மாயம் 18

Anu Chandran

நிகரில்லா வானவில் எழுத்தாளர்
Staff member
காதலனின்
முதல் காதல் பரிசு
காதலின் ஆழத்தை
எடுத்துரைக்க
காதலியோ
அவன் வாய்வார்த்தைக்கு
மட்டும்
மயங்கியிருப்பதை
அறிவானா
அந்த காதல் கிறுக்கன்??


சுருக்கு பையினை போல் ராப் செய்யப்பட்டிருந்த அந்த பரிசுப்பொதியை பிரித்தாள் ஶ்ரீ. அதனுள் ஒரு இளஞ்சிவப்பு நிற பரிசுப்பெட்டியிருந்தது...அதனை கையில் எடுத்தவள் அதனை சுற்றி நீலநிற ரிப்பனால் முடிச்சிடப்பட்டிருந்த முடிச்சினை கழற்றி அந்த பெட்டியின் மூடியினை அகற்றிய வேளையில் பெட்டி நான்குபுறமும் விரிந்து நின்றது...

பெட்டியின் நான்கு பக்கங்களும் இதயவடிவான கார்ட் போட்டினால் இணைக்கப்பட்டிருந்தது.... நான்கு இதயங்களிலும் நான்கு பக்கங்களிலும் கண்ணாடியால் அமைக்கப்பட்ட பசுல்(puzzle) போன்ற எட்டு துண்டுகள் இணைக்கப்பட்டிருந்தது. நடுவில் இன்னொரு சிறு பரிசுப்பொதியும் ஒரு ஹேண் மேட் க்ரீட்டிங் கார்ட்டும் இருந்தது...

க்ரீட்டிங் கார்டின் மேல் ஒரு ஒற்றை ரோஜா பொருத்தப்பட்டிருந்தது.. அந்த சிறு பரிசுப்பொதியை திறந்தவள் கண்டது ஒரு புத்தகமும் ஒரு கார்ட் கோர்வையும்...
கார்ட் கோர்வையை கையில் எடுத்தாள் ஶ்ரீ..

அந்த கோர்வை ரிபனினால் முடிச்சிடப்பட்டு சாவிக்கொத்து போன்ற அமைப்பில் இருந்தது...
மொத்தமாக பத்து கார்ட் இருந்தது அந்த கோர்வையில்... ஒவ்வொரு கார்ட்டிலும் இரண்டு வரி கவிதைகள்...
முதலாவது கார்டில்

“ ஜீவனில் கலந்தவளுக்கு இந்த பித்தனின் காதல் கடிதம்”

என்று இருந்தது...
இரண்டாவது கார்டில்

“மயங்கியது என் மனம் உன் குரலாலே...” என்றிருந்தது..

மூன்றாவது கார்டில்

“இமைக்க மறந்தன என் விழிகள் உன் குறுநகையாலே..”

நான்காவது கார்டில்

“துடிக்கும் இதழ்களை ருசிக்க விரும்பும் வண்டாய் இந்த காதல் கிறுக்கன்”

ஐந்தாவது கார்டில்

“ உன் மனதை வேட்டையாட ஆயுதம் வேண்டி தவமிருக்கிறான் இந்த காதல் கிறுக்கன்”

ஆறாவது கார்டில்

“உன் கரம் பிடிக்கும் நாளுக்காய் ஏங்கி நிற்கிறது என் நாட்காட்டி...”

ஏழாவது கார்டில்

“ சித்தம் கலங்கியவனை தெளிவிக்க வந்த என் மருத்துவிச்சி நீ...”

எட்டாவது கார்டில்

“ நீ தலை கோதிட உன் மடியில் நான் உறங்கும் நாள் எப்போது??”

ஒன்பதாவது கார்டில்

“என் ஜீவனை வதைத்து மகிழ வந்த என் அழகான ராட்சசி நீ...”

பத்தாவது கார்டில்

வார்த்தைகள் பலகோடி உண்டேனும் என் காதலின் ஆழத்தை உணர்த்த அவை போதவில்லை.. வாழ்நாள் முழுவதும் காதலை உணர்த்த காத்திருக்கும் இக்கிறுக்கனுக்கு உன் பதிலென்ன??”

என்று பத்தாவது கார்டுடன் அந்த கார்ட் கோர்வை நிறைவடைந்திருந்தது...
அந்த பெட்டியிலில் இருந்தே இன்னொரு டயரி போன்ற புத்தகத்தை வெளியே எடுத்தவள் அதை திறந்தாள்.

முதல் பக்கத்தில்
“காதல் கிறுக்கனின் காதல் பரிசு” என்று நடுவில் கையால் சிவப்புநிற மைகொண்டு எழுதப்பட்டிருக்க

கீழே “இப்படிக்கு காதல் கிறுக்கன்” என்று கையொப்பமிடப்பட்டிருந்தது...

அந்த பக்கத்தை பிரட்டியவள் கண்டது அந்த புத்தகத்தின் நடுவே இதயவடிவில் ஆழமாக வெட்டப்பட்டு அதனுள் ஒரு மோதிரப்பெட்டி வைக்கப்பட்டிருந்தது...
அதை திறந்து பார்த்தபோது அதனுள் ஒரு டைட்டானியத்தால் செய்யப்பட் மோதிரம் டாக் செய்யப்பட்டு இருந்தது.. அதை கையில் எடுத்த ஶ்ரீ டாக்கில் இருந்ததை வாசித்தாள்.

“காதல் கிறுக்கனின் இதயத்துடிப்பாய் நீ..” என்று எழுதியிருந்தது.
.
அந்த டைட்டானியம் மோதிரத்தின் நடுவில் இதயத்துடிப்பின் பிம்பமொன்று இருந்தது... அதனை தடவிக்கொடுத்தவள் அதில் இதழ் பதித்தாள்...
பின் கிரீட்டிங் கார்ட்டை விரித்து பார்க்க அதன் நடுப்புறம் மூன்று தட்டுக்களாய் இருக்க முதல் தட்டில் ஐ என்றும் இரண்டாவது தட்டில் லவ் யூ என்றும் இருபுறமும் ஒரு ஹார்ட்டும் இணைக்கப்பட்டிருந்தது...மூன்றாவது தட்டில் ஒரு ஆணும் பெண்ணும் கைகோர்த்த நிலையில் அமர்ந்திருப்பது போல் அந்த வாழ்த்தட்டை தயாரிக்கப்பட்டிருந்தது.. மீதமிருந்த இடைவெளியில் சிறு சிவப்பு நிற ஹார்ட்டுக்கள் வரையப்பட்டிருந்தன... அதை தடவிக்கொடுத்தவள் அதனை ஒருபுறமாக வைத்துவிட்டு அந்த பசுல் போன்ற கண்ணாடித்துண்டுகள் எட்டையும் கையில் எடுத்தவள் அதை பொருத்தும் வேலையில் இறங்கினாள்..

சில நிமிட முயற்சியின் பின் அதனை பொருத்தி பார்த்தவளுக்கு ஆச்சர்யம்.... அதில் ரிஷியும் ஶ்ரீயும் காரில் அமர்ந்திருப்பது போன்றதொரு புகைப்படம் இருந்தது... அதில் ரிஷி அவள் கன்னத்தில் முத்தமிடுவது போலும் அதை ஶ்ரீ கண்மூடி ரசிப்பதாகவும் அந்த புகைப்படம் இருந்தது... அதை பார்த்தவளுக்கு குழம்பம் தான் மிஞ்சியது...

“இந்த போட்டாவை அய்த்தான் எப்போ எடுத்தாரு??? நிச்சயமா இது இன்னைக்கு எடுத்த போட்டோ இல்லை... இதில நாம கண்ண மூடிட்டு இருக்கோம்...நாம எப்போ அய்த்தான் கிஸ் குடுத்ததை கண்ணை மூடிட்டு வாங்குனோம்??? இந்த அய்த்தான் ஏதும் கிராப்பிக்ஸ் பண்ணிட்டாறா?? இல்லையே.. இந்த போட்டோ ரொம்ப லைவ்வா வேற இருக்கே... இதுல நான் சாரி கட்டியிருக்க மாதிரி இருக்கு......... நாம எப்போ லாஸ்டா சாரி கட்டுனோம்???” என்று யோசித்தவளுக்கு பதில் தான் கிடைக்கவில்லை....
எப்படியாவது பதிலை தெரிந்துகொள்ளும் நோக்கத்துடன் ரிஷியை அழைத்தாள் ஶ்ரீ.

முதல் ரிங்கிலேயே அழைப்பை எடுத்தான் ரிஷி...
“அய்த்தான் எனக்கு ஒரு டவுட்டு???”

“ஹாஹா நான் ட்ரைவ் பண்ணிட்டு இருக்கேன் அம்லு... இப்போ கட்டாயம் உன்னோட டவுட்டை கிளியர் பண்ணணுமா..??”

“ஓ.... சரி நீங்க இப்போ நான் சொல்லுற மாதிரி செய்ங்க...”

“சொல்லு அம்லு...”

“காரை எங்கயாவது ஓரமா பார்க் பண்ணுங்க....”

“அம்லு ப்ளைட்டுக்கு லேட் ஆகிடும்மா....”

“ஐயோ அய்த்தான் என் நிலைமையை புரிஞ்சிக்கோங்க... எனக்கு மண்டையே வெடிச்சிரும்போல இருக்கு ப்ளீஸ்...”

“சரி சொல்லு.. என்ன டவுட்டு??”

“நீங்க வண்டியை ஓரமா பார்க் பண்ணிட்டீங்களா??”

“இது வேறயா. கொஞ்சம் இரு....”

“சரி இப்போ சொல்லு... என் அம்லுக்கு என்ன டவுட்டு..??”

“அய்த்தான் அந்த போட்டோ எப்போ எடுத்தது..??”

“கிப்ட் பிரிச்சி பார்த்துட்டியா??? எப்படி இருக்கு??”

“ஆமா.. இப்போ நான் கேட்டதுக்கு பதிலை சொல்லுங்க அய்த்தான்.. ப்ளீஸ்...” என்று ஶ்ரீ கெஞ்ச அந்தப்புறம் ரிஷி சிரித்தான்..

“உண்மையாவே உனக்கு அந்த ஸ்நெப் எங்க எடுத்திருப்பேனு கண்டுபிடிக்கமுடியலையா??? நீ ஈசியா கண்டுபிடிச்சிடிச்சி என்கூட சண்டை போடுவனு தானே நான் நினைச்சேன்..”

“உங்க கிப்ட பார்த்து என் மைண்ட் ப்ரீஸ் ஆகிரிச்சு... அதுனால இப்போ கண்டுபிடிக்க முடியலை.. நாளைக்கு காலையில நிச்சயம் கண்டுபிடிச்சிருவேன்..”

“அப்போ நாளைக்கு காலையிலேயே கண்டுபிடிச்சிக்கோ அம்லு... இப்போ ஆளை விடு...”

“மிஸ்டர் ரிஷி... எனக்கு சஸ்பன்ஸ் சரிவராதுங்குறதால தான் உங்ககிட்ட கெஞ்சிட்டு இருக்கேனே தவிர கண்டுபிடிக்கமுடியாமலில்லை.. நீங்க ஏதும் சொல்லவேணாம்... நானே கண்டுபிடிச்சிக்கிறேன்... பாய்...” என்றுவிட்டு கடுப்புடன் அழைப்பை துண்டித்துவிட்டாள் ஶ்ரீ..

ரிஷயோ மீண்டும் ஶ்ரீக்கு முயற்சிக்க அவளோ அழைப்பை ஏற்கவில்லை... இரு விநாடிகளின் பின் ஶ்ரீயின் மொபைலுக்கு வாய்ஸ் மேசேஜ் ஒன்று வந்தது..

அதில் ரிஷி
“என்னோட அம்லு என்கிட்ட கோவிச்சிக்கிட்டாங்களா???? அத்தான் பாவமில்ல.. கொஞ்சம் தயவு காட்டலாமே.... அத்தான் இன்னும் ஒரு வாரத்திற்கு உன்னை பார்க்கமுடியாது... இப்போ கோவிச்சிக்கிட்டா அத்தான் பாவமில்லையா?? அத்தானுக்கு நீங்க கோவிச்சிக்கிட்டா எந்த வேலையும் ஓடாது அம்லு... இந்த அத்தானை மன்னிச்சிருங்க ப்ளீஸ்..” என்று அந்த வாய்ஸ் மெசேஜில் இருக்க அதை கேட்டவளுக்கு அவனது கெஞ்சல் கூட ஒரு கிறங்கலை தந்தது... பதிலேதும் அனுப்பாமல் அந்த வாய்ஸ் மேசேஜை மீண்டும் கேட்டாள் ஶ்ரீ... அப்போது ரிஷி அழைக்க அழைப்பை எடுத்து காதில் வைக்க அந்தபுறம் பல முத்தக்குவியல் இடைவெளியின்றி பறந்துவந்துக்கொண்டிருந்தது.. அதை பெற்றவளுக்கு முகம் சிவந்தது... பதிலேதும் சொல்லமுடியாமல் கீழுதட்டை கடித்தபடி இருந்தாள் ஶ்ரீ....

“இப்போ கோபம் எல்லாம் போச்சா அம்லு....?? அத்தானை மன்னிச்சிட்டியா???” என்று கேட்டவனுக்கு ம்ம் என்ற முணுமுணுப்புதான் பதிலாக கிடைத்தது...

“என்ன அம்லு சத்தத்தையே காணோம்..?? அம்லு....” என்று ஹஸ்கி வாய்சில் ரிஷி ஶ்ரீயின் பெயரை ஏலம் போட ஶ்ரீயோ

“ஒன்னுமில்லை... நல்லபடியா ட்ரிப்பை முடிச்சிட்டு வந்து சேருங்க... வேலையில என்னை மறந்தீங்க அப்புறம் தெரியும் இந்த ஶ்ரீயாருனு.. பாய் குட் நைட்..” என்றுவிட்டு ஶ்ரீயே மறுபடியும் அழைப்பை துண்டித்தாள்....

அவள் அழைப்பை துண்டித்துவிட்டு மொபைலை தூக்கிபோட்டவள் அந்த பசுல் போட்டாவை எடுத்து பார்த்து மீண்டும் யோசித்தாள்... ரிஷியோ அவளது மிரட்டலை எண்ணி சிரித்தபடியே ஏர்போட்டை அடைந்தான்...

இவ்வாறு ஶ்ரீயின் யோசனை அந்த புகைப்படத்தை பற்றியும் ரிஷியின் யோசனை ஶ்ரீயின் உரையாடலை எண்ணி இரவை கழித்தனர்.
அதிகாலையில் கண்ணயர்ந்தவளை அறைக்கதவு கதவு தட்டும் சத்தமே எழுப்பியது.... மெதுவாக ஒரு கண்ணை மட்டும் திறந்து நேரத்தை பார்க்க அது இரண்டு மணியென்று காட்டியது....

“யார்டா இது நடுராத்திரியில வந்து கதவை தட்டுறது??? என் தாய்க்குலத்திற்கு தூக்கம் வராம என்னை திட்டி டைம் போக்க வந்திருப்பாங்களோ....” என்று தனக்குள்ளே பேசிக்கொண்டவள் மீண்டும் கண்களை மூடிக்கொண்டு

“நீங்க தேடிவந்த வாடிக்கையாளர் இப்போது ஆழ்ந்த நித்திரையில் இருப்பதால் தயவு செய்து பொழுது புலர்ந்ததும் அவரை தேடி வருமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறீர்கள்....”

“தான்யா... மணி எட்டாச்சிடி... ஆபிஸ் போற ஐடியா இல்லையா அம்மணிக்கு??? ” என்று ராதா குரல் கொடுக்க கட்டிலில் எழுந்து அமர்ந்தாள் ஶ்ரீ..

“ஐயோ மணி எட்டாச்சா... கிளாக்கில் டைம் நின்றுருச்சா.... ஓ மை காட்.. இன்னைக்கு அந்த டமார் தலையன் வேற ஏர்லியா வரச்சொன்னானே... இப்போ என்ன பண்ணுறது???” என்றபடி அமர்ந்திருந்தவளை மீண்டும் கலைத்தது ராதா குரல்..

“எழுந்திட்டியா இல்லை மறுபடியும் தூங்கிட்டியா?? தினமும் இப்படி கத்தி கத்தியே என் வயசாயிடும் போலிருக்கு... சீக்கிரம் எந்திரிச்சி ரெடியாகு...இல்லைனா ஆபிசுக்கு லேட்டாகிடும்...” என்றுவிட்டு ராதா தன் வேலையை கவனிக்க செல்ல கட்டிலில் எழுந்து அமர்ந்தவள் அருகில் மேசையில் இருந்த ரிஷி கொடுத்த பரிசை பார்த்தாள்.. அந்த க்ரீட்டிங் கார்டும் அந்த புகைப்படமும் அந்த கவிதை தொகுப்பும் நேற்றைய நாளின் நினைவு மீட்டெடுத்தது....

“ஆனாலும் அய்த்தான் உன்கிட்ட இருந்து நான் இப்படியொரு கிப்டை எதிர்பார்க்கலை... ரொம்ப மெனக்கட்டு இந்த கிப்டை எனக்கு செலெக்ட் பண்ணியிருக்க... ஆனா இதை நீ பக்கத்துல இருக்கும் போது நான் பிரிச்சி பார்த்திருந்த இன்னும் நல்லா இருந்திருக்கும்... பரவாயில்லை விடு இந்த கிப்டை முதல்ல இருந்த மாதிரியே வச்சிடுறேன்... நீ பக்கத்துல இருக்கும் போது மறுபடியும் பிரிச்சு பார்த்து இந்த கிப்டை கொடுத்த உனக்கு நான் நிறைய கிப்ட் தாரேன்..” என்று தனக்குள் உரைத்தவள் நேரமாவதை உணர்ந்து குளியலறைக்குள் புகுந்து கொண்டாள்..

ஆபிஸ் தயாராகி ஹாலிற்கு வந்தவள் தந்தையையும் அனுவையும் தேட அவர்கள் முன்னமே சென்றுவிட்டதாக கூறினாள் ராதா..
சாப்பிட அமர்ந்த ஶ்ரீ தனக்கு வேண்டியதை பரிமாறிக்கொள்ள அவள் அருகில் அமர்ந்தாள் ராதா..

“என்ன மிசஸ் ராஜேஷ்குமார்??? என்ன ரொம்ப சைலண்டா இருக்கீங்க... எப்பவும் வாய் ஓயாம என்னை திட்டிட்டே இருக்க அந்த வாயை எந்த கடையில அடகு வச்சீங்க?? வாட் இஸ் த மேட்டர்??

“ஒன்னும் இல்லை தான்யா....”

“வாய்தான் அப்படி சொல்லுது... ஆனா உங்க முகமே சரியில்லையே... என்னாச்சு மம்மி... ஏன் ஒரு மாதிரி இருக்கீங்க...??” என்றவாறு தன் ஒரு கையால் அன்னையின் கையை பற்றினாள் ஶ்ரீ....

“தான்யா அம்மா உன்னை ரொம்ப திட்டுறேனா??” என்ற கவலை தோய்ந்த குரலில் ராதா வினவ

“எதுக்கு தாய்க்குலமே இப்போ இப்படி ஒரு கேள்வி??”

“இல்லை... நீ இன்னும் கொஞ்ச நாள்ல இன்னொரு வீட்டுக்கு போயிருவ...”

“அப்படி தான் சொல்லிக்கிறாங்க... சரி இப்போ அதுக்கும் என் மம்மி என்னை ரொம்ப பாசமா திட்டுறதுக்கும் என்ன சம்பந்தம்??”

“இல்லை... உன்னோட புகுந்தவீடு எப்படி இருக்குமோ தெரியலை... சுபா அண்ணியும் மூர்த்தி அண்ணாவும் நல்லவங்க தான்... ஆனாலும் மனசுக்குள்ள ஒரு கலக்கம்...”

“ஐயோ மம்மி கன்பியூஸ் பண்ணுதே...”

“அம்மா உன்னை இனிமே திட்டமாட்டேன்... நீ என்ன கேட்டாலும் அம்மா வாங்கித்தரேன்...”

“எது கேட்டாலுமா???”

“ஆமா தான்யா...சொல்லு என்ன வேணும்??”

“ஒரு பாட்டில் சரக்கும் தொட்டுக்க ஊறுகாயும் வாங்கித்தர்யா மா??” என்று கேட்ட மறுநொடி தாறுமாறாக வசை பாடத்தொடங்கினார் ராதா....
ஆனாலும் அதற்கெல்லாம் அசராத ஶ்ரீயோ தன் சாப்பிடும் வேளையை தொடர்ந்தாள்.
திட்டி ஓய்ந்து முடித்த ராதா “உன்ன எந்த நேரத்துல பெத்தேனோ தெரியலை...... இவ்வளவு திட்டுறேன்...ஏதாவது சொரணை இருக்கா பாரு...”

“பாத்தியா மம்மி உனக்கு என்னை திட்டாட்டி பொழுது போகாது... எனக்கு உன்கிட்ட திட்டு வாங்காட்டி நாள் நல்லாயிருக்காது... அதனால எனை சந்தோஷமா திட்டிக்கோ நான் என்னைக்கும் கவலைபடவே மாட்டேன்... சரியா...
சரி லேட்டாகிடிச்சி... உன்னோட மீதி அர்ச்சனையை ஈவினிங் வந்து வாங்கிக்கிறேன்... இப்போ கிளம்புறேன்..பாய் ஸ்வீட் ஹார்ட்.” என்றுவிட்டு சாவியை எடுத்துக்கொண்டு தன் ஹேண் பேர்க்குடன் ஆபிஸிற்கு கிளம்பினாள்.

இங்கு ராதாவோ
“இவளை திருத்தவே முடியாது... இவளை கட்டிக்கிட்டு என் மாப்பிள்ளையும் அவங்க குடும்பமும் என்ன பாடுபட போறாங்களோ தெரியல.. கடவுளே நீ தான் அவங்களை காப்பாத்தனும்..” என்று கடவுளிடம் ஒரு வேண்டுதலையும் வைத்துவிட்டு தன் வேலையை கவனிக்கத்தொடங்கினார் ராதா...

விரைந்து ஆபிஸ் சென்ற ஶ்ரீ தன் டீம் லீடரிடம் சில பல அர்ச்சனைகளையும் வாங்கிக்கொண்டு தன் கேபினுக்கு திரும்பும் போது அங்கு அமர்ந்திருந்த சஞ்சுவும்
ஹேமாவும்

வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
வாராய் என் தோழி வாராயோ
மணப்பந்தல் காண வாராயோ
மணமேடை தன்னில்
மணமே காணும்
திருநாளைக் காண வாராயோ
மணக்கோலம் கொண்ட மகளே
புது மாக்கோலம் போடு மயிலே
குணக்கோலம் கொண்ட கனியே
நம் குலம் வாழப் பாடு குயிலே
சிரிக்காத வாயும் சிரிக்காதோ
திருநாளைக் கண்டு மகிழாதோ

தனியாகக் காண வருவார்
இவள் தளிர்போல தாவி அணைவாள்
கண்போல சேர்ந்து மகிழ்வாள்
இரு கண் மூடி மார்பில் துயில்வாள்

என்ற பாடலை பாடி ஶ்ரீயை வரவேற்க அவளோ

“என்னடி பாட்டு இது??எதுக்கு இப்போ இதை படிச்சி என்னை கலாய்க்க ட்ரை பண்ணுறீங்க..??”

“ஹே ஹேமா கேட்டியாடி... நாம கலாய்க்கிறோமா??? பாரேன்..”

“ஆமா சஞ்சு.... பாரேன்... என்று அவளும் ஒத்து ஊத கடுப்பான ஶ்ரீ

“ வேணாங்கடி அந்த டமார் தலையன் வேற காச்சு மூச்சுனு கத்தி என்னை டென்ஷனாகிட்டான்... நீங்க வேற உங்க பங்குக்கு ஏதும் செய்து வாங்கிக்கட்டிக்காதீங்க.. சொல்லிட்டேன்..”

“ஓ.. அப்படியா விஷயம்??”என்று சஞ்சுவும் ஹேமாவும் ஒரு சேர ஓ போட அதில் இன்னும் கடுப்பான ஶ்ரீ

“ஏய் என்னடி பிரச்சனை உங்க ரெண்டு பேருக்கும்?? இப்போ என்னான்னு சொல்லப்போறீங்களா இல்லையா??”

“பார்த்தியா சஞ்சு நாம கேட்க வேண்டியதெல்லா அவ கேட்டுட்டு மேடம்க்கு கோபம் வேற வருது...”

“ஆமா ஹேமா நேத்தே பூரா அவங்க வுட்பீ கூட ஊரை சுத்திட்டு இன்னைக்கு இங்கு வந்து ஒன்னுமே தெரியாத பாப்பா மாதிரி முழிக்கிறத பாரு..” என்று ஹேமா கூற அப்போதுதான் அவர்களது கேலிக்கான அர்த்தம் புரிந்தது..
அந்த புரிதல் அவளை வெட்கத்தால் சிவக்கச்செய்தது.... அதில் நாணி கோனி நின்றவளை ஓட்டினார்கள் ஹேமாவும் சஞ்சுவும்....

“சஞ்சு அங்கப்பாரு அங்கப்பாரு.... அந்த அதிசயத்த பாரு.... நம்ம ஶ்ரீ வெட்கப்படுறா.... இந்த அதிசயத்தை யாராவது பாருங்களேன்...” என்று ஹேமா ஓட்ட அவள் முதுகில் ஒன்று வைத்தாள் ஶ்ரீ..

“என்னடி ரொம்பத்தான் பண்ணுற...”

“ஆமா பண்ணுவோம்... எப்பவும் நீ தானே பண்ணுவ.. இன்னைக்கு எங்க டர்ன்...” என்றுவிட்டு மீண்டும் அவளை கேலி பண்ணத்தொடங்கினர் இருவரும்...
பின் நேற்று நடந்ததை பற்றி கேட்டு அறிந்தவர்கள் தங்களது வாழ்த்தை சொல்லவும் மறக்கவில்லை... ட்ரீட் கேட்வர்களிடம் ரிஷி நாடு திரும்பியதும் தருவதாக வாக்களித்தாள். பின் தத்தமது வேலையில் மூழ்கினர் மூவரும்..

மாலை ஆபிஸ் முடியும் வேளையில் ஹேமா
“ஶ்ரீ நாளை நான் லீவு... ஊருக்கு போறதா சொல்லியிருந்தேனே... என்னோட ரிப்போர்ட்டை இன்னைக்கு டீம் லீட் கிட்ட சப்மிட் பண்ணமுடியலை .. அதனால அதை உனக்கு மெயில் பண்ணியிருக்கேன்...நீஅதை ப்ரின்ட்டவுட் எடுத்து டீம் லீட்கிட்ட சப்மிட் பண்ணிடு மறந்திறாத.... சரியா...”

“அதெல்லாம் நான் பார்த்துக்கிறேன்... நீ எப்போ ஊர்ல இருந்து வருவ...?? உன்னை நான் ரொம்ப மிஸ் பண்ணுவேன் பப்ளி...”

“டூ டேஸ் ஆகும்... நான் இல்லைனு நீ பீல் பண்ணுவியா...விட்டது தொல்லை... ஒளிஞ்சது சனியன்னு ரெண்டுநாளும் சந்தோஷமா தான் இருப்ப... உன்ன பத்தி எனக்கு தெரியாது....”

“பாரு சஞ்சு இந்த ஹேமாவ... எவ்வளவு பீல் பண்ணி ஐ மிஸ் யூனு சொன்னா நம்ப மாட்டேங்கிறா...”

“அடியேய் ஶ்ரீ ஓவரா நடிக்காத. உன்னை பத்தி என்னை விட அவளுக்கு தான் நல்லா தெரியும்... அதான் பாய்ண்டா பேசுறா...”

“ஒரு அப்பாவி மேல இப்படி ஒரு பழியை போடுறீங்களே... இது அடுக்குமா??”

“அதெல்லாம் நானும் சஞ்சுவும் அடுக்கிக்கிறோம்.. நீ கிளம்புற வழியை பாரு... எனக்கு லேட்டாச்சு...” என்று ஹேமா கிளப்ப முயல

“உனக்கு லேட்டாச்சுனா நீ கிளம்பு .. என்னை எதுக்கு துரத்துற??”

“அப்படீங்களா மேடம்.. சரி நான் ரம்யா வீட்டுக்கு போறேன்... நீங்க அட்ரசை கேட்டுக்கிட்டு வந்து சேருங்க...”

“ஐயோ சாரி பப்ளி மறந்துட்டேன்... கோவிச்சிக்காத...வா போகலாம்.... போற வழியில ஆண்டிக்கு என்ன வாங்கிட்டு போறது...??”

“இப்போ கேளு... போற வழியில பார்த்து வாங்கிட்டு போகலாம்.... சஞ்சு நீ வர்றியா???”

“இல்லை ஹேமா நீங்க போங்க... சுந்தரும் ரம்யா அம்மாவை பார்க்க போகனும்னு சொன்னான்...நாளைக்கு அவன்கூட வர்றேனு சொல்லியிருக்கேன்...”

“சரி சஞ்சு நாங்க கிளம்புறோம்.... ஶ்ரீ வா போகலாம்...” என்று ஶ்ரீயை கிளப்பிக்கொண்டு ரம்யா வீட்டிற்கு சென்றாள் ஹேமா...
 

Vijaya

New member
Very very nice and lovely ud ரிஷி ஸ்ரீக்கு அளித்த அன்பளிப்பு சூப்பர் அதில் இருந்த கவிதை எல்லாம் சூப்பர் thanks sis Smilie RoseSmilie RoseSmilie Rose
 
Top
All rights reserved by nigarilaavanavil.com
Site Made with by SMMTN