் இருப்பதாய் வாகினிக்கு தோன்றவில்லை.

இளா ஏன்டி அக்கா மாமா இரண்டுப்பேரும் ஒருமாறி இருக்காங்க.என்ன ஆச்சு இரண்டுப்பேருக்கும் என்றாள்.

நேற்று தான் நினைத்தை எண்ணி வருந்தியவளாக ஒன்னுமில்லடி பயண அழுப்பாய் இருக்கும் என்றாள்.

ஐயர் சொல்லும் மந்திரத்தை கடமைக்கே என்று இருவரும் கூறிக்கொண்டிருந்தனர்.

அர்ச்சதைத் தட்டை அனைவருக்கும் கொடுத்துவிட்டு ஐயரிடம் கொடுத்த சரண்யா இளாப் பக்கத்தில் நின்று கொண்டாள்.

வாகினி தன் பெற்றோரிடம் சென்று அமர்ந்துக்கொண்டாள்.

கெட்டிமேளம்....கெட்டிமேளம் என ஐயர் கூற யாரும் எதிர்ப்பாக்காத வண்ணம் அமுதன் இளவேனில் கழுத்தில் மங்களநாணை எந்தவித படபடப்பும் இல்லாமல் நிதானமாக மூன்றுமுடிச்சைப் போட்டான்.


தொடரும்...
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN